search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினேஷ் கார்த்திக், எம்எஸ் டோனி
    X
    தினேஷ் கார்த்திக், எம்எஸ் டோனி

    கொல்கத்தா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததில் ஒரு சுவாரஸ்யமான கதை

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததில் ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது.
    ஐபிஎல் போட்டியில் அபு தாபியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

    பொதுவாக ஐபிஎல் போட்டிகளில் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் ஆடுகளத்தின் தன்மையை பெரிதாக கருதாமல் டாஸ் வெல்லும் அணிகள் பந்து வீச்சை தேர்வு செய்யும்.

    துபாயில் பல போட்டிகளில் டாஸ் வென்ற அணிகள் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆனால் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 180 ரன்களுக்கு மேல் ரன்கள் அடித்ததால் டாஸ் வென்ற அணிகளால் சேஸிங் செய்ய இயலாமல் போனது.

    அபு தாபியில் 170 ரன்கள் அடித்தாலே சேஸிங் செய்ய கடினம் என்பதால் டாஸ் வெல்லும் அணிகள் பேட்டிங்கை தேர்வு செய்கின்றன. அந்த வகையில் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பேட்டிங் தேர்வு செய்தார். 

    இதில் சுவராஸ்யமான கதை என்னவென்றால், பொதுவாக கொல்கத்தா அணி டாஸ் வென்றால் பேட்டிங் தேர்வு செய்வது கிடையாது. சேஸிங் செய்யவே விரும்பும்.

    இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு நடைபெற்ற சீசனில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்திருந்தது. அதன்பின் தற்போது நேற்று ஐந்து ஆண்டுகள் கழித்து 69 போட்டிகளுக்குப் பிறகு முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    இந்த ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
    Next Story
    ×