என் மலர்
விளையாட்டு
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 76 ரன்கள் குவித்ததால் அவர் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
- இந்திய வீரர்கள் யாரும் டாப் 10 இடத்திற்குள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.ஆண்களுக்கான டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 2 இடங்கள் முன்னேறி 816 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 76 ரன்கள் குவித்ததால் அவர் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். மற்ற இந்திய வீரர்கள் யாரும் டாப் 10 இடத்திற்குள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 818 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். 3-வது இடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் 794 புள்ளிகளுடன் உள்ளார்.
- இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் கனடா அணியை வீழ்த்தியது.
- இதனால் இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
பர்மிங்காம்:
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா - கனடா அணிகள் மோதின.
இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டி என்பதால் போட்டி மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டது. விறுவிறுப்பான இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் கனடா அணியை வீழ்த்தியது. இதனால் இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
- ரோகித் சர்மா எதிர்கொண்ட 2-வது பந்திலேயே சிக்சரை விளாசினார்.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியின் போது ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது.
வெஸ்ட் இண்டீஸ்-இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.
165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா அணி 19 ஓவரிலேயே 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக சூர்யாகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டார். இந்த போட்டியில் 1 சிக்சர் அடித்ததன் மூலம் இந்திய கேப்டன் ரோகித் சர்மா சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
ஆக்கோரஷமாக விளையாடிய ரோகித் சர்மா தாம் எதிர்கொண்ட 2-வது பந்திலேயே சிக்சரை விளாசினார். இதனைத் தொடர்ந்த அதே ஓவரில் பவுண்டரியும் விளாசினார். 5 பந்துகளை எதிர்கொண்ட அவர் 11 ரன்கள் எடுத்திருந்த போது திடீரென்று காயம் காரணமாக வெளியேறினார்.
1 சிக்சர் அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய இந்திய கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். அவர் டி20 போட்டிகளில் 60 சிக்சர்களை விளாசியுள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக முன்னாள் கேப்டன் விராட் கோலி உள்ளார்.
- கேமரூன் நாட்டின் ஜூனியர் நியாவே 361 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார்.
- காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
பிரிட்டன்:
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இன்று இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. 109 கிலோ எடைப்பிரிவினருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் லவ்பிரீத் சீங், மொத்தம் 355 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்த பிரிவில் கேமரூன் நாட்டின் ஜூனியர் நியாவே 361 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். சமோவா நாட்டின் ஜேக் ஓபலாக் 358 கிலோ எடை தூக்கி வெற்றிப் பதக்கம் வென்றார்.
காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 5 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்களை கைப்பற்றி உள்ளது.
- சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவிற்கும் பாராட்டுகள்.
- 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
செயின்ட் கீட்ஸ்:
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3-வது 20 ஓவர் போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 165 ரன் இலக்காக இருந்தது.
கெய்ல் மேயர்ஸ் அதிக பட்சமாக 50 பந்தில் 73 ரன் ( 8 பவுண்டரி ,4 சிக்சர் ) எடுத்தார். புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டும் , ஹர்திக் பாண்ட்யா , அர்ஷ்தீப்சிங் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் இந்திய அணி களம் இறங்கியது. இந்திய அணி 19 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 4-வது ஆட்டம் வருகிற 6-ந்தேதி நடக்கிறது.
3-வது டி20யின் போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 5 பந்தில் 11 ரன் ( 1 பவுண்டரி , 1 சிக்சர் ) எடுத்து இருந்த போது முதுகு பிடிப்பு காரணமாக பெவிலியன் திரும்பியது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அடுத்து இரண்டு டி20 போட்டிகளில் அவர் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.
காயம் பற்றி ரோகித் சர்மா கூறியதாவது:-
இப்போதைக்கு பரவாயில்லை. அடுத்த ஆட்டத்திற்கு சில நாட்கள் உள்ளன. அதற்கு முன்பாக சரியாகிவிடும் என்று நம்புகிறேன். மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசிய பந்து வீச்சாளர்களுக்கும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவிற்கும் பாராட்டுகள்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரோகித்தின் காயத்தை தங்கள் மருத்துவ குழு கண்காணித்து வருவதாகவும் பிசிசிஐ ஒரு ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளது.
- வெறும் 26 பந்துகளில் அரைசதத்தை எட்டியதில் மகிழ்ச்சியடைகிறேன்.
- ரோகித் இல்லாத சமயத்தில் போட்டியை கடைசி வரை ஒருவர் எடுத்துச்சென்று வெற்றி பெற்று கொடுப்பது மிகவும் முக்கியமாகும்.
வெஸ்ட் இண்டீஸ்-இந்திய அணிகள் மோதிய 3-வது டி20 போட்டி நேற்று இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது.
அதைத் தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. 19 ஓவரிலேயே 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை அற்புதமாக எதிர்கொண்டு அதிரடியாக ரன்களை சேர்த்தார். 8 பவுண்டரி 4 சிக்சர்களை வெளுத்து வாங்கிய சூர்யகுமார் யாதவ் 76 (44) ரன்கள் குவித்தார். அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.
வெற்றி குறித்து சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-
வெறும் 26 பந்துகளில் அரைசதத்தை எட்டியதில் மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாக ரோகித் சர்மா போன்ற முக்கியமான வீரர் ஆரம்பத்திலேயே பெவிலியன் திரும்பியதும் 15 -17 ஓவர்கள் பேட்டிங் செய்வது மிகவும் முக்கியமானதாகும்.
இரண்டாவது இன்னிங்ஸில் என்ன நடந்தது என்பதை இரண்டாவது டி20 போட்டியில் பார்த்தோம். எனவே இப்போட்டியை கடைசி வரை ஒருவர் எடுத்துச்சென்று வெற்றி பெற்று கொடுப்பது மிகவும் முக்கியமாகும். அதில்தான் நான் கவனம் செலுத்தினேன். அந்த தருணங்களில் எனக்கு நானே நம்பிக்கையை கொடுத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் பேட்டிங் செய்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு இந்த போட்டி நடைபெற உள்ளது.
- இந்தியாவும் கனடாவும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
பர்மிங்ஹாம்:
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் ஆண்களுக்கான ஹாக்கி பிரிவில் இந்திய அணி தனது முதல் போட்டியில் கானாவை சந்தித்தது. இந்த போட்டியில் இந்திய அணி 11-0 என்ற கணக்கில் கானாவை அபாரமாக வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதனைதொடர்ந்து, இந்திய அணி தனது அடுத்த ஆட்டதில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் 4-4 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இந்திய அணி ஒரு வெற்றி மற்றும் ஒரு டிரா என நான்கு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் இங்கிலாந்து ஏழு புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், இந்திய அணி இன்றைய போட்டியில் கனடாவை எதிர்கொள்ள உள்ளது.
இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு இந்த போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறும் நிலையில் அரையிறுதிக்கு முன்னேறும். இந்தியாவும் கனடாவும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், இந்தியா அதிகபட்சமாக 26 முறை வெற்றி பெற்றுள்ளது.
கனடா நான்கு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்தது. இந்த போட்டிக்கு பிறகு இந்திய அணி வேல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. ஆண்களின் பிரிவின் இரு அரையிறுதிப் போட்டிகள் ஆகஸ்ட் 6-ஆம் தேதியும், இறுதிப் போட்டி வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது.
- ஓபன் பிரிவில் 5 சுற்றுகள் முடிவில் இந்திய 'பி' அணி அர்மெனியாவுடன் இணைந்து முதல் இடத்தில் உள்ளது.
- நாளை ஓய்வு நாளாகும். 7-வது சுற்று ஆட்டம் 5-ந்தேதி நடக்கிறது.
சென்னை:
சர்வதேச செஸ் கூட்டமைப்பு, இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழக அரசு சார்பில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப்போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். ஆண்கள் பிரிவில் 188 அணிகளும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் கலந்து கொண்டுள்ளன.
11 சுற்றுகளை கொண்ட இந்தப் போட்டி சுவிஸ் முறையில் நடத்தப்படுகிறது. இந்தப்போட்டியில் இந்தியா சார்பில் 6 அணிகள் பங்கேற்று உள்ளன. ஆண்கள் பிரிவில் 3 அணியும், பெண்கள் பிரிவில் 3 அணியும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய 'பி' அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நேற்று நடந்த 5-வது சுற்றில் இந்திய 'பி' அணி 2.5-1.5 என்ற கணக்கில் ஸ்பெயினை அதிர்ச்சிகரமாக தோற்கடித்தது. டி.குகேஷ், பி.அதிபன் ஆகியோர் வெற்றி பெற்றனர். நிகல் 'டிரா' செய்தார். பிரக்ஞானந்தா அதிர்ச்சிகரமாக தோற்றார்.
இந்திய 'ஏ' அணி 2.5-2.5 என்ற கணக்கில் ருமேனியாவுடன் 'டிரா' செய்தது. இந்திய 'சி' அணி 2.5-1.5 என்ற கணக்கில் சிலியை வீழ்த்தியது.
ஓபன் பிரிவில் 5 சுற்றுகள் முடிவில் இந்திய 'பி' அணி அர்மெனியாவுடன் இணைந்து முதல் இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் டை பிரேக்கரில் இந்திய 'பி' அணி தான் முன்னிலையில் இருக்கிறது. இந்தியா 'ஏ' அணி 9 புள்ளியுடன் 4-வது இடத்திலும், இந்திய 'பி' அணி 8 புள்ளியுடன் 2-வது இடத்திலும் உள்ளன.
இன்று 6-வது சுற்று ஆட்டம் நடக்கிறது. இதில் இந்திய 'பி' அணி அர்மெனியாவை எதிர் கொள்கிறது. முன்னிலையில் உள்ள இரு அணிகளும் மோதுவதால் இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய 'ஏ' அணி உஸ்பெகிஸ்தானையும், இந்திய 'சி' அணி லிதுவேனியாவையும் எதிர்த்து விளையாடுகிறது.
பெண்கள் பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய 'ஏ' அணி 2.5-1.5 என்ற கணக்கில் பிரான்சை தோற்கடித்தது. இந்திய 'பி' அணி 1-3 என்ற கணக்கில் ஜார்ஜாவிடம் தோற்றது.
இந்திய 'சி' அணி பிரேசிலுடன் மோதிய ஆட்டம் 2-2 என்ற கணக்கில் 'டிரா' ஆனது.
பெண்கள் பிரிவில் இந்திய 'ஏ' அணி, ஜார்வியா, ருமேனியா ஆகிய 3 அணிகள் தலா 10 புள்ளியுடன் முன்னிலையில் உள்ளன. இந்திய 'பி' அணி 8 புள்ளியுடன் 18-வது இடத்திலும், இந்திய 'சி' அணி 7 புள்ளியுடன் 29-வது இடத்திலும் உள்ளன.
இன்றைய 6-வது சுற்றில் இந்திய 'ஏ' அணி ஜார்ஜியாவுடனும், இந்திய 'பி' அணி செக்குடியரசுடனும், இந்திய 'சி' அணி ஆஸ்திரேலியாவுடனும் மோதுகின்றன.
நாளை ஓய்வு நாளாகும். 7-வது சுற்று ஆட்டம் 5-ந்தேதி நடக்கிறது.
- இந்திய அணி 13 பதக்கம் பெற்று தொடர்ந்து 6-வது இடத்தில் உள்ளது.
- நேற்றைய 5-வது நாளில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம் உள்பட 4 பதக்கம் கிடைத்தது.
பர்மிங்காம்:
22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது.
4-வது நாள் போட்டி முடிவில் இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் ஆக மொத்தம் 9 பதக்கம் பெற்று இருந்தது.
நேற்றைய 5-வது நாளில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம் உள்பட 4 பதக்கம் கிடைத்தது.
லான்பவுல்ஸ் பந்தயத்தில் ரூபா ராணி , லவ்லி சவுபே, நயன்மோனி , பிங்கி சிங் ஆகியோரை கொண்ட இந்திய பெண்கள் அணி தங்கம் வென்றது. டேபிள் டென்னிஸ் ஆண்கள் அணிகள் பிரிவில் சரத்கமல், ஜி.சத்யன் , ஹர்மித் தேசாய், சனில்ஷெட்டி ஆகியோர் அடங்கிய அணி தங்கப்பதக்கம் பெற்றது.
பளுதூக்கும் போட்டியில் இந்திய வீரர் விகாஸ் தாக்கூர் ( 96 கிலோ ) வெள்ளி பதக்கம் வென்றார்.
பேட்மின்டன் போட்டியில் பி.வி.சிந்து, காயத்ரி கோபிசந்த், அஸ்வினி பொன்னப்பா , திரிஷா ஜோலி , ஆகர்ஷி காஷ்யப், ஸ்ரீகாந்த் கிடாம்பி , சாத்விக் சாய்ராஜ் ரன்கிர் ரெட்டி , சுமித் ரெட்டி, லக்ஷயா சென் , சிராக் ஷெட்டி ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப்பதக்கம் பெற்றது.
நேற்று இரவு நடந்த இறுதிப்போட்டியில் 1-3 என்ற கணக்கில் மலேசியாவிடம் தோற்றது.
முதலில் நடந்த இரட்டையர் ஆட்டத்தில் ரன்கிர் ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 18-21, 15-21 என்ற கணக்கில் தோற்றனர். 2-வது ஆட்டத்தில் பி.வி.சிந்து 22-20, 21-17 என்ற கணக்கில் யாங்கை வீழ்த்தினார்.
இதனால் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது. அதை தொடர்ந்து ஸ்ரீகாந்த் கிடாம்பி 19-21, 21-6, 16-21 என்ற கணக்கில் தோற்றார். இதே போல திரிஷா ஜோலி-காயத்ரி ஜோடியும் 18-21, 17-21 என்ற கணக்கில் தோற்றனர்.
வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய பேட்மின்டன் கலப்பு அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் "காமன் வெல்த்தில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய கலப்பு அணிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். திறமை, ஒருங்கிணைந்த செயல்பாடு, போராடும் குணம் வியக்கத்தக்க வகையில் இருந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் "இந்தியாவில் அதிகம் போற்றப்படும் விளையாட்டுகளில் பேட்மின்டனும் ஒன்றாகும். காமன்வெல்த்தில் வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம் மேலும் பிரபலம் அடையும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணி இதுவரை 5 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் ஆக மொத்தம் 13 பதக்கம் பெற்று தொடர்ந்து 6-வது இடத்தில் உள்ளது.
- காமன்வெல்த் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக மந்தனா 63 ரன்கள் எடுத்தார்.
- டி20 தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முதல் முறையாக 3-வது இடத்துக்கு முன்னேறினார்.
துபாய்:
பெண்கள் டி20 போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. இதில் பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் மெல் லானிங் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பெத் மூனி இரண்டாம் இடம் பிடித்தார்.
இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா முதல் முறையாக 3வது இடத்தைக் கைப்பற்றியுள்ளார். காமன்வெல்த் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக மந்தனா 63 ரன் எடுத்ததால் இரு இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார். இந்தியாவின் ஷபாலி வர்மா 5ம் இடத்தில் உள்ளார்.
டி20 தரவரிசையில் பந்துவீச்சில் இந்தியாவின் தீப்தி வர்மா 5வது இடத்தில் உள்ளார்.
இதேபோல, ஆல்-ரவுண்டருக்கான பட்டியலில் இந்திய அணியின் தீப்தி வர்மா 5-வது இடத்தில் நீடிக்கிறார்.
- கலப்பு பேட்மிண்டன் இறுதி ஆட்டத்தில் இந்தியா மலேசியாவுடன் மோதியது.
- இதில் 1-3 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியுற்று வெள்ளிப்பதக்கம் வென்றது.
பர்மிங்காம்:
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் நீடிக்கிறது.
கலப்பு பேட்மிண்டன் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி சிங்கப்பூரை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி மலேசியாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. மலேசிய அணி தங்கப்பதக்கம் வென்றது.
இதையடுத்து, இந்திய அணி 5 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் நீடிக்கிறது.
- ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த மாதம் 27ம் தேதி தொடங்குகிறது.
- சாம்பியனை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி செப்டம்பர் 11-ம் தேதி துபாயில் நடக்கிறது.
புதுடெல்லி:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை , வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் இந்த தொடர் இந்த மாதம் 28-ம் தேதி தொடங்குகிறது. தகுதிச் சுற்றுக்குப் பிறகு மேலும் ஒரு அணி போட்டியில் இணையும்.
ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களம் காண்கிறது. இலங்கையில் நடைபெற இருந்த இந்த தொடர் பின்னர் அங்கு நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. ஆகஸ்ட் 27-ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி ஆகஸ்ட் 28-ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து ஆகஸ்ட் 31-ம் தேதி 6-வதாக தகுதி அடையும் அணியுடன் இந்தியா பலப்பரீட்சை நடத்துகிறது.
சாம்பியனை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி செப்டம்பர் 11-ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. அனைத்துப் போட்டிகளும் இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.






