என் மலர்tooltip icon

    செய்திகள்

    கால்பந்து
    X
    கால்பந்து

    ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூர் அணியிடம் வீழ்ந்தது பெங்களூரு

    ஐ.எஸ்.எல். கால்பந்து லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் பெங்களூரு எப்.சி.க்கு அதிர்ச்சி அளித்து 3-வது வெற்றியை ருசித்தது.
    கோவா:

    7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 41-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் பெங்களூரு எப்.சி.க்கு அதிர்ச்சி அளித்து 3-வது வெற்றியை ருசித்தது. ஜாம்ஷெட்பூர் வீரர் ஸ்டீபன் எஸி 79-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-ஏ.டி.கே. மோகன் பகான் அணிகள் மோதுகின்றன.
    Next Story
    ×