search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இகா - கெனின்
    X
    இகா - கெனின்

    பிரெஞ்ச் ஓபன்: சோபியா கெனின் - இகா ஸ்வியாடெக் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சோபியான கெனின் - இகா ஸ்வியாடெக் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
    பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. அரையிறுதி போட்டியில் அமெரிக்காவின் சோபியா கெனின் (தரவரிசை 4) - செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா (தரவரிசை 7) ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

    இதில் சோபியா கெனின் 6-4, 7-5 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் தரவரிசை பெறாத போலந்தின் இகா ஸ்வியாடெக் - அர்ஜென்டினாவின் நாடியாக பொடோரோஸ்கா மோதினர். இதில் இகா 6-2, 6-1 என எளிதில் வெற்றி பெற்றார்.

    சோபியா கெனின் - இகா ஸ்வியாடெக் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
    Next Story
    ×