என் மலர்
விளையாட்டு
கடைசி ஓவர் வரை போராடியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதுதான் தங்களது அணியின் அடையாளம் என்றும் விராட் கோலி கூறியுள்ளார்.
ஷார்ஜா:
ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி தோல்வியை தழுவியதால் விராட் கோலியின் கனவு கலைந்தது.
ஷார்ஜாவில் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கத்தா அணிக்கு 139 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 33 பந்தில், 39 ரன் (5 பவுண்டரி) எடுத்தார். சுனில் நரீன் 21 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி பெங்களூர் அணிக்கு நெருக்கடி கொடுத்தார். பெர்குசன் 2 விக்கெட் சாய்த்தார்.
பின்னர் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 பந்து எஞ்சி இருந்த நிலையில் இலக்கை எடுத்தது. அந்த அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 139 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடக்க வீரர் சுப்மன்கில் 18 பந்தில் 29 ரன்னும் (4 பவுண்டரி) வெங்கடேஸ் அய்யர், சுனில் நரீன் தலா 26 ரன்னும் எடுத்தனர். முகமது சிராஜ், ஹர்சல் படேல், யசுவேந்திர சாகல் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
இந்த தோல்வியால் பெங்களூர் அணி வெளியேற்றப்பட்டது. இதனால் ஐ.பி.எல். கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வீராட் கோலியின் கனவு கலைந்தது.
இந்த போட்டி தொடரில் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக ஆடியதால், பெங்களூர் அணி முதல் முறையாக கோப்பையை வெல்லும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது எலிமினேட்டரில் தோற்று வெளியேறி உள்ளது.

இந்த நிலையில், போட்டிக்கு பிறகு விராட் கோலி கூறியதாவது:-
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் நான் ஒரு வீரராக கடைசி வரை விளையாடுவேன். அந்த அணிக்காக விசுவாசமாக இருப்பேன். என்னை பொருத்தவரை விசுவாசம் முக்கியமானது.
பெங்களூர் அணியில் விளையாடும் இளம் வீரர்கள் நம்பிக்கையுடனும், சுதந்திரமாகவும் விளையாடும் கலாச்சாரத்தை நான் உருவாக்க முயற்சித்துள்ளேன். இதேபோன்ற கலாச்சாரத்தைத்தான் நான் இந்திய அணியிலும் உருவாக்கி இருக்கிறேன்.
என்னால் முடிந்த அளவு சிறப்பாக அணிக்காக செய்திருக்கிறேன். இதற்கான எதிர்வினை பதில் எவ்வாறு இருக்கும் என எனக்குத் தெரியாது. ஆனால் ஆர்.சி.பி அணிக்காக 120 சதவீத உழைப்பை ஒவ்வொரு முறையும் வழங்கி இருக்கிறேன்.
அடுத்து ஒரு வீரராகவும் இதை நான் செய்வேன். அடுத்த 3 ஆண்டுகளுக்கு மீண்டும் மறுசீரமைப்பதும், மறுகட்டமைப்பை உருவாக்குவதும் முக்கியமானது.
நான் வேறு ஏதாவது அணியில் விளையாடுவேன் என்று கருதவில்லை. கடைசியாக ஆடும் வரை ஆர்.சி.பி. அணிக்காக விளையாடுவேன்.
மிடில் ஓவர்களில் கொல்கத்தா அணியின் சுனில் நரீன், வருண், ஷகிப் ஆகிய 3 சுழற்பந்து வீரர்களும் கட்டுக்கோப்பாக பந்து வீசி ஆதிக்கம் செலுத்தினர். நேர்த்தியாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர். எங்களது தொடக்கம் சிறப்பாக இருந்தது. ஆனால் நடுப்பகுதிகளில் விக்கெட்டுகளை இழந்து விட்டோம்.
எங்களது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. கடைசி வரை போராடினோம். பேட்டிங்கும் மோசமாக அமையவில்லை. ஒட்டுமொத்தமாக நாங்கள் அடுத்த சுற்றுக்கு செல்ல தகுதியானவர்கள்.
கடைசி ஓவர் வரை போராடியது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அதுதான் எங்களது அணியின் அடையாளம். கிறிஸ்டியன் ஓவரில் 22 ரன்கள் கொடுத்தது தான் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.
பேட்டிங்கில் 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். இரு ஓவர்களில் அதிகமான ரன்களை கொடுத்ததும் வெற்றி வாய்ப்பை பாதித்தது.
இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.
ஐ.பி.எல். போட்டியில் இறுதி ஆட்டத்துக்குள் நுழையும் 2-வது அணி எது என்பது நாளை தெரியும். ஷார்ஜாவில் நடைபெறும் ‘குவாலிபயர் 2’ ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் வெற்றிபெறும் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதும். சென்னை அணி டெல்லியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது. இறுதிப் போட்டி வருகிற 15-ந்தேதி துபாயில் நடக்கிறது.

இந்த ஐ.பி.எல். போட்டியோடு விராட் கோலி பெங்களூர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இனி வரும் ஐ.பி.எல். போட்டிகளில் அவர் கேப்டனாக பணியாற்ற மாட்டார்.

கொல்கத்தா அணியிடம் தோற்றதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.
சார்ஜா:
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி 138 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணி கடைசி ஓவரில் வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்தது. இதன்மூலம் குவாலிபையர் 2 சுற்றுக்கு கொல்கத்தா அணி முன்னேறியது.
கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் 2 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் நடப்பு தொடரில் அவரது விக்கெட் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது. இதையடுத்து, ஐ.பி.எல். போட்டியில் ஒரு சீசனில் அதிக விக்கெட் வீழ்த்தியவரான சென்னை வீரர் வெய்ன் பிராவோவின் (2013-ம் ஆண்டில் 32 விக்கெட்) சாதனையை சமன் செய்தார்.
பெங்களூர் அணிக்கு எதிராக கொல்கத்தா அணியின் சுனில் நரைன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
சார்ஜா:
ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்று சார்ஜாவில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் ஆடிய பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக விராட் கோலி 39 ரன்னும், தேவ்தத் படிக்கல் 21 ரன்னும் எடுத்தனர்.
கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரைன் 4 விக்கெட்டும், பெர்குசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. ஷுப்மான் கில் 29 ரன்னும், வெங்கடேஷ் அய்யர் 26 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். ராகுல் திரிபாதி 6 ரன், நிதிஷ் ராணா 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சுனில் நரைன் 26 ரன்கள் எடுத்து அவுட்டானார். தினேஷ் கார்த்திக் 10 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் குவாலிபையர் 2 சுற்றுக்கு முன்னேறியது.
மிகவும் முக்கியமான ஆட்டத்தில் டோனி திறமையை வெளிப்படுத்தி இந்த வயதிலும் தன்னால் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
துபாய்:
ஐ.பி.எல். போட்டியில் டெல்லியை வீழ்த்தி சென்னை அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.
துபாயில் நடந்த ‘குவாலி பையர் 1’ ஆட்டத்தில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்தது. இதனால் சென்னை அணிக்கு 173 ரன் இலக்காக இருந்தது.
பிரித்வி ஷா 34 பந்தில் 60 ரன்னும் (7 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் ரிஷப்பண்ட் 35 பந்தில் 51 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), ஹெட்மையர் 24 பந்தில் 37 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ஹாசில்வுட் 2 விக்கெட்டும், ஜடேஜா, மொய்ன்அலி, பிராவோ தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 2 பந்து எஞ்சி இருந்த நிலையில் இலக்கை எடுத்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. சி.எஸ்.கே. அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்தில் 70 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), ராபின் உத்தப்பா 44 பந்தில் 63 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்), எடுத்தனர். டாம்கரண் 3 விக்கெட்டும், நோர்ட்ஜே, அவேஷ்கான் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
உத்தப்பா, ருதுராஜ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் கடைசி நேரத்தில் டோனியின் அதிரடியான ஆட்டமே வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. அவர் 6 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 18 ரன் (அவுட் இல்லை) எடுத்தார்.
கடைசி 5 பந்தில் 13 ரன் தேவைப்பட்ட போது டோனி அடுத்தடுத்து 2 பவுண்டரி அடித்து முத்திரை பதித்தார். 4 வது பந்தில் வைடு (எக்ஸ்ட்ரா) மூலம் ஒரு ரன் கிடைத்தது. அதற்கு அடுத்த பந்தில் அவர் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.
40 வயதான டோனியின் ஆட்டம் இந்த சீசனில் சிறப்பாக இல்லை. இதனால் அவரது பேட்டிங் குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு அவர் நேற்று பதிலடி கொடுத்தார்.
மிகவும் முக்கியமான ஆட்டத்தில் டோனி திறமையை வெளிப்படுத்தி இந்த வயதிலும் தன்னால் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
எனது இன்னிங்கிஸ் முக்கியமான ஒன்றாகும். டெல்லி அணி பந்துவீச்சில் பலம் பொருந்தியது. இந்த ஆடுகளத்தில் அவர்களது பந்தை எதிர்கொள்வது சவாலானது என்பதை நாங்கள் அறிவோம்.
பயிற்சியின் போது எனது பேட்டிங் நன்றாக இருந்தது. ஆனாலும் களத்தில் அதை பற்றி அதிகம் யோசிக்கவில்லை. பந்தை சரியாக கணித்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன்.
ருதுராஜ் கெய்க்வாட், உத்தப்பா பேட்டிங் சிறப்பாக இருந்தது. உத்தப்பா முன்வரிசையில் ஆட விரும்பியதால் 3-வது வரிசைக்கு அனுப்பப்பட்டார். மொய்ன் அலியும் 3-வது வரிசையில் சிறப்பாக ஆடக்கூடியவர். சூழ்நிலையை பொறுத்து 3-வது வரிசைக்கு வீரர்கள் அனுப்பப்படுவார்கள்.
கடந்த சீசனில் தான் நாங்கள் முதல் முறையாக பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. ஒருசில ஆட்டங்களை தவற விட்டோம்.ஆனால் இந்த சீசனில் வலுவாக திரும்பி வந்து இருக்கிறோம்.
இவ்வாறு டோனி கூறி உள்ளார்.
தகுதிச்சுற்று 2-ல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோதப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டியில் ஆர்.சி.பி.- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஷார்ஜாவில் இன்று அரங்கேறும் வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) புள்ளி பட்டியலில் 3-வது, 4-வது இடங்களை பிடித்த அணிகளான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சந்திக்கின்றன. இதில் தோற்கும் அணி போட்டியை விட்டு வெளியேறும். வெற்றி காணும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த டெல்லி அணியுடன் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் மோதும்.
விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி லீக் சுற்றில் 9 வெற்றி, 5 தோல்வி என்று 18 புள்ளிகளுடன் சிக்கலின்றி பிளே-ஆப் சுற்றை எட்டிப்பிடித்தது. 2-வது கட்ட சீசனில் மேக்ஸ்வெல் (6 அரைசதத்துடன் 498 ரன்), விக்கெட் கீப்பர் கே.எஸ். பரத்தின் (7 ஆட்டத்தில் 182 ரன்) சிறப்பான பேட்டிங் பெங்களூர் அணிக்கு கைகொடுத்தது. கேப்டன் விராட் கோலியை பொறுத்தவரை அவ்வப்போது நன்றாக ஆடுகிறார். கேப்டனாக அவர் விளையாடும் கடைசி ஐ.பி.எல். தொடர் இதுதான்.
இதுவரை பெங்களூர் அணி ஐ.பி.எல். கோப்பையை வென்றதில்லை. அந்த கனவு நனவாக இன்னும் 3 வெற்றி தேவை. ஆனால் முதல் தடையை கடப்பதே கடும் சவாலாக இருக்கப்போகிறது. பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் (30 விக்கெட்) கவனிக்கத்தக்க வீரராக உள்ளார். இன்னும் 3 விக்கெட் எடுத்தால், ஒரு சீசனில் அதிக விக்கெட் வீழ்த்தியவரான சென்னை வீரர் வெய்ன் பிராவோவின் (2013-ம் ஆண்டில் 32 விக்கெட்) சாதனையை முறியடித்து விடுவார். இதேபோல் சஹல், முகமது சிராஜ், ஷாபாஸ் அகமது ஆகியோரும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
பெங்களூர் அணிக்கு நிகராக மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸும் அபாயகரமான அணிதான். லீக் சுற்று முடிவில் 7 வெற்றி, 7 தோல்வி என்று 14 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்தது. அந்த அணியில் கேப்டன் மோர்கன் (கடைசி 7 ஆட்டத்தில் 32 ரன் மட்டுமே) தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் கணிசமாக ரன் குவித்துள்ளனர். குறிப்பாக திரிபாதி (377 ரன்), ஷுப்மான் கில் (352 ரன்), நிதிஷ் ராணா ( 347 ரன்), வெங்கடேஷ் அய்யர் (7 ஆட்டத்தில் 239 ரன்) ஆகிய இளம் சூறாவளிகள் அந்த அணிக்கு ‘பிளே-ஆப்’ வாய்ப்பை தேடித்தந்துள்ளனர்.

பந்து வீச்சில் பெர்குசன், சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, ஷிவம் மாவி நல்ல நிலையில் உள்ளனர். பீல்டிங்கின்போது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் சில ஆட்டங்களில் ஆடாத ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸல் முக்கியமான இந்த ஆட்டத்தில் களம் திரும்ப வாய்ப்பு உள்ளது.
இவ்விரு அணிகளும் லீக்கில் சந்தித்த 2 ஆட்டங்களில் ஒன்றில் 38 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர், மற்றொன்றில் 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவும் வெற்றி பெற்றன. இதில் கொல்கத்தாவிடம் சரண் அடைந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி வெறும் 92 ரன்னில் சுருண்டது குறிப்பிடத்தக்கது.
போட்டி நடக்கும் ஷார்ஜா, மந்தமான வேகம் குறைந்த ஆடுகளமாகும். இங்கு ரன் சேர்ப்பது அவ்வளவு எளிதாக இருக்காது. ஆடுகளத்தன்மைக்கு ஏற்ப விளையாடுவது முக்கியம். நடப்பு தொடரில் குறைவான ஸ்கோர் இதே சார்ஜாவில்தான் (ராஜஸ்தான் 85 ரன்) பதிவாகியிருக்கிறது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
பெங்களூர்: விராட் கோலி (கேப்டன்), தேவ்தத் படிக்கல், கே.எஸ்.பரத், டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல், டேன் கிறிஸ்டியன், ஷபாஸ் அகமது, ஜார்ஜ் கார்டன், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.
கொல்கத்தா: ஷுப்மான் கில், வெங்கடேஷ் அய்யர், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக், இயான் மோர்கன் (கேப்டன்), ஷகிப் அல்-ஹசன் அல்லது ரஸல், சுனில் நரைன், பெர்குசன், வருண் சக்ரவர்த்தி, ஷிவம் மாவி.
இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
இதையும் படியுங்கள்... கிங் இஸ் பேக் - எம்.எஸ்.டோனிக்கு புகழாரம் சூட்டிய விராட் கோலி
டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக ஆடி சென்னை அணியை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்றுள்ளார் என விராட் கோலி பாராட்டியுள்ளார்.
புதுடெல்லி:
ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நேற்று தொடங்கின. முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 172 ரன்கள் சேர்த்தது.
சேசிங்கில் 11 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய டோனி, 1 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 6 பந்துகளில் 18 ரன்கள் விளாசி சென்னையின் வெற்றியை உறுதி செய்தார். இதனால் சமூக ஊடகங்களில் பாராட்டு வெள்ளத்தில் நனையத் தொடங்கினார் டோனி.

இந்நிலையில், கிங் இஸ் பேக் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் விராட் கோலி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக கோலி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கிரிக்கெட்டில் என்றும் தலைசிறந்த பினிஷர். மீண்டும் ஒருமுறை தன்னை துள்ளிக் குதிக்கச் செய்தார் என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்...டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கான பரிசுத் தொகையை அறிவித்தது ஐ.சி.சி.
நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 9-வது முறையாக இறுதிக்கு தகுதி பெற்றது.
துபாய்:
ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நேற்று தொடங்கின. முதல் தகுதிச்சுற்றில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9-வது முறையாக ஐ.பி.எல். தொடர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதற்கு முன் 2008, 2010, 2011, 2012, 2013, 2015, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் தகுதி பெற்று இருந்தது. இதில் 3 முறை (2010, 2011, 2018) கோப்பையை வென்று இருந்தது.
இதுவரை நடந்த 13 ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தான் ஆடிய 11 தொடரில் 3 முறை மட்டுமே இறுதிப் போட்டிக்கு நுழையவில்லை. 2009, 2014, 2020 ஆகிய ஆண்டுகளில் தகுதி பெறவில்லை. சூதாட்ட தடை காரணமாக 2016, 2017 போட்டியில் ஆடவில்லை. கடந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை அன்ஷூ மாலிக் படைத்தார்.
புதுடெல்லி:
நார்வேயில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் 57 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதேபோல், 59 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சரிதா மோர் வெண்கலம் வென்று அசத்தினார்.
இந்நிலையில், உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டரில், உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற அன்ஷூ மாலிக் மற்றும் வெண்கலம் வென்ற சரிதா மோர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். உங்கள் இருவரின் எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்...ஒரு டோஸ் கொண்ட ‘ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசி இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்ய அனுமதி
டெல்லி அணிக்கு எதிராக சென்னை அணியின் ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் ராபின் உத்தப்பா ஜோடி 100 ரன்களுக்கு மேல் சேர்த்தது.
துபாய்:
ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் முதல் தகுதிச்சுற்று துபாயில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. பிரித்வி ஷா அதிரடியாக ஆடி 60 ரன்னும் எடுத்தார். ஹெட்மையர் 37 ரன்கள் அடித்தார். ரிஷாப் பண்ட் 51 ரன் எடுத்து அவுட்டாகாமால் இருந்தார்.
சென்னை அணி சார்பில் ஹேசில்வுட் 2 விக்கெட்டும் ஜடேஜா, மொயீன் அலி, பிராவோ தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. டுபிளசிஸ் ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
அடுத்து இறங்கிய ராபின் உத்தப்பா அதிரடியாக ஆடினார். அவர் 44 பந்தில் 2 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 63 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஷர்துல் தாக்குர் ரன் எடுக்காமலும், அம்பதி ராயுடு ஒரு ரன்னிலும் அவுட்டாகினர். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் ருதுராஜ் கெயிக்வாட் சிறப்பாக ஆடி அரை சதமடித்து 70 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருது ருதுராஜ் கெயிக்வாட்டிற்கு வழங்கப்பட்டது.
பிரித்வி ஷா அரைசதம் விளாச ரிஷாப் பண்ட் மற்றும் ஹெட்மையர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 173 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிடல்ஸ்.
ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் முதல் தகுதிச்சுற்று துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஷகர் தவான், பிரித்வி ஷா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிரித்வி ஷா தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஹேசில்வுட் வீசிய 2-வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். தீபக் சாஹர் வீசிய 3-வது ஓவரில் நான்கு பவுண்டரிகள் விளாசினார். இதனால் டெல்லி 3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் எடுத்தது.
அடுத்த ஓவரை ஹேசில்வுட் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் தவான் ஆட்டமிழந்தார். அவர் 7 பந்தில் 7 ரன்கள் எடுத்தார். 5-வது ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் பிரித்வி ஷா இரண்டு சிக்சர்கள் விளாசினார். இந்த ஓவரில் 14 ரன்கள் அடித்தது. இதனால் டெல்லி கேப்பிடல்ஸ் 5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்தது. அடுத்த ஓவரில் ஷ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழந்தார். அவர் 8 பந்தில் ஒரு ரன் மட்டுமே அடித்தார்.
அதன்பின் டெல்லி அணியின் ரன்வேகத்தில் தொய்வு ஏற்பட்டது. இதற்கிடையே பிரித்வி ஷா 27 பந்தில் அரைசதம் அடித்தார். 10 ஓவர் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் 3 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் எடுத்திருந்தது.
அரைசதம் அடித்த பிரித்வி ஷா 34 பந்தில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு ரிஷாப் பண்ட் உடன் ஹெட்மையர் ஜோடி சேர்ந்தார். டெல்லி அணி 13.2 ஓவரில் 100 ரன்னைக் கடந்தது.
ரிஷாப் பண்ட், ஹெட்மையர் ஜோடி ஓவர் செல்ல செல்ல அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 17.3 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.

19-வது ஓவரின் 4-வது பந்தில் ஹெட்மையர் ஆட்டமிழந்தார். அவர் 24 பந்தில் 37 ரன்கள் அடித்தார். ஹெட்மையர்- ரிஷாப் பண்ட் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 83 ரன்கள் குவித்தது.
19-வது ஓவரில் டெல்லி அணிக்கு 11 ரன்கள் கிடைத்தது. கடைசி ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். முதல் மூன்று பந்திலும் ரிஷாப் பண்ட் ரன் அடிக்கவில்லை. 4-வது பந்தை பவுண்டரி அடித்த பண்ட், ஐந்தாவது பந்தில் 2 ரன்கள் அடித்தார். கடைசி பந்தில் 2 ரன்கள் அடிக்க டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷாப் பண்ட் 35 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சென்னை அணி சார்பில் ஹேசில்வுட் 2 விக்கெட்டும் ஜடேஜா, மொயீன் அலி, பிராவோ தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த போட்டியில் விளையாடிய அதே ஆடும் லெவன் அணியுடன் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் புள்ளிகள் பட்டியலில் முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்தன. இந்த இரண்டு அணிகளும் இன்று நடைபெறும் தகுதிக்சுற்று 1-ல் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ் டோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி:
1. ஷிகர் தவான், 2. பிரித்வி ஷா, 3. ரிஷாப் பண்ட், 4. ஷ்ரேயாஸ் அய்யர், 5. ஹெட்மையர், 6. அக்சார் பட்டேல், 7. அஷ்வின், 8. ரபாடா, 9. டாம் கர்ரன், 10. அவேஷ் கான், 11. அன்ரிச் நோர்ஜோ.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:
1. ருதுராஜ் கெய்க்வாட், 2. டு பிளிஸ்சிஸ், 3. மொயீன் அலி, 4. உத்தப்பா, 5. அம்பதி ராயுடு. 6. எம்.எஸ். டோனி, 7. ஜடேஜா, 8. வெய்ன் பிராவோ, 9. ஷர்துல் தாகூர், 10. தீபக் சாஹர், 11. ஹேசில்வுட்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பையில் வெற்றிபெறும் அணிக்கு ரூ. 12.02 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. வருகிற 17-ந்தேதி போட்டி தொடங்குகிறது. நவம்பர் 14-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 12 அணிகள் பங்கேற்கின்றன. நான்கு அணிகள் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று முதன்மை சுற்றுக்கு முன்னேறும்.
இந்த நிலையில் டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ. 12.02 கோடி (1.6 மில்லியன் அமெரிக்க டாலர்) பரிசாக வழங்கப்படும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
மேலும், இறுதிப் போட்டியில் தோல்வியடையும் அணிக்கு 6.01 கோடி ரூபாயும், அரையிறுதி போட்டிகளில் தோல்வியடையும் அணிகளுக்கு தலா 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் (சுமார் 3 கோடி ரூபாய்), 2-வது சுற்றில் வெற்றிபெறும் அணிகளுக்கு தலா 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள், தோல்வியடையும் அணிகளுக்கு தலா 70 ஆயிரம் அமெரிக்க டாலர்கள், முதல் சுற்றில் வெற்றிபெறும் அணிகளுக்கு தலா 40 ஆயிரம் அமெரிக்க டாலர்களும் பரிசாக வழங்கப்பட இருக்கிறது.
மொத்த பரிசுத்தொகை 5.6 மில்லியன் அமெரிக்க டாலராகும். இந்திய பண மதிப்பில் சுமார் 37.5 கோடி ரூபாய் ஆகும்.