என் மலர்
விளையாட்டு
தினேஷ் கார்த்திக் 22 பந்தில் அரைசதம் அடிக்க பஞ்சாப் அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 3.30 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது. ராகுல் திரிபாதி, ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். திரிபாதி 4 ரன்னில் முகமது ஷமி பந்தில் க்ளீன் போல்டானார்.
அடுத்து வந்த நிதிஷ் ராணா 2 ரன்னில் ரன்அவுட் ஆனார். இதனால் 14 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு ஷுப்மான் கில் உடன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியாலும் ரன்கள் அடிக்க இயலவில்லை.
மோர்கன் 23 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு ஷுப்மான் கில் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். அப்போது கொல்கத்தா 10.4 ஓவரில் 63 ரன்களே எடுத்திருந்தது.
தினேஷ் கார்த்திக் தொடக்கத்தில் இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ரன் விகிதம் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. மறுமுனையில் ஆமை வேகத்தில் நகர்ந்த ஷுப்மான் கில் 42 பந்தில் அரைசதம் அடித்தார்.
கொல்கத்தா 15 ஓவரல் 101 ரன்கள் எடுத்திருந்தது. 16-வது ஓவரல் 14 ரன்களும், 17-வது ஓவரில் 18 ரன்களும், அடித்தனர்.
18-வது ஓவரில் அடுத்தடுத்து பவண்டரி அடித்தது 22 பந்தில் அரைசதம் அடித்தால் தினேஷ் கார்த்திக். இவரத அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா 150 ரன்னைக் கடந்தது.
19-வது ஓவர் மற்றும் 20-வது ஓவரில் தலா 9 ரன்கள் அடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் அடித்துள்ளது. தினேஷ் கார்த்திக் 29 பந்தில் 58 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
24 பந்தில் 45 ரன்கள் விளாசி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஹெட்மையர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக ஹெட்மையர் சிக்சராக விளாசினார். முதல் ஐந்து சிக்சர்களும் புல் ஷாட் மூலம் வந்தது. கிரிக்கெட் உலகில் புல் ஷாட் என்றால் நினைவுக்கு சற்றென வருபவர் ரிக்கி பாண்டிங். எந்தவொரு பந்து வீச்சாளரும், எவ்வளவு வேகத்தில் பந்து வீசினாலும் புல் ஷாட் அடிக்க பயப்படமாட்டார்.
ரிக்கி பாண்டிங் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார். அவரிடம் இருந்து புல் ஷாட் கலையை கற்றுக் கொண்டிருக்கிறேன் என ஹெட் மையர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹெட்மையர் கூறுகையில் ‘‘ரிக்கி பாண்டிங் உடன் உலா வருவதுது வேடிக்கையாக இருக்கும். அவர் சிறந்த வீரர். என்னுடைய புல் ஷாட்டில் அவர் தற்போது வேலை செய்து கொண்டிருக்கிறார். கடந்த சில போட்டிகளில் பந்து வீச்சாளர்கள் எனக்கு ஷார்ட் பிட்ச் பந்து வீசுவது அவர் புரிந்து வைத்துள்ளார்.
இதனால் என்னை புல் ஷாட் அடிக்க வைக்கும் வேலையில் களம் இறங்கி, அதை திறம்பட செய்துள்ளா். சிறந்த பினிஷர் கலையை எனக்கு கற்றுக்கொடுத்து வருகிறார். நான் படிப்படியாக அந்த நிலைக்கு வந்து கொண்டிருக்கிறேன்’’ என்றார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக கடைசி ஓவரில் நான்கு சிக்சர் விட்டுக்கொடுக்க இரண்டு போட்டியோடு ஓரங்கப்பட்டடுள்ளார் லுங்கி நிகிடி.
ஐபிஎல் 2018 சீசனில் இருந்து தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த சீசனில் காயம் காரணமாக விளையாடவில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை அணிக்கெதிராக முதல் ஆட்டத்தில் களம் இறங்கினார். லுங்கி நிகிடி 38 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான 2-வது ஆட்டத்தில் கடைசி ஓவரில் நான்கு சிக்சர்கள் விட்டுக்கொடுக்க, 4 ஓவரில் 56 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
இதனால் 3-வது போட்டியில் கழற்றிவிடப்பட்டார். அவருக்குப் பதிலாக ஹாசில்வுட் களம் இறக்கப்பட்டார். வெயின் பிராவோ அணிக்கு திரும்பிய பின்னர் ஹசில்வுட் நீக்கப்பட்டார். சாம் கர்ரன் சிறப்பாக விளையாடி வருவதால் சென்னை அணி அவரை நீக்க விரும்பவில்லை.
இதனால் இரண்டு போட்டியோடு கழற்றிவிடப்பட்ட லுங்கி நிகிடி, மீண்டும் அணிக்கு திரும்ப முடியுமா? என்ற கவலையில் உள்ளர்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘அங்கே அதிக அளவில் மோசமன விசயங்கள் உள்ளன’’ என்று தெரிவித்துள்ளார். அதற்கு பதில் அளித்த ரசிகர், ‘‘நீங்கள் சிறந்தத அணியில் விளையாட தகுதியானர்’’ எனத் தெரிவித்துள்ளார்.
இதை வைத்து பார்க்கும்போது அணியில் இருந்து நீக்கியதால் கவலையில் இருப்பது தெளிவாகியுள்ளது.
இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் முக்கியமான சொத்து என பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இடது கை பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். விக்கெட் கீப்பருடன் பேட்ஸ்மேன் பணியை சிறப்பாக செய்யக்கூடியவர். ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். மிடில் ஆர்டர் வரிசையில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார்.
இந்நிலையில் ரிஷப் பண்ட் டெல்லி அணியின் முக்கியமான சொத்து என்று பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரையன் லாரா கூறுகையில் ‘‘ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கான மிகப்பெரிய சொத்து. தற்போது ஆட்டத்தை மிகப்பெரிய அளவில் முன்னேற்றியுள்ளார். அவரது பேட்டிங் மற்றும் முன்னேற்றம் அடைந்தது குறித்து நான் பேசிக் கொண்டிருக்கிறேன். உடனடியாக கவனித்துக் கொள்வது எல்லா பந்துகளையும் லெக் சைடு அடிக்க பார்ப்பதுதான்.
லெக் சைடு அடிக்கும் ஷாட்டில் எந்த பயனும் இல்லை. அப்படி விளையாடினால் சரிபட்டு வராது என்பதை உணர்ந்து ஆஃப் சைடு பந்தை அடிக்க முயற்சி செய்துள்ளார்.
அவரிடம் உண்டான மாற்றத்தால் மைதானத்தின் எல்லா பக்கத்திலும் ரன்கள் அடிக்கும் திறமையை பெற்றுள்ளார். அவரது ரன் விகிதம் ஈர்க்கும் வகையில் இருக்கும்போது, அந்த பந்து வீச்சாளர்களுக்கு கடினமானதாக இருக்கும்’’ என்றார்.
அபு தாபியில் நடக்கும் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஐ.பி.எல். தொடரின் 24-வது லீக் போட்டி அபு தாபியில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீ்ட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் டஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விவரம்:-
1. ராகுல் திரிபாதி, 2. ஷுப்மான் கில், 3. நிதிஷ் ராணா, 4. சுனில் நரைன், 5. மோர்கன், 6. அந்த்ரே ரஸல், 7. தினேஷ் கார்த்திக், 8. பேட் கம்மின்ஸ், 9. நாகர்கோட்டி, 10. பிரதிஷ் கிருஷ்ணா, 11. வருண் சக்ரவர்த்தி
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விவரம்:-
1. கே.எல். ராகுல், 2. மயங்க் அகர்வால், 3. மந்தீப் சிங், 4. நிக்கோலஸ் பூரன், 5. சிம்ரன் சிங், 6. மேக்ஸ்வெல், 7. முஜீப் உர் ரஹ்மான். 8. ஜோர்டா், 9. ரவி பிஷ்னோய், 10. முகமது ஷம, 11. அர்ஷ்தீப் சிங்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டிக்கு ரபேல் நடால் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
பாரீஸ்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரை இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா), கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டெபானோஸ் சிட்சிபாஸை சந்தித்தார்.
இதில் ஜோகோவிச் 6-3, 6-2, 5-7, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இறுதிப் போட்டியில் ஜோகோவிச் ரபேல் நடாலை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதியில் டியாகோ ஸ்வாட்ர்ஸ்மேனை வீழ்த்தி ரபேல் நடால் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
பாரீஸ்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், அர்ஜெண்டினாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேன் ஆகியோர் மோதினார்கள்.
இதில் ரபேல் நடால் 6-3, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஷார்ஜா:
டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணியின் பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
தவான் 5 ரன்னிலும், பிரித்வி ஷா 19 ரன்னிலும், ஷ்ரேயாஸ் அய்யர் 22 ரன்னிலும், ரிஷப் பண்ட் 5 ரன்னிலும் அவுட் ஆகினர்.
மார்கஸ் ஸ்டாய்னிஸ் 39 ரன்களும், ஹெட்மையர் 24 பந்தில் 45 ரன்களும் அடிக்க டெல்லி 150 ரன்களை தாண்டும் வாய்ப்பை பெற்றது. அக்சர் பட்டேல் அதிரடியாக விளையாடி 8 பந்தில் 17 ரன்கள் அடித்தார்.
இறுதியில், டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது.
ராஜஸ்தான் அணியில் ஆர்ச்சர் 3 விக்கெட் எடுத்து அசத்தினார்.
இதையடுத்து, 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் ஓரளவு தாக்குப் பிடித்து 34 ரன்கள் அடித்து வெளியேறினார். ஸ்மித் 24 ரன்னில் ஆட்டமிழந்தார்.
டெல்லி அணியினர் துல்லியமாக பந்து வீசி அசத்தினர். இதனால் ராஜஸ்தான் அணியினர் ரன்கள் எடுக்கத் தவறினர்.
மற்ற ஆட்டக்காரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். ராகுல் டெவாட்டியா கடைசி வரை போராடினார். அவர் 38 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், ராஜஸ்தான் அணி 138 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால் 46 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.
டெல்லி அணி சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், அஷ்வின், ஸ்டாய்னிஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
ஹெட்மையர், மார்கஸ் ஸ்டாய்னிஸ் தாக்குப்பிடித்து விளையாடியதால் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு 185 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி.
டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி டெல்லி அணியின் பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தவான் 5 ரன்னிலும், பிரித்வி ஷா 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
சரியான தொடக்கம் கிடைக்காததால் டெல்லி அணியின் உத்வேகம் குறைந்தது, ஷ்ரேயாஸ் அய்யர் 22 ரன்னிலம், ரிஷப் பண்ட் 5 ரன்னிலும் வெளியேறினர்.
ஷார்ஜா ஆடுகளம் ரன் குவிக்கும் இடமாக இருக்கும் நிலையில் டெல்லிக்கு இன்று சறுக்கல் ஏற்பட்டது. மார்கஸ் ஸ்டாய்னிஸ் 39 ரன்களும், ஹெட்மையர் 24 பந்தில் 45 ரன்களும் அடிக்க டெல்லி 150 ரன்களை தாண்டும் வாய்ப்பை பெற்றது.
அக்சார் பட்டேல் அதிரடியாக விளையாடி 8 பந்தில் 17 ரன்கள் அடித்தார். டெல்லி அணிக்கு 19-வது ஓவரில் 22 ரன்கள் கிடைத்தது. 19 ஓவரில் 181 ரன்கள் அடித்தது. கடைசி ஓவரை ஆர்சர் வீசினார். இந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்ததால் 184 ரன்கள் அடித்துள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 23-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மித் டஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
மிடில் ஆர்சர் சொதப்பலால் வாட்சன், டு பிளிசிஸ் ஆகியோரை நம்பியே சென்னை சூப்பர் கிங்ஸ் நாளை சென்னை அணியை எதிர்கொள்கிறது.
ஐபிஎல் 25-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான ரெக்கார்டை பார்த்தோம் என்றால், ஆர்சிபி என்றாலே சிஎஸ்கே-வுக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரிதான்.
25 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 16 முறை சிஎஸ்கே-தான் வெற்றி வாகை சூடியுள்ளது. 8 முறைதான் ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. அதுவும் சேஸிங்கில் சிஎஸ்கே அசத்தல். 11 முறை மோதியதில் சிஎஸ்கேவுக்கு 7-ல் வெற்றி கிடைத்துள்ளது.
இந்த முறை ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவதால் பழைய சாதனைகளை வைத்து கணிக்க முடியவில்லை.
துபாயில் நடைபெற்றுள்ள முதல் 9 போட்டிகளில் 6-ல் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. இரண்டு ஆட்டங்கள் சூப்பர் ஓவர் வரை சென்றுள்ளது.
துபாய் மைதானத்தில் சிஎஸ்கே 3 போட்டிகளில் விளையாடி இரண்டில் தோல்வியை சந்தித்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 179 இலக்கை விக்கெட் இழக்காமல் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோல்வியடைந்த இரண்டு போட்டிகளிலும் 175 ரன்களுக்கு கீழ் உள்ள இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை சந்தித்தது.
பஞ்சாப் போட்டிக்குப்பிறகு சரி, வெற்றிக்கான வழி கிடைத்து விட்டது, இனிமேல் ஜெட் வேகத்தில் அணி செல்லும் என்ற நிலையில், கொல்கத்தாவுக்கு எதிராக ஒரு பிரேக்.
துபாய் ஆடுகளம் சற்று ட்ரிக்கானது. முதலில் பேட்டிங் செய்தால் 175 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும். அதற்கு மேல் சென்றால் சேஸிங் செய்வது இயலாத காரியம். அல்லது 170 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். தற்போதைய நிலையில் இரண்டும் நடக்க வேண்டுமென்றால் டு பிளிஸ்சிஸ் - வாட்சன் ஜோடி கையில் மட்டுமே உள்ளது.
கொல்கத்தாவுக்கு எதிராக டு பிளிஸ்சிஸ் 17 ரன்களில் ஆட்டமிழக்க, அம்பதி ராயுடு உடன் வாட்சன் பொறுப்பை ஏற்றுக்கொண்டு சிறப்பாக விளையாடினார்.
வாட்சன் 40 ரன்களை தாண்டினால் சிஎஸ்கே-வுக்கு வெற்றி நிச்சயம் என்ற ரசிகர்கள் நம்பிக்கையில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இடியை இறக்கினர்.
ஆனால், அம்பதி ராயுடு டீப் மிட்ஆன் திசையில் பவர் இல்லாமல் ஷாட் அடித்துக் கொண்டு 30 ரன்னில் மாட்டிக்கொண்டார்.
அதற்கு அடுத்த ஓவரில் வாட்சன் 50 ரன்னில் ஆட்டமிழக்கும்போது, 13.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருந்தது. 41 பந்தில் 67 ரன்கள்தான் தேவைப்பட்டது. அதுவரை சிஎஸ்கே கையில் இருந்த ஆட்டம் மிடில் ஆர்டர் சொதப்பியதால் தோல்வியை சந்திக்க நேரிட்டது.
6-வது, 7-வது இடத்தில் களம் இறங்கிய டோனி, 4-வது வீரராக களம் இறங்கினார். அதற்கும் பலனில்லை. குட்டிப் பையன் சாம் கர்ரன் அவரால் முடிந்த அளவிற்கு 11 பந்தில் 17 ரன்கள் அடித்தார். சாம் கர்ரனை 18 பந்தில் 40 ரன்கள் போன்ற நிலை இருக்கும்போது பயன்படுத்த வேண்டும். அவர் பினிஷராகவோ, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவோ எடுத்துக் கொண்டால் சிக்கலை ஏற்படுத்தும்.
டோனி எப்போதும் 18-வது ஓவரை டார்கெட் செய்ய விரும்புவார். 18 பந்தில் 39 ரன்கள் தேவை என்ற நிலையில் ரஸல் வீசிய அந்த ஓவரில் சாம் கர்ரன் (11 பந்தில் 18 ரன்கள்) ஆட்டமிழந்ததும், 3 ரன்கள் மே அடித்ததும்தான் தோல்விக்கு முக்கிய காரணம்.
மிடில் ஆர்டரில் பியூர் பேட்ஸ்மேனாக இருக்கும் கேதர் ஜாதவ்தான் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். களம் இறங்கிய நான்கு போட்டிகளில் 22, 26, 3, 7 என சொற்ப ரன்களே எடுத்துள்ளார்.
ஜடேஜா தோற்றக்கூடிய போட்டியில் கடைசியில் வாணவேடிக்கை நிகழ்த்தி ரசிகர்களை சற்று சந்தோசப்படுத்துகிறார். அவரால் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. வெயின் பிராவோ ஹாம்ஸ்டிரிங் இன்ஜுரியில் இருந்து திரும்பியுள்ளார். இதனால் பேட்டிங் செய்வாரா? என்பது சந்தேகம்தான்.
பேட்டிங்கில் முன்னேற்றம் காண கேதர் ஜாதவுக்குப் பதிலாக மாற்று வீரரைத் தேர்வு செய்து மிடில் ஆர்டரை வலுப்படுத்த வேண்டும். அல்லது அம்பதி ராயுடுவை தொடக்க வீரராக களம் இறக்கி டு பிளிஸ்சிஸை 3-வது வீரராக களம் இறக்க வேண்டும். மிடில் ஆர்டர் வலுப்பெறும் வரை சென்னைக்கு தலைவலிதான்.
வேகப்பந்து வீச்சை பொறுத்த வரைக்கும் தீபக் சாஹர், சாம் கர்ரன், வெயின் பிராவோ என நான்கு பேர் இருப்பதால் எந்த பிரச்சினையும் இல்லை. பவர் பிளேயில் ஸ்விங் கிங் சாஹருடன் இணைந்து சாம் கர்ரன் எதிரணி பேட்ஸ்மேன்ளை ஆட்டம் காண வைக்கிறார்.
ஆனால் ஒரு கவலை தீபக் சாஹருக்கு விக்கெட் விழாததுதான். தீபக் சாஹர் 2018-ல் பவர் பிளேயில் 32 ஓவர்கள் வீசி 10 விக்கெட்டும், கடந்த வருடம் 50 ஓவரில் 15 விக்கெட்டும் வீழ்த்தினார். தற்போது 16 ஓவரில் 2 விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார். இவர் விக்கெட் வீழ்த்தாதது தொடக்க பேட்ஸ்மேன்கள் நீண்ட நேரம் விளையாட வழி வகுக்கிறது. சாஹல் பவர் பளேயில் ஒன்றிரண்டு விக்கெட் வீழ்த்தி விட்டால், டெத் ஓவரில் பிராவோ மற்ற பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்து விடுவார்.
சுழற்பந்து வீச்சில் சாவ்லாவிற்குப் பதிலாக ரிஸ்ட் ஸ்பின்னர் கரண் சர்மாவை களம் இறக்கினார். அவர் தனது பணியை சிறப்பாக செய்து முடித்தார்.

துபாயில் ஆர்சிபி நான்கு போட்களில் விளையாடி இரண்டு வெற்றி பெற்றுள்ளது. மும்பைக்கு எதிராக மட்டுமே 201 ரன்கள் அடித்து சூப்பர் ஓவரை சந்தித்தது. மற்றபடி அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர் 163 தான்.
ஆர்சிபி-யை பொறுத்த வரைக்கும் வைச்சா குடுமி, அடித்தால் மொட்டை என்ற கதையாகத்தான் உள்ளது. வெற்றி பெறும். இல்லையெனில் படுமோசமாக விளையாடும். தோல்வியடைந்த போட்டிகளில் 109, 137 என சுருண்டுள்ளது.
ஆர்சிபி-க்கு பேட்டிங்கில் அந்த அணியின் இளம் பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல் சிறந்த பக்க பலமாக இருக்கிறார். ஐந்து இன்னிங்சில் மூன்று அரைசதங்கள் (56, 1, 54, 58, 4) அடித்துள்ளார். இரண்டு அரைசதம் முதலில் பேட்டிங் செய்யும்போது வந்தது. சேஸில் சற்று தடுமாறுகிறார். சேஸிங் நிலைத்து நின்று விட்டால் பேட்டிங்கில் வலுப்பெறும்.
பிஞ்ச் (29, 20, 52, 8, 13) என ஐந்து இன்னிங்சில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். பிஞ்ச் சிறந்த பவர்பிளே பேட்ஸ்மேன். இதனால் ஆர்சிபி தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறது. விராட் கோலி கடைசி இரண்டு போட்டிகளில் 72, 43 ரன்கள் அடித்து பார்முக்கு வந்துள்ளார். கடைசி போட்டியில் மட்டுமே சரியாக விளையாடவில்லை. இந்த நான்கு பேர்தான் அணிக்கு முதுகெலும்பு.
பந்து வீச்சில் நவ்தீப் சைனி, சாஹல், வாஷிங்டன் சுந்தர், இசுரு உடனா உள்ளனர். ஆனால் தொடர்ச்சியாக அவர்கள் சிறப்பாக பந்து வீசாதது அணிக்கு பின்னடைவு. ஒட்டுமொத்தத்தில் அன்றைய நாள் அவர்களுடையதாக இருந்தால் வெற்றி பெறுவார்கள். இல்லை என்றால் படுமோசமாக தோல்வியடைவார்கள்.
ஒட்டு மொத்தத்தில் இரண்டு அணியின் பேட்டிங்கை பொறுத்தே வெற்றித் தோல்வி அடையும்.
மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டோனிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது மகளுக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.
இந்தியா கிரிக்கெட் மீது அதிக பேரார்வம் கொண்ட நாடு. இங்கு கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம். ஒருவரை பிடித்த வீரராக ரசிர்கள் ஏற்றுக் கொண்டால் அவர்கள் மீது அதிக பாசம் வைத்திருப்பார்கள். அதேபோல் அந்த வீரர் சரியாக விளையாடவில்லை என்றாலும் கடுமையாக விமர்சிப்பார்கள்.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 6 போட்டிகளிலும் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக மோசமாக விளையாடியது.
குறிப்பாக எம்.எஸ். டோனியின் ஆட்டம் சரியாக அமையவில்லை. இதனால் கோபம் அடைந்த ரசிகர்களில் பலர் எல்லைத் தாண்டியுள்ளனர். டோனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஸ்கீரின்சாட் எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பரவ விட்டுள்ளனர். அதற்கு வரும் கருத்துகள் மிகவும் மோசமாகவும், கொடூரமாகவும் உள்ளன. அதில் இரண்டு பேர் எல்லையை மீறி கருத்து தெரிவித்துள்ளனர்.
யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு டோனி மகள் ஜிவாவுக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.






