என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேர்ஸ்டோவ்
    X
    பேர்ஸ்டோவ்

    பேர்ஸ்டோவ் விளாச, மிடில் ஆர்டர் சொதப்ப பஞ்சாபுக்கு 202 ரன்கள் வெற்றி இலக்கு

    பேர்ஸ்டேவ் - வார்னர் ஜோடி 15.1 ஓவரில் 160 ரன்கள் குவித்த போதிலும், மிடில் ஆர்டர் சொதப்பியதால் பஞ்சாப் அணிக்கு 201 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஐதராபாத்.
    ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது. வார்னர், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    தொடக்கம் முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் ஓவரில் வார்னர் இரண்டு பவுண்டரி அடித்து தொடக்கி வைத்தார். 4-வது ஒவரில் பேர்ஸ்டோவ் 3 பவுண்டரிகள் விரட்டினர். 5-வது ஓவரை முகமது ஷமி வீசினார். இதில் பேர்ஸ்டோவ் கொடுத்த கேட்ச்-ஐ கேஎல் ராகுல் பிடிக்கத் தவறினார். அதன்பின் பேர்ஸ்டேவ் ஆட்டத்தில் அனல் பறந்தது.

    ஐதராபாத் பவர் பிளே-யான முதல் 6 ஓவரில் 58 ரன்கள் எடுத்தது. 8-வது ஓவரை ரவி பிஷ்னோய் வீசினார். இந்த ஓவரில் பேர்ஸ்டோவ் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். சரியாக 10 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது ஐதராபாத். இந்த ஓவரின் 3-வது பந்தில் பேர்ஸ்டோவ் 2 ரன்கள் எடுத்து 28 பந்தில் அரைசதம் அடித்தார்.

    11-வது ஓவரில் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி விட்டினார். வார்னர் 14-வது ஓவரின் 2-வது பந்தில் ஒரு ரன் அடித்து 37 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடியின் ஆட்டத்தை பார்க்கும்போது ஐதராபாத் எளிதான 220 ரன்களை தாண்டும் நிலை இருந்தது.

    16-வது ஓவரை ரவி பிஷ்னோய் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் வார்னர் ஆட்டமிழந்தார். அவர் 40 பந்தில் 52 ரன்கள் அடித்தார். அப்போது ஐதராபாத் 160 ரன்கள் அடித்திருந்தது.

    அதே ஓவரின் 4-வது பந்தில் பேர்ஸ்டோவ் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பு இழந்தார். அவர் 55 பந்தில் 97 ரன்கள் அடித்தார். அதில்  7 பவுண்டரி, 6 சிக்ஸ் அடங்கும்.

    பின்னர் வந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மணிஷ் பாண்டு (1), அப்துல் சமாத் (8) பிரியம் கார்க் (0) ரன்களில் ஆட்டமிழக்க ஐதராபாத் அணியால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் அடித்தது. கேன் வில்லியம்சன் 10 பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    Next Story
    ×