என் மலர்
விளையாட்டு
மும்பை:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாதியிலேயே ஒத்தி வைக்கப்பட்டது. வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த முடிவை எடுத்தது.
இதைத்தொடர்ந்து ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வந்த வெளிநாட்டு வீரர்களை அவர்களது நாட்டுக்கு கிரிக்கெட் வாரியம் பத்திரமாக அனுப்பி வைத்தது.
இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேச வீரர்கள் அவர்களது நாடுகளுக்கு திரும்பி இருந்தனர். இந்திய பயணிகள் விமானத்துக்கு ஆஸ்திரேலியாவில் வருகிற 15-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஐ.பி.எல்.லில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணணையாளர்கள் என 38 பேர் நாடு திரும்ப முடியாமல் தவித்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரையும் கிரிக்கெட் வாரியம் மாலத்தீவுக்கு அனுப்பி வைத்தது. மாலத்தீவில் அவர்கள் தனிமையில் இருந்த பிறகு தங்களது நாட்டுக்கு திரும்ப முடிவு செய்து இருந்தனர்.
இதற்கிடையே மாலத்தீவில் உள்ள மதுபாரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர் டேவிட் வார்னரும், முன்னாள் வீரரும், டெலிவிஷன் வர்ணனையாளருமான மைக்கேல் சிலாட்டர் சண்டையிட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
முதலில் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறியதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது.
இதை சிலாட்டர் மறுத்துள்ளார். இது முற்றிலும் வதந்தியான தகவல் என்று அவர் தெரித்துள்ளார். இது தொடர்பாக சிலாட்டர் கூறும்போது, ‘நானும் டேவிட் வார்னரும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் சண்டை வருவதற்கான வாய்ப்பே இல்லை. இதுமாதிரியான தகவல் எங்கிருந்துதான் வருகிறது என்று தெரிய வில்லை’ என்றார்.
ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணியின் தொடர்தோல்வியால் வார்னர் கேப்டன் பதவியை இழந்தார். வில்லியம்சனுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது.
டெலிவிஷன் வர்ணனையாளரான சிலாட்டர் ஆஸ்திரேலிய பிரதமரை கடுமையாக சாடி இருந்தார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமானதை தொடர்ந்து ஆஸ்திரேலியர்கள் இந்தியாவில் இருந்து நாடு திரும்ப பிரதமர் தடை விதித்ததால் அவர் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
சிலாட்டர் தான் முதலில் மாலத்தீவு சென்றார். அதன்பிறகுதான் மற்ற ஆஸ்திரேலிய குழுவினர் அங்கு சென்றனர்.
லண்டன்:
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்தது.
இந்த ஆண்டுக்கான 14-வது ஐ.பி.எல். போட்டி ரசிகர்கள் இன்றி இந்தியாவிலேயே நடத்தப்பட்டது. சென்னை, மும்பை, டெல்லி, அகமதாபாத், கொல்கத்தா, பெங்களூர் ஆகிய 6 நகரங்களில் ஐ.பி.எல். போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
கடந்த மாதம் 9-ந்தேதி இந்த போட்டி தொடங்கியது. சென்னை, மும்பையில் போட்டிகள் நடைபெற்று முடிந்தன.
டெல்லி, அகமதாபாத்தில் ஆட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்த வீரர்கள் பாதிக்கப்பட்டதால் ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
52 நாட்களுக்கு நடைபெறுவதாக இருந்த ஐ.பி.எல். போட்டியில் 60 ஆட்டங்கள் இடம்பெற்று இருந்தன. ஆனால் 24 நாளில் 29 ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றது.
ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய வீரர்களில் இதுவரை 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு சி.எஸ்.கே. அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்ஹஸ்சி, பந்துவீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி ஆகியோரும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர்.
ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதால் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.2,500 கோடி இழப்பு ஏற்பட்டது. இதனால் எஞ்சிய ஆட்டங்களை எப்படியாவது நடத்துவது என்பதில் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக இருக்கிறது.
செப்டம்பர் மாதத்தில் எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளது. அதாவது உலக கோப்பைக்கு முன்பு நடத்தி முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து நீடித்தால் ஐக்கிய அரபு எமிரேட்சில் எஞ்சிய ஆட்டங்களை நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே இங்கிலாந்தில் உள்ள 4 கவுண்டி கிளப்புகளும், இலங்கை கிரிக்கெட் வாரியமும் ஐ.பி.எல். போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில் ஐ.பி.எல். போட்டிகளை இங்கிலாந்தில் நடத்தலாம் என்று அந்நாட்டு முன்னாள் வீரரும் டெலிவிஷன் வர்ணணையாளருமான கெவின் பீட்டர்சன் யோசனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
ஐக்கிய அரபு எமிரேட்சில் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை நடத்துவது குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஐ.பி.எல். போட்டிகளை இங்கிலாந்தில் நடத்த வேண்டும் என்று கருதுகிறேன்.
இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிறகு சிறிது இடைவெளி இருக்கிறது. இந்தியா, இங்கிலாந்து அணிகளின் அனைத்து முன்னணி வீரர்களும் இங்கிலாந்தில் இருப்பார்கள். இதனால் செப்டம்பர் இறுதியில் ஐ.பி.எல். போட்டியை நடத்தினால் அற்புதமாக இருக்கும்.
மான்செஸ்டர், லீட்ஸ், பர்மிங்காம், லண்டனில் இரு மைதானங்கள் ஆகியவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம். ஐ.பி.எல். ஆட்டங்களுக்கு ரசிகர்களை அனுமதிக்கவும் வாய்ப்பு உள்ளது.
லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடி உள்ளேன். இந்திய ரசிகர்களின் ஆரவாரத்தால் வெளிநாட்டில் விளையாடுவதுபோல் இருக்கும். அந்த அளவுக்கு இங்கிலாந்தில் இந்திய வீரர்களுக்கு ஆதரவு இருக்கும்.
இவ்வாறு பீட்டர்சன் கூறியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான கடைசி தகுதி சுற்றான உலக மல்யுத்த போட்டி பல்கேரியாவில் உள்ள சோபியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 50 கிலோ உடல் எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை சீமா பிஸ்லா 2-1 என்ற புள்ளி கணக்கில் அன்னா லுகாசிக்கை (போலந்து) வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் சீமா பிஸ்லா டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் மல்யுத்தத்தில் பங்கேற்க தகுதி பெற்ற 8-வது நபர் சீமா பிஸ்லா ஆவார். 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியா சார்பில் மொத்தம் 8 பேர் தகுதி பெற்றதே அதிகபட்சமாகும். அது இந்த முறை சமன் செய்யப்பட்டுள்ளது.
இறுதி ஆட்டத்தில் சீமா பிஸ்லாவை எதிர்த்து ஆட இருந்த லூசியா யாமிலெத் (ஈகுவடார்)காயம் காரணமாக விலகினார். இதனால் களம் இறங்காமலேயே சீமா தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார்.
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி டி 20 மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹராரேயில் நேற்று முன்தினம் தொடங்கியது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 90 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்துள்ளது. அபித் அலி 118 ரன்னுடனும், சஜித் கான் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
அசார் அலி 126 ரன்னில் ஆட்டமிழந்தார். அபித் அலி, அசார் அலி ஜோடி 236 ரன்கள் குவித்தது.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. 118 ரன்னுடன் களத்தில் நின்ற அபித் அலி சிறப்பாக விளையாடி இரட்டை சதமடித்து அசத்தினார்.
சஜித் கான்20 ரன், ரிஸ்வான் 21 ரன், ஹசன் அலி ரன் எடுக்காமல் அவுட்டாகினர்.

இறுதியில், பாகிஸ்தான் அணி 147.1 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 510 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அபித் அலி 215 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஜிம்பாப்வே சார்பில் முசாராபனி 3 விக்கெட்டும், சிசோரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் ஜிம்பாப்வே அணியினரின் முன்னணி வீரர்களை விரைவில் பெவிலியனுக்கு அனுப்பினர்.
இரண்டாம் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி 30 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்துள்ளது. சகாப்வா 28 ரன்னுடன் களத்தில் உள்ளார்.
கொரோனாவில் பாதித்தவர்களுக்கு உதவிடும்வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், அவரது மனைவியும், இந்தி நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் ‘கெட்டோ’ என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஆன் லைன் மூலம் ரூ.7 கோடி நிதி திரட்டி அளிக்க முடிவு செய்தனர். முதற்கட்டமாக ரூ.2 கோடியை அவர்கள் நன்கொடையாக வழங்கினர். மற்றவர்களும் கொரோனா நிவாரண பணிகளுக்கு நிதி வழங்கும்படி வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் ரூ.3 கோடியே 60 லட்சம் நிதி வசூல் ஆகி உள்ளதாக விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ‘நிதி திரட்டும் முயற்சிக்கு கிடைத்துள்ள பெரிய அளவிலான ஆதரவு எங்களை திகைக்க வைக்கிறது. நமது இலக்கை எட்ட தொடர்ந்து போராடுவோம். தேசத்துக்கு உதவிடுவோம’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொரோனா பாதிப்பு காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜாவில் செப்டம்பர் முதல் நவம்பர் வரை நடந்தது.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி கடந்த மாதம் 9-ந்தேதி தொடங்கியது. சென்னை, மும்பையில் போட்டி முடிந்த நிலையில் டெல்லி, அகமதாபாத்தில் ஆட்டங்கள் நடைபெற்று கொண்டு இருக்கும்போது 4 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் (கொல்கத்தா), விருத்திமான் சகா (ஐதராபாத்), அமித் மிஸ்ரா (டெல்லி), ஆகியோருக்கு பாதிப்பு இருந்தது. அதோடு சி.எஸ்.கே. அணியை சேர்ந்த பயிற்சியாளர்கள் எல்.பாலாஜி, மைக் ஹஸ்சி ஆகியோருக்கும் தொற்று உறுதியானது.
இதனால் கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல். போட்டியை பாதியில் நிறுத்தியது.
இந்த ஐ.பி.எல். சீசனில் 29 ஆட்டங்கள் முடிந்திருந்தது. 31 ஆட்டங்கள் இன்னும் எஞ்சியுள்ளன. எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை செப்டம்பர் மாதம் நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
20 ஓவர் உலக கோப்பைக்கு முன்பு இந்த போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு தன்மையை பொறுத்து இறுதி முடிவு செய்யப்படும்.
இதற்கிடையே ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை நடத்த தயாராக இருப்பதாக இங்கிலாந்தில் உள்ள 4 கவுண்டிங் கிளப்புகள் அறிவித்திருந்தன.
இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியின் எஞ்சிய ஆட்டங்களை நடத்த தயாராக இருப்பதாக இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் அர்ஜூன டி.செல்வா கூறியதாவது:-
எங்களால் ஐ.பி.எல். போட்டியின் எஞ்சிய ஆட்டங்களை நடத்த முடியும். இதற்காக செப்டம்பரில் போட்டியை நடத்த மைதானங்கள் தயாராகிறது.
ஐ.பி.எல். போட்டியின் எஞ்சிய ஆட்டங்களை நடத்துவதற்கான வாய்ப்பு ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு இருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டோம். ஆனால் அனைத்து காரணங்களுக்காகவும் இலங்கையை புறக்கணிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டும் ஐ.பி.எல். போட்டியை நடத்த இலங்கை விருப்பம் தெரிவித்தது. ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு முன்னுரிமை கொடுத்தது.
கொரோனா பாதிப்பு தொடர்ந்து நீடித்தால் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களையும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தவே கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி டி 20 மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 116 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹராரேயில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இம்ரான் பட், அபித் அலி களமிறங்கினர்.

இருவரும் சிறப்பாக விளையாடி சதமடித்தனர். அணியின் எண்ணிக்கை 248 ஆக இருக்கும்போது அசார் அலி 126 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 236 ரன்கள் குவித்தது.
அடுத்து இறங்கிய கேப்டன் பாபர் அசாம் 2 ரன்னிலும், பவாத் ஆலம் 5 ரன்னிலும் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.
முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 90 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்துள்ளது. அபித் அலி 118 ரன்னுடனும், சஜித் கான் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
ஜிம்பாப்வே அணி சார்பில் முசாராபனி 3 விக்கெட்டு வீழ்த்தினார்.







