என் மலர்
விளையாட்டு
Look who's joined the squad in Melbourne 😀
— BCCI (@BCCI) December 30, 2020
A warm welcome for @ImRo45 as he joins the team 🤗#TeamIndia#AUSvINDpic.twitter.com/uw49uPkDvR
கோவா:
7-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி தொடர் கோவாவில் நடந்து வருகிறது. நேற்று நடந்த 43-வது லீக் ஆட்டத்தில் கோவா-ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ஐதராபாத் அணி வீரர் அரிடேனே 58-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
ஆனால் கடைசி நிமிடங்களில் கோவா அணி 2 கோல் அடித்து வெற்றி பெற்றது. அந்த அணி வீரர்கள் இஷான் பன்டிட்டா 87-வது நிமிடத்திலும், இகோர் அங்குலோ 91-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். கோவா அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். அந்த அணி 14 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ளது. ஐதராபாத் அணி 3 தோல்வியை (8 ஆட்டங்கள்) சந்தித்தது. அந்த அணி 2 வெற்றி, 3 டிரா பெற்றிருக்கிறது.
இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். 2-ந் தேதி நடக்கும் ஆட்டத்தில் மும்பை-கேரளா அணிகள் மோதுகின்றன.
புதுடெல்லி:
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் காலில் காயமடைந்தார்.
இதையடுத்து அவர் பாதியில் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு அவர் பந்துவீச வரவில்லை. அவரது காய தன்மை குறித்து ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் காயம் காரணமாக உமேஷ் யாதவ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்டில் இருந்து விலகி உள்ளார். அவர் நாடு திரும்புகிறார்.
இதையடுத்து அணியில் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர், தமிழகத்தை சேர்ந்த நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே உமேஷ் யாதவுக்கு பதிலாக ஷர்துல் தாகூரை 3-வது டெஸ்டில் விளையாட இந்திய அணி நிர்வாகம் பரிந்துரைக்க வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
நடராஜன் தற்போது ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்கு வலைப்பயிற்சியில் பந்துவீசி வருகிறார் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் சிறப்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிட்னி:
மெல்போர்னில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 195 ரன்னும், 2-வது இன்னிங்சில் 200 ரன்னும் எடுத்தது.
ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினார்கள். சொந்த மண்ணிலேயே ஆஸ்திரேலிய வீரர்கள் திணறியதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் மீது முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பாய்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்தியாவுக்கு எதிரான கடந்த 2 டெஸ்ட் போட்டியில் எத்தனை புல்-ஷாட்டுகள் விளையாடப்பட்டுள்ளன என்பதை என்னால் ஒரு கையால் எண்ண முடியும். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை விட சுப்மன்கில் மற்றும் ரகானே ஆகியோர் அதிகமான புல்-ஷாட்டுகளை விளையாடினார்கள் என்று நான் கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மெல்போர்ன்:
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதும் டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் வருகிற 7-ந் தேதி தொடங்குகிறது.
சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் காயமடைந்த ரோகித் சர்மாஅதிலிருந்து மீண்டார். இதையடுத்து ஆஸ்திரேலியா சென்ற அவர் கொரோனா நெறிமுறை காரணமாக சிட்னியில் 2 வாரம் தனிமைப்படுத்திக் கொண்டார்.
2 வார தனிமைக்கு பிறகு அவர் மெல்போர்ன் சென்று இந்திய அணியுடன் இணைந்தார். அங்கு அவர் பயிற்சியை தொடங்க உள்ளார்.
இதற்கிடையே ரோகித் சர்மா 3-வது டெஸ்டில் விளையாடுவாரா? என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் தெரியவில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் சொதப்பிய தொடக்க வீரர் பிரித்விஷாவுக்கு பதிலாக 2-வது டெஸ்டில் சுப்மன்கில் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டார். அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதனால் 3-வது டெஸ்டிலும் சுப்மன்கில்லை தொடக்க வீரராக களம் இறக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதற்கிடையே அணியில்ரோகித் சர்மா இணைந்திருப்பதால், 3-வது டெஸ்டில் இந்திய அணி பேட்டிங் வரிசையில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சிட்னியில் நடக்கும் 3-வது டெஸ்டில் ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

அணியில் மயங்க் அகர்வாலை தொடர்ந்து வைத்திருக்க வேண்டும். அவர் சரியாக விளையாடவில்லை என்று எனக்கு தெரியும். ஆனால் அவர் ஒரு தரமான வீரர். ஒவ்வொரு வீரருக்கும் சறுக்கல்கள் ஏற்படத்தான் செய்யும். எனவே அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்க வேண்டும். ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் தொடக்க வீரர்களாக களம் இறங்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
டாப் ஆர்டரில் சுப்மன்கில் சிறப்பாக விளையாடி இருந்தாலும், அவரை 5-வது வீரராக களம் இறக்க வேண்டும் அது அவரது நிலையான இடமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
சுப்மன்கில் 5-வது வீரராக களம் இறக்கப்பட்டால், விகாரி நீக்கப்படலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.






