search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீமா பிஸ்லா
    X
    சீமா பிஸ்லா

    இந்திய மல்யுத்த வீராங்கனை சீமா பிஸ்லா டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

    பெண்களுக்கான 50 கிலோ உடல் எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை சீமா பிஸ்லா 2-1 என்ற புள்ளி கணக்கில் அன்னா லுகாசிக்கை (போலந்து) வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
    சோபியா:

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான கடைசி தகுதி சுற்றான உலக மல்யுத்த போட்டி பல்கேரியாவில் உள்ள சோபியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 50 கிலோ உடல் எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை சீமா பிஸ்லா 2-1 என்ற புள்ளி கணக்கில் அன்னா லுகாசிக்கை (போலந்து) வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் சீமா பிஸ்லா டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் மல்யுத்தத்தில் பங்கேற்க தகுதி பெற்ற 8-வது நபர் சீமா பிஸ்லா ஆவார். 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியா சார்பில் மொத்தம் 8 பேர் தகுதி பெற்றதே அதிகபட்சமாகும். அது இந்த முறை சமன் செய்யப்பட்டுள்ளது.

    இறுதி ஆட்டத்தில் சீமா பிஸ்லாவை எதிர்த்து ஆட இருந்த லூசியா யாமிலெத் (ஈகுவடார்)காயம் காரணமாக விலகினார். இதனால் களம் இறங்காமலேயே சீமா தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார்.
    Next Story
    ×