search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோயிப் அக்தர்
    X
    சோயிப் அக்தர்

    ஐபிஎல் அணி என பெயரிட்டுள்ளீர்கள்: உலக லெவன் அணி என்றல்ல- சோயிப் அக்தர் சாடல்

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சிறந்த லெவன் அணியை வெளியிட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணியை அறிவித்தது. அதில் மூன்று அணிகளிலும் ஒரு பாகிஸ்தான் வீரர் கூட இடம்பெறவில்லை. இந்த நிலையில் அறிவிக்கப்பட்டது ஐபிஎல் அணி, உலக லெவன் அணி இல்லை என சோயிப் அக்தர் ஐசிசி-யை விமர்சனம் செய்துள்ளார்.

    சோயிப் அக்தர் இதுகுறித்து கூறுகையில் ‘‘பாகிஸ்தான் ஐசிசி-யின் உறுப்பினர் என்பதையும், டி20 போட்டிகளில் விளையாடுகிறார்கள் என்பதையும் மறந்து விட்டது என நினைக்கிறேன். தற்போது டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் பாபர் அசாம்-ஐ தேர்வு செய்யவில்லை.

    ஐசிசி பணம், ஸ்பான்சர்ஷிப்ஸ், டிவ உரிமம் ஆகியவற்றை பற்றியே நினைக்கிறது. அவர்கள் ஒருநாள் போட்டியில் இரண்டு புதுப்பந்துகள், மூன்று பவர்பிளேயை அறிமுகம் செய்தார்கள். டென்னிஸ் லில்லி, ஜெஃப் தாம்சன், வாசிம் அக்ரம், வக்காயர் யூனிஸ் எங்கே?. உலகின் வேகப்பந்து வீச்சாளர்கள், லெக்-ஸ்பின்னர்களை எங்கே?.

    இவர்கள் மூன்று வருடத்தில் இரண்டு உலக கோப்பைகள் மற்றும் லீக்குகளை நடத்த விரும்புகிறார்கள். 1970 போட்டிகளுக்கும், தற்போதுள்ள போட்டிக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. சச்சின் தெண்டுல்கர் VS அக்தர் இல்லை என்றால், கிரிக்கெட்டை பார்ப்பதில் என் பாயின்ட் உள்ளது. டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாமை விட பெரிய வீரர்கள் இல்லை. விராட் கோலியுடன் ஒப்பிட்டால் கூட பாபர் அசாம் சராசரி அபாரமாக உள்ளது. இந்த வீடியோ லிங்கை பார்த்த பிறகு அவர்கள் அறிவித்தது உலக அணி, ஐபிஎல் அணியை அல்ல என்பதை உணவார்கள்’’ என்றார்.
    Next Story
    ×