என் மலர்
விளையாட்டு
துபாய்:
13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி சார்ஜாவில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியின் 22-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லோகேஷ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
ஐதராபாத் அணி 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 6-வது இடத்திலும், பஞ்சாப் அணி ஒரு வெற்றி , 4 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்திலும் உள்ளன.
ஐதராபாத் அணி பஞ்சாப்பை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. பஞ்சாப் அணி தொடர் தோல்வியில் இருந்து மீண்டு 2-வது வெற்றியை பெறும் வேட்கையில் இருக்கிறது.
ஐதராபாத் அணியில் கேப்டன் வார்னர், பேர்ஸ்டோவ், வில்லியம்சன், மனீஷ் பாண்டே, ரஷீத்கான், டி.நடராஜன் போன்ற சிறந்த வீரர்களும், பஞ்சாப் அணியில் கேப்டன் லோகேஷ் ராகுல், மயங் அகர்வால், நிக்கோலஸ் பூரன், முகமது ஷமி போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.
பஞ்சாப் அணி கடைசியாக விளையாடிய 3 ஆட்டத்திலும் தோற்றது. இதனால் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு உள்ளது.
இரு அணிகளும் மோதிய போட்டியில் ஐதாராபாத் 10-ல், பஞ்சாப் 4-ல் வெற்றி பெற்றுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் இந்திய வீரர் கேதர் ஜாதவ் ஏற்கனவே விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்தார். அவர் எதற்காக சென்னை அணியில் இருக்கிறார் என்று ரசிகர்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தி இருந்தனர்.
ரசிகர்களின் விமர்சனத்துக்கு ஏற்றவாறு அவரது பேட்டிங் நேற்றும் மிகவும் மோசமாக இருந்தது. டோனி ஆட்டம் இழந்த பிறகு 6-வது வீரராக களம் இறங்கிய அவர் 12 பந்துகளை சந்தித்து 7 ரன்களை எடுத்தார். சென்னை அணியின் தோல்விக்கு அவரது மந்தமான ஆட்டமே காரணம். அவர் இடத்தில் பிராவோவை களம் இறக்கி இருந்தால் சென்னை அணி வெற்றி பெற்று இருக்கும்.
இந்த சொதப்பலான ஆட்டத்தால் கேதர் ஜாதவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக கிண்டல் செய்து விமர்சனம் செய்துள்ளனர். இனிவரும் ஆட்டங்களில் அவரை சேர்க்காமல் இருப்பதே சிறந்த முடிவாக இருக்கும் என்று ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
சென்னை அணியின் பேட்டிங் வரிசை முடிவு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. அதே நேரத்தில் கொல்கத்தா அணியின் கேப்டனான தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் சிறப்பான முடிவுகளை கையாண்டார். திரிபாதியை தொடக்க வீரராக அனுப்பியதற்கு நல்ல பலன் கிடைத்தது. சுனில் நரீன் மிடில் ஓவரிலும், ரசல் கடைசி கட்டத்திலும் பந்து வீசியது அபாரமான முடிவாகும்.
இங்கிலாந்து அணியின் கேப்டனான மார்கன் எல்லா வகையிலும் தினேஷ் கார்த்திக்குக்கு உதவியாக செயல்பட்டு, வெற்றி பெற காரணமாக திகழ்ந்தார்.
பாரீஸ்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) 17-வது வரிசையில் உள்ள பேப்லோ கரன்னோ பஸ்டா (ஸ்பெயின்) மோதினார்கள்.
இதில் ஜோகோவிச் 4-6, 6-2, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 10-வது முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 3 மணி 10 நிமிட நேரம் தேவைப்பட்டது.
2016-ம் ஆண்டு சாம்பியனான ஜோகோவிச் அரை இறுதியில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டெபானோஸ் சிட்சிபாஸை சந்திக்கிறார்.
5-ம் நிலை வீரரான அவர் கால் இறுதியில் 7-5, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஆண்ட்ரூ ருப்லேவை (ரஷியா) தோற்கடித்தார். சிட்சிபாஸ் முதல்முறையாக பிரெஞ்சு ஓபன் அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறார்.
நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் ஜோகோவிச்-சிட்சி பாஸ், நடால் -டியாகோ ஸ்வார்ட்ஸ் மேன் மோதுகிறார்கள்.
பெண்கள் பிரிவு அரை இறுதி ஆட்டங்கள் இன்று நடக்கிறது. இதில் போடோரோஸ்கா (அர் ஜென்டினா)-இகா (போலந்து), சோபியா கெனின் (அமெரிக்கா)- கிவிடோவா (செக் குடியரசு) மோதுகிறார்கள்.
டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பேட்டிங் தேர்வு செய்தார். சுனில் நரைனை பின்னக்குத் தள்ளி ராகுல் திரிபாதியை தொடக்க வீரராக களம் இறக்கியது, மோர்கனை 5-வது வீரராக களம் இறக்கியது, தினேஷ் கார்த்திக் 7-வது வீரராக களம் இறக்கியது என பேட்டிங்கில் பல மாற்றங்கள் செய்தது கொல்கத்தா.
ராகுல் திரிபாதியைத் தவிர மற்ற எந்த மாற்றமும் ஒர்க்காகவில்லை. திரிபாதி 51 பந்தில் 81 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். பவர் ஹிட்டர்களுக்கு எதிராக சிஎஸ்கே பவுலர்கள் அட்டகாசமான பந்து வீச்சை வெளிப்படுத்த மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் 17 ரன்களை தாண்டவில்லை. இதனால் கொல்கத்தா அணி 167 ரன்கள் மட்டுமே அடித்தது.
பின்னர் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டு பிளிசிஸ், வாட்சன் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரியில் ஒரு பவுண்டரி, அடுத்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் என விளாசினர்.
சரி... கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக அட்டகாசம் செய்ததுபோல், இந்த போட்டியிலும் விளையாடுவார்கள் என்று ரசிகர்கள் நினைத்திருந்த வேளையில் 3-வது ஓவரின் 4-வது பந்தில் டு பிளிஸ்சிஸ் 10 பந்தில் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அப்போதே நங்கூரம் அறுந்த கப்பலானது சென்னை.

13-வது ஒவரை நாகர்கோட்டி வீசினார். முதல் பந்தில் அம்பதி ராயுடு 27 பந்தில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவர் ஏன் முன் வரிசையில் களம் இறங்க யோசிக்கிறார் என்ற தொடர் கேள்வி எழும்பியதால் என்னவோ? நாம் இறங்கினால் என்ன? என நினைத்த டோனி 4-வது வீரராக களம் இறங்கினார்.

அடுத்து சாம் கர்ரன் களம் இங்கினார். 16-வது ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்ஸ் அடிக்க ரசிகர்கள் சற்று உற்சாகமடைந்தனர். கடைசி 24 பந்தில் 48 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 7 விக்கெட் உள்ளது. டோனி, சாம் கர்ரன் ஒரு ஓவரை டார்கெட் செய்தால் வெற்றிக்கனியை பறித்து விடலாம் என நினைத்த ரசிகர்களுக்கு, டோனி 17-வது ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்ட சற்று நம்பிக்கை அதிகரித்தது.
ஆனால், அடுத்த பந்தில் டோனி ஸ்டம்பை பறிகொடுத்தார். அவரால் 12 பந்தில் 11 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. அத்துடன் சென்னை கப்பல் தரைதட்டி இழுப்ப முடியாத நிலை ஏற்பட்டது.
அடுத்த ஓவரில் சாம் கர்ரன் 11 பந்தில் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, வழக்கம்போல் கேஜர் ஜாதவ் வந்து நிற்க, ரசிகர்களின் கைத்தட்டலுக்கு ஜடேஜா கடைசி மூன்று பந்தில் ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரி அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களே எடுத்தது. இதனால் 10 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், பேட்ஸ்மேன் ஆரோன் பிஞ்சை ‘மன்கட்’ முறையில் அவுட் செய்வது போல் எச்சரிக்கையோடு விட்டார். இனி பந்து வீசுவதற்கு முன்பே எதிர்முனை பேட்ஸ்மேன் கிரீசை விட்டு நகர்ந்தால் காலி தான் என்று இறுதி எச்சரிக்கையும் விடுத்தார். இந்த விவகாரம் குறித்து அஸ்வின் நேற்று அளித்த பேட்டியில்,
‘போட்டி முடிந்து அன்றிரவு தலைமை பயிற்சியாளர் ரிக்கிபாண்டிங்கிடம் விவாதித்தேன். அப்போது பாண்டிங், ‘பிஞ்ச் எவ்வளவு தூரம் நகர்ந்து சென்று விட்டார். நானே எழுந்து அவரை ரன்-அவுட் செய்து விடு என்று சொல்லலாம் என்று நினைத்தேன்’ என்று கூறினார். அதற்கு நான், உங்கள் சகநாட்டு வீரர் பற்றி ஏன்இப்படி சொல்கிறீர்கள் என்றேன். அதற்கு பாண்டிங், ‘தவறு யார் செய்தாலும் தவறு தான். இது பற்றி ஐ.சி.சி. கமிட்டி கூட்டத்தில் பேசி வருகிறேன். இந்த தவறுக்கு ரன் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன் என்று கூறினார்.
என்னை பொறுத்தவரை ‘ரமணா’ பட பாணியில் தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும். பந்து வீசப்படுவதற்கு முன்பே பேட்ஸ்மேன் கிரீசை விட்டு தாண்டினால் 10 ரன்களை அணியின் ஸ்கோரில் இருந்து கழிக்க வேண்டும். இதன் பிறகு யாரும் கிரீசை விட்டு வெளியேறமாட்டார்கள்’ என்றார்.
ஆஸ்திரேலியா-நியூசிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மெக் லானிங், ஆல்-ரவுண்டர் எலிசி பெர்ரி காயம் காரணமாக ஆடாத நிலையிலும், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது. பொறுப்பு கேப்டன் ராச்செல் ஹெய்ன்ஸ் 96 ரன்னும், அலிசா ஹீலே 87 ரன்னும் விளாசினர். தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி, 27 ஓவர்களில் வெறும் 93 ரன்னில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலிய அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை சுவைத்ததுடன், தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. அந்த அணி தொடர்ச்சியாக வென்ற 7-வது தொடர் இதுவாகும்.
ஆஸ்திரேலிய பெண்கள் அணி ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக பெற்ற 21-வது வெற்றி இதுவாகும். 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு பிறகு அந்த அணி தோல்வியையே சந்திக்கவில்லை. இதன் மூலம் 2003-ம் ஆண்டில் ரிக்கி பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலிய ஆண்கள் அணி தொடர்ந்து 21 ஆட்டங்களில் வென்று இருந்த சாதனையை சமன் செய்து அசத்தியது. சாதனையை சமன் செய்த ஆஸ்திரேலிய பெண்கள் அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் கிவிடோவா (செக்குடியரசு) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் ஜெர்மனி வீராங் கனை லாரா சீஜ்மன்டை விரட்டியடித்து 2012-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 20 நிமிடம் தேவைப்பட்டது.
இதே போல் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான சோபியா கெனின் (அமெரிக்கா) 6-4, 4-6, 6-0 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனை டேனியலி காலின்சை வெளியேற்றி முதல்முறையாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். சோபியா கெனின் அரைஇறுதியில் கிவிடோவாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். மற்றொரு அரைஇறுதியில் போடோரோஸ்கா (அர்ஜென்டினா)-இகா ஸ்வியாடெக் (போலந்து) சந்திக்கிறார்கள்.
முன்னதாக ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 12 முறை சாம்பியனான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 7-6 (7-4), 6-4, 6-1 என்ற நேர்செட்டில் 19 வயதான இத்தாலியின் ஜானிக் சின்னெரை தோற்கடித்து 13-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தார். பிரெஞ்ச் ஓபனில் 100-வது ஆட்டத்தில் ஆடிய நடால் ருசித்த 98-வது வெற்றி இதுவாகும்.
மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 14-வது இடத்தில் இருக்கும் அர்ஜென்டினா வீரர் டிகோ ஸ்வாட்ஸ்மேன் 7-6 (7-1), 5-7, 6-7 (6-8), 7-6 (7-5), 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்க ஓபன் சாம்பியனும், தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ளவருமான டொமினிக் திம்முக்கு (ஆஸ்திரியா) அதிர்ச்சி அளித்து முதல்முறையாக அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். இந்த ஆட்டம் 5 மணி 8 நிமிடம் நீடித்தது. அரைஇறுதியில் நடால்-ஸ்வாட்ஸ்மேன் மோதுகிறார்கள்.






