என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணி வீரர்கள்
    X
    இந்திய அணி வீரர்கள்

    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

    ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தேர்வாகி உள்ளது.
    புதுடெல்லி:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தேர்வாகி உள்ளன. இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதாத்தில் ஜூன் 18-ம் தேதி முதல் ஜூன் 22-ம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே ஐசிசி அறிவித்துள்ளது. 

    இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

    இதற்கான டெஸ்ட் அணியில், விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, மயங்க் அகர்வால், விஹாரி, ரிஷப் பண்ட், ஜடேஜா, அக்சர் படேல், வாசிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது சமி, சிராஜ், சர்துல் தாகூர், உமேஷ் யாதவ். 

    பேக் அப் வீரர்களாக கே எல் ராகுல், சகா இடம் பெற்றுள்ளனர். காத்திருப்பு வீரர்களாக (Standby players) அபிமன்யு ஈஸ்வரன், பிரசீத் கிருஷ்ணா, அவேஷ் கான், அர்சான் நாக்வஸ்வல்லா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
    Next Story
    ×