search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஷித் கான் பந்து வீச்சு
    X
    ரஷித் கான் பந்து வீச்சு

    ஐபிஎல் கிரிக்கெட்: ரஷித் கானின் சிறப்பான பந்து வீச்சால் பஞ்சாப்பை எளிதில் வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றி

    ஐபிஎல் கிரிக்கெட்டின்ன் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றி பெற்றது.
    துபாய்:

    ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது. வார்னர், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    ஆரம்பம் முதலே வார்னர்-பேர்ஸ்டோவ் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரை சதம் கடந்த நிலையில் 15.1 ஓவரில் அணியின் ஸ்கோர் 160 எடுத்திருந்த நிலையில் 40 பந்தில் 1 சிக்சர் 5 பவுண்டரி உள்பட 52 குவித்த வார்னர் ஐதராபாத் அணியின் ரவி பிஷோனி பந்து வீச்சில் அவுட் ஆனார். 

    வார்னர் அவுட் ஆன சில நிமிடங்களிலேயே 55 பந்துகளில் 7 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் உள்பட 97 ரன்கள் குவித்திருந்த பேர்ஸ்டோவ் அதே ஓவரில் ரவி பிஷோனி பந்து வீச்சில் வெளியேறினார். 

    தொடக்க வீரர்கள் வெளியேறியபோது 15.4 ஓவரில் ஐதராபாத் அணி 160 ரன்கள் குவித்திருந்தது. 

    அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் அணியின் ஸ்கோர் வேகம் சற்று குறைந்தது. ஆனால், இறுதி கட்டத்தில் சற்று அதிரடியாக ஆடிய வில்லியம்சன் 10 பந்தில் 1 பவுண்டரி 1 சிக்சர் உள்பட 20 ரன்கள் குவித்தார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த சன் ரைசர்ஸ் ஐதராபாத் 201 ரன்கள் குவித்தது. 

    பஞ்சாப் தரப்பில் ரவி பிஷோனி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பஞ்பாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 

    6 பந்தில் 9 ரன்கள் எடுத்திருந்த அகர்வால் ரன் அவுட் முறையில் வெளியேறினார். அடுத்துவந்த சிம்ரன் சிங் 8 பந்தில் 11 ரன்னுடன் வெளியேறினார். 16 பந்தில் 11 ரன்களை எடுத்த கேப்டன் கேஎல் ராகுல் அபிஷேக் சர்மா பந்து வீச்சில் வெளியேறினார். 

    இதனால், 6.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் 58 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்துவந்த நிக்கோலஸ் பூரன், மேக்ஸ்வெல்லுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    12 பந்தில் 7 ரன்களை எடுத்திருந்த மேக்ஸ்வெல் ரன் அவுட் முறையில் வெளியேறினார். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆன நிலையில் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய நிக்கோலஸ் பூரன் 37 பந்துகளில் 5 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் உள்பட 77 ரன்கள் குவித்து ரஷித் கான் பந்து வீச்சில் வெளியேறினார்.

    பூரனை தவிர வேறு எந்த வீரரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்ததாலும், ஐதராபாத் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமலும் பஞ்சாப் அணி 16.5 ஓவரிலேயே அனைத்து 
    விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

    இதனால், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.     

    ஐதராபாத் அணியின் ரஷித் கான் 4 ஓவர்கள் வீசி ஒரு மேய்டன் உள்பட 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 55 பந்தில் 97 ரன்கள் குவித்த ஐதராபாத் அணியின் ஜானி பேர்ஸ்டோவ் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.
    Next Story
    ×