search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    கடைசி 2 போட்டிகளில் இடம் பெறுவாரா? விளக்கம் அளித்த ரோகித் சர்மா
    X

    கடைசி 2 போட்டிகளில் இடம் பெறுவாரா? விளக்கம் அளித்த ரோகித் சர்மா

    • சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவிற்கும் பாராட்டுகள்.
    • 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    செயின்ட் கீட்ஸ்:

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3-வது 20 ஓவர் போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 165 ரன் இலக்காக இருந்தது.

    கெய்ல் மேயர்ஸ் அதிக பட்சமாக 50 பந்தில் 73 ரன் ( 8 பவுண்டரி ,4 சிக்சர் ) எடுத்தார். புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டும் , ஹர்திக் பாண்ட்யா , அர்ஷ்தீப்சிங் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் இந்திய அணி களம் இறங்கியது. இந்திய அணி 19 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 4-வது ஆட்டம் வருகிற 6-ந்தேதி நடக்கிறது.

    3-வது டி20யின் போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 5 பந்தில் 11 ரன் ( 1 பவுண்டரி , 1 சிக்சர் ) எடுத்து இருந்த போது முதுகு பிடிப்பு காரணமாக பெவிலியன் திரும்பியது.

    இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அடுத்து இரண்டு டி20 போட்டிகளில் அவர் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.

    காயம் பற்றி ரோகித் சர்மா கூறியதாவது:-

    இப்போதைக்கு பரவாயில்லை. அடுத்த ஆட்டத்திற்கு சில நாட்கள் உள்ளன. அதற்கு முன்பாக சரியாகிவிடும் என்று நம்புகிறேன். மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசிய பந்து வீச்சாளர்களுக்கும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவிற்கும் பாராட்டுகள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரோகித்தின் காயத்தை தங்கள் மருத்துவ குழு கண்காணித்து வருவதாகவும் பிசிசிஐ ஒரு ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளது.

    Next Story
    ×