என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பாதி ஆட்டங்கள் முடிந்த நிலையில் மிட் சீசன் டிரான்ஸ்பர் மூலம் ஒரு அணியில் இருந்து மற்றொரு அணிக்கு வீரர்கள் மாற முடியும்.
    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு அணிகளும் 5 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளனர். ஒவ்வொரு அணிகளும் 7 போட்டிகள் விளையாடியதும் தொடரின் பாதியை கடக்கும்.

    அப்போது ஆடும் லெவனில் இடம் பிடிக்க முடியாமல் வெளியில் இருக்கும் வீரர்கள் ஒரு அணியில் இருந்து மற்ற அணிகளுக்கு செல்ல மிட் சீசன் டிரான்ஸ்பர் முறை கொண்டு வரப்பட்டது.

    மிட் சீசன் டிரான்ஸ்பரில் ஒரு அணியில் இரண்டு போட்டிகளுக்கு மேல் விளையாடாத வீரரை மற்ற அணிகள் இரு அணிகளுக்கு இடையில் ஒப்பந்தம் மூலம் மாற்றிக் கொள்ளலாம். கடந்த ஐபிஎல் சீசனில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த முறை பெரிதாக வெற்றி பெறவில்லை.

    இந்த முறையாவது வெற்றி பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில் 13 வீரர்கள் உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 9 வீரர்கள் உள்ளனர்.

    டெல்லி அணியில் ரகானே, கீமோ பால், அலெக்ஸ் கேரி உள்பட 11 பேர் உள்ளனர்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் 13 பேர் உள்ளனர்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 10 பேர் உள்ளனர்.

    ராஜஸ்தான் அணியில் 12 பேர் உள்ளனர். ஆர்சிபி அணியில் 10 பேர் உள்ளனர்.
    நேற்று நடந்த ஐ.பி.எல். போட்டியில் 6 பேட்ஸ்மேன்களுடன் விளையாடியதால் தோல்வி அடைந்தோம் என்று பஞ்சாய் அணி கேப்டன் லோகேஷ் ராகுல் கூறியுள்ளார்.

    துபாய்:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நேற்று நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத்திடம் 69 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது.

    முதலில் விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்தது. தொடக்க வீரர்களான பேர்ஸ்டோவ் 97 ரன்னும் (55 பந்து 7 பவுண்டரி, 6 சிக்சர்), கேப்டன் டேவிட் வார்னர் 52 ரன் எடுத்தார்.

    பஞ்சாப் தரப்பில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய பஞ்சாப் அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. நிக்கோலஸ் பூரன் கடுமையாக போராடினார். அவர் 37 பந்தில் 77 ரன் எடுத்து அவுட் ஆனார். பஞ்சாப் அணி 16.5 ஓவரில் 132 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது.

    ஐதராபாத் தரப்பில் ரஷித்கான் 3 விக்கெட்டும், நடராஜன், கலீல் அகமது தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    6 ஆட்டங்களில் விளையாடி உள்ள பஞ்சாப் அணி 5-வது தோல்வியை சந்தித்து இருக்கிறது. ஐதராபாத் 3-வது வெற்றியை (6 ஆட்டம்) பெற்றது. தோல்வி குறித்து பஞ்சாய் அணி கேப்டன் லோகேஷ் ராகுல் கூறியதாவது:-

    பவர் பிளேவில் விக்கெட்டுகளை இழக்கும் போது அது கடினமாக இருக்கும். குறிப்பாக நாங்கள் 6 பேட்ஸ்மேன்களை மட்டுமே கொண்டு விளையாடியது, மயங்கா அகர்வால் ரன் அவுட் ஆனது பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

    நாங்கள் காற்றில் அடித்த அனைத்து பந்துகளும் பீல்டர்களிடமே சென்றது. கடந்த 5 ஆட்டங்களில் இறுதிக்கட்ட பந்துவீச்சில் நாங்கள் திணறினோம். ஆனால் இன்று அதில் முன்னேற்றம் கண்டு இருக்கிறோம்.

    நிக்கோலஸ் பூரன் நன்றாக பேட்டிங் செய்தார். கடந்த ஆண்டு அவருக்கு வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் இதுபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரவி பிஸ்னோய் அபாரமாக பந்து வீசினார். பவர் பிளேவோ அல்லது இறுதி கட்டத்திலோ அவர் பந்து வீச பயப்பட வில்லை.

    அவர் ஆட்டத்தை அனுபவித்து விளையாடுகிறார். எங்களது அனைத்து வீரர்களும் திறமையானவர்கள். சில நாட்கள் அது நடக்காமல் போய்விடும். அவர்களுடன் நாம் பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் தங்களது பிரசினைகளை புரிந்து கொள்வார்கள்.

    ஒரு கேப்டனாக அவர்களின் தோல்வியை கைவிட்டு ஊக்கப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் கூறும்போது, இந்த ஆட்டத்தை அனுபவித்து விளையாடினேன். ஆனால் நிக்கோலஸ் பூரன் அதிரடி ஆட்டத்தால் சிறிது பதட்ட மடைந்தேன்.

    ரஷித்கான் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர். அவரை அணியில் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நானும், பேர்ஸ்டோவும் (இங்கிலாந்து) இணைந்து விளையாடுவதில் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம்.

    இரு நாடுகளுக்கும் (ஆஸ்திரேலியா-இங்கிலாந்து) இடையே இவ்வளவு வெறுப்பு இருக்கிறது என்று ஏன் நினைக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

    அடுத்து ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டம் கடினமாக இருக்கும். இதிலும் 200 ரன் அடிப்போம் என்று நம்புகிறோம் என்றார்.

    நடப்பு ஐ.பி.எல். தொடரை அமர்க்களமாக தொடங்கிய ராஜஸ்தான் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
    நடப்பு ஐ.பி.எல். தொடரை அமர்க்களமாக தொடங்கிய அணிகளில் ராஜஸ்தான் ராயல்சும் ஒன்று. சார்ஜாவில் நடந்த முதல் இரு ஆட்டங்களில் சென்னைக்கு எதிராக 216 ரன்கள் குவித்தும், பஞ்சாப்புக்கு எதிராக 224 ரன்களை ‘சேசிங்’ செய்தும் வெற்றி பெற்றது. அதன் பிறகு மற்ற இடங்களில் நடந்த கொல்கத்தா, பெங்களூரு, மும்பைக்கு எதிரான ஆட்டங்களில் வரிசையாக தோற்று பின்தங்கியுள்ளது. இப்போது மறுபடியும் சார்ஜாவில் கால்பதிப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் ராஜஸ்தான் வீரர்கள் களம் இறங்குவார்கள். தங்களது முதல் இரு ஆட்டங்களில் அரைசதம் விளாசிய கேப்டன் ஸ்டீவன் சுமித்தும், சஞ்சு சாம்சனும் மற்ற 3 ஆட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்தது பின்னடைவாக அமைந்தது. அவர்கள் இருவரும் பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாய் வந்தடைந்த ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்சின் 6 நாள் தனிமைப்படுத்தும் நடைமுறை இன்னும் நிறைவடையாததால் அவர் இந்த ஆட்டத்தில் ஆட வாய்ப்பில்லை.

    இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 4-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிட அரியணையில் ஏறும். டெல்லி அணி பேட்டிங், பந்து வீச்சில் வலுவாக காணப்படுகிறது. பேட்டிங்கில் ஸ்ரேயாஸ் அய்யர், பிரித்வி ஷா, தவான், ரிஷாப் பண்ட், ஹெட்மயர் அசத்துகிறார்கள். பேட்டிங் வரிசை மாற்றப்படாததால் ரஹானே கூட அந்த அணியில் வெளியே இருக்க வேண்டிய நிலைமை உள்ளது. இதே போல் பந்து வீச்சில் ரபடா, நோர்டியா, அஸ்வின், ஸ்டோனிஸ் மிரட்டுகிறார்கள். அந்த அணி ஏற்கனவே சார்ஜாவில் நடந்த கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 228 ரன்கள் திரட்டி மலைக்க வைத்தது. எனவே இந்த ஆட்டத்திலும் டெல்லி அணி ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. மேலும் சிறிய மைதானம், பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளம் என்பதால் மீண்டும் 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதனால் ரசிகர்களுக்கு ‘வாணவேடிக்கை’ காத்திருக்கிறது.
    ஐபிஎல் கிரிக்கெட்டின்ன் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றி பெற்றது.
    துபாய்:

    ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது. வார்னர், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    ஆரம்பம் முதலே வார்னர்-பேர்ஸ்டோவ் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரை சதம் கடந்த நிலையில் 15.1 ஓவரில் அணியின் ஸ்கோர் 160 எடுத்திருந்த நிலையில் 40 பந்தில் 1 சிக்சர் 5 பவுண்டரி உள்பட 52 குவித்த வார்னர் ஐதராபாத் அணியின் ரவி பிஷோனி பந்து வீச்சில் அவுட் ஆனார். 

    வார்னர் அவுட் ஆன சில நிமிடங்களிலேயே 55 பந்துகளில் 7 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் உள்பட 97 ரன்கள் குவித்திருந்த பேர்ஸ்டோவ் அதே ஓவரில் ரவி பிஷோனி பந்து வீச்சில் வெளியேறினார். 

    தொடக்க வீரர்கள் வெளியேறியபோது 15.4 ஓவரில் ஐதராபாத் அணி 160 ரன்கள் குவித்திருந்தது. 

    அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் அணியின் ஸ்கோர் வேகம் சற்று குறைந்தது. ஆனால், இறுதி கட்டத்தில் சற்று அதிரடியாக ஆடிய வில்லியம்சன் 10 பந்தில் 1 பவுண்டரி 1 சிக்சர் உள்பட 20 ரன்கள் குவித்தார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த சன் ரைசர்ஸ் ஐதராபாத் 201 ரன்கள் குவித்தது. 

    பஞ்சாப் தரப்பில் ரவி பிஷோனி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பஞ்பாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 

    6 பந்தில் 9 ரன்கள் எடுத்திருந்த அகர்வால் ரன் அவுட் முறையில் வெளியேறினார். அடுத்துவந்த சிம்ரன் சிங் 8 பந்தில் 11 ரன்னுடன் வெளியேறினார். 16 பந்தில் 11 ரன்களை எடுத்த கேப்டன் கேஎல் ராகுல் அபிஷேக் சர்மா பந்து வீச்சில் வெளியேறினார். 

    இதனால், 6.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் 58 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்துவந்த நிக்கோலஸ் பூரன், மேக்ஸ்வெல்லுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    12 பந்தில் 7 ரன்களை எடுத்திருந்த மேக்ஸ்வெல் ரன் அவுட் முறையில் வெளியேறினார். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆன நிலையில் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய நிக்கோலஸ் பூரன் 37 பந்துகளில் 5 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் உள்பட 77 ரன்கள் குவித்து ரஷித் கான் பந்து வீச்சில் வெளியேறினார்.

    பூரனை தவிர வேறு எந்த வீரரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்ததாலும், ஐதராபாத் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமலும் பஞ்சாப் அணி 16.5 ஓவரிலேயே அனைத்து 
    விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

    இதனால், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.     

    ஐதராபாத் அணியின் ரஷித் கான் 4 ஓவர்கள் வீசி ஒரு மேய்டன் உள்பட 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 55 பந்தில் 97 ரன்கள் குவித்த ஐதராபாத் அணியின் ஜானி பேர்ஸ்டோவ் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சோபியான கெனின் - இகா ஸ்வியாடெக் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
    பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. அரையிறுதி போட்டியில் அமெரிக்காவின் சோபியா கெனின் (தரவரிசை 4) - செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா (தரவரிசை 7) ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

    இதில் சோபியா கெனின் 6-4, 7-5 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் தரவரிசை பெறாத போலந்தின் இகா ஸ்வியாடெக் - அர்ஜென்டினாவின் நாடியாக பொடோரோஸ்கா மோதினர். இதில் இகா 6-2, 6-1 என எளிதில் வெற்றி பெற்றார்.

    சோபியா கெனின் - இகா ஸ்வியாடெக் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் 17 பந்தில் அரைசதம் அடித்து சாதனைப் படைத்தார்.
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது.

    தொடக்க வீரரான மயங்க் அகர்வால் 9 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த சிம்ரன் சிங் 11 ரன்னில் வௌயேறினோர். அப்போது பஞ்சாப் அணி 4.2 ஓவரில் 31 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார். அவர் சந்தித்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். நடராஜன் வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்தார். அபிஷேக் சர்மா வீசிய 7-வது ஓவரில் 2 சிக்ஸ் விளாசினார். 9-வது ஓவரை அப்துல் சமாத் வீசினார். ஓவரின் முதல் பந்தில் சிக்ஸ், 2-வது பந்தில் பவண்டரி, 3-வது பந்தில் சிக்ஸ், 4-வது பந்தில் சிக்ஸ் அடித்து 17 பந்தில் அரைசதம் அடித்தார்.

    இந்த ஐபிஎல் தொடரில் இது அதிவேக அரைசதம் ஆகும், ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் 2-வது அதிவேக அரைசதம் ஆகும். அரைசதம் அடித்த கையோடு அடுத்த பந்தையும் சிக்சருக்கு தூக்கினார். இந்த ஓவரில் மட்டும் 28 ரன்கள் விளாசினார்.
    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 52 ரன்கள் அடித்த டேவிட் வார்னர், ஐபிஎல் தொடரில் 50 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 201 ரன்கள் குவித்தது.

    வார்னர் - பேர்ஸ்டோவ் ஜோடி 15.1 ஓவரில் 160 ரன்கள் குவித்தது. வார்னர் 40 பந்தில் 52 ரன்கள் அடித்தார். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 50 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்து சாதனைப் படைத்தார். இதில் நான்கு சதங்கள் அடங்கும்.

    விராட் கோலி 5 சதங்களுடன் 42 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்து 2-வது இடத்தில் உள்ளார். சுரேஷ் ரெய்னா 1 ஒரு சதத்துடன் 39 முறையும், ரோகித் சர்ம 1 சதத்துடன் 39 முறையும், ஏபி டி வில்லியர்ஸ் 3 சதங்களுடன் 38 முறையும அரைசதம் அடித்துள்ளனர்.
    பேட்ஸ்மேன்களே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் டி20 கிரிக்கெட்டில் மாற்றம் தேவையில்லை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    டி20 கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்களின் நிலை திண்டாட்டம்தான். 4 ஓவர்களை வீசி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுவார்கள். தற்போது ஐபிஎல் தொடரில் ஷார்ஜாவில் நடைபெற்று வரும் போட்டிகள் ஹை-ஸ்கோர் ஆட்டமாக இருக்கிறது.

    நான்கு போட்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் முதல் பேட்டிங் செய்த அணிகள் நான்கிலும் 200 ரன்களை தாண்டியுள்ளது. சேஸிங் அணி மூன்று முறை 200 ரன்னைக் கடந்துள்ளது. ஒரு முறை கிங்ஸ் லெவன் பஞ்சாப் 224 ரன்னை சேஸிங் செய்தது.

    கிரிக்கெட் என்றாலே பேட்டிற்கும், பந்திற்கும் சமமான அளவு போட்டி இருக்க வேண்டும். இப்படி இருக்கக் கூடாது. ஆகவே டி20-யில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற விவாதம் எழும்பியுள்ளது.

    இந்நிலையில் அதுபோன்று மாற்றம் தேவையில்லை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘டி20 கிரிக்கெட் மிகவும் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதில் மாற்றம் செய்யக்கூடிய அவசியம் இல்லை.

    வேண்டுமென்றால் இரண்டு பவுன்சர்களுக்கு அனுமதி கொடுக்கலாம். மைதானத்திற்குரியவர்கள் வேண்டுமென்றால் மைதானத்தை பெரிதாக்கிக் கொள்ள முடியும். பந்து வீச்சாளர்கள் முதல் மூன்று ஓவர்களில் விக்கெட் வீழ்த்தினால் கூடுதல் ஒரு ஓவர் கொடுக்கலாம். உண்மையாக, எல்லாவற்றையும் மற்ற வேண்டியதில்லை’’ என்றார்.
    பேர்ஸ்டேவ் - வார்னர் ஜோடி 15.1 ஓவரில் 160 ரன்கள் குவித்த போதிலும், மிடில் ஆர்டர் சொதப்பியதால் பஞ்சாப் அணிக்கு 201 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஐதராபாத்.
    ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது. வார்னர், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    தொடக்கம் முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் ஓவரில் வார்னர் இரண்டு பவுண்டரி அடித்து தொடக்கி வைத்தார். 4-வது ஒவரில் பேர்ஸ்டோவ் 3 பவுண்டரிகள் விரட்டினர். 5-வது ஓவரை முகமது ஷமி வீசினார். இதில் பேர்ஸ்டோவ் கொடுத்த கேட்ச்-ஐ கேஎல் ராகுல் பிடிக்கத் தவறினார். அதன்பின் பேர்ஸ்டேவ் ஆட்டத்தில் அனல் பறந்தது.

    ஐதராபாத் பவர் பிளே-யான முதல் 6 ஓவரில் 58 ரன்கள் எடுத்தது. 8-வது ஓவரை ரவி பிஷ்னோய் வீசினார். இந்த ஓவரில் பேர்ஸ்டோவ் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். சரியாக 10 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது ஐதராபாத். இந்த ஓவரின் 3-வது பந்தில் பேர்ஸ்டோவ் 2 ரன்கள் எடுத்து 28 பந்தில் அரைசதம் அடித்தார்.

    11-வது ஓவரில் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி விட்டினார். வார்னர் 14-வது ஓவரின் 2-வது பந்தில் ஒரு ரன் அடித்து 37 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடியின் ஆட்டத்தை பார்க்கும்போது ஐதராபாத் எளிதான 220 ரன்களை தாண்டும் நிலை இருந்தது.

    16-வது ஓவரை ரவி பிஷ்னோய் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் வார்னர் ஆட்டமிழந்தார். அவர் 40 பந்தில் 52 ரன்கள் அடித்தார். அப்போது ஐதராபாத் 160 ரன்கள் அடித்திருந்தது.

    அதே ஓவரின் 4-வது பந்தில் பேர்ஸ்டோவ் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பு இழந்தார். அவர் 55 பந்தில் 97 ரன்கள் அடித்தார். அதில்  7 பவுண்டரி, 6 சிக்ஸ் அடங்கும்.

    பின்னர் வந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மணிஷ் பாண்டு (1), அப்துல் சமாத் (8) பிரியம் கார்க் (0) ரன்களில் ஆட்டமிழக்க ஐதராபாத் அணியால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் அடித்தது. கேன் வில்லியம்சன் 10 பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
    ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டம் துபாயில் 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் 7 மணிக்கு சுண்டப்பட்டது.

    இதில் ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். 

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி:

    1. டேவிட் வார்னர், 2. பேர்ஸ்டோவ், 3. மணிஷ் பாண்டே, 4. கேன் வில்லியம்சன், 5. பிரியம் கார்க், 6. அபிஷேக் சர்மா, 7. அப்துல் சமாத், 8. ரஷித் கான், 9. சந்தீப் சர்மா, 10. கலீல் அகமது, 11. டி நடராஜன்

    கிங்ஸ் லெவன் பங்சாப் அணி:

    1. மயங்க் அகர்வால், 2. கேஎல் ராகுல், 3. மந்தீப் சிங், 4. நிக்கோலஸ் பூரன், 5. மேக்ஸ்வெல், 6. முகமது ஷமி, 7. பிஷ்னோய். 8. அர்ஷ்தீப் சிங், 9. சிம்ரன் சிங் 10. முஜீப் உர் ரஹ்மான், 11. காட்ரெல்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனிக்கு எதிராக பந்து வீசி அவரை க்ளீன் போல்டாக்கியது நம்பமுடியாத தருணம் என வருண் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் தொடரில் விளையாடும் சுனில் நரைன், ரஷித் கான் ஆகியோர் மிஸ்டரி பந்து வீச்சாளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அந்த வரிசையில் தமிழகத்தின் வருண் சக்ரவர்த்தியும் இணைந்துள்ளார்.

    கொல்கத்தா அணியில் இடம் பிடித்துள்ள வருண் சக்ரவர்த்தி நேற்றைய போட்டியில் முக்கியமான கட்டத்தில் எம்எஸ் டோனியை 11 ரன்னில் க்ளீன் போல்டாக்கினார். 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.

    எம்எஸ் டோனிக்கு எதிராக பந்து வீசியது நம்ப முடியாத தருணம் என வருண் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வருண் சக்ரவர்த்தி கூறுகையில் ‘‘3 வருடத்திற்கு முன்பு சேப்பாக்கம் மைதானத்திற்கு சென்று கேலரில் அமர்ந்து எம்எஸ் டோனியின் ஆட்டத்தை ஒரு ரசிகனாக கூட்டத்திற்கு நடுவில் இருந்து பார்த்து ரசித்தேன்.

    தற்போது டோனியை எதிராக நின்று பேட்டிங் செய்வதை பார்க்கிறேன். அவருக்கு நான் பந்து வீசினேன். இது எனக்கு நம்பமுடியாத வகையிலான தருணம்.

    வருண் சக்ரவர்த்தி, எம்எஸ் டோனி

    ஆடுகளம் மிகவும் பிளாட்டாக இருந்தது. இது 180 ரன்கள் அடிக்கக்கூடிய ஆடுகளமாக இருக்கும் என்று நினைத்தேன். டோனி சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்தார். பந்தை சரியான லெந்தில் பிட்ச் செய்தால் விக்கெட் வீழ்த்த முடியும் என்று நினைத்தேன்.

    திட்டத்தை சரியாக செயல்படுத்தினேன். போட்டி முடிந்த பின்னர் டோனியுடன் போட்டோ எடுத்துக் கொண்டேன். நான் தமிழில் சொல்ல விரும்பும் ஒரே வார்த்தை தல, தலதான்’’ என்றார்.
    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் விளங்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி ஹாட்ரிக் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்.
    ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை வெற்றியோடு தொடங்கிய அணிகள் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்.

    அதன்பின் டெல்லி அணி மூன்றில் இரண்டு வெற்றியை ருசித்து நான்கு வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் ஹாட்ரிக் தோல்வியை எதிர்கொண்டு பரிதாபமாக 7-வது இடத்தில் உள்ளது.

    இரண்டு அணிகளும் இதுவரை 20 முறைகள் மோதியுள்ளன. இதில் டெல்லி 9 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் 11 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

    ராஜஸ்தான் அணியை பொறுத்த வரைக்கும் முதல் இரண்டு போட்டிகளில் சஞ்சு சாம்சன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதேபோல் ஸ்டீவ் ஸ்மித்தும் முதல் இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்தார். இந்த இரண்டு போட்டிகளில் மட்டுமே ராஜஸ்தான் வெற்றி பெற்றது.

    அதன்பின் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் தோல்விகளை தழுவியது. அந்த அணியில் ஸ்மித், சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர் ஆகியோரில் இருவர் நன்றாக விளையாடினால் மட்டுமே மிகப்பெரிய ஸ்கோரை எட்ட முடியும் என்ற நிலை உள்ளது. இதுதான் அந்த அணிக்கு பின்னடைவாகும். ராகுல் டெவாட்டியா, ஆர்சர் கடைசி நேரத்தில் அணிக்கு கைக்கொடுக்கின்றனர். இதனால் தொடக்கம் சிறப்பாக அமைய வேண்டியது அவசியம்.

    பந்து வீச்சில் ஆர்சர் மட்டுமே நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளார். இன்னும் அந்த அணி பந்து வீச்சில் சரியான காம்பினேசன் அணியை உருவாக்கவில்லை.

    டெல்லி அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் மட்டுமே தோல்வியடைந்தது. அணிக்கு மிகப்பெரிய பலமே வேகப்பந்து வீச்சாளர்களான ரபடா, நோர்ஜே. இருவரும் பவுன்சர், ஸ்பேஸ், யார்க்கர் என அசத்துகிறார்கள்.

    பேட்டிங்கை பொறுத்த வரைக்கும் பிரித்வி ஷா நல்ல தொடக்கம் கொடுக்கிறார். அதை ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், ஸ்டாய்னிஸ் ஆகியோர் அப்படியோ கொண்டு செல்கிறார்கள். தவான் மட்டும் நல்ல நிலைக்கு திரும்பிவிட்டால் பேட்டிங்கில் அசுர பலம் கிடைக்கும்.

    ஒட்டு மொத்தத்தில் டெல்லிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் கடுமையாக போராட வேண்டியிருக்கும்.
    ×