என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இங்கிலாந்தில் உருமாறிய புதுவகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மான்செஸ்டர் சிட்டி - எவர்டன் அணிகளுக்கு இடையிலான போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் உள்பட ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக் ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் ஓரளவிற்கு கொரோனா கட்டுக்குள் கொண்டு வந்தபின் ஜூன் மாதங்களில் இருந்து ரசிகர்கள் இன்றி போட்டிகள் மீண்டும் நடத்தப்பட்டன.

    அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களை அனுமதித்தனர். இந்த நிலையில்தான் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் உருமாறி புதுவகை கொரோனா வைரஸ் தொற்றாக பரவுவதை கண்டுபிடித்தனர். இந்த வைரஸ் மிக்தீவிர வேகத்தில் பரவி வருகிறது.

    ஆகையால் இங்கிலாந்தில் மீண்டும் லாக்டவுட் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் மான்செஸ்டர் சிட்டி - எவர்டன் அணிகள் மோத இருந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    ஆஸ்திரேலியா ஓபனில் கடந்த 2000-த்தில் இருந்து தொடர்ச்சியாக கலந்து கொண்டு வந்த ரோஜர் பெடரர், 2021 சீசனில் இருந்து விலகியுள்ளது.
    உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர்களில் ஒருவர் ரோஜர் பெடரர். சுவிட்சர்லாந்தை சேர்ந்த இவர், ஆஸ்திரேலியா ஓபன் டென்னிசில் கடந்த 2000-த்தில் இருந்து தொடர்ச்சியாக கலந்து கொண்டு வருகிறார்.

    பெடரர் காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதனால் ஆஸ்திரேலியா ஓபனுக்கு தயாராக நேரம் இல்லை என, 2021 சீசனில் இருந்து விலகியுள்ளார். இந்த வருடம் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபனில் அரையிறுதியில் நோவக் ஜோகோவிச்சிடம் தோல்வியடைந்தார்.
    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சிறந்த லெவன் அணியை வெளியிட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணியை அறிவித்தது. அதில் மூன்று அணிகளிலும் ஒரு பாகிஸ்தான் வீரர் கூட இடம்பெறவில்லை. இந்த நிலையில் அறிவிக்கப்பட்டது ஐபிஎல் அணி, உலக லெவன் அணி இல்லை என சோயிப் அக்தர் ஐசிசி-யை விமர்சனம் செய்துள்ளார்.

    சோயிப் அக்தர் இதுகுறித்து கூறுகையில் ‘‘பாகிஸ்தான் ஐசிசி-யின் உறுப்பினர் என்பதையும், டி20 போட்டிகளில் விளையாடுகிறார்கள் என்பதையும் மறந்து விட்டது என நினைக்கிறேன். தற்போது டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் பாபர் அசாம்-ஐ தேர்வு செய்யவில்லை.

    ஐசிசி பணம், ஸ்பான்சர்ஷிப்ஸ், டிவ உரிமம் ஆகியவற்றை பற்றியே நினைக்கிறது. அவர்கள் ஒருநாள் போட்டியில் இரண்டு புதுப்பந்துகள், மூன்று பவர்பிளேயை அறிமுகம் செய்தார்கள். டென்னிஸ் லில்லி, ஜெஃப் தாம்சன், வாசிம் அக்ரம், வக்காயர் யூனிஸ் எங்கே?. உலகின் வேகப்பந்து வீச்சாளர்கள், லெக்-ஸ்பின்னர்களை எங்கே?.

    இவர்கள் மூன்று வருடத்தில் இரண்டு உலக கோப்பைகள் மற்றும் லீக்குகளை நடத்த விரும்புகிறார்கள். 1970 போட்டிகளுக்கும், தற்போதுள்ள போட்டிக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. சச்சின் தெண்டுல்கர் VS அக்தர் இல்லை என்றால், கிரிக்கெட்டை பார்ப்பதில் என் பாயின்ட் உள்ளது. டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாமை விட பெரிய வீரர்கள் இல்லை. விராட் கோலியுடன் ஒப்பிட்டால் கூட பாபர் அசாம் சராசரி அபாரமாக உள்ளது. இந்த வீடியோ லிங்கை பார்த்த பிறகு அவர்கள் அறிவித்தது உலக அணி, ஐபிஎல் அணியை அல்ல என்பதை உணவார்கள்’’ என்றார்.
    செஞ்சூரியனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் இலங்கைக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 621 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.
    தென்ஆப்பிரிக்கா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 396 ரன்கள் குவித்தது. பின்னர் தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே அந்த அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரன்ரேட்டை நான்கிற்கு கீழ் குறையவிடாமல் பார்த்துக் கொண்டனர்.

    டீன் எல்கர் 95 ரன்களும், எய்டன் மார்கிராம் 68 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் எடுத்திருந்தது. டு பிளிஸ்சிஸ் 55 ரன்களுடனும், டெம்பா பவுமா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. டு பிளிஸ்சிஸ், டெம்பா பவுமா சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தனர். டு பிளிஸ்சிஸ் சதம் அடித்தார். டெம்ப பவுமா 71 ரன்னில் வெளியேறினார்.

    கேஷவ் மகாராஜ் 73 ரன்கள் அடிக்கவும், டு பிளிஸ்சிஸ் இரட்டை சதத்தை நோக்கி சென்றார். ஆனால் 199 ரன்னில் ஆட்டமிழந்து இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இறுதியில் தென்ஆப்பிரிக்கா 621 ரன்னில் சுருண்டது. தென்ஆப்பிரிக்கா 142.1 ஓவரிகள் விளையாடியது. ஓவருக்க சராசரியாக 4.37 ரன்கள் அடித்திருந்தது.

    இலங்கை அணி தரப்பில் வனிந்து ஹசரங்கா 4 விக்கெட்டும், விஷ்வா பெர்னாண்டே 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    ரஹானே சதம் அடித்த டெஸ்ட் போட்டிகளில் இந்தியா இதுவரை தோற்றது கிடையாது என்ற சாதனை, மொல்போர்ன் போட்டியிலும் தொடர இருக்கிறது.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் மெல்போர்ன் மைதானத்தில் பாக்சிங் டே போட்டியாக நடக்கிறது. அடிலெய்டில் 36 ரன்னில் இந்தியா சுருண்டதால், இந்திய பேட்ஸ்மேன்கள் என்னத்த சாதிக்கப்போகிறார்கள் என்று ரசிகர்கள் விரக்தியடைந்தனர். விமர்சகர்களும் அப்படித்தான் எண்ணினார்கள்.

    ஆனால் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவை இந்தியா 195 ரன்னில் சுருட்டியது. அதன்பின் முதல் இன்னிங்சில் ரஹானே அபாரமாக விளையாடி சதம் அடித்தார். ஜடேஜா அரைசதமும், ஷுப்மன் கில் 45 ரன்களும் விளாச இந்தியா 326 ரன்கள் அடித்தது.

    டெஸ்ட் போட்டியில் ரஹானேயின் 12-வது சதம் இதுவாகும். இதற்கு முன் ரஹானே சதம் கண்ட 11 போட்டிகளிலும் இந்தியா தோல்வியை சந்தித்தது கிடையாது. 8 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகளில் டிரா கண்டுள்ளது.

    இந்த போட்டியிலும் இந்தியா வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இதனால் ரஹானேயின் செஞ்சூரி சென்டிமென்ட் தொடர்கிறது.
    இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 2020-க்கான சம்பளத்தை அதிக வாங்கிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி, ரோகித் சர்மாவை பின்னுக்குத் தள்ளியுள்ளார் பும்ரா.
    இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களை அவர்களின் திறமைக்கு ஏற்றபடி தரம்பிரித்து ஒப்பந்தம் செய்துள்ளது. 2016-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான பும்ரா, தனது தனித்திறமையான பந்து வீச்சால் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் தவிர்க்க முடியாத பந்து வீச்சாளராக மாறியுள்ளார்.

    இவர் விராட் கோலிரோகித் சர்மாவுடன் ‘ஏ’ பிளஸ் பிரிவில் உள்ளார். வீரர்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் சம்பளம் வழங்கப்படும். இந்த சம்பளத்தில் மாற்றம் ஏதும் கிடையாது. அனைவருக்கும் ஒரேமாதிரியான சம்பளம்தான்.

    இந்திய சீனியர் அணியில் விளையாடும் வீரர்களுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட 15 லட்சம் ரூபாயும், ஒருநாள் போட்டிக்கு 6 லட்சம் ரூபாயும், டி20 கிரிக்கெட் போட்டிக்கு 3 லட்சம் ரூபாயும் சம்பளமாக வழங்கப்படுகிறது.

    மெல்போர்ன் டெஸ்ட் போட்டியோடு 2020-ம் ஆண்டுக்கான போட்டி முடிவடைகிறது. பும்ரா 4 டெஸ்ட், 9 ஒருநாள் மற்றும் 8 டி20 போட்டிகளில் விளையாடி 1.38 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

    ரோகித் சர்மா, விராட் கோலி

    விராட் கோலி 3 டெஸ்ட், 9 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகள் என 1.29 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். மெல்போர்ன் டெஸ்டில் விளையாடியிருந்தால் பும்ராவை தாண்டியிருப்பார்.

    ரோகித் சர்மா 3 ஒருநாள் மற்றும் நான்கு டி20 போட்டிகள் என 30 லட்சம் ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்குகிறார்.

    ஜடேஜா 2 டெஸ்ட்,  9 ஒருநாள் மற்றும் நான்கு டி20 போட்டிகள் என 96 லட்சம் ரூபாய் வாங்குகிறார்.
    2011-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இயன் பெல் ரன்அவுட் ஆனாலும், பெருந்தன்மையுடன் விளையாட அனுமதித்ததால் எம்எஸ் டோனிக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
    ஐசிசி கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த வீரர்களை தேர்வு செய்தது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதை வென்றார்.

    விளையாட்டின் கண்ணியத்தை காப்பாற்றும் வகையில் டோனி அப்படி என்னதான் செய்தார்?. இந்த விருது அவருக்கு வழங்க காரணமாக என்ன? எனபது குறித்து அனைவரும் யோசிகக ஆரம்பித்தனர்.

    2011-ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அப்போது நாட்டிங்காமில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் இயன் பெல் 137 ரன்கள் எடுத்து களத்தில் நின்றிருந்தார்.

    மதியம் டீ இடைவேளைக்கு முந்தைய ஓவர். மோர்கன் அடித்த பந்து பவுண்டரி நோக்கி சென்றது. பிரவீன் குமார் பந்தை பவுண்டரி லைன் அருகில் வைத்து தடுத்தார். பந்து பவுண்டரி சென்று விட்டதாக எண்ணி இயன் பெல் கிரீஸ் தொடாமல் அப்படியே மோர்கனை நோக்கி சென்றார்.

    பிரவீன் குமார் பந்தை வீச அபிநவ் முகுந்த் அதை பிடித்து ரன்அவுட் செய்தார். நடுவரிடம் அப்பீல்ல செய்ய நடுவரும் அவுட் கொடுத்துவிட்டார். இதை இயன் பெல் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த ரன்அவுட் சர்ச்சையை கிளப்பியது.

    வீரர்கள் அறையில் இங்கிலாந்து அணி நிர்வாகம் எம்எஸ் டோனியுடன் பேசுகிறது. அப்போது விளையாட்டு திறனுடன்,  விளையாட்டின் கண்ணியத்தை காக்கும் வகையில் டோனி ரன்அவுட் முடிவை திரும்பப் பெற்றுக் கொண்டார். இதனால் இயன் பெல் தேனீர் இடைவேளை முடிந்து விளையாட்டு தொடங்கியதும், பேட்டிங் செய்தார்.

    இந்த காரணத்தால்தான் எம்எஸ் டோனிக்கு விருது கிடைத்துள்ளது.
    ஐசிசி-யின் கடந்த 10 ஆண்டுகளில சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர், சிறந்த வீரர் விருதுகளை வென்ற விராட் கோலி, இந்தியாவுக்காக விளையாடும் ஒவ்வொரு போட்டியும் முக்கியம் எனத் தெரிவித்துள்ளார்.
    ஐசிசி கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் வீரர்களை அறிவித்தது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் ஆகிய இரண்டு விருதுகளை வென்றார்.

    ஐசிசி விருது குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘எனக்கு, இந்தியாவுக்காக விளையாடும் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது. களம் இறங்கி நாட்டிற்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக இருக்கிறது’’ என்றார்.
    ஆஸ்திரேலியாவின் ரன்மெஷின் என அழைக்கப்படும் ஸ்மித்தை இரண்டு இன்னிங்சிலும் இரட்டை இலக்க ரன்களை எடுக்கவிடாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் அசத்தினர்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ஸ்டீவ் ஸ்மித்இந்திய பந்து வீச்சாளர்கள் எப்படி சமாளிக்கப் போகிறார் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து கூறினர். அதேபோல் மார்னஸ் லாபஸ்சேனும் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு கடும் சவாலாக விளங்குவார் என்றனர்.

    ஆனால் அடிலெய்டு மற்றும் மெல்போர்ன் டெஸ்டுகளில் இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டனர். அடிலெய்டு முதல் இன்னிங்சில் 191 ரன்னில் சுருட்டினர். 2-வது இன்னிங்சில் இந்தியா 36 ரன்னில் சுருண்டதால் தோல்வியை சந்திக்க நேரிட்டது. முதல் இன்னிங்சில் அஸ்வின் ஸ்மித்தை 1 ரன்னில் ஆட்டமிழந்தார். 2-வது இன்னிங்சில் 1 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    மெல்போர்னில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் அஸ்வின் பந்தில் ஸ்மித் டக்அவுட் ஆனார். 2-வது இன்னிங்சில. 8 ரன்கள் எடுத்த நிலையில் க்ளீன் போல்டானார்.

    அவர் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 9 ரன்களே எடுத்தார். இதன்மூலம் ஒரு டெஸ்டில் மிகவும் குறைவாக ரன்கள் எடுத்த வரிசையில் ஸ்மித்தின் 2-வது மோசமான சாதனை இதுவாகும்.

    இதற்கு முன் 2013-ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் முதல் இன்னிங்சில் 2 ரன்னும், முதல் இன்னிங்சில் 1 ரன்னும் எடுத்திருந்தார். இதுதான் மிகவும் குறைந்த ஸ்கோராக உள்ளது. அதன்பின் தற்போது இந்தியாவுக்கு எதிராக 0, 8 என குறைந்த ரன்னில் அவுட்டாகியுள்ளார்.

    2015-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக டிரென்ட் பிரிட்ஜ் போட்டியில் 6, 5 ரன்களும், 2017-18-ல் தென்ஆப்பிரிக்காவுக்கு ஏதிராக கேப்டவுனில் 5 மற்றும் 7 ரன்கள் அடித்துள்ளார்.
    காயத்தால் இங்கிலாந்து தொடரில் இருந்து விலகிய தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ரபடா இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் விளையாடுகிறார்.
    தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ரபடா. இவர் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு, சொந்த நாட்டில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடும்போது காயத்தால் வெளியேறினார்.

    தற்போது காயம் குணமடைந்துள்ளதால் இலங்கை அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணியல் சேர்க்கப்பட்டுள்ளார். 2-வது போட்டி ஜனவரி 3-ந்தேதி தொடங்குகிறது.
    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 10 வருடத்தில் மூன்று விடிவிலான போட்டியிலும் சிறந்த வீரர்கள் யார் என்பதை வெளியிட்டுள்ளது.
    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட் அணி, ஒருநாள் மற்றும் டி20 அணிகளை அறிவித்தது.

    இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு வடிவிலான கிரிக்கெட் அணியில் சிறந்த வீரர்கள் யார், ஒட்டுமொத்தமாக சிறந்த வீரர் யார் என்பதை இன்று வெளியிட்டுள்ளது.

    ஸ்டீவ் ஸ்மித்

    அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித் 10 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    விராட் கோலி

    ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி 10 ஆண்டுகளில் தலைசிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    ரஷித் கான்

    டி20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் தலைசிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    10 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்ல் தலைசிறந்த வீரராக இந்திய அணி கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    எம்எஸ் டோனி

    எம்எஸ் டோனி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதை வென்றுள்ளார்.
    நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 239 ரன்கள் எடுத்தது.

    மவுண்ட்மங்கானு:

    நியூசிலாந்து -பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மங்கானுவில் நடைபெற்று வருகிறது.

    நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 431 ரன் குவித்தது. கேப்டன் வில்லியம்சன் 129 ரன்னும், வாட்லிங் 73 ரன்னும், முன்னாள் கேப்டன் டெய்லர் 70 ரன்னும் எடுத்தனர். ‌ஷகின் ஷா அப்ரிடி 4 விக்கெட்டும், யாசிர் ஷா 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் நேற்றைய 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 31 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. 401 ரன்கள் பின்தங்கிய நிலை, கைவசம் 9 விக்கெட் என்ற நிலையில் பாகிஸ்தான் தொடர்ந்து ஆடியது.

    நியூசிலாநது வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் பாகிஸ்தான் அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    80 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 6 விக்கெட்டை இழந்தது. ஆபித் அலி 25 ரன்னில் ஜேமிசன் பந்தில் ‘அவுட்’ ஆனார். அதை தொடர்ந்து முகமது அப்பாஸ், அசார்அலி, ஹாரிஸ் சோகைல், பவாத் ஆலம் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் திரும்பினார்கள்.

    சவுத்தி, ஜேமிசன் தலா 2 விக்கெட்டும், போல்ட், வர்னர தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    7-வது விக்கெட்டான கேப்டன் முகமது ரிஸ்வான்- பகீம் அஸ்ரப் ஜோடி பாலோ ஆனை தவிர்க்க போராடினர்.

    பாலோஆனை தவிர்க்க பாகிஸ்தான் 232 ரன்கள் எடுக்க வேண்டும். அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 115 ரன் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் தடைபட்டது. ஆடுகளத்தின் வெளிப்புற பகுதி ஈரப்பதமாக இருந்ததால் போட்டி பாதிக்கப்பட்டது.

    இதனையடுத்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. பாகிஸ்தான் 187 ரன்கள் எடுத்த போது கேப்டன் ரிஸ்வான் ரன் அவுட் முறையில் வெளியேறினார். அவர் 142 பந்துகளில் 72 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 8 பவுண்டரிகள் அடங்கும். அடுத்து வந்த வீரரகள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பகீம் அஸ்ரப் 91 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 239 ரன்கள் எடுத்தது. இதனால் பாலோ ஆன் தவிர்க்கப்பட்டது.

    நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 3 விக்கெட்டும் சவுத்தி, போல்ட், வக்னர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ×