search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்புட்னிக் லைட்
    X
    ஸ்புட்னிக் லைட்

    ஒரு டோஸ் கொண்ட ‘ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசி இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்ய அனுமதி

    ரஷ்ய நிறுவனத்தின் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
    ரஷ்ய நிறுவனம் ஸ்புட்னிக் வி என்ற கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தது. இந்த தடுப்பூசியை இரண்டு முறை செலுத்த வேண்டும். அதன்பின் ‘ஸ்புட்னிக் லைட்’ என்ற தடுப்பூசியை கண்டுபிடித்தது. இந்த தடுப்பூசியை ஒருமுறை செலுத்தினால் போதுமானது.

    இந்த இரண்டு தடுப்பூசிகளையும் இந்தியாவில் உள்ள ஆறு முன்னணி நிறுவனங்களிடம் தயாரிக்க ரஷ்யா ஒப்பந்தம் செய்தது. அதன்படி இந்திய நிறுவனங்கள் ஸ்புட்னிக் தடுப்பூசிகளை தயாரித்து வருகின்றன.

    இந்த நிலையில் ஒரு டோஸ் கொண்ட ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் மையமாக இந்தியா உருவாகியுள்ளது.

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் முதல் தடுப்பூசி ஸ்புட்னிக் லைட் ஆகும்.
    Next Story
    ×