என் மலர்
விளையாட்டு
சையத் அலி முஷ்டாக் டிராபிக்கான பெங்கால் அணியில் முகமது ஷமியின் இளைய சகோதரர் முகமது கைப் இடம் பிடித்துள்ளார். இவர் வேகப்பந்து வீச்சாளர் ஆல்-ரவுண்டர்.
இந்தியாவின் உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபி வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான பெங்கால் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அனுஸ்தப் மஜும்தான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீவாட்ஸ் கோஸ்வாமி துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் முகமது ஷமியின் இளைய சகோதரர் அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராவார்.
பெங்கால் அணி ஜனவரி 10-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தமிழ்நாடு, ஜார்கண்ட், ஒடிசா, அசாம், ஐதராபாத் அணிகளை எதிர்கொள்கிறது. ஜனவரி 10-ந்தேதி முதல் போட்டியில் ஒடிசாவை எதிர்கொள்கிறது.
இலங்கை புறப்படுவதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் நெகட்டிவ் முடிவு வந்துள்ளது.
கொரோனா ரைவஸ் தொற்று காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் நடைபெற இருந்த இலங்கை - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்தத் தொடர் வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக இங்கிலாந்து அணி வீரர்கள் நாளை இலங்கை புறப்படுகின்றனர். புறப்படுவதற்கு முன் கொரோனா பரிசோதனையில் அனைவரும் தகுதி பெற வேண்டும்.
இன்று அவர்களுக்கான கொரோனா பரிசோதனை கிடைத்தது. அனைவருக்கும் நெகட்டிவ் முடிவு வர இலங்கை புறப்பட அனுமதி பெற்றனர். இலங்கையில் குறிப்பிட்ட நாட்கள் கோரன்டைனில் இருந்த பின் விளையாட தொடங்குவார்கள்.
இங்கிலாந்தில் நடைபெற்ற 2019-ம் ஆண்டு உலக கோப்பையுடன் ஓய்வு பெறுவார் என கருதப்பட்ட கிறிஸ் கெய்ல், இன்னும் 5 வருடங்கள் விளையாடுவேன் என்கிறார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல். 41 வயதாகும் இவர் தனது 20 வயதில் கடந்த 199-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதராக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனால். 2000-த்தில் ஜிம்பாப்வே அணிக்கெதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். டி20 கிரிக்கெட் போட்டியில் 2006-ல் அறிமுகம் ஆனார்.
ஆகஸ்ட் 2019-ல் இந்தியாவுக்கு எதிராக விளையாடியதுதான் கடைசி ஒருநாள் போட்டி. 2014-ம் ஆண்டுக்குப்பின் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.
41 வயதாகும் கிறிஸ் கெய்ல் 2019 உலக கோப்பையுடன் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் ஐந்து வருடங்கள் விளையாடுவேன். இரண்டு உலக கோப்பைகள் இன்னும் பாக்கி உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கிறிஸ் கெய்ல் கூறுகையில் ‘‘நிச்சயமாக, தற்போது ஓய்வு பெறும் திட்டம் இல்லை. இன்னும் ஐந்து வருடங்கள் விளையாடுவேன் என்று நம்புகிறேன். ஆகவே, 45 வயதிற்கு முன் வாய்ப்பே இல்லை. இன்னும் இரண்டு உலக கோப்பை பாக்கி உள்ளது’’ என்றார்.
ஆஸ்திரேலியாவின் ரன் குவிப்பு மெஷினான ஸ்டீவ் ஸ்மித்திற்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி அற்புதமான திட்டத்துடன் வந்துள்ளது என மைக் ஹசி தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின்போது ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், லாபஸ்சேன் ஆகியோர் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தலாக இருப்பார்கள் என கருதப்பட்டது.
ஆனால், ஸ்மித் இரண்டு போட்டிகளிலும் 1, 1*, 0, 8 என சொற்ப ரன்கள் மட்டுமே அடித்தார். லாபஸ்சேன் 47, 6, 48, 28 ரன்களே அடித்துள்ளார்.
ஸ்மித் ரன் குவிக்காதது அந்த அணி மிகப்பெரிய தலைவலியாக உள்ளது. இந்த நிலையில் ஸ்மித்திற்கு எதிராக இந்தியா அற்புதமன திட்டத்துடன் வந்துள்ளது என மைக் ஹசி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மைக் ஹசி கூறுகையில் ‘‘ஸ்டீவ் ஸ்மித் மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் போதுமான அளவிற்கு ரன்கள் குவிக்கவில்லை என்றால், அது ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய பாதிப்பாக இருக்கும். தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கருதப்படுவதற்கும் ஆபத்து ஏற்படும்.
ஸ்மித்திற்கு எதிராக அற்புதமான திட்டத்துடன் இந்திய அணி வந்துள்ளது. ஸ்டம்பை குறிவைத்து, ஸ்ட்ரெய்ட் பவுலிங், லெக் சைடு பீல்டிங் அமைத்து ரன்களை கட்டுப்படுத்துகிறது. இதில் நிஜமாகவே பயற்சி மேற்கொண்டிருக்கிறார்கள்.
நியூசிலாந்து தொடரில் ஸ்மித்தை ஷார்ட் பால் மூலம் அவுட்டாக்கினார்கள். பும்ரா ஷார்ட் பால் வீசி, ஸ்டீவ் ஸ்மித்தை பின்னால் சென்று விளையாட வைத்து எல்.பி.டபிள்யூ. அல்லது க்ளீன் போல்டை எதிர்பார்ப்பார் என்பதை நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.
ஃபார்ம் ஸ்மித்திற்கு மிகப்பெரிய கவலையாக இருக்கிறது. அவர் சிறந்த வீரர். அவர்கள் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பதை நான் எதிர்பார்க்கலாம். லாபஸ்சேனுக்கு இது மிகப்பெரிய தொடராக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துரதிருஷ்டவசமாக அவரால் ரன்கள் குவிக்க இயலவில்லை’’ என்றார்.
2020-ம் ஆண்டு கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி முதல் இடம் பிடித்தது முதல் எம்எஸ் டோனி ஓய்வு பெற்றதை வரை ஒரு பார்வை.....
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு அதிக அளவில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி போட்டிகள் நடைபெற்றன.
கடந்த ஆண்டில் நடைபெற்ற முக்கியமான நிகழ்வுகளை பார்க்கலாம்.....
1. ஐசிசி தரவரிசையில் நியூசிலாந்து முதல் இடம்
நியூசிலாந்து அணி கடந்த ஆண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகளில் நடைபெற்றது. ஐந்திலும் வெற்றி பெற்று ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதன்முறையாக முதல் இடத்தை பிடித்து சாதனைப் படைத்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியிலும், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியிலும், பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கடந்த ஆண்டு சிறப்பானதாக அமைந்துள்ளது. அவர் 4 டெஸ்டில் 498 ரன்கள் விளாசியுள்ளார். வெலிங்டனில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியல் 89 ரன்கள் அடித்தது நியூசிலாந்து வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த ஐந்து வெற்றிகள் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நியூசிலாந்து முதல் இடத்தை பிடித்ததோடு கேன் வில்லியம்சனும் முதல் இடம் பிடித்தார்.
டிம் சவுத்தி 30 விக்கெட்டும், இந்தியாவுக்கு எதிராக அறிமுகம் ஆன ஜேமிசன் 25 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
2. இந்திய அணியின் வரலாற்று வெற்றியும், 36 ரன்னில் சுருண்டு மோசமான சாதனையும்....
மெல்போர்னில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்டில் இந்திய அணி அபாரமாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 36 ரன்னில் சுருண்டு மோசமான சாதனையை பதிவு செய்த பின், அதில் இருந்து மீண்டும் மிகப்பெரிய வெற்றி பெற்றதை, ஒரு அணியின் சூப்பர் கம்பேக்காக கருதப்படுகிறது.
கிரிக்கெட் விமர்சகர்கள் எல்லோரும் இந்தியா 0-4 எனத் தொடரை தோற்கும் எனக் கூறிவந்த நிலையில், இந்திய அணி அனைவரது வாயையும் அடைத்தது.
3. ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் ஐபிஎல் 13-வது சீசனை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
4. எம்எஸ் டோனியின் ஓய்வு முடிவு....
டோனி இந்திய அணியில் விளையாடுவரா? என்ற கேள்வி எழுந்து கொண்டே இருந்த நிலையில் ஆகஸ்ட் 15-ந்தேதி தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 10733 ரன்கள் குவித்துள்ளா. கேப்டனாக 69 சதவீதம் வெற்றியை பதிவு செய்துள்ள டோனி, சேஸிங்கில் 102.71 சராசரி வைத்துள்ளார்.
90 டெஸ்ட் போட்டிகளில் 4,876 ரன்கள் அடித்துள்ளார். 2007-ல் டி20 உலக கோப்பையையும், 2011-ல் 50 ஓவர் உலகக்கோப்பையையும், 2013-ல் சாம்பியன்ஸ் டிராபியையும் வென்று கொடுத்த ஒரே இந்திய கேப்டன் ஆவார். இவர் கேப்டனாக இருக்கும்போது இந்திய அணி 2009-ல் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் இடத்தை பிடித்தது.
5. ஆண்டர்சன் 600 விக்கெட், பிராட் 500 விக்கெட், சவுத்தி 300 விக்கெட்
இங்கிலாந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்டில் அசார் அலியை வீழ்த்தி 600 விக்கெட்டை பதிவு செய்தார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் 600 விக்கெட் வீழ்த்தியது இதுவே முதன்முறையாகும்.
ஸ்டூவர்ட் பிராட் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்தார். நியூசிலாந்தின் டிம் சவுத்தி 300 விக்கெட் வீழ்த்தினார்.
6. 12 ஆயிரம் ரன்களை வேகமாக கடந்த விராட் கோலி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கான்பெர்ரா 3-வது ஒருநாள் போட்டியில் 78 ப்நதில் 63 ரன்கள் அடித்த விராட் கோலி அதிகவேகமாக 12 ஆயிரம் ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை சச்சின் தெண்டுல்கரிடம் இருந்து பறித்தார். தெண்டுல்கர் 300 இன்னிங்சில் இந்த சாதனையை தொட்ட நிலையில், விராட் கோலி 242 இன்னிங்சில் எட்டினார்.
7. டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் தொடர் வெற்றி
சிட்னியில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது தொடரை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 10 வெற்றிகள் பெற்ற அணி என்ற பெருமையை பெற்றது. இதற்கு முன் பாகிஸ்தான் 2018-ல் தொடர்ச்சியாக 9 வெற்றிகள் பெற்றிருந்தது.
கடைசி 7 தொடர்களில் ஐந்தில் வெற்றி பெற்றது. 7 தொடர்களில் தோல்வியை சந்திக்கவில்லை. கடந்த அண்டு பிப்ரவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்திருந்தது.
8. தென்ஆப்பிரிக்காவில் தொடர்ந்து 3 டெஸ்ட் போட்டிகளை வென்ற இங்கிலாந்து
இங்கிலாந்து அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைந்தது. அதன்பின் கடைசி மூன்று போட்டிகளில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
9. இங்கிலாந்து மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

கொரோனா தொற்றால் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்ட பின் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து சென்று விளையாடியது. சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. இதற்கு முன் 2000-த்தில் இங்சிலாந்து மண்ணில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஆண்டுகள் கழித்து வெற்றி பெற்றது.
10. இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரை வென்ற ஆஸ்திரேலியா
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 2-1 என வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
புத்தாண்டுக்கு முந்தைய நாளான நேற்று நடைபெற்ற விருந்தில் விராட் கோலி - ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி. இவர் ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விலகி இந்தியா வந்துள்ளார். அவரது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு விரைவில் குழந்தை பிறக்க இருக்கிறது.
அதேபோல் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. இவரது மனைவி நட்டாசா ஸ்டான்கோவிச். இவர்களுக்கு ஐந்து மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இன்று உலகம் முழுவதும் 2021 புத்தாண்டு விழா கொண்டாடப்படுகிறது.
புத்தாண்டுக்கு முந்தைய விருந்தில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அந்த படத்தை விராட் கோலி வெளியிட்டுள்ளார்.
படத்துடன் ‘‘நண்பர்கள் நெகட்டிவ் ரிசல்ட் உடன் இணைந்து போதுமான நேரத்தை செலவழித்தோம். பாதுகாப்பான சூழ்நிலையில் வீட்டில் நண்பர்களுடன் இணைந்து இருப்பதுபோல் ஏதுமில்லை’’ எனத் தெரிவித்துள்ளார்.
2021 வருடத்தில் இந்தியா 21 டெஸ்ட், 12 ஒருநாள், 21 டி20 போட்டிகள், உலக கோப்பை, ஐபிஎல், ஆசிய கோப்பை என தொடர்ச்சியாக பல போட்டிகளில் விளையாடுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த வருடம் (2020) மார்ச் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை இந்திய கிரிக்கெட் அணி எந்த போட்டிகளிலும் விளையாடவில்லை. செப்டம்பர் மாதம்தான் ஐபிஎல் தொடரில் விளையாடியது.
நான்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியது. பல்வேறு தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டன.
ஒத்திவைக்கப்பட்ட பல்வேறு தொடர்கள் இந்த வருடம் நடத்தப்பட இருக்கின்றன. கிரிக்கெட் ரசிகர்கள் போதும்போதும் என்ற அளிவிற்கு இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச போட்டிகளில் விளையாட இருக்கிறது.
ஐபிஎல், டி20 உலக கோப்பை, ஆசிய கோப்பை ஆகிய டி20 தொடர்களை தவிர்த்து 21 டெஸ்ட், 12 ஒருநாள், 21 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
தற்போது இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடுகிறது. கடைசி டெஸ்ட் போட்டிகள் ஜனவரி 7-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி நடக்கிறது. அதன்பின் இந்திய அணி சொந்த நாடு திரும்புகிறது.
பிப்ரவரியில் இருந்து மார்ச் மாதம் வரை இங்கிலாந்து அணி இந்தியா வருகிறது. அப்போது நான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்கள் நடைபெறுகிறது.
ஏப்ரல் மாதத்தில் இருந்து மே மாதம் வரை ஐபிஎல் கிரிக்கெட் நடக்கிறது.
ஜூன் - ஜூலையில் இலங்கை சென்று 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அதன்பின் ஆசிய கோப்பை தொடரில் விளையாடுகிறது.
அதன்பின் ஜிம்பாப்வே சென்று 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
ஆகஸ்ட் - செப்டம்பரில் இங்கிலாந்து சென்று ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
அக்டோபர் மாதம் தென்ஆப்பிரிக்கா அணி இந்தியா வந்து 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அதன்பின் அக்டோபர் மாதம் மத்தியில் இருந்து நவம்பர் மாதம் தொடக்கம் வரை டி20 உலக கோப்பை தொடரில் விளையாடுகிறது.
நவம்பர்-டிசம்பரில் நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட், மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
டிசம்பர் மாதம் தென்ஆப்பிரிக்கா சென்று மூன்று டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவின் மனைவி தன்யாவிற்கு புத்தாண்டு தினமான இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் உமேஷ் யாதவ். 33 வயதான இவர் ஆஸ்திரேலியா தொடரில் விளையாடி வந்தார். மெல்போர்ன் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் விளையாடும்போது இவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.
ஸ்கேன் பரிசோதனையில் வருகிற 7-ந்தேதிக்குள் காயம் குணமடைய வாய்ப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்திய தொடரில் இருந்து விலகியுள்ளார். நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அவரது மனைவிக்கு 2021 புத்தாண்டு தினமான இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அவர் சமூக வலைதளம் மூலம் தெரிவித்துள்ளார். புத்தாண்டு தினத்தன்று ஸ்பெஷல் கிஃப்ட் வந்து சேர்ந்துள்ள அவருக்கு பிசிசிஐ வாழ்த்துகள் தெரிவித்துள்ளது.
It's a girl. 😘😘😍😘😍😘 pic.twitter.com/mdorY5nBUv
— Umesh Yaadav (@y_umesh) January 1, 2021
சிட்னி, பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலியும், துணைக் கேப்டனாக ரஹானேவும் உள்ளனர். அடிலெய்டு டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு விராட் கோலி இந்தியா திரும்பியதால் ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அப்போது புஜாரா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.
காயத்தில் இருந்தும் மீண்ட ரோகித் சர்மா, ஆஸ்திரேலியா சென்று கோரன்டைனை முடித்துக் கொண்டு கடைசி இரண்டு போட்டியில் விளையாடுவதற்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அடுத்த இரண்டு போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. புஜாராவுக்குப் பதிலாக ரோகித் சர்மா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய ஒயிட்-பால் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசி இரண்டு போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. ரஹானே (கேப்டன்), 2. ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), 3. மயங்க் அகர்வால், 4. பிரித்வி ஷா, 5. கேஎல் ராகுல், 6. புஜாரா, 7. ஹனுமா விஹாரி, 8. ஷுப்மான் கில், 9. விருத்திமான் சாஹா, 10. ரிஷப் பண்ட், 11. ஜஸ்பிரித் பும்ரா, 12. நவ்தீப் சைனி, 13. குல்தீப் யாதவ், 14. ரவீந்திர ஜடேஜா, 15. ஆர். அஸ்வின், 16. முகமது சிராஜ், 17. ஷர்துல் தாகூர், 18. டி நடராஜன்.
காயம் அடைந்துள்ள உமேஷ் யாதவுக்குப் பதிலாக இந்திய டெஸ்ட் அணியில் டி நடராஜன் சேர்க்கப்பட்டதை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. 2-வது இன்னிங்சில் 3.3 ஓவர் மட்டுமே பந்து வீசிய நிலையில் உமேஷ் யாதவ் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறினார்.
பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறிய உமேஷ் யாதவுக்கு கணுக்கால் தசைநாரில் கிழிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய போட்டிகளில் விளையாடமாட்டார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா ஆகியோர் காயத்தால் விலகிய நிலையில் உமேஷ் யாதவின் காயம் இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாகும். அவருக்கு பதிலாக கூடுதலாக தற்போது வலைபயிற்சி பந்து வீச்சாளராக இருக்கும் தமிழகத்தை சேர்ந்த டி நடராஜன் சேர்க்கப்படுவார் என செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தற்போது டி நடராஜன் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆனாலும் சிட்னியில் 7-ந்தேதி தொடங்கும் 3-வது டெஸ்டுக்கான களம் காணும் இந்திய அணியில் நடராஜனுக்கு இடம் கிடைக்காது என்று இந்திய அணியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முதல்தர கிரிக்கெட்டில் அவரை விட அனுபவம் வாய்ந்த ஷர்துல் தாகூர் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது.
லா லிகா கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் அட்லெட்டிகோ மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெடாபி அணியை தோற்கடித்தது
மாட்ரிட்:
பிரபலமான லா லிகா கால்பந்து தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய ஒரு லீக் ஆட்டத்தில் அட்லெட்டிகோ மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெடாபி அணியை தோற்கடித்தது. வெற்றிக்குரிய கோலை 20-வது நிமிடத்தில் லூயிஸ் சுவாரஸ் அடித்தார்.
நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட்- எல்ச்சி அணிகள் இடையிலான மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. புள்ளி பட்டியலில் அட்லெட்டிகோ மாட்ரிட் 35 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரியல்மாட்ரிட் 33 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன.
பிரபலமான லா லிகா கால்பந்து தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய ஒரு லீக் ஆட்டத்தில் அட்லெட்டிகோ மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெடாபி அணியை தோற்கடித்தது. வெற்றிக்குரிய கோலை 20-வது நிமிடத்தில் லூயிஸ் சுவாரஸ் அடித்தார்.
நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட்- எல்ச்சி அணிகள் இடையிலான மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. புள்ளி பட்டியலில் அட்லெட்டிகோ மாட்ரிட் 35 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரியல்மாட்ரிட் 33 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன.
உலக கோப்பையை வென்ற இந்திய முன்னாள் ஆக்கி வீரர் மைக்கேல் கோன்டா உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
ரூர்கேலா:
இந்திய ஆக்கி முன்னாள் வீரர் மைக்கேல் கோன்டா. 1972-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஆக்கி அணியிலும், 1975-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியிலும் இடம் பெற்றவர் ஆவார். வெண்கலம் வென்ற அந்த ஒலிம்பிக்கில் 3 கோல்கள் அடித்திருந்தார்.
சிறிது காலம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மைக்கேல் கோன்டா ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73. அவரது மறைவுக்கு ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் இரங்கல் தெரிவித்துள்ளார்.






