என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடிய முன்னணி வீரர்களான வெயின் பிராவோ, ரஷித் கான், முகமது நபி ஆகியோர் ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தனர்.
    ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், அபு தாபி, ஷார்ஜாவில் நடக்கிறது. வருகிற 19-ந்தேதி போட்டி தொடங்குகிறது.

    டி20 லீக்கில் விளையாடும் முக்கியமான வீரர்கள் கரீபியின் பிரிமீயர் லீக்கில் பங்கேற்றார்கள். இதனால் முன்னதாக அணியுடன் இணைய முடியவில்லை. தற்போது போட்டி முடிந்ததால் ஐக்கிய அரபு அமீரகம் சென்ற வண்ணம் உள்ளனர்.

    இன்று காலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இம்ரான் தாஹிர் சென்றடைந்தார். இந்நிலையில் சென்னை அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வெயின் பிராவோ, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நட்சத்திர வீரர்களான ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், முகமது நபி ஆகியோரும் சென்றடைந்துள்ளனர்.

    அவர்கள் அணிக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஓட்டலில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வார்கள். அதன்பின் அணியுடன் இணைந்து போட்டியில் விளையாடுவார்கள்.
    விராட் கோலிக்கும் எனக்கும் இடையில் போட்டி என்று வந்தால், கோலியை அவுட்டாக்க ஒரு பந்து போதும் என்று வெஸ்ட் இண்டீஸ் வீரர் கேஸ்ரிக் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேஸ்ரிக் வில்லியம்ஸ். இவர் விக்கெட் வீழ்த்தியதும் நோட்புக்கை எடுத்து கையெத்திடுவது போன்று கொண்டாடுவார். இதை ‘நோட்புக் செலபிரேசன்’ என்பார்கள்.

    2017-ம் ஆண்டு இந்திய அணி கேப்டன் விராட் கோலியை ஆட்டமிழக்கச் செய்ததும் ‘நோட்புக் செலபிரேசன்’ செய்தார். இதை மறக்காமல் வைத்து கடந்த வருடம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரின்போது விராட் கோலி கேஸ்ரிக் வில்லியம்ஸ் பந்தில் சிக்சர் அடித்ததும், அவரைப் போன்று விராட் கோலி செய்து பதிலடி கொடுத்தார். இந்தத் தொடர் முழுவதும் இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது.

    இந்நிலையில் அதேபோன்று ஒரு போட்டி எற்பட்டால் விராட் கோலியை அவுட்டாக்க ஒரு பந்து போதும் என்று கேஸ்ரிக் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கேஸ்ரிக் வில்லியம்ஸ் கூறுகையில் ‘‘விராட் கோலிக்கு பந்து வீசுவது கடினமா? என்றால், இல்லை என்பேன். அவர் விளையாடி கொண்டிருக்கும்போது சிறந்த வீரர். அவர் சிறந்த வீரர் என்பதில் என்ற மாற்று கருத்தும் கிடையாது. ஆனால், நான் அதைப்பற்றி கவலைப்படுவது இல்லை. ‘ஓ இவர் கோலி’ என்ற அச்சத்துடன் இரவு தூங்கச் செல்லமாட்டேன்.

    இந்திய அணி கேப்டன் விராட் கோலியுடன் மீண்டும் ஒரு போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ‘யோ, நான் அவரை வெல்லப் போகிறேன்’ என்ற நோக்கத்துடன் அவர் என்னைப் பார்க்கும்போதெல்லாம் அவர் உந்தப்பட்டு விளையாடுவார் என்பது எனக்குத் தெரியும். இந்த ஒரு விசயத்தின் மூலம் அவரை அவுட்டாக்க எனக்கு ஒரு பந்து போதுமானது. அந்த ஒரு பந்தை மீண்டும் பெறுவேன். விராட் கோலி ஆக்ரோசனமான வீரர். இதனால் அவரைப் போன்ற பேட்ஸ்மேன்களை எதிர்த்து விளையாடுவது விரும்புவேன்’’ என்றார்.
    கிரிக்கெட்டில் விளையாடும்போது உங்களது இடத்தைப் பிடிக்க பலர் விரும்புவார்கள். அது பயிற்சியாளர் பதவிக்கு வேறுபட்டது இல்லை என சைமன் காடிச் தெரிவித்துள்ளார்.
    ஐ.பி.எல். 2020 சீசன் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. பெரும்பாலான அணிகளில் ஏற்கனவே விளையாடியிருந்த வீரர்கள் தற்போது பயிற்சியாளர்கள், ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் பயிற்சியாளர் பதவி கடினமாக இருந்த போதிலும், பெரும்பாலானோர் அதை விரும்புகின்றனர் என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளர் சைமன் காடிச் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சைமன் காடிச் கூறுகையில் ‘‘நீங்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போது, உங்களுடைய இடத்தில் ஏராளமான வீரர்கள் விளையாட விரும்புவார்கள். பயிற்சியாளர் பதவியும் இதில் இருந்து வேறுபட்டதல்ல.

    நீங்கள் பயிற்சியாளராக இருக்கும்போது ஒட்டுமொத்த அணியை பற்றியும் கவலைப்பட வேண்டும். ஒவ்வொருவரும் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற விரும்புவீர்கள்.

    கோச்சிங் என்பது வீரர்களின் மீதான நம்பிக்கையை பற்றியது. அவர்களுடைய சொந்த முடிவுகளின்படி விளையாட அனுமதிக்க வேண்டும். நான் வீரராக விளையாடும்போது, என்னுடைய விருப்பத்தின்படியில் விளையாட விரும்புவேன். பயிற்சியாளர்கள், ஆலோசகர்கள் உதவி செய்ய முடியும். அது சிறப்பானதாக இருக்கும். இறுதியாக ஒரு வீரராக நீங்கள் உங்களுடைய சொந்த எண்ணத்துடன் செல்ல வேண்டும்’’ என்றார்.
    ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராகவும், பிராண்ட் தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
    ஆஸ்திரேலிய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஷேன் வார்னோ. ஐபிஎல் அறிமுகம் தொடரில் இவரது தலைமையில்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

    கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இந்த வருடமும் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அணியின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து ஷேன் வார்னே கூறுகையில் ‘‘இரண்டு பணியுடன் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ், என்னுடைய அணி, என்னுடைய குடும்பத்திற்கு திரும்பியது சிறந்த உணர்வாக கருதுகிறேன். அனைத்து விசயங்களிலும் அணியுடன் இணைந்து வேலை செய்வது உற்சாகமாக உள்ளது. அதை நான் விரும்புகிறேன்.

    உலகளாவிய அணி என்ற திட்டத்தை நோக்கி நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம். உலகம் முழுவதிலும் இருந்த ரசிகர்கள் விரும்ப வேண்டும். எங்களை பின்தொடர் வேண்டும் என்பதுதான் எங்களது திட்டம். இந்த சீசனில் அணி ஆலோசகராக பணியாற்ற இருக்கிறேன். எங்களால் இந்த முறை வெற்றிகரமான தொடராக முடிக்க முடியுயும் என நம்புகிறோம். வரும் மாதங்களில் சாதனைப் படைப்பது பெரிய நினைப்பாக இருக்கும்’’ என்றார்.
    டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்காக பயிற்சி மேற்கொண்டிருந்த ஜெர்மனியைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர்கள் 18 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரத்தில் ஒலிம்பிக் போட்டி இந்த வருடம் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா தொற்றால் அடுத்த வருடத்திற்கு போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இதனால் போட்டிக்கு தயாரகி வந்த வீரர்களின் நான்கு ஆண்டு பயிற்சி வீணாகின. மேலும், கொரோனாவால் பயிற்சிகள் மேற்கொள்ள முடியாமல் இருந்த வீரர்கள் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஜெர்மனியைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர்கள் ஆஸ்திரியாவில் உள்ள திரோல் லியாங்கென்ஃபெல்டில் உள்ள பயிற்சி முகாமில் பயிற்சி மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில் 18 வீரர்கள், 8 ஸ்டாஃப்கள் என 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    வீரர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் அறிகுறி இல்லை என்றும், அவர்களால் பயிற்சி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தடகள கட்டுப்பாடுகள் கவனமாக கவனிக்கப்படும் என்றும், அவர்கள் வீட்டிற்கு கட்டாயம் அனுப்பப்படுவார்கன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    அனுஷ்கா சர்மா கர்ப்பிணியாக இருக்கும் படத்த்தை வெளியிட்டுள்ள நிலையில், விராட் கோலி அதற்கு கருத்து தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக உள்ளவர் விராட் கோலி. பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது அனுஷ்கா சர்மா கர்ப்பமாக உள்ளார். இந்தத் தகவலை சமீபத்தில் தெரிவித்த விராட் கோலி - அனுஷ்கா தம்பதி ஜனவரி மாதம் குழந்தையை எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர்.

    இந்நிலையில் அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பிணியாக இருக்கும் போட்டோவை பதிவிட்டிருந்தார். அந்த பதிவுற்கு பதில் அளித்த விராட் கோலி ‘‘என்னுடைய ஒட்டுமொத்த உலகமே ஒரு பிரேமில்’’எனத் தெரிவித்துள்ளார்.
    கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் இம்ரான் தாஹிர் துபாய் சென்றடைந்துள்ளார்.
    ஐ.பி.எல். 13-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், அபு தாபி, ஷார்ஜா ஆகிய மூன்று இடங்களில் நடக்கிறது. இதற்காக 8 அணி வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகம் சென்று போட்டிக்கு தயாராகி வருகின்றனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள தென்அப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடினார். தற்போது தொடர் முடிந்துள்ளதால், துபாய் சென்றடைந்துள்ளார். அங்கு சென்றடைந்த அவர் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட பின் அணியுடன் இணைவார்.

    துபாய் சென்றடைந்த இம்ரான் தாஹிர் தனது டுவிட்டர் பக்கதில் ‘‘என் இனிய தமிழ் மக்களே தஞ்சமடைந்தேன் அன்பு இல்லத்தில் (துபாய்). போட்டிகள் துவங்க ஒரு வாரம் இருக்கும் இந்த தருவாயில் நாங்கள் சென்னை ஐபிஎல் வேட்டைக்கு தயார். நீங்கள் ஆட்டத்தை காண தயாரா? #eduda vandiya poduda whistle’’ எனப்பதிவிட்டுள்ளார்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு இன்னும் இரண்டு பரிசோதனை செய்யப்பட இருப்பதால் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.
    ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தீபக் சாஹர், ருத்துராஜ் கெய்க்வாட் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அதன்பிறகு தீபக் சாஹருக்கு இரண்டு முறை எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டில் என வர, நோயில் இருந்து குணமாகி அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் மேலும் 11 பேர்  குணமாகி அணியுடன் இணைந்துள்ளனர்.

    ஆனால் பேட்ஸ்மேன் ஆன ருத்துராஜ் கெய்க்வாட் இன்னும் கொரோனாவில் இருந்து மீளவில்லை. இன்று அவருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட இருக்கிறது. அதன்பின் நாளையும் பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. இதில் நெகட்டிவ் வந்தால் அதன்பின் அணியில் இணைவார்.

    இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் சிஇஓ கே.எஸ்.  விஸ்வநாதன் கூறுகையில் ‘‘ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு வழிகாட்டு நெறிமுறையின்படி இன்றும், நாளையும் கொரோனா பரிசோதளை மேற்கொள்ளப்படும். இரண்டு பரிசோதனையிலும் நெகட்டிவ் என வந்தால், ஓட்டலில் உள்ள அணியின் பாதுகாப்பு வளையத்திற்குள் சேர்க்கப்படுவார். மற்ற அனைவருக்கும் நெகட்டிவ் என வந்துள்ளதால் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் மீண்டும் அணியின் பாதுகாப்பு வளையத்திற்கள் வந்துவிட்டனர்’’ என்றார்.

    கொரோனா பரிசோதனையில் நெகட்டில் என வந்தாலும் நுரையீரல் பாதிப்பு உள்பட சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இதனால் முதல் இரண்டு போட்டியில் பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிகிறது.

    சென்னை அணியில் ரெய்னா இல்லாததால் ரித்துராஜ் 3-வது இடத்தில் களம் இறக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கருதப்படுகிறது.
    அரசியல் வேறுபாட்டை முதலில் தீர்க்க வேண்டும், அதுவரை இந்தியாவிக்கு எதிராக விளையாடும் மனநிலை இல்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் எஹ்சான் மானி தெரிவித்துள்ளார்.
    இந்தியா - பாகிஸ்தான் இடையில் இருநாட்டு கிரிக்கெட் தொடர் பல வருடங்களாக நடைபெறாமல் உள்ளது. ஐசிசி நடத்தும் போட்டிகளில் மட்டும் விளையாடுகின்றன.

    இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தும் வரை கிரிக்கெட் கிடையாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இருநாட்டு கிரிக்கெட் போர்டுகள் விளையாட சம்மதம் தெரிவித்தாலும், மத்திய அரசுகளின் அனுமதி பெறாமல் போட்டியை நடத்த முடியாது. தற்போது கிரிக்கெட்டை அரசியலுடன் தொடர்பு படுத்தியுள்ளனர்.

    இதனால் இந்தியாவிற்கு எதிராக விளையாடும் மனநிலைய இல்லை. அரசியல் வேறுபாட்டை முதலில் தீர்க்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் எஹ்சான் மானி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எஹ்சான் மானி கூறுகையில் ‘‘கடந்த சில வருடங்களாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு பிசிசிஐ-யுடன் இருநாட்டு தொடரை நடத்த பலமுறை ஆலோசனை நடத்தியுள்ளதுது. டி20 கிரிக்கெட் அல்லது இருநாட்டு தொடர் எதுவாக இருந்தாலும் பிசிசிஐ கையில் உள்ளது.

    தற்போது வரை இந்தியாவுடன் எந்தவிதமான டி20 லீக்குடன் விளையாடும் நோக்கம் எனக்கில்லை. முதலில் அவர்கள் எங்களுடன் உள்ள அரசியல் வேறுபாட்டை தீர்க்க வேண்டும். அதன்பின்  நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம்’’ என்றார்.

    இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று 14 வருடங்களுக்கு மேல் ஆகிறது. பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து 8 வருடங்கள் ஆகிறது.
    ஐ.பி.எல். வரலாற்றிலேயே முதல் முறையாக அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வீரர் 13-வது ஐ.பி.எல். போட்டியில் விளையாட உள்ளார்.

    துபாய்:

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள அந்த வீரரின் பெயர் அலி கான். வேகபந்து வீச்சாளரான அவர் இங்கிலாந்தை சேர்ந்த கேரி குர்னேவுக்கு பதிலாக சேர்க்கப்பட உள்ளார்.

    குர்னே தோள்பட்டை காயத்தால் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக 29 வயதான முகமது ஹசன் அலிகான் சேர்க்கப்பட உள்ளார். ஐ.பி.எல். நிர்வாகத்தின் அனுமதிக்காக கொல்கத்தா அணி காத்திருக்கிறது.

    ஐ.பி.எல். நிர்வாகம் அலிகானுக்கு அனுமதி அளித்தால் ஐ.பி.எல்.லில் விளையாட உள்ள முதல் அமெரிக்க வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

    அலிகான் இந்த சீசனில் கரீபியன் லீக் 20 ஓவர் தொடரில் போலார்ட் கேப்டனாக இருந்த டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் ஆடினார். இந்த தொடரில் அவர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். யார்க்கர் பந்து வீசுவதில் தேர்ச்சி பெற்றவர் ஆவார்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் 23-ந் தேதி மும்பையை சந்திக்கிறது.

    கடந்த ஐ.பி.எல். தொடரின் போதே கொல்கத்தா அணி நிர்வாகம் அலிகானை எடுக்க முயன்று முடியவில்லை. அப்போது அவர் கனடா 20 ஓவர் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

    இதைத் தொடர்ந்து அலிகானின் திறமையை கண்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராவோ அவரை கரீபியன் லீக் தொடரில் அறிமுகப்பத்தினார்.

    கடந்த சீசனில் அவர் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியில் இடம்பெற்று 12 விக் கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கோப்பையை எந்த அணி கைப்பற்றும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான பீட்டர்சன் அவரது கணிப்பை தெரிவித்துள்ளார்.

    துபாய்:

    13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடக்கிறது.

    இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன் ரைசர்ஸ் ஐதராபாத், டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதவேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த நிலையில் ஐ.பி.எல். கோப்பையை டெல்லி அணி கைப்பற்றும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா மருத்துவ தடுப்புப் பாதுகாப்பில் இங்கிலாந்தில் இருந்த நான் தற்போது கொரோனா மருத்துவ தடுப்புப் பாதுகாப்பு உள்ள துபாய்க்கு சென்று கொண்டிருக்கிறேன். கிரிக்கெட் போட்டி மீண்டும் தொடங்குவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

    ஐ.பி.எல். போட்டிக்கு வர்ணனையாளராக தொடர்ந்து பணியாற்றுவது எனக்கு எப்போதுமே பிடித்திருக்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறும் இந்த ஐ.பி.எல். போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கோப்பையை வெல்லும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணி முதலில் டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரில் ஆடியது. கடந்த 2 சீசனில் அதன் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேறாத ஒரே அணி டெல்லிதான்.

    அந்த அணி கடந்த முறை பிளேப் ஆப் சுற்றுவரை வந்தது. டெல்லி கேபிடல்ஸ் அணியில் கேப்டன் ஸ்ரேயாஷ் அய்யர், தவான், ரி‌ஷப் பண்ட், ரகானே, அஸ்வின், ரபடா, பிரித்விஷா போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர். டெல்லி அணி தொடக்க ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை சந்திக்கிறது.

    இதேபோல பஞ்சாப், பெங்களூரு அணிகளும் இதுவரை ஐ.பி.எ. கோப்பையை வென்றதில்லை.

    டெல்லி கோப்பையை வெல்லும் என்று கணித்த பீட்டர்சன் ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு, டெல்லி, புனே அணிக்காக விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்கா ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் பெற்றார்.
    அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகா, பெலாரசை சேர்ந்த அஸ்ரென்காவுடன் மோதினார்.

    முதல் செட்டை 6-1 என அஸ்ரென்கா எளிதில் கைப்பற்றினார். இதனால் அவர் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் நவோமி ஒசாகா 2-வது செட்டில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்பயனாக 2-வது செட்டை 6-3 என ஒசாகா கைப்பற்றினார். 

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டிலும் நவோமி ஒசாகாவின் கையே ஓங்கியது. இதனால் அந்த செட்டையும் 6-3 எனக் கைப்பற்றி 1-6, 6-3, 6-3 என அஸ்ரென்காவை வீழ்த்தி நவொமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார்.
    ×