என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்எஸ் டோனி,  வருண்  சக்ரவர்த்தி
    X
    எம்எஸ் டோனி, வருண் சக்ரவர்த்தி

    அன்று ரசிகராக பார்த்தேன், இன்று பந்து வீச்சாளராக வீழ்த்தினேன்- வருண் சக்ரவர்த்தி

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனிக்கு எதிராக பந்து வீசி அவரை க்ளீன் போல்டாக்கியது நம்பமுடியாத தருணம் என வருண் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் தொடரில் விளையாடும் சுனில் நரைன், ரஷித் கான் ஆகியோர் மிஸ்டரி பந்து வீச்சாளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அந்த வரிசையில் தமிழகத்தின் வருண் சக்ரவர்த்தியும் இணைந்துள்ளார்.

    கொல்கத்தா அணியில் இடம் பிடித்துள்ள வருண் சக்ரவர்த்தி நேற்றைய போட்டியில் முக்கியமான கட்டத்தில் எம்எஸ் டோனியை 11 ரன்னில் க்ளீன் போல்டாக்கினார். 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.

    எம்எஸ் டோனிக்கு எதிராக பந்து வீசியது நம்ப முடியாத தருணம் என வருண் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வருண் சக்ரவர்த்தி கூறுகையில் ‘‘3 வருடத்திற்கு முன்பு சேப்பாக்கம் மைதானத்திற்கு சென்று கேலரில் அமர்ந்து எம்எஸ் டோனியின் ஆட்டத்தை ஒரு ரசிகனாக கூட்டத்திற்கு நடுவில் இருந்து பார்த்து ரசித்தேன்.

    தற்போது டோனியை எதிராக நின்று பேட்டிங் செய்வதை பார்க்கிறேன். அவருக்கு நான் பந்து வீசினேன். இது எனக்கு நம்பமுடியாத வகையிலான தருணம்.

    வருண் சக்ரவர்த்தி, எம்எஸ் டோனி

    ஆடுகளம் மிகவும் பிளாட்டாக இருந்தது. இது 180 ரன்கள் அடிக்கக்கூடிய ஆடுகளமாக இருக்கும் என்று நினைத்தேன். டோனி சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்தார். பந்தை சரியான லெந்தில் பிட்ச் செய்தால் விக்கெட் வீழ்த்த முடியும் என்று நினைத்தேன்.

    திட்டத்தை சரியாக செயல்படுத்தினேன். போட்டி முடிந்த பின்னர் டோனியுடன் போட்டோ எடுத்துக் கொண்டேன். நான் தமிழில் சொல்ல விரும்பும் ஒரே வார்த்தை தல, தலதான்’’ என்றார்.
    Next Story
    ×