என் மலர்
செய்திகள்

கவாஸ்கர்
டி20 கிரிக்கெட்டில் மாற்றம் தேவையில்லை: கவாஸ்கர் சொல்கிறார்
பேட்ஸ்மேன்களே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் டி20 கிரிக்கெட்டில் மாற்றம் தேவையில்லை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்களின் நிலை திண்டாட்டம்தான். 4 ஓவர்களை வீசி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுவார்கள். தற்போது ஐபிஎல் தொடரில் ஷார்ஜாவில் நடைபெற்று வரும் போட்டிகள் ஹை-ஸ்கோர் ஆட்டமாக இருக்கிறது.
நான்கு போட்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் முதல் பேட்டிங் செய்த அணிகள் நான்கிலும் 200 ரன்களை தாண்டியுள்ளது. சேஸிங் அணி மூன்று முறை 200 ரன்னைக் கடந்துள்ளது. ஒரு முறை கிங்ஸ் லெவன் பஞ்சாப் 224 ரன்னை சேஸிங் செய்தது.
கிரிக்கெட் என்றாலே பேட்டிற்கும், பந்திற்கும் சமமான அளவு போட்டி இருக்க வேண்டும். இப்படி இருக்கக் கூடாது. ஆகவே டி20-யில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற விவாதம் எழும்பியுள்ளது.
இந்நிலையில் அதுபோன்று மாற்றம் தேவையில்லை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘டி20 கிரிக்கெட் மிகவும் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதில் மாற்றம் செய்யக்கூடிய அவசியம் இல்லை.
வேண்டுமென்றால் இரண்டு பவுன்சர்களுக்கு அனுமதி கொடுக்கலாம். மைதானத்திற்குரியவர்கள் வேண்டுமென்றால் மைதானத்தை பெரிதாக்கிக் கொள்ள முடியும். பந்து வீச்சாளர்கள் முதல் மூன்று ஓவர்களில் விக்கெட் வீழ்த்தினால் கூடுதல் ஒரு ஓவர் கொடுக்கலாம். உண்மையாக, எல்லாவற்றையும் மற்ற வேண்டியதில்லை’’ என்றார்.
Next Story






