search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்எஸ் டோனி
    X
    எம்எஸ் டோனி

    எம்எஸ் டோனிக்கு ஐசிசி-யின் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் அவார்டு கிடைக்கக் காரணம் இதுதான்...

    2011-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இயன் பெல் ரன்அவுட் ஆனாலும், பெருந்தன்மையுடன் விளையாட அனுமதித்ததால் எம்எஸ் டோனிக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
    ஐசிசி கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த வீரர்களை தேர்வு செய்தது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதை வென்றார்.

    விளையாட்டின் கண்ணியத்தை காப்பாற்றும் வகையில் டோனி அப்படி என்னதான் செய்தார்?. இந்த விருது அவருக்கு வழங்க காரணமாக என்ன? எனபது குறித்து அனைவரும் யோசிகக ஆரம்பித்தனர்.

    2011-ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அப்போது நாட்டிங்காமில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் இயன் பெல் 137 ரன்கள் எடுத்து களத்தில் நின்றிருந்தார்.

    மதியம் டீ இடைவேளைக்கு முந்தைய ஓவர். மோர்கன் அடித்த பந்து பவுண்டரி நோக்கி சென்றது. பிரவீன் குமார் பந்தை பவுண்டரி லைன் அருகில் வைத்து தடுத்தார். பந்து பவுண்டரி சென்று விட்டதாக எண்ணி இயன் பெல் கிரீஸ் தொடாமல் அப்படியே மோர்கனை நோக்கி சென்றார்.

    பிரவீன் குமார் பந்தை வீச அபிநவ் முகுந்த் அதை பிடித்து ரன்அவுட் செய்தார். நடுவரிடம் அப்பீல்ல செய்ய நடுவரும் அவுட் கொடுத்துவிட்டார். இதை இயன் பெல் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த ரன்அவுட் சர்ச்சையை கிளப்பியது.

    வீரர்கள் அறையில் இங்கிலாந்து அணி நிர்வாகம் எம்எஸ் டோனியுடன் பேசுகிறது. அப்போது விளையாட்டு திறனுடன்,  விளையாட்டின் கண்ணியத்தை காக்கும் வகையில் டோனி ரன்அவுட் முடிவை திரும்பப் பெற்றுக் கொண்டார். இதனால் இயன் பெல் தேனீர் இடைவேளை முடிந்து விளையாட்டு தொடங்கியதும், பேட்டிங் செய்தார்.

    இந்த காரணத்தால்தான் எம்எஸ் டோனிக்கு விருது கிடைத்துள்ளது.
    Next Story
    ×