என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சமூக வலைதளங்களில் எம்எஸ் டோனி குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததையடுத்து அவரது வீடுகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ராஞ்சி:

    ஐ.பி.எல். போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக ஆடவில்லை. அந்த அணி இதுவரை 7 ஆட்டத்தில் விளையாடி 5-ல் தோற்றது. 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

    கொல்கத்தா அணிக்கு எதிராக கடந்த 7-ந் தேதி நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ரன்னில் தோற்றது. இந்த தோல்வியால் சி.எஸ்.கே ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து இருந்தனர்.

    இதற்கிடையே இந்த தோல்வி காரணமாக சமூக வலைதளங்களான டுவிட்டர், இன்ஸ்டாகிராமில் சிலர் டோனியின் குடும்பத்துக்கு மிரட்டல் விடுத்திருந்தனர். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    இந்த மிரட்டல் காரணமாக டோனியின் வீடுகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராஞ்சியில் உள்ள அவரது வீடு மட்டும் பண்ணை வீடுகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

    வீடுகளுக்கு முன்பு தடுப்பு கட்டைகளை வைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 2 வீடுகளிலும் தலா 10-க்கு மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    அந்த பகுதிகளில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் திரியும் நபர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததையடுத்து பேட்ஸ்மேன்கள் மீது மீண்டும் கேப்டன் டோனி கடுமையாக பாய்ந்துள்ளார்.

    துபாய்:

    ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூரிடம் வீழ்ந்து 5-வது தோல்வியை தழுவியது.

    துபாயில் நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்தது.

    கேப்டன் விராட் கோலி 52 பந்தில் 90 ரன் (4 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார். ‌ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டும், தீபக் சாஹர், சாம்கரண் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் பெங்களூர் அணி 37 ரன்னில் வெற்றி பெற்றது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் தோல்வியை தழுவியுள்ளது. அந்த அணிக்கு 5-வது தோல்வி ஏற்பட்டுள்ளது. இது மிகுந்த நெருக்கடியாகும். பெங்களூர் அணியிடம் இவ்வளவு மோசமாக இதுவரை தோற்றது கிடையாது.

    இந்த தோல்வியால் பேட்ஸ்மேன்கள் மீது மீண்டும் கேப்டன் டோனி கடுமையாக பாய்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கடைசி 4 ஓவர்களில் நாங்கள் கட்டுக்கோப்பாக சிறப்பாக பந்து வீசி இருக்க வேண்டும். அதை செய்ய தவறி விட்டோம். பேட்டிங்கை பொறுத்தவரை சிறிது கவலையளிக்கும் விதத்தில் இருந்து வந்தது. நேற்றைய ஆட்டத்தில் வெளிப்படையாக தெரிந்து விட்டது. அதை சரிசெய்ய ஏதாவது செய்வது அவசியமாகும்.

    பேட்டிங்கில் மிகப் பெரிய ஷாட்களை ஆடுவது அவசியம் என நினைக்கிறேன். அடுத்து வரும் போட்டிகளில் மிகப்பெரிய ஷாட்களை ஆட வேண்டும்.

    இந்த போட்டியில் 6-வது ஓவரில் இருந்தே பேட்டிங்கில் சக்தி இழந்து விட்டதாகவே நினைக்கிறேன். சரியான திட்டத்துடன் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கவில்லை. பந்து வீச்சில் எதிர் அணியை கட்டுப்படுத்தினோம். ஆனால் கடைசி 4 ஓவர்களில் நாங்கள் தவறு செய்து விட்டோம்.

    எங்கள் கப்பலில் ஏராளமான ஓட்டைகள் உள்ளன. முதலில் 5 பந்து வீச்சாளர்களை வைத்து ஆடினோம். இப்போது 6 பவுலர்களை வைத்து விளையாடினோம்.

    எங்களின் மிகப்பெரிய கவலை பேட்டிங்தான். அடுத்து வரும் போட்டியில் பேட்டிங்கை சரி செய்ய தீவிரமாக முயற்சிப்போம்.

    இவ்வாறு டோனி கூறினார்.

    சென்னை அணி 8-வது ஆட்டத்தில் ஐதராபாத்துடன் வருகிற 13-ந் தேதி துபாயில் மோதுகிறது. பெங்களூர் அணி 4-வது வெற்றியை 

    பெற்றது. அந்த அணி அடுத்த 7-வது ஆட்டத்தில் கொல்கத்தாவை நாளை சந்திக்கிறது.

    பஞ்சாப்புக்கு எதிரான நேற்றைய போட்டியில் சுனில் நரேன் பந்து வீச்சு குறித்து போட்டி நடுவர்கள் புகார் செய்துள்ள நிலையில் அவர் பந்துவீச தடை விதிக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அபுதாபி:

    வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த முன்னணி சுழற்பந்து வீரர் சுனில் நரீன். இவர் ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணிக்காக ஆடி வருகிறார்.

    பஞ்சாப்புக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவரது பந்து வீச்சு குறித்து போட்டி நடுவர்கள் புகார் செய்துள்ளனர். அவர் விதிமுறைகளை மீறி பந்து வீசுகிறார். அவரது பந்து வீச்சு சந்தேகம் அளிக்கிறது என்று புகார் அளித்துள்ளனர்.

    அவர் மீது ஏற்கனவே இது மாதிரியான குற்றச்சாட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து சுனில் நரீன் பந்துவீச தடை விதிக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ரபேல் நடால் - நோவக் ஜோகோவிச் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
    பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் ஆண்கள் ஒற்றையர் மகுடத்துக்கான ஆட்டத்தில் 12 முறை சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ‘களிமண் தரை கதாநாயகன்’ ரபேல் நடாலுடன் (ஸ்பெயின்), ஜோகோவிச் மோதுகிறார்.

    இந்த போட்டியில் நடால் வாகை சூடினால் 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வதுடன், அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற ரோஜர் பெரடரின் (சுவிட்சர்லாந்து) சாதனையை சமன் செய்வார். ஜோகோவிச் வென்றால் அவருக்கு இது 18-வது கிராண்ட்ஸ்லாமாக அமையும்.

    இருவரும் இதுவரை 55 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றனர். இதில் ஜோகோவிச் 29 முறையும், நடால் 26 தடவையும் வென்றுள்ளனர். பிரெஞ்ச் ஓபனில் 7 முறை மோதி உள்ளனர். இதில் நடால் 6-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறார்.

    இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் 2 நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
    பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சோபியா கெனினை வீழ்த்தி இகா ஸ்வியாடெக் முதல் முறையக சாம்பியன் பட்டம் வென்றார்.
    பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் சோபியா கெனின் (தரவரிசை 4) - தரவரிசை பெறாத போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் மோதினர்.

    இதில் இகா ஸ்வியாடெக் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இது இவரது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
    பவர்பிளேயில சிறப்பாக பந்து வீசும் வாஷிங்டன் சுந்தர் டு பிளிஸ்சிஸ், வாட்சனை வெளியேற்ற, சென்னை சூப்பர் கிங்ஸ் ஆர்சிபி-யிடம் எளிதாக சரணடைந்தது.
    சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் விராட் கோலியின் (90) அதிரடியால் 4 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் அடித்தது.

    பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வாட்சன், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    முதல் ஓவரை கிறிஸ் மோரிஸ் வீசினார். இந்த ஓவரில் வாட்சன் ஒரு பவுண்டரி அடித்தார். அடுத்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 3-வது ஓவரில் வாட்சன் ஒரு பவுண்டரி அடிக்க 7 ரன்கள் கிடைத்தது.

    4-வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். இந்த ஓவரை டார்கெட் செய்ய நினைத்தார் டு பிளிஸ்சிஸ் 4-வது மற்றும் 5-வது பந்தை தூக்கி அடிக்க நினைத்தார். பந்து மேல் நோக்கி சென்றாலும் கேட்ச் ஆகவில்லை. ஆனால் கடைசி பந்தில் டு பிளிஸ்சிஸ் மிட்-ஆன் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 10 பந்தில் 8 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். சென்னை 19 ரன்னுக்குள் முக்கிய விக்கெட்டை இழந்தது.

    அடுத்து அம்பதி ராயுடு களம் இறங்கினார். 5-வது ஓவரை நவ்தீப் சைனி வீசினார். இந்த ஓவரில் சென்னை அணியால் 2 ரன்கள் மட்டுமே அடித்தது.

    6-வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய வாட்சன் அடுத்த பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். வாட்சன் 18 பந்தில் 14 ரன்கள் அடித்தார். 25 ரன்னுக்குள் சென்னை முக்கிய 2 விக்கெட்டுகளை இழந்தது. அத்துடன் சென்னை அணியில் தோல்வி உறுதியானது.

    அடுத்து 3-வது விக்கெட்டுக்கு அம்பதி ராயுடு உடன் ஜெகதீசன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. ஆனால் அதிரடியாக விளையாட முடியவில்லை. 9-வது ஓவரில் 9 ரன்களும், 10-வது ஓவரில் 3 ரன்களும் அடித்தது.

    10.2 ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 50 ரன்னைக் கடந்தது. 11-வது ஓவரில் 9 ரன்களும், 12-வது ஓவரில் 7 ரன்களும் கிடைத்தது.

    13-வது ஓவரில் ஜெகதீசன் இரண்டு பவுண்டரிகள் அடிக்க 12 ரன்கள் கிடைத்தது. 14-வது ஓவரை ஷிவம் டுபே வீசினார். இந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது. ஆனால் நவ்தீப் சைனி வீசிய 15-வது ஓவரில் ஜெகதீசன் 33 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். அடுத்து 4-வது விக்கெட்டுக்கு அம்பதி ராயுடு உடன், எம்எஸ் டோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஓவரில் 7 ரன்களே கிடைத்தது.

    16-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார் எம்எஸ் டோனி. இதனால் சென்னை 15.3 ஓவரில் 100 ரன்னைத் தாண்டியது. டோனி சிக்ஸ் அடித்ததன் சந்தோசம் ரசிகர்களுக்கு நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இதே ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 10 ரன்கள் கிடைக்க சென்னை 16 ஓவரில் 106 ரன்கள்  எடுத்திருந்தது.

    17-வது ஓவரை கிறிஸ் மோரிஸ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் சாம் கர்ரன் சந்தித்த முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார். அடுத்து ஜடேஜா களம் இறங்கினார். இந்த ஓவரில் கிறிஸ் மோரிஸ் 3 ரன்களே விட்டுக்கொடுத்தார்.

    18-வது ஓவரை இசுரு உடானா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் அம்பதி ராயுடு ஸ்டம்பை பறிகொடுத்தார்.  அவர் 40 பந்தில் 42 ரன்கள் அடித்தார். அடுத்து வெயின் பிராவோ களம் இறங்கினார். இந்த ஓவரில் சென்னைக்கு 8 ரன்கள் கிடைத்தது.

    19-வது ஓவரை கிறிஸ் மோரிஸ் வீசினார். இந்த ஓவரில் பிராவோ (7), ஜடேஜா (7) ஆட்டமிழந்தனர். மோரிஸ் 9 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    இசுரு உடானா கடைவி ஓவரை வீசினார். சென்னை 6 ரன்கள் அடிக்க சென்னை 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் அடித்தது. இதனால் ஆர்சிபி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் பவர் பிளேயில் வாட்சன், டு பிளிஸ்சிஸை இழந்துள்ளது.
    சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 4 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் அடித்தது.

    பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வாட்சன், டு பிளிஸ்சிஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    முதல் ஓவரை கிறிஸ் மோரிஸ் வீசினார். இந்த ஓவரில் வாட்சன் ஒரு பவுண்டரி அடித்தார். அடுத்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. 3-வது ஓவரில் வாட்சன் ஒரு பவுண்டரி அடிக்க 7 ரன்கள் கிடைத்தது.

    4-வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். இந்த ஓவரை டார்கெட் செய்ய நினைத்தார் டு பிளிஸ்சிஸ் 4-வது மற்றும் 5-வது பந்தை தூக்கி அடிக்க நினைத்தார். பந்து மேல் நோக்கி சென்றாலும் கேட்ச் ஆகவில்லை. ஆனால் கடைசி பந்தில் டு பிளிஸ்சிஸ் மிட்-ஆன் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 10 பந்தில் 8 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். சென்னை 19 ரன்னுக்குள் முக்கிய விக்கெட்டை இழந்தது.

    அடுத்து அம்பதி ராயுடு களம் இறங்கினார். 5-வது ஓவரை நவ்தீப் சைனி வீசினார். இந்த ஓவரில் சென்னை அணியால் 2 ரன்கள் மட்டுமே அடித்தது.

    6-வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய வாட்சன் அடுத்த பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். வாட்சன் 18 பந்தில் 14 ரன்கள் அடித்தார். 25 ரன்னுக்குள் சென்னை முக்கிய 2 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து 3-வது விக்கெட்டுக்கு அம்பதி ராயுடு உடன் ஜெகதீசன் ஜோடி சேர்ந்தார்.

    8 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு சிஎஸ்கே 35 ரன்கள் எடுத்துள்ளது.
    டி வில்லியர்ஸ் டக்அவுட் ஆக, பிஞ்ச் ஏமாற்ற, விராட் கோலி அரைசதம் அடிக்க சென்னை அணிக்கு 170 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி.
    சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 25-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். சென்னை அணியில் கேதர் ஜாதவ் நீக்கப்பட்டு ஜெகதீசன் சேர்க்கப்பட்டார்.

    தேவ்தத் படிக்கல், தீபக் சாஹர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தீபக் சாஹர் முதல் ஓவரை வீசினார். பந்தை அற்புதமாக ஸ்விங் செய்தார் தீபக் சாஹர். ஆரோன் பிஞ்ச் பந்து எங்கே வருகிறது என தேடும் நிலை ஏற்பட்டது. முதல் ஓவரில் 2 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    அடுத்த ஓவரை சாம் கர்ரன் வீசினார். இந்த ஓவரில் தேவ்தத் படிக்கல் ஒரு பவுண்டரி அடித்தார். இதனால் சென்னை 9 ரன்கள் விட்டுக்கொடுத்தது. அடுத்த ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் ஆரோன் பிஞ்ச் ஸ்டம்பை பறிகொடுத்தார். இந்த ஓவரில் 4 ரன்களே விட்டுக்கொடுத்தார்.

    4-வது ஓவரின் சாம் கர்ரன் 6 ரன்களும், ஐந்தாவது ஓவரில் தீபக் சாஹர் 4 ரன்களும் விட்டுக்கொடுத்தனர். தீபக் சாஹர் பவர் பிளேயில் 3 ஓவரில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    அடுத்த ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விட்டுக்கொடுக்க ஆர்சிபி பவர் பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்திருந்தது.

    7-வது ஓவரை பிராவோ வீசினார். இந்த ஓவரில் பவுண்டரியுடன் 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அடுத்த இரண்டு ஓவர்களில் 9 ரன்கள் விட்டுக்கொடுத்தது.

    10-வது ஓவரை கரண் சர்மா வீசினார். இந்த ஓவரில் படிக்கல் ஒரு சிக்ஸ் விளாசினார். இதனால் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு ஆர்சிபி 65 ரன்கள் எடுத்தது.

    11-வது ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் படிக்கல் 33 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இது ஓவரின் ஐந்தாவது பந்தில் ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. டி வில்லியர்ஸ் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.

    ஒரு பக்கம் விக்கெட் இழந்தாலும் மறுபக்கம் விராட் கோலி நம்பிக்கையுடன் விளையாடினார். 15-வது ஓவரில் வாசிங்டன் சுந்தர் 10 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 15 ஓவர் முடிவில் ஆர்சிபி 95 ரன்கள் எடுத்திருந்தது.

    16-வது ஓவரை கரண் சர்மா வீசினார். இந்த ஓவரில் ஆர்சிபி ஒரு பவுண்டரியுடன் 8 ரன்கள் சேர்த்தது. அத்துடன் 100 ரன்னைக் கடந்தது. 16 ஓவர் முடிவில் ஆர்சிபி 103 ரன்கள் எடுத்திருந்தது.

    17-வது ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரியுடன் ஆர்சிபி 14 ரன்கள் அடித்தது. கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி விராட் கோலி 39 பந்தில் அரைசதம் அடித்தார். ஆர்சிபி 117-4

    18-வது ஓவரை சாம் கர்ரன் வீசினார். இந்த ஓவரில் மூன்று சிக்ஸ் விட்டுக்கொடுத்ததால், ஆர்சிபி 24 ரன்கள் விளாசியது. ஒரே ஓவரில் ஸ்கோர் 141 ஆக உயர்ந்தது.

    19-வது ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். 18.2 ஓவரில் ஆர்சிபி 150 ரன்னைத் தொட்டது. முதல் பந்தில் விராட் கோலி சிக்ஸ் அடித்தார். அடுத்த பந்தை நோ-பாலாக வீசினார். அதில் இரண்டு ரன் என மூன்று ரன்கள் கிடைத்தது. முதல் பந்தில் 9 ரன்கள் கொடுத்தாலும், அதன்பின் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இந்த ஓவரில் ஆர்சிபி 14 ரன்கள் அடிக்க ஸ்கோர் 155 ஆனது.

    கடைசி ஓவரை பிராவோ வீசினார். முதல் பந்தை விராட் கோலி பவுண்டரிக்கு விராட்டினார். அதன்பின் நான்கு பந்தில் நான்கு டபுள்ஸ் அடித்தார். கடைசி பந்தில் ஒரு ரன் அடிக்க ஆர்சிபி-க்கு கடைசி ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது.

    இதனால் 20 ஓவர் முடிவில் 169 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 52 பந்தில் 90 ரன்கள் அடித்தும், ஷவம் டுபே 14 பந்தில் 22 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தால் போட்டி டை ஆக இருந்த நிலையில் மேக்ஸ்வெல் பவுண்டரி அடிக்க 2 ரன்னில் தோல்வியைத் தழுவியது பஞ்சாப்.
    ஐபிஎல் கிரிக்கெட்டின் 24-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த கொல்கத்தா தினேஷ் கார்த்திக் (58), ஷுப்மான் கில் (57) ஆகியோரின் அரைசதத்தால் 20 ஓவர் முடிவில் 164 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் மயங்க் அகர்வால், கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கத்தில் இருவரும் மந்தமாக விளையாடினர்.

    பவர் பிளேயில் 47 ரன்களும், 10 ஓவரில் 76 ரன்கள் அடித்தது பஞ்சாப். கேஎல் ராகுல் 42 பந்தில் அரைசதம் அடித்தார். மயங்க் அகர்வால் 33 பந்தில் அரைசதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 115 ரன்னாக இருக்கும்போது மயங்க் அகர்வால் ஆட்டமிழந்தார்.

    அடுத்து நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார். இவர் அதிரடியாக விளையாடினார். 16-வது ஓவரில் 19 ரன்கள் கிடைத்தது. இதனால் பஞ்சாப் அணி 16 ஓவரில் 136 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி 24 பந்தில் 29 ரன்களே தேவைப்பட்டது. இதனால் பஞ்சாப் அணி எளிதான வெற்றிபெறும் என்று ரசிகர்கள் நினைத்திருந்தனர். 17-வது ஓவரை சக்ரவர்த்தி வீசினார். இதில் 7 ரன்கள் விட்டுக்கொடுத்தது கேகேஆர். அடுத்த ஓவரை சுனில் நரைன் வீசினார். இந்த ஓவர் ஒட்டுமொத்தமாக பஞ்சாப் அணியின் வெற்றி வாய்ப்பை சீர்குலைத்தது.

    2-வது பந்தில் பூரன் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி 2 ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. 

    19-வது ஓவரை பிரதீஷ் வீசினார். இந்த ஓவரில் சிம்ரன் சிங் (4), கேஎல் ராகுல் (74) ராகுல் ஆட்டமிழக்க 6 ரன்கள் மட்டுமே எடுத்தது பஞ்சாப். இந்த இரண்டு ஓவரரோடு பஞ்சாப் தோல்வி உறுதியானது.

    கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது. 3-வது பந்தில் மேக்ஸ்வெல் பவுண்டரி விரட்ட ஐந்தாவது பந்தில் விக்கெட் வீழந்தது. இதனால் கடைசி பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டது. மேக்ஸ்வெல் அந்த பந்தை சிக்சருக்கு தூக்கி ‘டை’ ஆக்க முயற்சி செய்தார். ஆனால் பவுண்டரி சென்றதால், 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பேட்டிங் தேர்வு செய்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேதர் ஜாதவ் நீக்கப்பட்டுள்ளார்.
    ஐபிஎல் தொடரின் 25-வது லீக் ஆட்டம் துபாயில் 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். சென்னை அணியில் கேதர் ஜாதவ் நீக்கப்பட்டு ஜெகதீசன் சேர்க்கப்பட்டுள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:-

    1. வாட்சன், 2. டு பிளிஸ்சிஸ், 3. அம்பதி ராயுடு, 4. ஜெகதீசன், 5. டோனி,  6. ஜடேஜா, 7. பிராவோ, 8. கரண் சர்மா, 9. தீபக் சாஹர், 10. ஷர்துல் தாகூர், 11. சாம் கர்ரன்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி:-

    1. தேவ்தத் படிக்கல், 2. பிஞ்ச், 3. டி வில்லியர்ஸ், 4. விராட் கோலி, 5. குர்கீரத் சிங் மான், 6. ஷிவம் டுபே, 7. கிறிஸ் மோரிஸ், 8. வாஷிங்டன் சுந்தர், 9. இசுரு உடானா, 10. நவ்தீப் சைனி, 11. சாஹல்.
    பார்சிலோனா அணியில் இருந்த விலகப்போவதாக மெஸ்சி அறிவித்ததும், அவரை ஒப்பந்தம் செய்ய மான்செஸ்ட் சிட்டி தயாராக இருந்தது.
    அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சி ஆரம்ப காலத்தில் இருந்தே பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். சாம்பியன்ஸ் லீக், லா லிகா கோப்பையில் தோல்வியை சந்தித்ததால் பார்சிலோனாவுக்கும், மெஸ்சிக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளுமாறு மெஸ்சி அணியிடம் கேட்டுக்கொண்டார். அப்படி முறித்துக்கொண்டால் ப்ரீ டிரான்ஸ்பர் மூலம் சென்று விடலாம் என எண்ணினார். அப்போது மான்செஸ்டர் சிட்டி அவரை ஒப்பந்தம் செய்ய தயாராக இருந்தது.

    ஆனால் பார்சிலோனாவை விட்டுச் சென்றால் அதற்கு உண்டான தொகையை பார்சிலோனாவிற்கு செலுத்த வேண்டும் என லாலிகா தெரிவித்தது. இதனால் 2020-2021 சீசனில் அணிக்காக விளையாட இருக்கிறார்.

    இந்நிலையில் 2020-2021 சீசன் முடிந்த பின்னரும் மெஸ்சியை ஒப்பந்தம் செய்ய தயாராக இருக்கிறோம் என மான்செஸ்டர் சிட்டி தெரிவித்துள்ளது.
    இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா உடன் ஒப்பிடுவதை அசௌகரியமாக உணர்கிறேன் என பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஹைதர் அலி தெரிவித்துள்ளார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வயது பேட்ஸ்மேன் ஹைதர் அலி. தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் பாகிஸ்தான் அணியில் இடம் கிடைத்தது.

    இங்கிலாந்துக்கு எதிராக டி20 போட்டியில் களம் இறங்கிய ஹைதர் அலி முதல் போட்டியிலேயே அரைசதம் விளாசினார். பாகிஸ்தான் அணியின் வருங்கால நட்சத்திர வீரராக கருதப்படும் ஹைதர் அலியை ரோகித் சர்மாவுடன் ஒப்பிடுகிறார்கள்.

    அப்படி ஒப்பிடுவதை அசௌகரியமாக உணர்கிறேன் என ஹைதர் அலி தெரிவித்துள்ளார். மேலும்,  இதுகுறித்து ஹைதர் அலி கூறுகையில் ‘‘ரோகித் சர்மா டாப் பேட்ஸ்மேன், என்னை மற்றவர்களுடன் ஒப்பிடும்போது அசௌகரியமாக உணர்கிறேன். ஒப்பீடு வேண்டாம். அவர் ஏற்கனவே அதிக அளவில் சாதித்துள்ளார்.

    மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் என்னால் சிறப்பாக ரசித்து விளையாட முடியும். எனக்கு முதல்தர கிரிக்கெட் சிறப்பாக அமைந்தது. பயிற்சியாளர் முகமது வாசிம் சிறந்த வழிகாட்டுதல்களை வழங்கினார்.
    ×