என் மலர்
செய்திகள்

ரபேல் நடால்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் - இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நடால்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதியில் டியாகோ ஸ்வாட்ர்ஸ்மேனை வீழ்த்தி ரபேல் நடால் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
பாரீஸ்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், அர்ஜெண்டினாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேன் ஆகியோர் மோதினார்கள்.
இதில் ரபேல் நடால் 6-3, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
Next Story