search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "one day"

    • ஒரே நாளில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • 221 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் அந்தந்த போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை செய்து அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபடும் நபர்களை கைது செய்தும், மது பாட்டில்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.

    அதன்படி நேற்று ஒரே நாளில் வரபாளையம், வெள்ளோடு, கவுந்தப்பாடி, அம்மாபேட்டை, கொடு முடி, ஈரோடு தாலுகா, டவுன், வெள்ளிதிருப்பூர், அரச்சலூர், திங்களூர், ஆசனூர், ஆப்பக்கக்கூடல் கோபி, அந்தியூர் என்ன மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை ஈடுபட்டனர்.

    இதில் அனுமதியின்றி மது விற்றதாக ஒரே நாளில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 221 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • சென்னிமலை பகுதியில் 3 இடங்களில் தீப்பிடித்த சம்பவங்கள் நடந்துள்ளது.
    • இலை, தழைகளை கொண்டு தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை காலம் தொடங்கு வதற்கு முன்பே வெயின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

    இதனால் மாவட்ட த்தில் உள்ள வனப்பகுதி மற்றும் தோட்டங்களில் உள்ள மரம், செடி காய்ந்து வருகிறது. கடும் வெயிலின் தாக்கத்தால் ஒரு சில பகுதி காடுகளில் தீப்பிடிக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

    இதே போல் சென்னி மலை பகுதியில் கடந்த 2 மாதங்களாக வனப்பகுதி மற்றும் தனியாருக்கு சொந்த மான நிலங்களில் வறண்டு கிடக்கும் செடி, கொடிகளில் தீ விபத்து ஏற்படும் சம்ப வங்கள் அடிக்கடி நடை பெற்று வருகிறது.

    மேலும் கடந்த வாரம் சென்னிமலை பகுதியில் 2 இடங்களில் காயந்து கிடந்ததால் தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த நிலையில் சென்னிமலை பகுதியில் மீண்டும் ஒரே நாளில் 3 இடங்களில் தீப்பிடித்த சம்பவங்கள் நடந்துள்ளது.

    சென்னி மலை அருகே முருங்கத்தொழுவு ஊராட்சி ஒட்டன் குட்டை மயில் கரடு, முருங்கத்தொழுவு பகுதி சூலைப்புதுார், சென்னி மலை பேரூராட்சி குப்பை கிடங்கு என 3 பகுதிகளில் செடி, கொடிகள் வறண்டு கிடந்தது.

    அப்போது அந்த பகுதிகளில் ஒரே நாளில் திடீரென தீப்பிடித்தது. இதில் அங்கு இருந்த புல் மற்றும் செடி, கொடிகள் எரிய தொட ங்கியது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து தகவல் கிடைத்ததும் சென்னிமலை தீயணைப்பு நிலைய அலு வலர் முத்துசாமி தலை மையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    தொடர்ந்து தீயணைப்பு வாகனம் செல்ல முடியாததால் இலை, தழைகளை கொண்டு தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.

    இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறியதாவது:

    சென்னிமலை பகுதியில் இது வரை இல்லாத அளவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 49 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக நாங்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று தீயை அணைத்துள்ளோம்.

    சில இடங்களில் தீய ணைப்பு வாகனம் செல்ல முடியாததால் இலை, தழை களை கொண்டு தீயை அணைத்து வருகிறோம். பீடி, சிகரெட் பிடிப்பவர்கள் அதனை அணைக்காமல் வீசி விட்டு செல்வதால் இது போன்ற தீ விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன.

    எனவே தற்போது வெயி லின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு தீ விபத்து ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மாவட்டத்தில் கடந்த 3 மாதமாக இல்லாத அளவாக 53 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் கடந்த 3 மாதமாக இல்லாத அளவாக 53 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 597 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 29 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 552 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 311 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மாவட்டத்தில் மெல்ல மெல்ல கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

    • சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • கொரோனா பாதிப்புடன் 253 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 371 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 42 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 384 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 253 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ×