search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எஹ்சான் மானி
    X
    எஹ்சான் மானி

    இந்தியாவுக்கு எதிராக விளையாடும் மனநிலை இல்லை: பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர்

    அரசியல் வேறுபாட்டை முதலில் தீர்க்க வேண்டும், அதுவரை இந்தியாவிக்கு எதிராக விளையாடும் மனநிலை இல்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் எஹ்சான் மானி தெரிவித்துள்ளார்.
    இந்தியா - பாகிஸ்தான் இடையில் இருநாட்டு கிரிக்கெட் தொடர் பல வருடங்களாக நடைபெறாமல் உள்ளது. ஐசிசி நடத்தும் போட்டிகளில் மட்டும் விளையாடுகின்றன.

    இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தும் வரை கிரிக்கெட் கிடையாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இருநாட்டு கிரிக்கெட் போர்டுகள் விளையாட சம்மதம் தெரிவித்தாலும், மத்திய அரசுகளின் அனுமதி பெறாமல் போட்டியை நடத்த முடியாது. தற்போது கிரிக்கெட்டை அரசியலுடன் தொடர்பு படுத்தியுள்ளனர்.

    இதனால் இந்தியாவிற்கு எதிராக விளையாடும் மனநிலைய இல்லை. அரசியல் வேறுபாட்டை முதலில் தீர்க்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் எஹ்சான் மானி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எஹ்சான் மானி கூறுகையில் ‘‘கடந்த சில வருடங்களாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு பிசிசிஐ-யுடன் இருநாட்டு தொடரை நடத்த பலமுறை ஆலோசனை நடத்தியுள்ளதுது. டி20 கிரிக்கெட் அல்லது இருநாட்டு தொடர் எதுவாக இருந்தாலும் பிசிசிஐ கையில் உள்ளது.

    தற்போது வரை இந்தியாவுடன் எந்தவிதமான டி20 லீக்குடன் விளையாடும் நோக்கம் எனக்கில்லை. முதலில் அவர்கள் எங்களுடன் உள்ள அரசியல் வேறுபாட்டை தீர்க்க வேண்டும். அதன்பின்  நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம்’’ என்றார்.

    இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று 14 வருடங்களுக்கு மேல் ஆகிறது. பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து 8 வருடங்கள் ஆகிறது.
    Next Story
    ×