என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கே.எல்.ராகுல் எதிர்காலத்தில் சிறந்த கேப்டனாக திகழ்வார் என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
    கேப்டவுன்:

    கேப்டவுனில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது.  இதனால் இந்த தொடரை, தென் ஆப்பிரிக்கா 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. 

    போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம்  இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியதாவது:

    முக்கிய நேரங்களில் இந்திய அணி சிறப்பாக விளையாடவில்லை. அவர் (கே.எல்.ராகுல்)  இப்போதுதான் தொடங்குகிறார், அவர் மிகவும் கண்ணியமாக செயல்பட்டார் என்று நான் நினைக்கிறேன். கேப்டனாக தொடர்ந்து சிறப்பாக வருவார்.  நாங்கள் அதிக ஒருநாள் கிரிக்கெட் விளையாடவில்லை. நாங்கள் கடைசியாக மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினோம். 

    இந்தத் தொடர் நல்ல அனுபவமாக அமைந்தது. 2023 உலகக் கோப்பைக்கு இன்னும் நிறைய நேரம் உள்ளது. அதற்கு முன்பு நாங்கள் நிறைய ஒருநாள் கிரிக்கெட்டை விளையாடுவோம். இந்தியா எதிர்காலத்தில் சிறப்பாக இருக்கும். அடுத்த ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு தேவையான சமநிலையில் இந்திய ஒருநாள் அணி இல்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
    தென் ஆப்பிரிக்கா 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது
    கேப்டவுன்:

    தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.

    இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. 

    இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.  இதையடுத்து களம் இறங்கிய தென்ஆப்பிரிக்க அணியின் துவக்க ஆட்டக்காரரான டி காக் சதம் அடித்து அசத்தினார். 130 பந்துகளில் 124 ரன்கள் அடித்த டிகாக் , பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அந்த அணியின் வான்டெர் துஸ்சென் 52 ரன்களும், டேவிட் மில்லர் 39 ரன்களும் எடுத்தனர்.

    தென் ஆப்பிரிக்க அணி 49.5 ஓவர்கள் முடிவில் 287 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதையடுத்து 288 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்க்காரர் கே.எல்.ராகுல் 9 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து தவனுடன் இணைந்த விராட் கோலி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தவன் 61 ரன்னிலும், கோலி 65 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

    இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தநிலையிலும், கடைசி கட்டத்தில் தீபக் சாகர் அரைசதம் அடித்து ஆட்டத்தை திசைதிருப்பினார். பரபரப்பான இறுதி கட்டத்தில் இந்திய அணி 49.2 ஓவர்களில் 283 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது. 
    டி காக் சதம் அடிக்க, வான் டெர் டஸ்சன் அரைசதம் விளாச இந்தியாவுக்கு 288 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா.
    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் தீபக் சாஹர், ஜயந்த் யாதவ், சூர்யகுமார் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

    குயிண்டான் டி காக், மலான் அகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மலான் 1 ரன் எடுத்த நிலையில் தீபக் சாஹர் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டெம்பா பவுமா 8 ரன்னில் ரன்அவுட் மூலம் வெளியேறினார். ஒரு பக்கம் இரண்டு விக்கெட் இழந்தாலும், மறுமுனையில் டி காக் அதிரடியாக விளையாடினார்.

    அவருக்கு துணையாக விளையாடிய மார்கிராம் 15 ரன்கள் எடுத்த நிலையில் சாஹர் பந்தில் வெளியேறினார். இதனால் தென்ஆப்பிரிக்கா அணி 6.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 12.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்தது.

    4-வது விக்கெட்டுக்கு டி காக் உடன் வான் டெர் டஸ்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. டி காக் 59 பந்தில் அரைசதம் அடித்தார். தென்ஆப்பிரிக்கா 19.4 ஓவரில் 100 ரன்னையும், 27.4 ஓவரில் 150 ரன்னையும் கடந்தது.

    இந்த ஜோடியின் ஆட்டத்தை பார்க்கும்போது தென்ஆப்பிரிக்கா எளிதாக 300 ரன்களை கடக்கும் நிலை இருந்தது. டி காக் 108 பந்தில் 9 பவுண்டரி, 2 சிக்சருடன் சதம் விளாசினார். இது அவரின் 17-வது சதமாகும். மறுமுனையில் டஸ்சன் 53 பந்தில் அரைசதம் அடித்தார்.

    தென்ஆப்பிரிக்கா 35.4 ஓவரில் 214 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடியை பும்ரா பிரித்தார். டி காக் 130 பந்தில் 12 பவுண்டரி, 2 சிக்சருடன் 124 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் வான் டெர் டஸ்சன் 59 பந்தில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது தென்ஆப்பிரிக்கா 36.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்திருந்தது.

    டி காக் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள்

    அதன்பின் தென்ஆப்பிரிக்காவின் ஸ்கோர் சற்று குறைய ஆரம்பித்தது. டேவிட் மில்லர் ஒருபக்கம் நிலைத்து நின்று விளையாடி மறுமுனையில் பெலுக்வாயோ (4), பிரிட்டோரியஸ் (24), மகாராஜ் (6) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    டேவிட் மில்லர் 38 பந்தில் 39 ரன்கள் எடுத்து வெளியேற, தென்ஆப்பிரிக்கா 49.5 ஓவரில் 287 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. 

    இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டும் தீபக் சாஹர், பும்ரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    கேப் டவுனில் நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் டி காக் இந்தியாவுக்கு எதிராக 6-வது சதமடித்தார்.
    கேப் டவுன்:

    இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப் டவுனில் நடந்து வருகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் ஜயந்த் யாதவ், சூர்யகுமார் யாதவ், பிரசித் கிருஷ்ணா, தீபக் சாஹர் ஆகிய 4 பேர் அணியில் இடம் பிடித்துள்ளனர். 
    அஸ்வின், ஷர்துல் தாகூர், வெங்கடேஷ் அய்யர் நீக்கப்பட்டுள்ளனர்.

    முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா மலானின் விக்கெட்டை விரைவில் பறிகொடுத்தது. மலான் ஒரு ரன்னிலும், பவுமா 8 ரன்னிலும், மார்கிரம் 15 ரன்னிலும் அவுட்டாகினர்.  அப்போது தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட்டுக்கு 70 ரன்கள் எடுத்திருந்தது.

    ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் தொடக்க் ஆட்டக்காரர் டி காக் அதிரடியாக ஆடி சதம் விளாசினார். அவருக்கு வான் டெர் டுசன் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
    சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரின் சாம்பியன் பட்டத்தை பி.வி.சிந்து இரண்டாவது முறையாக கைப்பறியுள்ளார்.
    லக்னோ:

    உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் சையது மோடி சர்வதேச 2022 பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில், மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, சக வீராங்கனை மால்விகா பன்சோத்துடன் மோதினார்.

    இந்த இறுதிப்போட்டியின் முதல் செட்டில் 21-13 என்ற புள்ளிக்கணக்கில் சிந்து வென்றார். 2வது செட்டிலும் சிந்து 21-16 என கைப்பற்றினார்.

    இறுதியில் பி.வி.சிந்து 21-13, 21-16 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின்போது தேசிய கீதம் இசைத்தபோது, சுயிங்கம் மென்று கொண்டிருந்த விராட் கோலி விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்த இந்தியா தொடரை இழந்து விட்டது.

    3-வது மற்றும் கடைசி போட்டி கேப் டவுனில் தற்போது நடைபெற்று வருகிறது. போட்டி தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைக்கப்படுவது வழக்கம். இரு நாட்டின் தேசிய கீதங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இசைக்கப்படும். அப்போது அந்தந்த நாட்டு வீரர்கள் தங்கள் மனதிற்குள் தேசிய கீதத்தை இசைப்பார்கள். அப்போது அமைதியாக நேர்ப்பார்வையுடன் நின்றிருப்பார்கள். தேசிய கீதம் இசைக்கும்போது பார்வையை சிதற விடமாட்டார்கள்.

    ஆனால் இன்று இந்திய தேசிய கீதம் இசைக்கப்படும்போது, விராட் கோலி சாதாரணமாக சுயிங்கம் மென்று கொண்டு வாயை அசைத்துக் கொண்டிருந்தார். இந்த காட்சி வீடியோவாக பதிவாகியுள்ளது. இதை டுவிட்டரில் பரவவிட்ட ரசிகர்கள் விராட் கோலியை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

    முதல் ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்த விராட் கோலி, 2-வது போட்டியில் டக்அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு ரபேல் நடால் 14-வது முறையாக தகுதி பெற்றுள்ளார்.
    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், பிரான்ஸ் வீரர் அட்ரியன் மன்னாரினோவுடன் மோதினார்.

    இதில் நடால் 7-6, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார். 
     
    இதேபோல், மற்றொரு போட்டியில் கனடா வீரர் டேனிஸ் ஷபவாலோவ் ஜெமனி வீரரான அலெக்சாண்டர் ஸ்வரேவுடன் மோதினார். இதில் ஷபவாலோவ் 6-3, 7- 6, 6-3 என்ற நேர் செட்டில் எளிதில் வென்றார்.
    கேப் டவுனில் நடைபெறும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப் டவுனில் நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இந்திய அணியில் ஜயந்த் யாதவ், சூர்யகுமார் யாதவ், பிரசித் கிருஷ்ணா, தீபக் சாஹர் ஆகிய நான்கு பேர் அணியில் இடம் பிடித்துள்ளனர். 

    அஸ்வின், ஷர்துல் தாகூர், வெங்கடேஷ் அய்யர் நீக்கப்பட்டுள்ளனர்.
    ஐசிசி, பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான முகமது ரிஸ்வானை 2021-ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக தேர்வு செய்துள்ளது.
    சர்வதேச கிரிக்கெட் கமிட்டி (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஒட்டுமொத்தமாக சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து கவுரவிக்கும். அந்த வகையில் 20 கிரிக்கெட்டில் 2021-ம் ஆண்டின் சிறந்த வீரராக பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வானை தேர்ந்தெடுத்துள்ளது.

    முகமது ரிஸ்வான் கடந்த ஆண்டு 29 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 1,326 ரன்கள் விளாசியுள்ளார். சராசரி 73.66 ஆகும். ஒரு சதம் அடித்துள்ளார். அத்துடன் 24 பேரை அவுட்டாக்கியுள்ளார்.

    அவருக்கு 2021-ம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக அமைந்துள்ளது. ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி அரையிறுதி வரை முன்னேறியது. இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 3-வது இடம் பிடித்தார்.

    லாகூரில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக தனது முதல் சதத்தை பதிவு செய்த ரிஸ்வான், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 87 ரன்கள் விளாசினார்.
    இங்கிலாந்து வீரர்கள் ஒற்றையிலக்க ரன்களில் வெளியேறி, ஹோல்டர் நான்கு விக்கெட்டுகள் சாய்த்து முத்திரை படைத்தார்.
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதிய முதல் 20 ஓவர் போட்டி இந்திய நேரப்படி நேற்று இரவு பிரிட்ஜ்டவுனில் நடந்தது. டாஸ் ஜொயித்த வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    வெஸ்ட் இண்டீஸ் அணியில் அபார பந்து வீச்சால் இங்கிலாந்து திணறியது. அந்த அணி 19.4 ஓவரில் 103 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கிறிஸ் ஜோடன் 28 ரன்னும், ஆதில் ரஷித் 22 ரன்னும் எடுத்திருந்தனர். கேப்டன் மோர்கன் 17 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கில் அவுட் ஆனார்கள்.

    வின்ஸ் அவுட்

    வெஸ்ட்இண்டீஸ் தரப்பில் ஹோல்டர் 4 விக்கெட்டும், காட்ரெல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த இலக்கை நோக்கிய விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 17.1 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 104 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

    பிரெண்டன் கிங்

    தொடக்க வீரர் பிரெண்டன் கிங் 52 ரன் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். இரு அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி நாளை நடக்கிறது.

    முதல் இரு ஆட்டங்களிலும் இந்தியாவின் மிடில்வரிசை பேட்டிங் சொதப்பலே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது என கே.எல் ராகுல் கூறினார்.
    கேப்டவுன்:

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. கடந்த மாதம் அங்கு சென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது.

    இதை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி கண்டது. இந்நிலையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.

    முதல் இரு ஆட்டங்களிலும் இந்தியாவின் மிடில்வரிசை பேட்டிங் சொதப்பலே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் கூறினார். இந்திய பந்து வீச்சை பொறுத்தவரை ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சு மட்டுமே ஓரளவு எடுபடுகிறது.  புவனேஷ்வர்குமார், அஸ்வினின் பந்துவீச்சு எதிர்பார்த்தபடி இல்லை.

    இதனால் இன்றைய போட்டியில் தீபக் சாஹர், முகமது சிராஜ், ஜெயந்த் யாதவ், சூர்யகுமார் யாதவ் ஆகியோரை சேர்ப்பது குறித்து அணி நி்ாவாகம் பரிசீலித்து வருகிறது.

    தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களை இழந்த இந்தியா இன்று ஆறுதல் வெற்றியாவது பெறுமா என எதிர்பார்க்கப்படுகிறது.
    கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக முதலில் அறிவிக்கப்பட்டபடி ஆறு இடங்களுக்குப் பதிலாக இரண்டு இடங்களில் மட்டும் போட்டிகளை நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது
    புதுடெல்லி :

    வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும்  பல டி20 போட்டிகள் கொண்ட தொடரில் அந்த அணி பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது.

    இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பால், பாதுகாப்பு நடவடிக்கையாக, முதலில் அறிவிக்கப்பட்டபடி தொடரை ஆறு இடங்களுக்குப் பதிலாக இரண்டு இடங்களில் மட்டுமே நடத்துவது என்று முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது. 

    இதில் மூன்று ஒருநாள் போட்டிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்திலும், மூன்று டி20 போட்டிகள் கொல்கத்தாவின் ஈடன் கார்டனிலும் நடைபெறும். அடுத்த மாதம் 6ந் தேதி முதல் 20 ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறும் என்றும் பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.
    ×