என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.
    ஐபிஎல் கிரிக்கெட்டின் 21-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி, அந்த அணியின் திரிபாதி, சுக்மன் கில் ஆகியோர் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 12 பந்துகளை சந்தித்த கில் 11 ரன் எடுத்த நிலையில் ஷார்துல் தாகூர் பந்து வீச்சில் வெளியேறினார். 

    அடுத்துவந்த நிதீஷ் ரானா 9 ரன், சுனில் நரைன் 17 ரன், மோர்கன் 7 ரன், ரசல் 2 ரன் எடுத்த அடுத்தடுத்து வெளியேறினர். ஆனால், ஒரு பக்கம் தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருந்த நிலையிலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ராகுல் திரிபாதி 51 பந்துகளில் 3 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் உள்பட 81 ரன்கள் குவித்து புராவோ பந்து வீச்சில் வெளியேறினார்.

    இறுதியில் 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் எடுத்தது. சென்னை தரப்பில் பிராவோ அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஷேன் வாட்சன், டு பிளசிஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 

    10 பந்தில் 17 ரன் எடுத்த நிலையில் ஷிவம் மாவி பந்து வீச்சில் டுபிளசிஸ் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த அம்பதி ராயுடுவுடன் ஜோடி சேர்ந்த வாட்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 27 பந்துகளை சந்தித்த ராயுடு 30 ரன்னில் வெளியேறினார். சிறப்பாக ஆடிய வாட்சன் 40 பந்தில் 6 பவுண்டரிகள், 1 சிக்சர் உள்பட 50 ரன்கள் எடுத்து நரைன் பந்து வீச்சில் வெளியேறினார்.

    13.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 101 ரன்களை எடுத்திருந்தது சென்னை அணிக்கு அந்த கட்டத்தில் 67 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று எளிதான இலக்கே இருந்தது.
     
    ஆனால், வாட்சன் அவுட் ஆனதை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் டோனி 12 பந்தில் 11 ரன்கள் எடுத்து சகரவர்த்தி பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். சாம் கரன் 17 ரன்னில் வெளியேறினார்.

    இதையடுத்து, பிராவோ களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேதார் ஜாதவ் களமிறங்கினார். கடந்த சில ஆட்டங்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜாதவ் இப்போட்டியில் சிறப்பாக ஆடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த போட்டியிலும் அவரின் ஆட்டம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தது. 

    களத்தில் இருந்த மற்றொரு வீரரான ஜடோஜா 8 பந்தில் 1 சிக்சர் 3 பவுண்டரிகள் உள்பட 21 ரன்கள் குவித்திருந்தார். ஆனால் போட்டியின் முக்கிய கட்டத்தில் 12 பந்துகளை சந்தித்த கேதார் ஜாதவ் 1 பவுண்டரி உள்பட 7 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். 

    இதனால், 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்த சென்னை அணி 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தது. 

    போட்டியின் இறுதி கட்டத்தில் அதிரடியாக ஆடவேண்டிய நிலையில் 12 பந்தை சந்தித்து 7 ரன்னை மட்டுமே எடுத்த ஜாதவ் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார்.

    கொல்கத்தா தரப்பில் ஷிவம் மாவி, சக்ரவர்த்தி, நாகர்க்கோட்டி, சுனில் நரைன், ரசல் தலா 1 விக்கெட்டை விழ்த்தினர்.
    ராகுல் திரிபாதி அரை சதமடிக்க, சென்னை அணி வெற்றி பெற 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா அணி.
    அபுதாபி:

    ஐபிஎல் 2020 சீசனின் 21-வது லீக் ஆட்டம் அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    7 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. இதில் கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

    தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மான் கில், ராகுல் திரிபாதி களமிறங்கினர்.

    பொறுப்புடன் ஆடிய ராகுல் திரிபாதி அரை சதமடித்தார். ஷுப்மான் கில் 11 ரன்னிலும், நிதிஷ் ரானா 9 ரன்னிலும், சுனில் நரைன் 17 ரன்னிலும், மார்கன் 7 ரன்னிலும், ஆண்ட்ரே ரசல் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

    சிறப்பாக ஆடிய ராகுல் திரிபாதி 81 ரன்னில் வெளியேறினார். 

    இறுதியில், கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 167 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    சென்னை அணி சார்பில் பிராவோ 3 விக்கெட்டும், ஷர்மா, ஷர்துல் தாக்குர், சாம் கரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    சென்னை அணிக்கு எதிராக கொல்கத்தா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
    ஐபிஎல் 2020 சீசனின் 21-வது லீக் ஆட்டம் அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    7 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. இதில் கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். 
     
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்:-

    ஷேன் வாட்சன், டு பிளிஸ்சிஸ், அம்பதி ராயுடு, எம்எஸ் டோனி, கேதர் ஜாதவ், ஜடேஜா, பிராவோ, சாம் கர்ரன், ஷர்துல் தாக்குர், சர்மா, தீபக் சஹர்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விவரம்:-

    ஷுப்மான் கில், சுனில் நரைன், நிதிஷ் ரானா, ஆண்ட்ரு ரசல், தினேஷ் கார்த்திக், இயான் மார்கன், பேட் கம்மின்ஸ், ராகுல் திரிபாதி, ஷிவம் மாவி, கமலேஷ் நாகர்கோட்டி, வருண் சக்கரவர்த்தி
    மெதுவாக பந்து வீசியதற்காக ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் சுமித்துக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    அபுதாபி:

    மும்பை அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் குறிப்பிட்ட நேரத்தில் 20 ஓவரை வீசவில்லை. பந்து வீசுவதில் தாமதம் செய்தது. இதைத் தொடர்ந்து மெதுவாக பந்து வீசியதற்காக ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் சுமித்துக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே மெதுவாக பந்து வீசியதற்காக பெங்களூர் கேப்டன் விராட் கோலி, டெல்லி கேப்டன் ஸ்ரேயாஷ் அய்யர் ஆகியோருக்கு தலா ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    மும்பை அணியில் உள்ள அனைத்து வீரர்களும் திறமையானவர்கள் என்று கேப்டன் ரோகித் சர்மா பாராட்டியுள்ளார்.
    அபுதாபி:

    ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தானை 57 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி 4-வது வெற்றியை பெற்றது.

    அபுதாபியில் நடந்த 20-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன் குவித்தது.

    சூர்யகுமார் யாதவ் 47 பந்தில் 79 ரன்னும் (11 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் ரோகித் சர்மா 23 பந்தில் 35 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்), ஹர்திக் பாண்ட்யா 19 பந்தில் 30 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ஸ்ரேயாஷ் கோபால் 2 விக்கெட்டும், ஆர்ச்சர், கார்த்திக் தியாகி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 18.1 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன்னில் சுருண்டது. இதனால் மும்பை அணி 57 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    பட்லர் அதிகபட்சமாக 44 பந்தில் 70 ரன் (4 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். பும்ரா 20 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்தார். போல்ட்,பேட்டின்சன் தலா 2 விக்கெட்டும், போல்லார்ட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    மும்பை அணி ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. மொத்தத்தில் 4 வெற்றியுடன் 8 புள்ளிகளைப் பெற்று அந்த அணி முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது. வெற்றி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    மும்பை அணி வீரர்களின் செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களிடம் நிறைய தரம் இருக்கிறது. அதை சிறப்பாக செய்கிறோம். அனைவரும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    மும்பை அணியில் உள்ள அனைத்து வீரர்களும் திறமையானவர்கள். அவர்கள் அந்த நாளில் தங்களது திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துகிறார்கள்.

    ஆடுகள தன்மைக்கு ஏற்றவாறு சிறப்பாக பந்து வீசக்கூடிய பவுலர்கள் இருக்கிறார்கள்.

    சூர்யகுமார் யாதவ் சிறந்த இன்னிங்சை வெளிப்படுத்தினார். அவரது ஷாட்டுகள் நேர்த்தியாக இருந்தது. கடைசி வரை களத்தில் நிற்க வேண்டும் என்று விரும்பினார். ஏனென்றால் அவர் புதுமையை புகுத்த முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராஜஸ்தான் ஹாட்ரிக் தோல்வியை தழுவியது. இதன் மூலம் அந்த அணி 7-வது இடத்துக்கு பின் தங்கியது.

    தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் ஸ்டீவ் சுமித் கூறும்போது, தொடக்கத்திலேயே விக்கெட் சரிந்ததால், ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது. கடந்த 3 போட்டிகளில் எங்களால் நல்ல தொடக்கத்தை கொடுக்க முடியவில்லை என்றார்.

    மும்பை அணி 7-வது ஆட்டத்தில் டெல்லியுடன் வருகிற 11-ந் தேதி அபுதாபியில் மோதுகிறது. ராஜஸ்தான் அடுத்த ஆட்டத்தில் டெல்லியை 9-ந் தேதி சந்திக்கிறது.
    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகல்-இரவு போட்டியாக டிசம்பர் 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    அடிலெய்டு:

    இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. ஒரு நாள் போட்டியுடன் தொடர் ஆரம்பிக்கும் என்று தெரிகிறது. பிரிஸ்பேனில் நவம்பர் 25-ந்தேதி முதல் 30-ந்தேதிக்குள் மூன்று ஒரு நாள் போட்டிகளையும், அடிலெய்டில் டிசம்பர் 4-ந்தேதி முதல் 8-ந்தேதிக்குள் மூன்று 20 ஓவர் போட்டிகளையும் நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து இந்திய அணி 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து போட்டி) டிசம்பர் 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மெல்போர்ன் (டிச.26-30), சிட்னி (ஜன.7-11), பிரிஸ்பேன் (ஜன.15-19) ஆகிய இடங்களில் டெஸ்ட் போட்டி நடக்கிறது. கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டி இருப்பதால் முதலாவது டெஸ்ட் அடிலெய்டில் நடப்பது உள்ளூர் மாகாண அரசாங்கத்தின் ஒப்புதலை பொறுத்து இறுதி செய்யப்படும். நவம்பர் 10-ந்தேதி ஐ.பி.எல். போட்டி முடிந்ததும் இந்திய வீரர்கள் அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இந்திய அணி அடுத்த வாரத்துக்குள் தேர்வு செய்யப்படும்.
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் தகுதி நிலை வீராங்கனை அர்ஜென்டினாவின் போடோரோஸ்கா, முன்னணி நட்சத்திரம் ஸ்விடோலினாவுக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.
    பாரீஸ்:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), தகுதி சுற்று மூலம் முன்னேறியவரும், தரவரிசையில் 131-வது இடத்தில் உள்ளவருமான அர்ஜென்டினாவின் நாடியா போடோரோஸ்காவை சந்தித்தார்.

    1 மணி 19 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் போடோரோஸ்கா 6-2, 6-4 என்ற நேர்செட்டில் ஸ்விடோலினாவுக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதியை எட்டினார். இதன் மூலம் போடோரோஸ்கா தகுதி சுற்றின் மூலம் நுழைந்து பிரெஞ்ச் ஓபனில் அரைஇறுதிக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெருமையை தனதாக்கினார். அத்துடன் இந்த போட்டியில் 2004-ம் ஆண்டுக்கு பிறகு அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்த முதல் அர்ஜென்டினா வீராங்கனை என்ற சிறப்பையும் தன்வசப்படுத்தினார்.

    மழை காரணமாக தள்ளிவைக்கப்பட்டு நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீராங்கனை டேனியலி காலின்ஸ் 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் ஆன்ஸ் ஜாபெரை (துனிசியா) விரட்டியடித்து முதல்முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

    இதற்கிடையே, பெண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் சூதாட்ட புகார் கிளம்பி இருக்கிறது. இது குறித்து பிரான்ஸ் அரசு தரப்பில் விசாரணை தொடங்கப்பட்டு இருக்கிறது.
    ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
    ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் எதிர்கொண்டது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, குயின்டான் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் மும்பை அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதல் மாஸ் காட்டினர். சிறப்பாக ஆடிய குவிண்டன் டிகாக் 15 பந்தில் 1 சிக்சர் உள்பட 23 ரன் குவித்து வெளியேறினார். 

    அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டன் ரோகித் சர்மா 23 பந்தில் 3 சிக்சர்கள் உள்பட 35 ரன் எடுத்து ஸ்ரேயாஷ் கோபால் பந்து வீச்சில் வெளியேறினார்.

    அடுத்து வந்த இஷான் கிஷன் முதல் பந்திலேயே அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். பின்னர் வந்த குர்னால் பாண்ட்யாவுடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

    நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய குர்னால் பாண்ட்யா 17 பந்தில் 12 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்துவந்த ஹர்திக் பாண்ட்யாவுடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் ராஜஸ்தான் பந்து வீச்சை திணறிடித்தார். 

    19 பந்தை சந்தித்த பாண்ட்யா 30 ரன்னிலும், அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 47 பந்தில் 2 சிக்சர்கள் உள்பட 79 ரன் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    இதனால், 20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் தரப்பில் ஷ்ரேயாஸ் கோபால் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஜேய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் களமிறங்கினர். 2 பந்துகளை மட்டுமே சந்தித்த ஜேய்ஸ்வால் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்துவந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 6 ரன்னிலும், சஞ்சுவ் சாம்சங் ரன் எடுத்துவும் எடுக்காமலும் (0) அடுத்தடுத்து வெளியேறினர்.

    ஆனால், மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த ஜோஸ் பட்டலர் அரைசதம் கடந்தார். அடுத்துவந்த லோம்மூர் 11 ரன்னில் வெளியேறினார். அதிரடி ஆட்டத்தால் சற்று நம்பிக்கை அளித்த பட்லர் 44 பந்தில்
    4 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் உள்பட 70 ரன்கள் குவித்த நிலையில் பேட்டிசன் பந்துவீச்சில் வெளியேறினார். 

    பின்னர் வந்த வீரர்களான டாம் கரன் 15 ரன்னிலும், ராகுல் தேவாட்டியா 5 ரன்னிலும்,  ஆர்ச்சர் 24 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

    இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.1 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.

    4 ஓவரில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய மும்பை அணியின் பந்துவீச்சாளர் பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.  இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இடத்தில் உள்ளது.
    அபு தாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் விளாச, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 194 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிதத்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.
    ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

    குயின்டான் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதல் மாஸ் காட்டினர். 4.5 ஓவரில் 49 ரன்கள் எடுத்திருக்கும்போது மும்பை முதல் விக்கெட்டை இழந்தது. டி காக் 15 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து ரோகித் சர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். ரோகித் சர்மா 10-வது ஓவரின் முதல் பந்தில் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே இஷான் கிஷன் ஆட்டமிழந்தார். அப்போது மும்பை 9.2 ஓவரில் 88 ரன்கள் எடுத்திருந்தது.

    கடந்த போட்டியில் 4 பந்தில் 20 ரன்கள் அடித்ததால் குருணால் பாண்ட்யா முன்னதாக களம் இறக்கப்பட்டார். ஆனால் இன்று 17 பந்தில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது மும்பை 14 ஓவரில் 117 ரன்கள் எடுத்திருந்தது.

    ஆனால் மறுமுனையில் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார்.  33 பந்தில் அரைசதம் அடித்த சூர்யகுமார் யாதவ், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 47 பந்தில் 79 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 19 பந்தில் 30 ரன்களும் அடிக்க மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்துள்ளது.
    மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் மூன்று மாற்றங்களை செய்துள்ளது.
    ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு அபு தாபியில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் 7 மணிக்கு சுண்டப்பட்டது.

    இதில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். மும்பை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    மும்பை இந்தியன்ஸ் அணி:-

    1. டி காக், 2. ரோகித் சர்மா, 3. சூர்யகுமார் யாதவ், 4. இஷான் கிஷன், 5. பொல்லார்ட், 6. ஹர்திக் பாண்ட்யா, 7. ஜேம்ஸ் பேட்டின்சன், 8. ராகுல் சாஹர், 9. டிரென்ட் போல்ட், 10, பும்ரா, 11. குருணால் பாண்ட்யா.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் விவரம்:-

    1.  பட்லர், 2. ஸ்மித்,  3. சஞ்சு சாம்சன், 4. ராஜ்பூட், 5. ஜெய்ஸ்வால், 6. டெவாட்டியா  7. மஹிபால் லாம்ரோர், 8. டாம் கர்ரன், 9. ஷ்ரேயாஸ் கோபால், 10. ஜாஃப்ரா ஆர்சர், 11. கார்த்திக் தியாகி,
    அபு தாபியில் 3-வது வெற்றிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    ஐபிஎல் போட்டியில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் 23 முறை மோதியுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 14 முறையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 முறையில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது.


    கொல்கத்தாவிற்கு எதிராக சென்னை அதிகபட்சமாக 205 ரன்கள் அடித்துள்ளது. சென்னைக்கு எதிராக கொல்கத்தா 202 ரன்கள் அடித்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஐந்து போட்களில் சென்னையே வெற்றி வாகை சூடியுள்ளது. சேஸிங்கிலும் சென்னை கையே ஓங்கியுள்ளன. சென்னை 9 முறையும், கொல்கத்தா 8 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

    போட்டி அபு தாபியில் நடக்கிறது. முதல் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து இங்குதான் சென்னை அணி வெற்றி பெற்றது. இதுவரை அபு தாபியில் ஆறு போட்டிகள் நடைபெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே இரண்டு முறை 190 ரன்கள் அடித்துள்ளது. அதன்பின் சென்னை சேஸிங் செய்ததே அதிகபட்ச ஸ்கோர் ஆகும். ஆகவே அபு தாபி பிட்ச் சற்று டிரிக்கியான இருக்கலாம். 170 ரன்களுக்கு மேல் அடித்தால் சேஸிங் சற்று கடினமானதாக இருக்கலாம்.

    முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பற்றி பார்ப்போம்.

    சென்னை அணி ஹாட்ரிக் தோல்விக்குப்பின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்து வெற்றி பெற்றது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக 179 ரன்னை சென்னை சேஸிங் செய்யுமா? என்ற சந்தேகம் எழ, சார்ஜ் ஏற்றப்பட்ட பேட்டரி பிரகாசமாக ஜொலிப்பது போன்று வாட்சன் ஜொலித்தார்.

    53 பந்தில் 11 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 83 ரன்கள் விளாசி சூப்பர் ஃபார்முக்கு வந்ததுடன் டு பிளிஸ்சிஸ் உடன் இணைந்து விக்கெட் இழக்காமல் 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற முக்கியக் காரணமாக இருந்தார். பந்தை மிட்-ஆன் மிட்ஆஃப் திசைக்குள்ளேயே ஸ்டிரைட் பேட் ஷாட்டுகளை தேர்வு செய்தார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது.

    சென்னை அணியின் பேட்டிங்கிற்கு வாட்சன் ஃபார்முக்கு திரும்பியுள்ளது மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது. வாட்சன் பொதுவாக சிங்கிள், டபுள்ஸ் ரன்களை விரும்புவதில்லை. பஞ்சாப் அணிக்கெதிராக 19 டாட் பால்ஸ். 21 சிங்கிள் அடித்துள்ளார். களத்தில் நீண்ட நேரம் நின்று விட்டால் பவுண்டரிகள், சிக்சர்கள் தானாகவே வரும். இதனால் வாட்சன் களத்தில் எவ்வளவு நேரம் நிற்கிறாரோ? அவ்வளவு சென்னை அணிக்கு சாதகம்.

    டு பிளிஸ்சில் எங்களுக்கு நங்கூரம் போன்றவர். ஆட்டத்தின் நடுப்பகுதியில் நல்ல ஷாட்களை அடித்து ஆடக்கூடியவர். வித்தியாசமான ஷாட்களால் எதிரணி பவுலர்களை குழப்பி விடுவார் என்று கேப்டன் டோனியோ சர்ட்டிபிகேட் கொடுத்து விட்டார். ஐந்து போட்டிகளில் நான்கு அரைசதங்களுடன் நேஷனல் ஹைவேயில் சென்று கொண்டிருக்கிறார். ஷாட்கள் அடிப்பதுடன் சிங்கிள், டபுள்ஸ் அடிப்பதிலும் வல்லவர். இவர் ஸ்டிரைக்கில் பெரும்பாலும் டாட் பால் இருக்காது.

    காயத்திற்குப்பின் அம்பதி ராயுடு ஒரு போட்டியில் விளையாடியுள்ளார். அதில் பிரகாசிக்கவில்லை. மிடில் ஆர்டர் இன்னும் சரியான வகையில் பரிசோதிக்கப்படவில்லை. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக அம்பதி ராயுடு, கேதர் ஜாதவின் மோசமான ஆட்டத்தால் போட்டியை தோற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த போட்டியில் ஜடேஜா அரைசதம் அடித்தது சற்று ஆறுதல்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டோனியால் அதிக ஓவர்கள் நின்று விளையாட முடியவில்லை. சோர்ந்து விட்டார். அதை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றபடி திட்டமிடுவார். இந்த சீசனில் இன்னும் பினஷர் வேலையை தொடங்கவில்லை.

    2-வது பேட்டிங் எடுத்தால் வாட்சன் ஃபார்மால் 190 ரன்கள் வரை சேஸிங் செய்யும் நம்பிக்கையில் சென்னை அணி களம் இறங்கும். ஒருவேளை முதலில் பேட்டிங் செய்தால் 200 ரன்கள் அடிக்க வேண்டும். இது ஒன்றுதான் பேட்டிங்கில் சென்னைக்கு கேள்விக்குறியாக உள்ளது.

    பந்து வீச்சை பொறுத்த வரைக்கும் தீபக் சாஹர் தனது பணியை செம்மையாக செய்து வருகிறார். ஐந்து போட்டிகளில் ஐந்து விக்கெட் மட்டுமே வீழ்த்தினாலும், பவர் பிளேயில் நேர்த்தியாக பந்து வீசுகிறார். பஞ்சாப் அணிக்கெதிராக 3 ஓவரில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இவருக்கு துணையாக சாம் கர்ரனும் ஈடுகொடுத்து பந்து வீசுகிறார்.

    இதனால் பவர் பிளேயில் சென்னை அணிக்கு மிகப்பெரிய சரிவு ஏற்பட வாய்ப்பில்லை. மிடில் ஓவர்களில் சாவ்லா, ஜடேஜா சிறப்பாக பந்து வீசினால் அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும். அந்த்ரே ரஸல், மோர்கனுக்கு இவர்கள் எப்படி பந்து வீசுகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

    வெயின் பிராவோ அணிக்கு திரும்பியுள்ளது டெத் ஓவர்களில் சற்று வலுசேர்த்துள்ளார். ஷர்துல் தாகூர் ஸ்லோவர் ஒன், நக்குல் பால் சிறப்பான வகையில் வீசுவார். தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், பிராவோ டெத் ஓவரில் சென்னைக்கு மிகப்பெரிய பலம். சாம் கர்ரன் கடைசி நேரத்தில் ரன்கள் கூடுதலாக விட்டுக்கொடுக்கிறார். இதில் சற்று கவனம் செலுத்துவது அவசியம். தற்போது ஆறு பந்து வீச்சாளர்களுடன் விளையாடுவது சென்னை அணிக்கு தெம்பை கொடுத்துள்ளது என்று சொல்லலாம்.

    கொல்கத்தா இதுவரை நான்கு போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டில் தோல்வியடைந்துள்ளது. மும்பைக்கு எதிராக அபுதாபியில் 196 சேஸிங்கை எதிர்கொண்டபோது 146 ரன்களே எடுத்தது. அடுத்த போட்டியில் ஐதராபத்தை 142 ரன்னில் கட்டுப்படுத்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கொல்கத்தா அணியை பொறுத்த வரைக்கும் ஷுப்மான் கில், நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக், அந்த்ரே ரஸல், மோர்கன், ராகுல் திரிபாதி என ஆறு பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இதில் ஷுப்மான கில் அணியை நிதானமாக எடுத்துச் செல்லக் கூடியவர். மற்ற அனைவரும் மிகப்பெரிய ஹிட்டர்கள்.

    ஷுப்மான் கில்லுடன் சுனில் நரைனை அந்த அணி தொடக்க வீரராக களம் இறக்கி விடுகிறது. 10 பந்துகளை சந்தித்து 25 ரன்கள் எடுத்தாலே அணிக்கு சாதகம் என்ற கோணத்தில் கொல்கத்தா அணி அவரை பயன்படுத்துகிறது.

    ஆனால் நான்கு போட்டிகளில் 9, 0, 15, 3 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இருந்தாலும் கொல்கத்தா அணி அவர்மீது நம்பிக்கை வைத்துள்ளது.

    நிதிஷ் ராணா ஒரு சைலண்ட் கில்லர். முதல் மூன்று போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றாலும், டெல்லிக்கு எதிராக 35 பந்தில் 58 ரன்கள் அடித்தார்.

    அந்த அணியில் இருக்கும் மிகப்பெரிய குழப்பமே தினேஷ் கார்த்திக், அந்த்ரே ரஸல், மோர்கன் ஆகியோரில் யாரை முன்வரிசையில் களம் இறக்குவது என்பதுதன். கடந்த சீசனில் அந்த் ரஸல் சூப்பர் பார்மில் இருந்தார். அவருக்கு போதுமான அளவு பந்துகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இது பெரும் விவாதமாக கிளம்பியது.

    இதனால் இந்த சீசனில் முன்னதாக களம் இறக்கப்படுகிறார். என்றாலும் 11, 24, 13 என விரைவில் ஆட்டமிழந்து விடுகிறார். தினேஷ் கார்த்திக் சுத்த ஃ.பார்ம் அவுட்.

    மோர்கன் தலைசிறந்த ஹிட்டர். ஆனால் ரஸல், தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்த பின்னர் வந்து அணியை வெற்றி நோக்கி அழைத்துச் செல்லும் பொறுப்பு இவரது தலையில் விழுகிறது. இவரும் வெற்றி நோக்கி அணியை எடுத்துச் செல்லும்போது, 10 பந்தில் 25 ரன்கள் தேவை என்ற நிலை இருக்கும்போது ஆட்டமிழந்து விட்டால், அந்த ரன்னை அடிக்க பேட்ஸ்மேன்கள் இல்லை.

    அந்த்ரே ரஸல் நல்ல நிலைக்கு திரும்ப வேண்டும். இல்லை எனில் மோர்கன் முன்னதாக களம் இறங்க வேண்டும். இந்த இரண்டில் ஏதாவது ஒன்று நடைபெற்றால் கொல்கத்தா விஸ்வரூபம் எடுக்கும்.

    பேட் கம்மின்ஸ், நாகர்கோட்டி, ஷிவம் மவி, அந்த்ரே ரஸல், சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி என ஆறு பந்து வீச்சாளர்கள் வைத்துள்ளது.

    பந்து வீச்சுக்கு கொஞ்சம் ஒத்துழைக்கும் ஆடுகளத்தில் பேட் கம்மின்ஸ், நாகர்கோட்டி, ஷிவம் மவி, அந்த்ரே ரஸல் அசத்தக் கூடியவர்கள்.

    எப்படியாயினும் முதலில் பேட்டிங் செய்த அணி 170 ரன்களுக்கு மேல் அடித்தால் கடும் சவாலாக இருக்கும்.
    ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-ஸ்ட்வ் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    அபுதாபி:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 20-வது லீக் ஆட்டம் அபுதாபியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    இதில் ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-ஸ்ட்வ் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    நடப்பு சாம்பியனான மும்பை அணி 5 ஆட்டத்தில் 3-ல் வெற்றி பெற்றது. 2-ல் தோற்றது. கொல்கத்தா (49 ரன்), பஞ்சாப் (48 ரன்), ஐதராபாத் (34 ரன்) ஆகிய அணிகளை வென்றது. சென்னை (5 விக்கெட்), பெங்களூர் (சூப்பர் ஓவர்) அணிகளிடம் தோற்றது.

    மும்பை அணியில் சிறந்த அதிரடி வீரர்கள் உள்ளனர். கடைசி நேரத்தில் பொல்லார்ட், ஹர்த்திக் பாண்ட்யா, குணால் பாண்ட்யா ஆகியோர் அதிரடியாக ஆட கூடியவர்கள்.

    இது தவிர கேப்டன் ரோகித் சர்மா (176 ரன்), சூர்ய குமார் யாதவ், இஷான் கி‌ஷன் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், போல்ட், பும்ரா, பேட்டின்சன், ராகுல் சாஹர் போன்ற சிறந்த பவுலர்களும் அந்த அணியில் உள்ளனர்.

    ராஜஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனையுடன் 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் மும்பை அணி உள்ளது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் 2 ஆட்டத்தில் அபாரமாக விளையாடி சென்னை, பஞ்சாப் அணிகளை வீழ்த்தியது. அதற்கு அடுத்த 2 போட்டிகளில் கொல்கத்தா, பெங்களூர் அணிகளிடம் தோற்று இருந்தது.

    ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து ராஜஸ்தான் 3-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மும்பை நல்ல நிலையில் இருப்பதால் அந்த அணியை தோற்கடிப்பது சவாலானது.

    ராஜஸ்தான் அணியில் கேப்டன் ஸ்டீவ் சுமித், பட்லர், சஞ்சு சாம்சன், ராகுல் திவேதியா, ஆர்ச்சர்,டாம் கரண் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்று ராஜஸ்தான் அணியோடு இணைந்துள்ளார். அவர் தனிமையில் இருப்பதால் இன்றைய போட்டியில் இடம் பெறமாட்டார் என்று தெரிகிறது.

    இரு அணிகளும் மோதிய போட்டியில் மும்பை 10-ல், ராஜஸ்தான் 10-ல் வெற்றி பெற்றுள்ளன.

    ×