என் மலர்
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் 1971-ம் ஆண்டு மார்ச் 6-ந் தேதி போர்ட் ஆப் ஸ்பெயினில் தொடங்கிய டெஸ்ட் போட்டியின் மூலம் அறிமுகம் ஆனார்.
ஆமதாபாத்:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமாக விளங்கிய சுனில் கவாஸ்கர் 1971-ம் ஆண்டு மார்ச் 6-ந் தேதி போர்ட் ஆப் ஸ்பெயினில் தொடங்கிய வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகம் ஆனார். 5 ஆட்டங்கள் கொண்ட அந்த தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது. தனது அறிமுக தொடரிலேயே கவாஸ்கர் 4 சதம், 3 அரைசதம் உள்பட 774 ரன்கள் குவித்து பிரமாதப்படுத்தினார். 1987-ம் ஆண்டில் ஓய்வு பெற்ற அவர் 125 டெஸ்டில் ஆடி 34 சதம் உள்பட 10,122 ரன்களும், 108 ஒருநாள் போட்டியில் விளையாடி 3,092 ரன்களும் எடுத்துள்ளார்.
71 வயதான கவாஸ்கர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. ஆமதாபாத்தில் நடந்த இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியின் 3-வது நாளான நேற்று மதிய உணவு இடைவேளையின் போது அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா நினைவு பரிசாக தொப்பியை வழங்கி கவுரவித்தார். முன்னதாக கவாஸ்கர் ஸ்டேடியத்தில் ‘கேக்’ வெட்டி சிறப்பித்தார். முன்னாள் வீரர்கள் பலரும் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர். ‘நான் அவரது ஆட்டத்தை வியந்து பார்த்ததுடன் அவரை போன்று உருவாக முயற்சித்தேன். அதில் ஒருபோதும் மாற்றமில்லை. அவர் தான் என்றும் எனது கதாநாயகன்’ என்று சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பைனலில் நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்த்து விளையாட உள்ளது.
புதுடெல்லி:
அகமதாபாத்தில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்தியா அசத்தியது.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 205 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தரின் அபார ஆட்டத்தால் 365 ரன்கள் எடுத்து 160 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி வென்றுள்ளது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியில் மட்டுமே இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இந்த டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 13-வது முறையாக டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி உள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பைனலில் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடுவது உறுதியாகி உள்ளது. சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 28 டெஸ்ட் தொடர்களில் ஒன்றை மட்டுமே இந்திய அணி இழந்துள்ளது.
இந்நிலையில், டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள இந்திய அணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றியைக் கண்ட அற்புதமான அரங்கத்தை திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இறுதிப் போட்டியில் அவர்களின் சிறந்த செயல்திறனுக்காக அனைத்து வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது, தொடக்க ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியாளர்களாக ஆனது மற்றும் ஐ.சி.சி டெஸ்ட் அணி தரவரிசை அட்டவணையில் முதலிடத்தைப் பிடித்ததற்காக இந்திய அணி வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!” என பதிவிட்டுள்ளார்.

அகமதாபாத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
புதுடெல்லி:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அதன்பின்னர் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றிவாகை சூடியது. குறிப்பாக அகமதாபாத்தில் இன்று நிறைவடைந்த கடைசி போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரை 3-1 என கைப்பற்றியது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. 122 தரநிலைப் புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. 118 புள்ளிகளுடன் நியூசிலாந்து இரண்டாம் இடத்திலும், 113 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி மூன்றாமிடத்திலும் உள்ளது.
இதற்கு அடுத்த இடங்களில் இங்கிலாந்து (105), பாகிஸ்தான் (90), தென் ஆப்பிரிக்கா (89), இலங்கை (83), வெஸ்ட் இண்டீஸ் (80), ஆப்கானிஸ்தான் (57), வங்கதேசம் (51) ஆகிய அணிகள் உள்ளன.
ஜோ ரூட், டான் லாரன்ஸ் ஆகியோர் சற்று தாக்குப்பிடித்து விக்கெட்டை காப்பாற்ற போராடினர். எனினும் அவர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை.
அகமதாபாத்:
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 205 ரன்களில் சுருண்டது.
இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சை ஆடியது. ரிஷப் பண்ட் (101) வாஷிங்டன் சுந்தர் (96 அவுட் இல்லை) ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வலுவான அடித்தளம் அமைத்தனர். இதனால் இந்திய அணி 365 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 2ம் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, ஆரம்பம் முதலே இந்திய சுழற்பந்துவீச்சில் தடுமாறியது. 65 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. ஜோ ரூட், டான் லாரன்ஸ் ஆகியோர் சற்று தாக்குப்பிடித்து விக்கெட்டை காப்பாற்ற போராடினர். எனினும் அவர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை. ஜோ ரூட் 30 ரன்களில் வெளியேறினார். கடைசி வரை போராடிய டான் லாரன்ஸ் 50 ரன்களில் அவுட் ஆனார். இதனால் இங்கிலாந்து அணி 135 ரன்களில் சுருண்டது.
இதன்மூலம் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என இந்தியா கைப்பற்றியது. இரண்டாம் இன்னிங்சில் அக்சர் பட்டேல், அஷ்வின் இருவரும் தலா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெலிங்டன்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 ஆட்டங்களில் நியூசிலாந்து அணி முறையே 53 ரன், 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுக்கு 156 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் 55 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 79 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். கைல் ஜாமிசன் வீசிய கடைசி ஓவரில் மட்டும் பிஞ்ச் 4 சிக்சர்களை தெறிக்க விட்டார்.
அடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து 18.5 ஓவர்களில் 106 ரன்னில் அடங்கியது. இதனால் ஆஸ்திரேலியா 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் வில்லியம்சன் (8 ரன்), கப்தில் (7 ரன்) ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. அதிகபட்சமாக கைல் ஜாமிசன் 30 ரன் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர்கள் ஆஷ்டன் அகர், ஆடம் ஜம்பா, மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடரை 2-2 என்ற கணக்கில் சமநிலைக்கு கொண்டு வந்துள்ளது. இவ்விரு அணிகள் இடையே தொடரை வெல்வது யார்? என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நாளை (இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு) நடக்கிறது.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.
அகமதாபாத்:
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 205 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் அதிகமாக பென் ஸ்டோக்ஸ் 55 ரன்கள் குவித்தார். இந்தியா சார்பில் தரப்பில் அக்சர் பட்டேல் 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் சேர்த்திருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. கேப்டன் கோலி ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். ரோகித் சர்மா 49 ரன்கள், புஜாரா 17 ரன்கள், ரகானே 27 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பொறுப்புடன் ஆடிய ரிஷப் பண்ட் - வாஷிங்டன் சுந்தர் ஜோடி இங்கிலாந்து பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டு ரன்களை குவித்தது. ரிஷப் பண்ட் சதமடித்து 101 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், ரிஷப் பண்ட் அனைத்து நிலைகளிலான போட்டிகளிலும் சிறப்புடன் விளையாடுவார் என சவுரவ் கங்குலி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கங்குலி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், எவ்வளவு சிறந்தவர் அவர்? நம்பமுடியவில்லை... நெருக்கடியான நிலையில் சிறப்புடன் ஆடினார். இது முதல் முறையல்ல. கடைசி முறையாகவும் இருக்காது... வரும் ஆண்டுகளில் அனைத்து நிலைகளிலான ஆட்டங்களிலும் எல்லா தருணங்களிலும் சிறந்தவராக அவர் இருந்திடுவார்.
இந்த ஆக்ரோஷ முறையில் தொடர்ந்து விளையாடுங்கள். அதனாலேயே அவர் போட்டியை வெற்றி பெற செய்பவராகவும் மற்றும் சிறந்தவராகவும் இருக்கிறார் என பதிவிட்டுள்ளார்.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணியைவிட இந்தியா 89 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
அகமதாபாத்:
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 205 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 55 ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் அக்சர் பட்டேல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அஷ்வின் 3 விக்கெட் எடுத்தார்.,
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் சேர்த்திருந்தது.
இந்நிலையில் இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. கேப்டன் கோலி ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். ரோகித் சர்மா 49 ரன்கள், புஜாரா 17 ரன்கள், ரகானே 27 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதேசமயம், ரிஷப் பன்ட்-வாஷிங்டன் சுந்தர் ஜோடி, இங்கிலாந்து பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டு ரன்களை குவித்தது. ரிஷப் பன்ட் சதம் அடித்தார். அவர் 101 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் வாஷிங்டன் சுந்தர் அரை சதம் கடந்தார்.
இதன்மூலம் இன்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழந்து 294 ரன்கள் சேர்த்துள்ளது. வாஷிங்டன் சுந்தர் 60 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணியைவிட இந்தியா 89 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், தாமஸ் ரோக்சலை (பிரான்ஸ்) வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
பாசெல்:
சுவிட்சர்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து 21-13, 21-14 என்ற நேர் செட்டில் அரிஸ் வாங்கை (அமெரிக்கா) விரட்டியடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-10, 14-21, 21-14 என்ற செட் கணக்கில் தாமஸ் ரோக்சலை (பிரான்ஸ்) வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். சாய் பிரனீத், அஜய் ஜெயராம் ஆகியோரும் அடுத்த சுற்றை எட்டினர்.
முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த முதலாவது சுற்றில் இந்திய முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் 16-21, 21-17, 21-23 என்ற செட் கணக்கில் போராடி பிட்டயாபோர்ன் சவானிடம் (தாய்லாந்து) வீழ்ந்தார். உலக தரவரிசையில் 19-வது இடம் வகிக்கும் சாய்னா நேவால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற தரவரிசையில் நிறைய முன்னேற்றம் காண வேண்டிய நிலையில் உள்ளார். இந்த தோல்வியின் மூலம் அவரது ஒலிம்பிக் தகுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் முன்னாள் சாம்பியன்கள் சென்னையின் எப்.சி., பெங்களூரு உள்பட 7 அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.
கோவா:
கோவாவில் நடந்து வரும் 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதன் லீக் ஆட்டங்கள் முடிவில் மும்பை சிட்டி, ஏ.டி.கே.மோகன் பகான், நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), எப்.சி.கோவா ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறின. முன்னாள் சாம்பியன்கள் சென்னையின் எப்.சி., பெங்களூரு உள்பட 7 அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.
இன்று நடைபெறும் அரைஇறுதியின் முதலாவது சுற்றில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த மும்பை சிட்டி (12 வெற்றி, 4 டிரா, 4 தோல்வி), 4-வது இடம் பெற்ற கோவா (7 வெற்றி, 10 டிரா, 3 தோல்வி) அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் வருகிற 8-ந் தேதி மீண்டும் ஒருமுறை அரைஇறுதியில் மோதும். இரண்டு ஆட்டங்களிலும் சேர்த்து அதிக வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். சமநிலை ஏற்பட்டால் கோல் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.
ஐ.எஸ்.எல். வரலாற்றில் இரு அணிகளும் 16 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 7-ல் கோவாவும், 5-ல் மும்பையும் வெற்றி பெற்றுள்ளன. 4 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. அரைஇறுதியை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

கொரோனா பரவல் எதிரொலியாக 4 வீரர்கள், ஒரு உதவி பயிற்சியாளர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் உறுதியானது.
கராச்சி:
6-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கராச்சியில் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இந்த போட்டியில் பங்கேற்ற 2 வெளிநாட்டு வீரர்கள் முதலில் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி தனிமைப்படுத்தப்பட்டனர். இதற்கிடையில் கடந்த சில நாட்களில் மேலும் 4 வீரர்கள், ஒரு உதவி பயிற்சியாளர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது.
கொரோனா பரவல் எதிரொலியாக சில வெளிநாட்டு வீரர்கள் போட்டியில் இருந்து விலகி தங்களது சொந்த நாட்டுக்கு திரும்ப திட்டமிட்டனர். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் சூப்பர் லீக் அணிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த போட்டியை உடனடியாக தள்ளிவைப்பதாக நேற்று அறிவித்தது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு விஷயத்தில் என்ன தவறு நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி வாசிம் கான் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனையை தேர்ந்தெடுத்து விருது வழங்கும் முறையை ஐ.சி.சி சமீபத்தில் அறிமுகம் செய்தது.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. மாதம்தோறும் சிறந்த வீரர், வீராங்கனையை தேர்ந்தெடுத்து விருது வழங்கும் முறையை அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், வெஸ்ட் இண்டீசின் கைல் மேயர்ஸ் ஆகியோரை இறுதி செய்து ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
பிப்ரவரி மாதத்தில் அஸ்வின் இங்கிலாந்துக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், ஒரு சதம் உள்பட 176 ரன்களும் எடுத்து பிரமாதப்படுத்தியுள்ளார்.
இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கடந்த மாதத்தில் இந்தியாவுக்கு எதிராக 3 டெஸ்டில் ஆடி இரட்டை சதம் உள்பட 333 ரன்கள் சேர்த்து, 6 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸ் இளம் வீரர் கைல் மேயர்ஸ் வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமாகி 2-வது இன்னிங்சில் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்தார்.
இவர்களில் இருந்து சிறந்த வீரரை ஐ.சி.சி.யின் வாக்கு அகாடமி மற்றும் ரசிகர்கள் இணையம் வழியாக வாக்களித்து தேர்வு செய்வார்கள்.
சிறந்த வீராங்கனைக்கான பட்டியலில் டாமி பீமோன்ட், நாட் ஸ்சிவர் (இங்கிலாந்து), புரூக் ஹாலிடே (நியூசிலாந்து) ஆகியோர் உள்ளனர்.

ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் முன்கூட்டியே பயிற்சியை தொடங்க திட்டமிட்டுள்ளது.
சென்னை:
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஏப்ரல்) தொடங்குகிறது. போட்டிக்கான இடம், தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் முன்கூட்டியே பயிற்சியை தொடங்க திட்டமிட்டுள்ளது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார்.
அம்பத்தி ராயுடு, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும் வருகை தந்துள்ளனர். இவர்கள் 5 நாட்கள் ஓட்டலில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். தனிமைப்படுத்துதலின் போது தங்களது அறையை விட்டு வெளியே வர அனுமதி இ்ல்லை. அத்துடன் 3 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்படும். இதில் கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வர வேண்டும். அதன் பிறகே பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள். கடந்த ஆண்டு சென்னை சூப்பர் அணியின் 2 வீரர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் இந்த முறை கூடுதல் விழிப்புடன் செயல்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
வீரர்களுக்கான பயிற்சி முகாம் வருகிற 9-ந்தேதி தொடங்க இருப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்தார். தற்போது போட்டிகள் இன்றி ஆயத்தமாக உள்ள வீரர்கள் அனைவரும் முகாமில் கலந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறினார். சுரேஷ் ரெய்னா அடுத்த வாரம் பயிற்சி முகாமில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.