என் மலர்
விளையாட்டு
கோவா:
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் கோவாவில் நடந்து வருகிறது.
இன்று 7.30 மணிக்கு நடக்கும் 42-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி- ஏ.டி.கே. மோகன் பகான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சென்னையில் எப்.சி. அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வி, 3 டிராவுடன் 9 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
சென்னை அணியில் ரகீம் அலி எஸ்மெல் கோன்கால்வ்ஸ், அனிரூத் தாபா போன்ற வீரர்கள் உள்ளனர். ஆனால் பலம் வாய்ந்த ஏ.டி.கே. மோகன் பகான் அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.
ஏ.டி.கே.மோகன் பகான் அணி 7 ஆட்டத்தில் 5 வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டத்தில் தோல்வி ஒரு டிராவும் பெற்று 16 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.
அந்த அணியில் நட்சத்திர வீரராக ராய் கிருஷ்ணா உள்ளார். அவர் இதுவரை 5 கோல் அடித்துள்ளார். அந்த அணி 6-வது வெற்றியை பெற்று முதலிடத்தில் முன்னேறும் முனைப்பில் உள்ளது.
பாக்சிங்டே டெஸ்டில் இந்திய அணியில் பேட்ஸ்மேன் சுப்மன்கில், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆகியோர் அறிமுகமானார்கள். இதில் அவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். முகமது சிராஜ் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டும் வீழ்த்தினார். இதில் அவர் லபுஸ்சேன், கேமருன் கிரீன், ஹெட் ஆகிய முக்கிய விக்கெட்டுகளை வீர்த்தினார். அதேபோல் சுப்மன்கில் முதல் இன்னிங்சில் 45 ரன்னும், 2-வது இன்னிங்சில் 35 ரன்னும் எடுத்தார்.
மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டி இந்தியா-ஆஸ்திரேலியா அணியில் மோதிய 100-வது போட்டியாகும். வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி பெற்று இருக்கிறது. இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்ன் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் இந்தியா 4-வது வெற்றியை பெற்றது. இதற்கு முன்பு 1977-ம் ஆண்டு பிஷன்சிங்பேடி தலைமையில் 222 ரன்கள் வித்தியாசத்திலும், 1981-ம் ஆண்டு கவாஸ்கர் தலைமையில் 59 ரன் வித்தியாசத்திலும், 2018-ம் ஆண்டு விராட்கோலி தலைமையில் 137 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. தற்போது ரஹானே தலைமையில் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணி கேப்டன் விராட்கோலி மனைவி அனுஷ்கா சர்மா குழந்தை பிறக்க உள்ளது. இதையடுத்து அவர் முதல் டெஸ்ட்டில் மட்டும் விளையாடி விட்டு நாடு திரும்பினார். கேப்டன் பொறுப்பை ரஹானே ஏற்றார்.
முதல் டெஸ்டில் 2-வது இன்னிங்சில் இந்தியா வெறும் 36 ரன்னில் சுருண்டதாலும், கேப்டன் விராட் கோலி நாடு திரும்பியதாலும் டெஸ்ட் தொடரை இந்தியா முழுமையாக இழக்கும் என்று முன்னாள் வீரர்கள் மார்க்வாக், மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்து இருந்தனர். அதனை தகர்ந்தெறிந்து இந்திய வீரர்கள் கோலி இல்லாமல் ரஹானே தலைமையில் சாதித்து இருக்கிறார்கள்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 195 ரன்னில் சுருண்டது. லபுஷேன் அதிகபட்சமாக 48 ரன் எடுத்தார். பும்ரா 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
தொடர்ந்து, முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 115.1 ஓவர்களில் 326 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. இது ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை விட 131 ரன் கூடுதலாகும்.
131 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை ஆடியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்காமல் விரைவில் ஆட்டமிழந்தனர். இளம் வீரரான கிரீன் மற்றும் கம்மின்ஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடினர். கடைசி வரை விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய அணி போராடியது.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை எடுத்திருந்தது.
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கம்மின்ஸ் அவுட்டானார். கிரீன் 45 ரன்னில் வெளியேறினார். இறுதியில், ஆஸ்திரேலியா அணி 200 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணி தரப்பில் சிராஜ் 3 விக்கெட், அஷ்வின், பும்ரா, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட், உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
மறைந்த முன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி கடந்த 1999-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை 14 ஆண்டுகள் டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தலைவராக இருந்தார். இதனை போற்றும் வகையில் டெல்லியில் உள்ள கிரிக்கெட் விளையாட்டு மைதானமான பெரோஷா கோட்லா மைதானத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.
இந்நிலையில், அருண் ஜெட்லியின் 68-வது பிறந்த நாளையொட்டி அந்த மைதானத்தில் 6 அடி உயரத்தில் அவரது முழு உருவச்சிலையை உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று திறந்து வைத்தார்.
அப்போது அமித்ஷா பேசுகையில், ‘கிரிக்கெட்டில் 2 வகையான பேர் உள்ளனர். ஒன்று, வீரர்கள். இன்னொன்று விளையாடுவதற்கான சூழலை உருவாக்குபவர்கள். விளையாடுவதற்கான சூழலை உருவாக்குபவர்களின் பங்களிப்பும் நிறையவே இருக்கிறது. அதற்காகவே நாங்கள் இந்த சிலையை திறந்து வைக்கிறோம்’ என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா, கவுதம் காம்பிர் எம்.பி. மற்றும் அருண்ஜெட்லியின் மகன் ரோகன் ஜெட்லி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






