என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இரு அணிகளிலும் உள்ள பெரும்பாலான வீரர்களுக்கு அமெரிக்க செல்வதற்கான விசா கிடைக்காமல் இருந்தது.
    • வெஸ்ட் இண்டீஸ் அணி முழுவதும் ஃப்ளோரிடாவுக்கு சென்றுவிட்டனர்.

    வெஸ்ட் இண்டீஸ்- இந்தியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தற்போது வரை நடைபெற்றுள்ள 3 போட்டிகளில் இந்திய அணி 2 -1 என முன்னிலை வகித்து வருகிறது.

    இரு அணிகள் மோதும் கடைசி 2 போட்டிகள் மட்டும் நடைபெறுமா என்பதில் குழப்பம் ஏற்பட்டது. முதல் டி20 போட்டி ட்ரினிடாட்டில் நடைபெற்ற சூழலில் 2 மற்றும் 3வது போட்டி செயிண்ட் கிட்ஸில் நடைபெற்றது. ஆனால் கடைசி 2 போட்டிகளும் அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா மாகாணத்தில் தான் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வீரர்களுக்கு மட்டும் விசா கிடைக்கவே இல்லை.

    இரு அணிகளிலும் உள்ள பெரும்பாலான வீரர்களுக்கு அமெரிக்க செல்வதற்கான விசா கிடைக்கவில்லை. இதனையடுத்து அவர்கள் மீண்டும் செயிண்ட் கிட்ஸில் இருந்து ட்ரினிடாட் தீவுக்கு சென்று, அங்கு விசா பணிகளை செய்ய வேண்டியிருந்தது. போட்டி தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்னதாக விசா கிடைத்துவிடுமா என்பது சந்தேகமாகவே இருந்தது.

    இந்நிலையில் அனைவருக்கும் விசா கிடைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வீரர்கள் அனைவருக்கும் ஜார்ஜ் டவுன் நகரில் நேர்முக தேர்வு நடந்துள்ளது. இதன்பின்னர் அவசரகால விசா கிடைத்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முழுவதும் ஃப்ளோரிடாவுக்கு சென்றுவிட்டனர். இந்திய அணி இன்று புறப்படும் எனத் தெரிகிறது.

    இரு அணிகளும் மோதும் 4-வது டி20 போட்டி 6-ம் தேதியும் 5-வது டி20 போட்டி 7-ம் தேதியும் ஃப்ளோரிடாவில் உள்ள செண்ட்ரல் போவார்ட் மைதானத்தில் நடைபெறுகிறது. 

    • இங்கிலாந்து அணியில் ஓலி ராபின்சன் இடம் பிடித்துள்ளார்.
    • இந்திய டெஸ்டின் போது கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட பென் ஃபோக்ஸ் மீண்டும் அணியின் இணைந்துள்ளார்.

    தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 தொடரில் விளையாடியது. ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமமானது. டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 17-ந் தேதி தொடங்கிறது. இந்நிலையில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஓலி ராபின்சன் இடம் பிடித்துள்ளார். முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திலிருந்து ராபின்சன் விளையாடவில்லை.

    இந்திய டெஸ்டின் போது கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட பென் ஃபோக்ஸ் மீண்டும் அணியின் இணைந்துள்ளார். நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகவில்லை என்றாலும், ஹாரி புரூக் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளார்.

    • ஷிவதாபா, சுமித் குண்டு, ஆசிஷ் குமார் ஆகியோர் ஏற்கனவே கால் இறுதியில் தோற்று வெளியேறி இருந்தனர்.
    • ஜப்பான் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற லவ்லினா கால் இறுதியில் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.

    காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 3 பதக்கம் உறுதியானது.

    குத்து சண்டையில் இந்தியா சார்பில் 5 வீரர்கள், 5 வீராங்கனைகள் ஆக மொத்தம் 10 பேர் பங்கேற்று உள்ளனர். இதில் ஷிவதாபா, சுமித் குண்டு, ஆசிஷ் குமார் ஆகியோர் ஏற்கனவே கால் இறுதியில் தோற்று வெளியேறி இருந்தனர்.

    நேற்று நடந்த கால் இறுதியில் 3 இந்தியர்கள் வெற்றி பெற்றனர். இதனால் குத்து சண்டையில் 3 பதக்கம் உறுதியானது. பெண்களுக்கான 50 கிலோ பிரிவில் நிஹாத் ஜரீன் கால் இறுதியில் வேல்ஸ் நாட்டு வீராங்கனை ஹெலன் ஜோன்சை எதிர் கொண்டார்.

    இதில் ஜரீன் 5-0 என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அரை இறுதியில் அவர் இங்கிலாந்தை சேர்ந்த ஸ்டப்லேயை 6-ந்தேதி சந்திக்கிறார்.

    இதே போல 48 கிலோ பிரிவில் வீராங்கனை நித்து, 57 கிலோ பிரிவில் வீரர் ஹூசைன் ஆகியோரும் கால் இறுதியில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றனர்.

    ஜப்பான் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற லவ்லினா கால் இறுதியில் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். 70 கிலோ பிரிவில் பங்கேற்ற அவர் கால் இறுதியில் 2-3 என்ற கணக்கில் வேல்ஸ் நாட்டு வீராங்கனை ரோசியிடம் தோற்று அரை இறுதி வாய்ப்பை இழந்தார்.

    • அமெரிக்கா 11 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.
    • இந்திய ‘பி’ அணி 15-வது இடத்திலும், இந்திய ‘சி’ அணி 19-வது இடத்திலும் இருக்கின்றன.

    சென்னை:

    சர்வதேச செஸ் கூட்டமைப்பு, இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழக அரசு சார்பில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்தப்போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். ஆண்கள் பிரிவில் 186 அணிகளும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் கலந்து கொண்டுள்ளன.

    11 சுற்றுகளை கொண்ட இந்தப் போட்டி சுவிஸ் முறையில் நடத்தப்படுகிறது. இந்தப்போட்டியில் இந்தியா சார்பில் 6 அணிகள் பங்கேற்று உள்ளன. ஆண்கள் பிரிவில் 3 அணியும், பெண்கள் பிரிவில் 3 அணியும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

    நேற்று 6-வது சுற்று ஆட்டம் நடந்தது. ஓபன் பிரிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய 'பி' அணிக்கு நேற்று சறுக்கல் ஏற்பட்டது. 1.5-2.5 என்ற கணக்கில் பலம் வாய்ந்த அர்மெனியாவிடம் தோற்றது. இந்த தொடரில் முதல் தோல்வியை தழுவியது.

    இந்த சுற்றில் சென்னை கிராண்ட் மாஸ்டர் டி.குகேஷ் மட்டுமே வெற்றி பெற்றார். அவர் தொடர்ந்து 6 ஆட்டங்களில் வெற்றி பெற்று முத்திரை பதித்துள்ளார். பி.அதிபன், சத்வானி தோல்வியை தழுவினார்கள். சரீன் நிஹால் 'டிரா' செய்தார்.

    இந்திய 'ஏ' அணி உஸ்பெகிஸ்தானுடன் 2-2 என்ற கணக்கில் 'டிரா' செய்தது. இந்திய 'சி' அணி 3.5.-1.5 என்ற கணக்கில் லிதுவேனியாவை வீழ்த்தியது.

    6 சுற்றுகள் முடிவில் அர்மெனியா 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் இருந்து வந்த இந்திய 'பி' அணி 10 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு பின் தங்கியது.

    உஸ்பெகிஸ்தான், பிரான்ஸ், இந்தியா 'ஏ', நெதர்லாந்து, கியூபா, இந்தியா 'சி', ஜெர்மனி, கஜகஸ்தான், செர்பியா, பெரு அணிகளும் 10 புள்ளிகளை பெற்று உள்ளது. 'டை' பிரேக்கர் அடிப்படையில் இந்த அணிகள் முறையே 4 முதல் 13-வது இடங்களில் உள்ளன. அதாவது இந்தியா 'ஏ' அணி 6-வது இடத்திலும், இந்தியா 'சி' அணி 9-வது இடத்திலும் உள்ளன.

    அமெரிக்கா 11 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.

    பெண்கள் பிரிவில் இந்திய 'ஏ' அணி 3-1 என்ற கணக்கில் ஜார்ஜியாவை வீழ்த்தியது. சென்னையை சேர்ந்த வைஷாலி, கோனேரு ஹம்பி ஆகியோர் வெற்றி பெற்றனர். ஹரிகா, தானியா சச்தேவ் மோதிய ஆட்டம் 'டிரா' ஆனது.

    இந்திய 'பி' அணி 2-2 என்ற கணக்கில் செக்குடிய ரசுடன் 'டிரா' செய்தது. இந்திய 'சி' அணி 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

    பெண்கள் பிரிவில் 6 ரவுண்டுகள் முடிவில் இந்திய 'ஏ' அணி 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. அசர்பெய் ஜான், ருமேனியா தலா 11 புள்ளிகளுடன் முறையே 2-வது, 3-வது இடங்களில் உள்ளன.

    போலந்து, உக்ரைன், அர்மெனியா, பல்கேரியா, இஸ்ரேல், ஜார்ஜியா, வியட்னாம், நெதர்லாந்து ஆகிய அணிகள் தலா 10 புள்ளிகளுடன் 4 முதல் 11-வது இடங்களில் உள்ளன.

    இந்திய 'பி' அணி 15-வது இடத்திலும், இந்திய 'சி' அணி 19-வது இடத்திலும் இருக்கின்றன.

    இன்று ஓய்வு நாளாகும். இன்னும் 5 சுற்றுகள் எஞ்சியுள்ளன. 7-வது சுற்று நாளை நடக்கிறது.

    • ஆண்களுக்கான பளுதூக்குதலின் இறுதி போட்டியில் 390 கிலோ எடை தூக்கி சவுரவ் கோசல் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
    • ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் இறுதி போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் 2.22 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கத்தை கைபற்றினார்.

    பர்மிங்காம்:

    72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா நேற்று 1 வெள்ளி , 4 வெண்கலம் வென்றது.

    ஜூடோ போட்டியில் பெண்களுக்கான 78 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் துலிகா மான் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    ஆண்களுக்கான பளுதூக்குதலின் (109 கிலோ) இறுதி போட்டியில் இந்தியாவின் லவ்ப்ரீத் சிங் இப்போட்டியில் மொத்தம் 355 கிலோ தூக்கி 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

    ஸ்குவாஷ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவுரவ் கோசல், வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

    ஆண்களுக்கான ( 109+ கிலோ) பளுதூக்குதலில் இறுதி போட்டியில் இந்திய வீரர் குர்தீப் சிங் பங்கேற்றார். அவர் இந்தப் போட்டியில் 390 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

    ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் இறுதி போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் 2.22 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கத்தை கைபற்றினார்.நேற்று 1 வெள்ளி , 4 வெண்கலம் வென்றது.காமன்வெல்த் போட்டி பதக்கப் பட்டியலில் இந்தியா 18 பதக்கங்களுடன் 7-ம் இடத்தில் நீடிக்கிறது.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 டி20 போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது.
    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடுகிறது.
    • உயரம் தாண்டுதலில் தேஜஸ்வி சங்கர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
    • காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

    ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் தேஜஸ்வி சங்கர் 2.22 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.

    காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை கைப்பற்றி உள்ளது.

    • முதலில் ஆடிய இந்தியா 162 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய பார்படோஸ் 62 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெறும் பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் பார்படோஸ் அணியுடன் மோதியது. 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 3-வது லீக் ஆட்டத்தில் பார்படோஸ் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற பார்படோஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம் அடித்தார். அவர் 46 பந்துகளில் 56 ரன்கள் அடித்தார். ஷபாலி வர்மா 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தீப்தி ஷர்மா 34 ரன்கள் குவித்தார்.

    இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றிஎன்ற இலக்குடன் பார்படோஸ் அணி களமிறங்கியது. இந்திய வீராங்கனைகள் துல்லியமாக பந்து வீசி விக்கெட்களை கைப்பற்றினர். இறுதியில் பார்படோஸ் அணி 82 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

    இந்தியா சார்பில் ரேணுகா சிங் 4 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் 3 போட்டியில் இந்தியா 2 வெற்றி பெற்றுள்ளது.

    • பளு தூக்குதல் பிரிவில் குர்தீப் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார்
    • காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

    பர்மிங்காம்:

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

    109 கிலோ எடைப்பிரிவினருக்கான பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீரர் குர்தீப் சிங், மொத்தம் 390 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.

    காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை கைப்பற்றி உள்ளது.

    • ஜூடோ பெண்களுக்கான 78 கிலோ பிரிவில் துலிகா மான் வெள்ளி வென்றார்.
    • இந்தியா இதுவரை 16 பதக்கங்களை வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.

    இந்தியா இதுவரை 5 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்றுள்ளது.

    6-வது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில், ஜூடோ போட்டியில் பெண்களுக்கான 78 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் துலிகா மான் வெள்ளிப் பதக்கத்துக்கான சுற்றில் இன்று விளையாடினார்.

    இந்த போட்டியில் துலிகா மான், ஸ்காட்லாந்து வீராங்கனையிடம் வீழ்ந்தார். இதன்மூலம் துலிகா மான் வெள்ளி வென்றார்.

    இதன்மூலம் இந்தியா 5 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • 3 சுற்றுகளில் வெற்றி பெற்று சவுரவ் கோசல் வெண்கலம் வென்றார்.
    • இந்தியா இதுவரை 15 பதக்கங்களை வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற ஸ்குவாஷ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் சவுரவ் கோசல், இங்கிலாந்தின் ஜேம்ஸ் வில்ஸ்ட்ரோவுடன் மோதினார்.

    இதில், சவுரவ் கோசல் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். அவர் 11-6, 11-1, 11-4 என்ற கணக்கில் மொத்தம் 3 சுற்றுகளில் வெற்றி பெற்று வெண்கலம் வென்றார்.

    இதன்மூலம் இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் அனைவரும் பாஸ்போர்ட்டுகளை ஒப்படைக்க அறிவுறுத்தல்
    • இலங்கையில் இருந்து 51 அதிகாரிகள் உள்ளிட்ட 161 உறுப்பினர்கள் கொண்ட குழு பங்கேற்பு

    பர்மிங்காம்:

    பிரிட்டனின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் பங்கேற்றுள்ள வீரர்-வீராங்கனைகள் அனைவரும் விளையாட்டு கிராமங்களில் உள்ள குடியிருப்புகளில் தங்கியிருக்கிறார்கள்.

    இந்நிலையில், காமன்வெல்த் கிராமத்தில் இருந்து இலங்கையைச் சோந்த 2 வீரர்கள் மற்றும் ஒரு அதிகாரியை திடீரென காணவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீரர்கள் காணாமல் போனதையடுத்து, போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் அணி நிர்வாகிகள் அனைவரும், அவர்கள் தங்கியிருக்கும் விளையாட்டு கிராம அதிகாரிகளிடம் பாஸ்போர்ட்டுகளை ஒப்படைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையில் இருந்து 51 அதிகாரிகள் உள்ளிட்ட 161 உறுப்பினர்கள் கொண்ட குழு காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×