என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்தியா கொரோனா தொற்றின் 2-வது அலையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்கள் பிரபலங்கள் நன்கொடை வழங்கி வருகின்றன.
    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. தினந்தோறும் பாதிப்பு 4 லட்சத்தை தொட்ட வண்ணம் உள்ளதால் ஆக்சிஜன் மற்றும் மருந்து தட்டுப்பாடுகள் நிலவி வருகிறது.

    இதனால் வெளிநாடுகள் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்தியாவில் உள்ள தொழிலதிபர்கள், பிரபலங்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர்.

    அந்த வகையில் ஐபிஎல் போட்டியில விளையாடும் அணிகளில் ஒன்றான சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் உரிமையாளரான சன் டிவி நெட்வொர்க் கொரோனாவை எதிர்கொள்ள 30 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளது.

    மத்திய அரசு, மற்றும் மாநில அரசுகள், என்ஜிஓ போன்றவற்றால் நடைபெறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு இந்த பணம் நன்கொடையாக வழங்கபடுகிறது எனத் தெரிவித்துள்ளது.
    இந்திய வீராங்கனைகள் ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிரிதி மந்தனா, ஷபாலி வர்மா உள்ளிட்ட ஐந்து வீராங்கனைகள் ஹண்ட்ரட் தொடரில் விளையாட இருக்கிறார்கள்.
    இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு ஹண்ட்ரட் (ஒரு இன்னிங்ஸ்க்கு 100 பந்துகள்) என்ற தொடரை அறிமுகம் செய்துள்ளது. பல்வேறு தடைகளை தாண்டி இந்த வருடம் கோடைக்காலத்தில் முதல் தொடர் நடைபெற இருக்கிறது.

    இந்த தொடரில் விளையாடுவதற்கு இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிரிதி மந்தனா, ஷபாலி வர்மா உள்ளிட்ட ஐந்து பேர் ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

    ஹர்மன்ப்ரீத் கவுர் மான்செஸ்டர் ஒரிஜனல்ஸ் அணிக்காகவும், ஸ்மிரி மந்தனா சவுத்தன் பிரேவ் அணிக்காகவும், ஷபாலி வர்மா பர்மிங்காமல் போனிக்ஸ் அணிக்காகவும் விளையாட இருக்கிறார்கள். ஹண்ட்ரட் தொடரில் விளையாடுவதற்காக பிசிசிஐ தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது.

    மேற்கொண்ட மூன்று பேரைத் தவிர தீப்தி ஷர்மா, ஜெர்மையா ரோட்ரிக்ஸ் ஆகியோரும் விளையாடுகிறார்கள்.
    வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, அவரது மனைவி பிரதிமா சிங் ஆகியோரும் இன்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
    புதுடெல்லி:

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியும் முழுவீச்சில் நடைபெறுகிறது. தினந்தோறும்  லட்சக்கணக்கான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். தடுப்பூசி தொடர்பாக மக்களிடையே உள்ள அச்ச உணர்வை போக்கும் வகையில் பிரபலங்கள் பலரும் முறையாக தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.

    அவ்வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தி உள்ளார். தடுப்பூசி போடும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள விராட் கோலி, அனைவரும் விரைவில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

    இதேபோல் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, அவரது மனைவி பிரதிமா சிங் ஆகியோரும் இன்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

    கடந்த வாரம் உமேஷ் யாதவ், அஜிங்கியா ரகானே, ஷிகர் தவான் ஆகியோரும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
    இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 23 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 4-வது சுற்றான ஸ்பெயின் கிராண்ட்பிரி பார்சிலோனாவில் நேற்று நடந்தது.
    பார்சிலோனா:

    இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 23 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 4-வது சுற்றான ஸ்பெயின் கிராண்ட்பிரி பார்சிலோனாவில் நேற்று நடந்தது. 308.424 கிலோமீட்டர் பந்தய தூரத்தை நோக்கி வழக்கம் போல் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். இதில் தகுதி சுற்றில் முதலிடம் பிடித்த 7 முறை சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) எதிர்பார்த்தது போலவே முதலாவது வந்து 25 புள்ளிகளை தட்டிச் சென்றார். அவர் பந்தய தூரத்தை 1 மணி 33 நிமிடங்கள் 07.680 வினாடிகளில் எட்டி வெற்றி கண்டார். அவரை விட 15.841 வினாடி பின்தங்கிய நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 2-வதாக வந்து 19 புள்ளிகளை பெற்றார். பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ்) 3-வது இடத்தை பிடித்தார்.

    இந்த சீசனில் 3-வது வெற்றியை ருசித்த ஹாமில்டன் சாம்பியன்ஷிப் வாய்ப்பில் மொத்தம் 94 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். வெர்ஸ்டப்பென் 80 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறார். 5-வது சுற்று போட்டி வருகிற 23-ந்தேதி மொனாக்கோவில்நடக்கிறது.
    ஜஸ்பிரித் பும்ராவால் 400 விக்கெட் என்ற மைல்கல்லை எட்ட முடியும் என வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் அம்ப்ரோஸ் கணித்துள்ளார்.
    புதுடெல்லி:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கர்ட்லி அம்ப்ரோஸ் (98 டெஸ்டில் 405 விக்கெட் வீழ்த்தியவர்) யூ டியுப் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:

    இந்திய அணியில் சில சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். அவரது பந்து வீச்சை தொடர்ந்து கவனித்து வருகிறேன். மற்ற பவுலர்களைக் காட்டிலும் வித்தியாசமாக பந்து வீசுகிறார். தாக்கத்தை ஏற்படுத்துகிறார்.

    அவர் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசுவதை பார்க்க ஆவல் கொண்டுள்ளேன். அவரால் டெஸ்டில் 400 விக்கெட்டுகளை (27 வயதான பும்ரா தற்போது 19 டெஸ்டில் ஆடி 83 விக்கெட் எடுத்துள்ளார்) கைப்பற்ற முடியுமா? என்று கேட்கிறீர்கள். பந்தை நல்ல முறையில் ஸ்விங் செய்கிறார். மிரட்டலாக யார்க்கர் பந்துகளை வீசுகிறார். நிறைய பந்துவீச்சு அஸ்திரங்கள் அவரிடம் உள்ளன.

    உடல் ஆரோக்கியத்துடனும், நீண்ட காலம் விளையாடுவதற்கு ஏற்ப உடல்தகுதியுடனும் அவர் இருக்க வேண்டும். அதிக காலம் தொடர்ந்து உடல்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் 400 விக்கெட் மைல்கல்லை அவரால் எட்ட முடியும்.

    அடுத்த மாதம் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இதில் இ்ந்திய அணி சாதிக்க வேண்டும் என்றால் தொடக்க ஆட்டக்காரர்கள் வலுவான அடித்தளம் அமைத்து தர வேண்டியது அவசியம். ஆரம்பத்திலேயே ஒன்றிரண்டு விக்கெட் சரிந்து விட்டால், அதன் பிறகு விராட் கோலி மற்றும் மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் நெருக்கடிக்கு உள்ளாவார்கள். அதேசமயம் நல்ல தொடக்கம் கிடைத்தால் மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் நெருக்கடி இன்றி இயல்பாக விளையாட முடியும். அணியும் பெரிய ஸ்கோரை குவிக்கலாம் என தெரிவித்தார்.
    ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டும், நவ்மன் அலி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    ஹராரே:

    பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹராரேயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 147.1 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 510 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அபித் அலி 215 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அசார் அலி 126 ரன்னிலும், நவ்மன் அலி 97 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    ஜிம்பாப்வே சார்பில் முசாராபனி 3 விக்கெட்டும், சிசோரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. இரண்டாம் நாள் முடிவில் ஜிம்பாப்வே 30 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்தது.

    இந்நிலையில், நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 60.4 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் பாலோ-ஆன் ஆனது. அந்த அணியில் சகாப்வா அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார்.

    டெய்லர் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பாகிஸ்தான் அணி =

    பாகிஸ்தான் சார்பில் ஹசன் அலி 5 விக்கெட்டும், சஜித் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து, ஜிம்பாப்வே இரண்டாவது இன்னிங்சை ஆடியது. இதிலும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அசத்தி விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தினர்.

    ஆனாலும், சகாப்வா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 80 ரன்னில் அவுட்டானார். பிரெண்டண் டெய்லர் 49 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    மூன்றாம் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி 63 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் எடுத்துள்ளது. லூக் ஜாங்வே 30 ரன்னுடன் களத்தில் உள்ளார். இன்னும் 158 ரன்கள் பின்தங்கியுள்ளது ஜிம்பாப்வே அணி.

    பாகிஸ்தான் சார்பில் நவ்மன் அலி 5 விக்கெட்டும், ஷஹீன் அப்ரிதி 4 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றி விடும் என்பது உறுதி.
    இங்கிலாந்து மண்ணில் கடைசியாக 2007-ம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை (1-0) வென்றது.
    மும்பை:

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றும் என்று இந்திய முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில் அடுத்த மாதம் (ஜூன்) 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் ஆகஸ்டு 4-ந்தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. இதையொட்டி விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அடுத்த மாதம் 2-ந்தேதி இங்கிலாந்துக்கு புறப்படுகிறது.

    கோப்புப்படம்


    இங்கிலாந்து மண்ணில் கடைசியாக 2007-ம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை (1-0) வென்றது. அதன் பிறகு 3 முறை இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய அணி ஒவ்வொரு முறையும் டெஸ்ட் தொடரில் படுதோல்வியுடன் தான் தாயகம் திரும்பியிருக்கிறது.

    இந்த நிலையில் இங்கிலாந்து தொடர் குறித்து முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இங்கிலாந்து அணி பந்து வீச்சில் பலம் வாய்ந்தது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக அவர்களின் வேகப்பந்து வீச்சு தாக்குதல் அற்புதமானது. அவர்களிடம் நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர். இங்கிலாந்தின் டாப் 6-7 பேட்ஸ்மேன்களை பார்த்தால் அதில் ஒருவர் உலகத்தரம் வாய்ந்த மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக விளங்குகிறார். அவர் தான் ஜோ ரூட். இதே போல் பென் ஸ்டோக்சையும் குறிப்பிட்டாக வேண்டும். அவர் சிறந்த ஆல்-ரவுண்டர். ஆனால் அவருக்கு எதிராக இந்தியாவில் நமது சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் அசத்தினார். இப்போதும் அவருக்கு எதிராக சிறப்பாக செயல்படுவார் என்று தோன்றுகிறது. இவர்கள் இடையிலான நீயா-நானா? மோதல் இந்த போட்டியில் சுவாரஸ்யமாக இருக்கும்.

    இந்த தொடருக்காக இந்திய அணி சிறந்த முறையில் தயாராகும் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதால் அணியின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. சில வீரர்கள் ஏற்கனவே சில முறை இங்கிலாந்துக்கு சென்று விளையாடி இருக்கிறார்கள். பேட்டிங்கை பொறுத்தவரை இந்த முறை நிறைய அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதனால் இந்த தடவை டெஸ்ட் தொடரை கைப்பற்ற இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. அனேகமாக இந்திய அணி டெஸ்ட் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றலாம் என்று கருதுகிறேன்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முடிந்த பிறகு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடங்குவதற்கு ஒரு மாதம் முழுமையாக இருக்கிறது. எந்த ஒரு அணிக்கும் இது போன்று நீண்ட நாட்கள் தயாராவதற்கு வாய்ப்பு கிடைக்காது. அந்த வகையில் இந்தியாவுக்கு இது சாதகமான அம்சமாக இருக்கும். அணி சரியான கலவையில் அமைந்துள்ளது.

    இங்கிலாந்தை பொறுத்தவரை அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு நீங்கள் எப்போதும் மதிப்பு கொடுத்தாக வேண்டும். இந்தியா, ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிடும் போது அங்குள்ள சூழல் சற்று வித்தியாசமாக இருக்கும். வானிலை மாறும் போது, 40-50 ஓவர்களுக்கு பிறகுகூட பந்து ஸ்விங் ஆகும்.

    இவ்வாறு டிராவிட் கூறினார்.
    ஸ்பெயினில் நடந்த மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டிக்கு அதிர்ச்சி அளித்து சபலென்கா சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கினார்.
    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்தது. களிமண் தரை போட்டியான இதில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டியும், 7-ம் நிலை வீராங்கனை அரினா சபலென்காவும் (பெலாரஸ்) மோதினர்.

    இதில் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய சபலென்கா, முதல் செட்டில் ஒரு கேமை கூட (6-0) இழக்காமல் அசத்தினார். ஒரு செட்டில் ஆஷ்லி பார்ட்டி ஒரு கேம் கூட வெல்லாதது கடந்த 4 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். இதன் பின்னர் 2-வது செட்டை கைப்பற்றி மீண்ட ஆஷ்லி, கடைசி செட்டில் சபலென்காவின் ஆக்ரோஷத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பணிந்தார்.

    1 மணி 39 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் சபலென்கா 6-0, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வாகை சூடி பட்டத்தை வசப்படுத்தினார். இதன் மூலம் 2 வாரத்துக்கு முன்பு ஜெர்மனியில் நடந்த ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு சபலென்கா பழிதீர்த்துக் கொண்டார். அத்துடன் களிமண் தரை ஆடுகளத்தில் தொடர்ச்சியாக 16 ஆட்டங்களில் வென்றிருந்த ஆஷ்லியின் வீறுநடையும் முடிவுக்கு வந்தது.

    23 வயதான சபலென்கா கூறுகையில், ‘உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு பிறகு காயத்தால் அவதிப்பட்டேன். இதனால் மாட்ரிட் ஓபனில் இருந்து விலகலாம் என்று நினைத்தேன். ஆனால் அதன் பிறகு 4 நாட்களில் காயத்தில் இருந்து வேகமாக குணமடைந்ததால் களம் திரும்பி இப்போது சாம்பியனாக நிற்கிறேன். இது எனக்கு வியப்புக்குரிய வாரமாக அமைந்தது’ என்றார்.

    இது சபலென்காவுக்கு 10-வது சர்வதேச பட்டமாகும். அதே சமயம் களிமண் தரை போட்டியில் அவருக்கு இது முதல் மகுடமாகும். அவருக்கு ரூ.2 கோடியே 81 லட்சம் பரிசுத்தொகையும், ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் கிடைத்தன. இன்று வெளியாகும் புதிய தரவரிசையில் சபலென்கா 4-வது இடத்துக்கு முன்னேறுகிறார். அவரது சிறந்த தரநிலை இதுவாகும். 2-வது இடம் பிடித்த ஆஷ்லி பார்ட்டிக்கு ரூ.1 கோடியே 68 லட்சம் கிடைத்தது.
    மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய அனைத்து வெளிநாட்டு வீரர்களும் அவரவர் வீடுகளுக்கு சென்றடைந்துள்ளனர்.
    இந்தியாவில் கொரோனா தொற்று அதிரித்து வந்த நிலையில், கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக சொந்த நாடு திரும்ப விரும்பினர்.

    ஐபிஎல் அணி நிர்வாகம் வெளிநாட்டு வீரர்களை பாதுகாப்பாக சொந்த நாடு திரும்ப ஏற்பாடு செய்தது. இந்தியாவில் இருந்து பெரும்பாலானா நாடுகளுக்கு நேரடி விமான போக்குவரத்து கிடையாது. இதனால் வேறு நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

    நியூசிலாந்து வீரர்கள் டோக்கியோ சென்று அங்கிருந்து சொந்த நாடு சென்றார்கள். தற்போது வீரர்கள் தங்களுடைய வீட்டிற்குச் சென்றுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய டிரென்ட் போல்ட் வீட்டிற்கு சென்றுவிட்டார். மற்ற வீரர்களும் சென்றுவிட்டனர்.

    இந்த நிலையில் பாதுகாப்பாக சொநத் ஊர் அனுப்பி வைத்ததற்காக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரென்ட் போல்ட் நன்றி தெரிவித்துள்ளார்.

    டிரென்ட் போல்ட் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் ‘‘ஐபிஎல் போட்டி முடிவுக்கு வந்து நான் கவலையாக சொந்த நாடு திரும்பிய நிலையில், என்னுடைய இதயம் இந்திய மக்களை நோக்கிய செல்கிறது. தற்போதைய நிலையில் ஏராளமான மக்கள் பாதிக்கப்படும்போது, இதுனுடன் எதையும் ஒப்பிட இயலாது.

    ஒரு கிரிக்கெட்டராகவும், மனிதராகவும் இந்தியா எனக்கு ஏராளமானவற்றை கொடுத்துள்ளது. என்னுடைய இந்திய ரசிகர்களிடம் இருந்து ஏராளமாக ஆதரவை பெற்றுள்ளேன். இது ஒரு துயரமான சம்பவம். இந்த நிலை விரைவில் மாறும் என நம்புகிறேன். என்னால் முடிந்தவரை இந்த அழகான நாட்டிற்கு திரும்புவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    எங்களை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்ததற்காக மும்பை இந்தியன்ஸ்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தயது செய்து கவனமான இருங்கள். நன்றாக வலிமையான பிறகு பார்ப்போம்’’ எனத் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணி கேப்டனான விராட் கோலி, எப்போதுமே பந்து வீச்சாளர்கள் மீது நெருக்கடி கொடுத்தது கிடையாது என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் அனுபவ பந்து வீச்சாளர்களில் ஒருவராக முகமது ஷமி திகழ்ந்து வருகிறார். இஷாந்த் சர்மா, பும்ரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகியோர் டெஸ்ட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களாக திகழ்கிறார்கள்.

    அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முகமது ஷமி இடம் பிடித்துள்ளார்.

    இந்திய அணியில் இடம் பிடித்துள்ள முகமது ஷமி, கேப்டன் விராட் கோலி எங்களுடைய சிறுவயது நண்பன் போன்று நடந்து கொள்வார் என்று தெரிவித்துள்ளார்.

    விராட் கோலி குறித்து முகமது ஷமி கூறுகையில் ‘‘வெளிநாட்டு தொடர்களில் இந்திய அணி பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியது இந்த இந்திய அணியின் அதிர்ஷ்டம் அல்லது கடின உழைப்பு என்று நீங்கள் கூறலாம். ஆனால், விராட் கோலி எப்போதுமே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆதரவாக இருப்பார்.

    மைதானத்தில் விளையாடும்போது முழு சுதந்திரம் அளிப்பார். எங்களுடைய திட்டம் தோற்கும்போது, அவர் மட்டும்தான் ஜம்ப் ஆவார். மாறாக நாங்கள் ஒரு குழுவாக ஒன்றிணைந்து மகிழ்ச்சியாக பந்து வீசுவோம். அவர் எப்போதுமே ஆதரவாக இருப்பார்.

    பந்து வீச்சு குழுவாகவும் அல்லது தனிப்பட்ட முறையிலும், எங்கள் மீது ஒருபோது நெருக்கடியை சுமத்தியது கிடையாது. வழக்கமாக பந்து வீச்சாளர் மனதில், கேப்டனை நாடிச் செல்லும்போது சந்தேகம் எழும். விராட் கோலியிடம் அப்படி எண்ணமே இருக்காது. அவராகவே எதுவும் சொல்லமாட்டார். அவர் எங்களிடம் நகைச்சுவையாக பேசுவார். சிறுவயது நண்பன் போன்று நடந்து கொள்வார்.

    முகமது ஷமி, விராட் கோலி

    மைதானத்தில் ஏராளமான வேடிக்கைகள் நடக்கும். சில நேரம் வேடிக்கையாக பேசுவோம். சில நேரம் ஒருவருக்கொருவர் ஆக்ரோசமான விசயங்களை பேசுவோம். ஆனால் மனதில் அது இருக்காது. ஏனெனல், அது மிகவும் இக்கட்டான நிலையில் அது நிகழும்’’ என்றார்.
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டதால், வீரர்கள் சொந்த நாடு திரும்பி வரும் நிலையில், நியூசிலாந்து வீரர்கள் பலர் இன்று காலை ஆக்லாந்து சென்றடைந்தனர்.
    வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் உடனடியாக ரத்து செய்யப்பட்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டு வீரர்கள், சொந்த நாடு திரும்ப முடிவு செய்தனர்.

    இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருவதால் பெரும்பாலான நாடுகள் விமான போக்குவரத்திற்கு தடைவிதித்தது. இதனால் வீரர்கள் சொந்த நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

    பிசிசிஐ, ஐபிஎல் நிர்வாகம் மற்றும் ஐபிஎல் அணிகள் வாடகை விமானங்களை ஏற்பாடு செய்து வெளிநாட்டு வீரர்களை அவரவர் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறது. அந்த வகையில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பயிற்சியாளர் மெக்கல்லம், சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், லூக்கி பெர்குசன், நடுவர் கிறிஸ் கஃபானி, வர்ணனையாளர்கள் சைடன் டவுல், ஸ்காட் ஸ்டைரிஸ் ஆகியோர் இன்று காலை ஆக்லாந்து சென்றடைந்தனர்.

    ஏற்கனவே டிரென்ட், போல்ட் ஆடம் மில்னே பின் ஆலன், ஜிம்மி நீஷம் ஆகியோர் சொந்த நாடு சென்றடைந்தனர்.  அவர்கள் டோக்கியோ வழியாக சொந்த நாடு சென்றடைந்தனர்.

    நியூசிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டிம் செய்பேர்ட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்காக நியூசிலாந்தை சேர்ந்த கேன் வில்லியம்ஸ்சன், மிட்செல் சான்ட்னெர், கைல் ஜேமிசன், பிசியோ டாமி சிம்செக் ஆகியோர் தற்போது மாலத்தீவுக்கு சென்றுள்ளனர். முதலில் டெல்லியில் தங்கியிருந்து இங்கிலாந்து செல்வதாக இருந்தது. ஆனால் பயணத்தடை காரணமாக மாலத்தீவு சென்றடைந்துள்ளனர்.
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சேத்தன் சகாரியாவின் தந்தை கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சளர் சேத்தன் சகாரியாவின் தந்தை கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். இந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் சேத்தன் சகாரியாவின் சகோதரர் உயிரிழந்தார். அப்போது சேத்தன் சகாரியா முஸ்தாக் அலி டிராபி போட்டியில் விளையாடிக்கொண்டு இருந்தார். இந்த சூழலில், அவரது தந்தையும் உயிரிழந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம்,  சகாரியா தந்தை மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. சேத்தன் சகாரியா குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

    ×