என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இன்று நடக்கும் மகளிர் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
    • இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.

    பர்மிங்காம்:

    72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இன்று நடக்கும் மகளிர் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதுவதால் போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது .

    இறுதிபோட்டிக்கு முன்னேற இரு அணிகளும் முனைப்பு காட்டும் கான்பதால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.

    • 20 ஓவர் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
    • ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் 5 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் மோதி வருகின்றன.

    முதல் மற்றும் 3-வது போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. இதனால் 20 ஓவர் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 4-வது மற்றும் 5-வது போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் லாடர்ஹில்லில் நடக்கிறது.

    4-வது போட்டி நாளை நடக்கிறது. இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

    இப்போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.

    பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார், அர்ஷ்தீப்சிங், அஸ்வின் உள்ளனர். ஆல்-ரவுண்டர் ஹர்த்திக் பாண்ட்யாவும் தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.

    பூரன் தலைமயிலான வெஸ்ட்இண்டீஸ் அணியில் பிரண்டன் கிங், மேயர்ஸ், போவெல், ஹெட்மர், ஹோல்டர், ஜோச், மெக்காய் உள்ளனர். அந்த அணி வெற்றி நெருக்கடியுடன் களம் இறங்குகிறது. தோல்வி அடைந்தால் தொடரை இழக்க வேண்டும் என்ப தால் வெற்றிக்காக வெஸ்ட் இண்டீஸ் அணி போராடும்.

    • இந்த மைதானத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேருக்கு நேர் நான்கு முறை சந்தித்துள்ளன.
    • ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் உள்பட குழு உறுப்பினர்கள் கடற்கரையில் கிட்டத்தட்ட 3 மணிநேரம் செலவிட்டனர்.

    வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கிடையேயான 4-வது டி20 போட்டி புளோரிடாவில் நாளை நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேருக்கு நேர் நான்கு முறை சந்தித்துள்ளன. இதில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது.

    4-வது டி20 போட்டி நாளை நடக்கவுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் புளோரிடாவில் உள்ள மியாமி கடற்கரையை சுற்றிப் பார்க்க முடிவு செய்தனர். அதன்படி இந்திய வீரர்களான ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் உள்பட குழு உறுப்பினர்கள் கடற்கரையில் கிட்டத்தட்ட 3 மணிநேரம் செலவிட்டனர்.

    அந்த புகைப்படத்தை அவர்கள் தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • காமன்வெல்த் மகளிர் டி20 போட்டியின் அரை இறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
    • முதல் அரை இறுதியில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து மோதுகின்றன.

    காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் 20 ஓவர் போட்டி யில் 8 அணிகள் பங்கேற்றன. இதில் அரை இறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றன. நேற்றைய கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை இங்கிலாந்து வீழ்த்தியது.

    இதையடுத்து அரை இறுதியில் யார்-யாருடன் மோதுவது என்பது உறுதியானது. முதல் அரை இறுதியில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து மோதுகின்றன. 2-வது அரை இறுதியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு ஆட்டங்களும் நாளை நடக்கிறது.

    • ஓபன் பிரிவில் இன்று இந்திய அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளன.
    • இந்திய ‘பி’ அணி, கியூபாவுடன் மோதுகிறது.

    சென்னை:

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. 187 நாடுகள் பங்கேற்றுள்ள இப்போட்டியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் விளையாடி வருகிறார்கள்.

    ஓபன் மற்றும் பெண்கள் பிரிவுகளில் 11 சுற்றுகளாக நடந்து வரும் இப்போட்டியில் இதுவரை 6 சுற்றுகள் நடந்துள்ளது. நேற்று ஓய்வு நாளாகும். இன்று 7-வது சுற்று போட்டி நடக்கிறது.

    ஓபன் பிரிவில் இன்று இந்திய அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளன. ஹரி கிருஷ்ணா, விதித் குஜராத்தி, அர்ஜுன் எரிகாசி, நாராயணன், சசிகரண் ஆகியோர் அடங்கிய இந்திய 'ஏ' அணி, சூர்யசேகர் கங்குலி, சேது ராமன், அபிஜித் குப்தா, முரளி கார்த்திகேயன், அபி மன்பு புரானிக் ஆகியோரை கொண்ட இந்திய 'சி' அணியுடன் மோதுகிறது.

    இந்த சீசனில் இந்திய வீரர்கள் முதல் முறையாக நேருக்கு நேர் மோத உள்ளதால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்திய 'பி' அணி, கியூபாவுடன் மோதுகிறது. இந்த அணியில் டி.குகேஷ், சரின் நிஹல், பிரக்ஞானந்தா, அதிபன், சத்வானிரானக் ஆகிய நட்சத்திர வீரர்கள் உள்ளனர். ஓபன் பிரிவில் இந்தியாவின் மூன்று அணிகளும் 10 புள்ளிகளுடன் உள்ளன.

    பெண்கள் பிரிவில் கோனேரு ஹம்பி, ஹரிகா, வைஷாலி, தானியா சச்தேவ், பாக்தி குல்கர்னி ஆகியோர் இடம் பெற்றுள்ள இந்திய 'ஏ' அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

    இந்திய 'ஏ' அணி 7-வது சுற்றில் அஜர்பைஜானுடன் மோதுகிறது. அஜர்பைஜான் அணி 11 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. முதல் 6 சுற்றுகளில் அசத்திய இந்திய 'ஏ' அணி 7-வது சுற்றிலும் ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் உள்ளது.

    வந்திகா, பத்மினி, சவுமியா திவ்யா, கோமஸ் மேரி அன் ஆகியோரை கொண்ட இந்திய 'பி' அணி இன்று கிரீஸ் அணியுடன் மோதுகிறது. இந்திய 'சி' அணி நியூசிலாந்துடன் மோதுகிறது. இந்த அணியில் நந்திதா, வர்ஷினி, ஈஷா கரவாடே, பிரத்யுஷா, விஷ்வா, வஸ்னவாலா ஆகியோர் உள்ளனர்.

    பெண்கள் பிரிவில் இந்திய பி மற்றும் சி அணிகள் தலா 9 புள்ளிகளுடன் முறையே 15 மற்றும் 19-வது இடத்தில் உள்ளன.

    ஓபன் பிரிவில் இந்திய 'பி' அணி தனது முதல் 5 சுற்றுகளில் வென்றது. 6-வது சுற்றில் அர்மேனியாவிடம் தோற்றது.

    அந்த அணியில் இடம் பெற்றுள்ள குகேஷ் தான் மோதிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

    • இந்த தொடரில் சொதப்பி வரும் ஆவேஷ் கான், ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்படலாம்.
    • ஹர்சல் படேல், குல்தீப் யாதவுக்கு கடைசி இரண்டு போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கப்படலாம்.

    வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகுக்கிறது.

    இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது, 5-வது டி20 போட்டி அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் அமெரிக்காவில் உள்ள புளோரிடாவுக்கு சென்றடைந்தனர். 4-வது டி20 போட்டி நாளை நடக்கிறது.

    3-வது டி20 போட்டியில் காயமடைந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா குணமடைந்து விட்டதாகவும் 4-வது டி20 போட்டியில் அவர் விளையாடுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முதல் 3 போட்டிகளில் அணியில் இடம் பிடிக்காத ஹர்சல் படேல், குல்தீப் யாதவுக்கு கடைசி இரண்டு போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இந்த தொடரில் சொதப்பி வரும் ஆவேஷ் கான், ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்படலாம். கடந்த ஐந்து டி20 போட்டிகளில் அவர் டெத் ஓவர்களில் 5.2 ஓவர்களில் 17.4 என்ற எகானமி ரேட்டில் விட்டுக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வேல்ஸ் அணியை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
    • இந்தியா இதுவரை 6 தங்கம் உள்பட 20 பதக்கங்களை வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்துவருகிறது.

    இந்தியா இந்த காமன்வெல்த் போட்டியில் இதுவரை 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 20 பதக்கங்களை வென்றுள்ளது.

    இந்நிலையில், நேற்று நடந்த கடைசி குரூப் ஆட்டத்தில் இந்திய அணி வேல்ஸ் அணியுடன் மோதியது. இதில் இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் சிங் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இந்திய வீரர்களின் வேகத்துக்கு வேல்ஸ் அணியால் ஈடுகொடுக்க முடியவில்லை.

    இறுதியில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

    அரையிறுதியில் இந்தியா பலம்வாய்ந்த நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

    • இந்தியா 5 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 19 பதக்கங்களை வென்றுள்ளது.
    • பாரா பளு தூக்குதலில் இந்தியாவின் சுதிர் தங்கப் பதக்கம் வென்றார்.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்துவருகிறது. இதில் இந்தியா இதுவரை 5 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 19 பதக்கங்களை வென்றுள்ளது.

    7-வது நாளில் பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 6வ-து தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. பாரா பளுதூக்குதல் ஆடவர் பிரிவில் 134.5 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார் சுதிர். 134.5 புள்ளிகளைப் பெற்றது என்பது புதிய உலக சாதனை ஆகும்.

    இதன்மூலம் இந்தியா 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.

    • இந்தியா 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது.
    • நீளம் தாண்டுதலில் இந்தியாவின் ஸ்ரீசங்கர் முரளி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்துவருகிறது. இதில் இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது.

    7-வது நாளில் பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில் ஆண்களுக்கான பிரிவில் இந்தியாவின் ஸ்ரீசங்கர் முரளி 8.08 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    இதன்மூலம் இந்தியா 5 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • இந்தியா 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது.
    • குத்துச்சண்டையில் ரோகித் டோகாஸ் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்தார்.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்துவருகிறது.

    இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது.

    7-வது நாளில் பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில் ஆண்களுக்கான 67 கிலோ எடை பிரிவில் நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்தியாவின் ரோகித் டோகாஸ் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

    குத்துச்சண்டை போட்டியில் இரு அரையிறுதி போட்டிகளிலும் தோல்வி அடைந்தவர்களுக்கும் வெண்கல பதக்கம் உண்டு. இதன் மூலம் ரோகித் டோகாஸ் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

    • இந்தியா சார்பில் ரேணுகா சிங் 4 விக்கெட் கைப்பற்றினார்.
    • ரேணுகா சிங் ஐசிசி-யின் ஜூலை மாதத்திற்க்கான சிறந்த வீராங்கனை பட்டியலில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் பார்படோஸ் அணியுடன் இந்தியா மோதியது.

    'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 3-வது லீக் ஆட்டத்தில் பார்படோஸ் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற பார்படோஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம் அடித்தார். அவர் 46 பந்துகளில் 56 ரன்கள் அடித்தார். ஷபாலி வர்மா 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தீப்தி ஷர்மா 34 ரன்கள் குவித்தார்.

    இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பார்படோஸ் அணி 82 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இந்தியா சார்பில் ரேணுகா சிங் 4 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் 3 போட்டியில் இந்தியா 2 வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தனது பிரிவில் 2-வது இடத்தை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடித்தது.

    ரேணுகா சிங் இன்சுவிங் மூலம் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இந்த போட்டியில் அவரின் பந்து வீச்சு மிரட்டலாக இருந்தது. அவர் 4 ஓவர்கள் வீசி 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் 3 விக்கெட்டுகள் போல்ட் முறையில் எடுக்கப்பட்டது. இதில் 2 போல்ட் இன்சுவிங் மூலம் எடுக்கப்பட்டது. இந்த பந்து வீச்சை பார்க்கும் போது இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் சுவிங் கிங் புவேனேஸ்வர் குமார் பந்து வீசுவது போன்று இருந்தது.


    அவர் விக்கெட் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இவர் ஐசிசி-யின் ஜூலை மாதத்திற்க்கான சிறந்த வீராங்கனை பட்டியலில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் ஆறு இரட்டை சதங்களை அடித்திருக்கிறார்.
    • சச்சின் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 51 சதங்களை அடித்துள்ளார்

    சர்வதேச கிரிக்கெட் 100 சதங்களை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்ற ஒரே வீரராக இருந்தவர் சச்சின் டெண்டுல்கர். இவர்16 வயதில் 1989 ஆண்டில் இந்திய அணிக்கு அறிமுகமாகினார். இந்திய அணிக்காக பல எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளார்.

    சச்சின் 664 சர்வதேச போட்டிகளில் விளையாடி 34000 ரன்கள் எடுத்துள்ளார். 100 சதங்களை அடித்து 2013-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். சச்சின் சிறப்பாக விளையாடித் தகர்க்க முடியாத சாதனைகளைப் படைத்திருந்தாலும் சர்வதேச உலகில் அவரால் முறியடிக்க முடியாத சில சாதனைகள் உள்ளன.

    இந்திய வீரர் சச்சின் 100 சதங்களை அடித்திருந்தாலும் அவர் விளையாடிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் முச்சதங்கள் அடிப்பதைத் தவற விட்டுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 51 சதங்களை அடித்துள்ள அவர், டெஸ்ட் போட்டிகளில் அவரின் அதிகபட்ச ஸ்கோர் ஒரு இன்னிங்ஸில் 248 ரன்கள்தான்.

    இந்திய கிரிக்கெட் வீரர்கள் வீரேந்திர சேவாக், கருண் நாயர் ஆகிய இருவர் மட்டுமே டெஸ்டில் முச்சதம் அடித்து சாதனை படைத்துள்ளனர். பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக சேவாக் இரண்டு முறை இந்த சாதனையை படைத்துள்ளார். சமீபத்தில் 2016 ஆம் ஆண்டில் முச்சதத்தை அடித்து இந்த பட்டியலில் கருண் நாயரும் இடம் பிடித்துள்ளார். லக்ஷ்மனன் 281 ரன்கள் அடித்தும் முச்சதத்தை தவற விட்டவர்கள் பட்டியலில் உள்ளார்

    டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் ஆறு இரட்டை சதங்களை அடித்திருந்தாலும், அவரால் முச்சதத்தை அடித்தவர்கள் பட்டியலில் இடம் பெற முடியவில்லை.


    சச்சின் 1989 முதல் 2011 உலகக்கோப்பை வரை விளையாடியிருக்கிறார். ஐசிசி உலகக் கோப்பைப் போட்டிகளிலும் பெரும்பாலான சாதனைகளை படைத்துள்ளார். உலக்கோப்பை தொடர்களில் மட்டும் 2278 ரன்களை அடித்து அதிக சதம் மற்றும் அரைசதம் அடித்தவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

    இந்தியாவுக்காக 1992, 1996, 1999, 2003, 2007 மற்றும் 2011 உலகக் கோப்பையில் சச்சின் விளையாடியிருக்கிறார். இருந்தாலும், ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர் ரிக்கி பாண்டிங் 46 உலக கோப்பை போட்டிகளில் விளையாடி, டெண்டுல்கரை விட, உலகக் கோப்பை போட்டிகளில் அதிக முறை விளையாடியவர் என்ற சாதனையைப் படைத்து, சச்சினை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

    ரிக்கி பாண்டிங் 1999, 2003 மற்றும் 2007 ஆகிய மூன்று உலகக் கோப்பை வெற்றி போட்டிகளில் விளையாடி கோப்பையையும் வென்று கொடுத்துள்ளார். 2011-ல் சச்சின் விளையாடிய கடைசி உலக கோப்பை தொடர்தான் இவருக்கும் கடைசி உலகக்கோப்பை தொடர்.

    டெஸ்டில் அதிக பந்துகளை சச்சின் டெண்டுல்கர் எதிர்கொள்ளவில்லை என்பது மிகப்பெரிய வியப்புக்குரிய விஷயமாகும். இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளரும், நட்சத்திர வீரருமான ராகுல் திராவிட் 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 31,258 பந்துகளைச் சந்தித்து சர்வதேச கிரிக்கெட் உலகில் டெஸ்ட் போட்டியில் அதிக பந்துகளை சந்தித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.சச்சினால் படைக்க முடியாத மூன்று சாதனைகள்

    200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் 29,437 பந்துகளைச் சந்தித்துள்ளார், சச்சின் அறிமுகமாகி 7 ஆண்டுகளுக்குப் பின் அறிமுகமாகிய திராவிட் சச்சினை விட அதிக பந்துகளைச் சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. சச்சின் டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்களும் 15921 ரன்களும் அடித்து அதிக ரன்களை அடித்தவர் என்ற சாதனையை படைத்தாலும் அதிக பந்துகளைச் சந்தித்தவர் என்ற சாதனையைத் தவற விட்டார்.

    ×