search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகமது ஷமி, விராட் கோலி
    X
    முகமது ஷமி, விராட் கோலி

    விராட் கோலி சிறுவயது நண்பன் போன்று நடந்து கொள்வார்: முகமது ஷமி

    இந்திய அணி கேப்டனான விராட் கோலி, எப்போதுமே பந்து வீச்சாளர்கள் மீது நெருக்கடி கொடுத்தது கிடையாது என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் அனுபவ பந்து வீச்சாளர்களில் ஒருவராக முகமது ஷமி திகழ்ந்து வருகிறார். இஷாந்த் சர்மா, பும்ரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகியோர் டெஸ்ட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களாக திகழ்கிறார்கள்.

    அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முகமது ஷமி இடம் பிடித்துள்ளார்.

    இந்திய அணியில் இடம் பிடித்துள்ள முகமது ஷமி, கேப்டன் விராட் கோலி எங்களுடைய சிறுவயது நண்பன் போன்று நடந்து கொள்வார் என்று தெரிவித்துள்ளார்.

    விராட் கோலி குறித்து முகமது ஷமி கூறுகையில் ‘‘வெளிநாட்டு தொடர்களில் இந்திய அணி பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியது இந்த இந்திய அணியின் அதிர்ஷ்டம் அல்லது கடின உழைப்பு என்று நீங்கள் கூறலாம். ஆனால், விராட் கோலி எப்போதுமே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆதரவாக இருப்பார்.

    மைதானத்தில் விளையாடும்போது முழு சுதந்திரம் அளிப்பார். எங்களுடைய திட்டம் தோற்கும்போது, அவர் மட்டும்தான் ஜம்ப் ஆவார். மாறாக நாங்கள் ஒரு குழுவாக ஒன்றிணைந்து மகிழ்ச்சியாக பந்து வீசுவோம். அவர் எப்போதுமே ஆதரவாக இருப்பார்.

    பந்து வீச்சு குழுவாகவும் அல்லது தனிப்பட்ட முறையிலும், எங்கள் மீது ஒருபோது நெருக்கடியை சுமத்தியது கிடையாது. வழக்கமாக பந்து வீச்சாளர் மனதில், கேப்டனை நாடிச் செல்லும்போது சந்தேகம் எழும். விராட் கோலியிடம் அப்படி எண்ணமே இருக்காது. அவராகவே எதுவும் சொல்லமாட்டார். அவர் எங்களிடம் நகைச்சுவையாக பேசுவார். சிறுவயது நண்பன் போன்று நடந்து கொள்வார்.

    முகமது ஷமி, விராட் கோலி

    மைதானத்தில் ஏராளமான வேடிக்கைகள் நடக்கும். சில நேரம் வேடிக்கையாக பேசுவோம். சில நேரம் ஒருவருக்கொருவர் ஆக்ரோசமான விசயங்களை பேசுவோம். ஆனால் மனதில் அது இருக்காது. ஏனெனல், அது மிகவும் இக்கட்டான நிலையில் அது நிகழும்’’ என்றார்.
    Next Story
    ×