search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ட்வ் சுமித் - ரோகித்சர்மா
    X
    ஸ்ட்வ் சுமித் - ரோகித்சர்மா

    மும்பை அணியின் அதிரடியை ராஜஸ்தான் சமாளிக்குமா? அபுதாபியில் இன்று மோதல்

    ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-ஸ்ட்வ் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    அபுதாபி:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 20-வது லீக் ஆட்டம் அபுதாபியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    இதில் ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-ஸ்ட்வ் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    நடப்பு சாம்பியனான மும்பை அணி 5 ஆட்டத்தில் 3-ல் வெற்றி பெற்றது. 2-ல் தோற்றது. கொல்கத்தா (49 ரன்), பஞ்சாப் (48 ரன்), ஐதராபாத் (34 ரன்) ஆகிய அணிகளை வென்றது. சென்னை (5 விக்கெட்), பெங்களூர் (சூப்பர் ஓவர்) அணிகளிடம் தோற்றது.

    மும்பை அணியில் சிறந்த அதிரடி வீரர்கள் உள்ளனர். கடைசி நேரத்தில் பொல்லார்ட், ஹர்த்திக் பாண்ட்யா, குணால் பாண்ட்யா ஆகியோர் அதிரடியாக ஆட கூடியவர்கள்.

    இது தவிர கேப்டன் ரோகித் சர்மா (176 ரன்), சூர்ய குமார் யாதவ், இஷான் கி‌ஷன் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், போல்ட், பும்ரா, பேட்டின்சன், ராகுல் சாஹர் போன்ற சிறந்த பவுலர்களும் அந்த அணியில் உள்ளனர்.

    ராஜஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனையுடன் 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் மும்பை அணி உள்ளது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் 2 ஆட்டத்தில் அபாரமாக விளையாடி சென்னை, பஞ்சாப் அணிகளை வீழ்த்தியது. அதற்கு அடுத்த 2 போட்டிகளில் கொல்கத்தா, பெங்களூர் அணிகளிடம் தோற்று இருந்தது.

    ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து ராஜஸ்தான் 3-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மும்பை நல்ல நிலையில் இருப்பதால் அந்த அணியை தோற்கடிப்பது சவாலானது.

    ராஜஸ்தான் அணியில் கேப்டன் ஸ்டீவ் சுமித், பட்லர், சஞ்சு சாம்சன், ராகுல் திவேதியா, ஆர்ச்சர்,டாம் கரண் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்று ராஜஸ்தான் அணியோடு இணைந்துள்ளார். அவர் தனிமையில் இருப்பதால் இன்றைய போட்டியில் இடம் பெறமாட்டார் என்று தெரிகிறது.

    இரு அணிகளும் மோதிய போட்டியில் மும்பை 10-ல், ராஜஸ்தான் 10-ல் வெற்றி பெற்றுள்ளன.

    Next Story
    ×