என் மலர்
விளையாட்டு
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 164 ரன்களை எடுத்துள்ளது.
- அடுத்து ஆடிய இந்தியா 165 ரன்களை எடுத்து வென்றது.
செயிண்ட் கிட்ஸ்:
வெஸ்ட் இண்டீஸ், இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி செயிண்ட் கிட்சின் பாசட்டரேவில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தது. பொறுப்புடன் ஆடிய கைல் மேயர்ஸ் அரை சதமடித்தார். அவர் 50 பந்தில் 73 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய பாவெல் 23 ரன்னும், ஹெட்மயர் 20 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்தியா சார்பில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான ரோகித் சர்மா 11 ரன் எடுத்திருந்தபோது காயமடைந்து பெவிலியன் திரும்பினார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடி சிறப்பாக ஆடியது. சூர்யகுமார் அரை சதமடித்தார். அய்யர் 24 ரன்னில் அவுட்டானார். சூர்யகுமார் 44 பந்துகளில் 4 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 76 ரன்கள் குவித்தார். ஹர்திக் பாண்ட்யா 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ரிஷப் பண்ட் பொறுப்புடன் ஆடி 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிபெறச் செய்தார்.
இறுதியில், இந்தியா 19 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடரில்
இந்தியா 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.
- காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியா இதுவரை 5 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் வென்று 6-வது இடத்தில் உள்ளது.
புதுடெல்லி:
இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் டேபிள்டென்னிசில் இந்தியாவின் சரத் கமல், சத்யன், ஹர்மீத் தேசாய், சனில் ஷெட்டி ஆகியோர் தங்கமும், பளு தூக்குதலில் இந்தியாவின் விகாஸ் தாகூர் வெள்ளியும் வென்றனர்.
இந்நிலையில், காமன்வெல்த் போட்டியின் டேபிள் டென்னிஸ், பளு தூக்குதலில் பதக்கம் வென்றவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பளு தூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற விகாஸ் தாக்கூர் இம்முறை காமன்வெல்த் போட்டியில் அதிக புகழ் பெற்றுள்ளார். அவர் பெற்ற வெற்றியில் மகிழ்ச்சியடைகிறேன். விளையாட்டில் அவர் காட்டும் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. வரவிருக்கும் முயற்சிகளுக்கு அவர் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. இந்தியா இதுவரை 5 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் நீடிக்கிறது.
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 164 ரன்களை எடுத்துள்ளது.
- வெஸ்ட் இண்டீசின் கைல் மேயர்ஸ் 73 ரன்கள் எடுத்தார்.
செயிண்ட் கிட்ஸ்:
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் டி20 தொடர் 1- 1 என சமனிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி செயிண்ட் கிட்சின் பாசட்டரேவில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலாவதாக பேட்டிங் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ் களமிறங்கினர்.
முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்த நிலையில் கிங் 20 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய நிகோலஸ் பூரன் 22 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மறுபுறம் அதிரடியாக ஆடிய கைல் மேயர்ஸ் அரை சதமடித்தார். அவர் 50 பந்தில் 73 ரன்கள் எடுத்து வெளியேறினார். பாவெல் 23 ரன்னும், ஹெட்மயர் 20 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்துள்ளது.
இந்தியா சார்பில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.
- தமிழகத்தை சேர்ந்த சரத்கமல், சத்யன் ஞானசேகரன் அடங்கிய இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.
- காமன்வெல்த் 96 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் விகாஷ் தாகூர் வெற்றி.
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 4 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 10 பதக்கங்களை வென்றுள்ளது.
இந்நிலையில், காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது. இதில், தமிழகத்தை சேர்ந்த சரத்கமல், சத்யன் ஞானசேகரன் அடங்கிய இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.
சிங்கப்பூர் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 3- 1 என்ற கணக்கில் இந்திய அணி அபாரமாக வெற்றிப்பெற்றுள்ளது. தொடர்ந்து, காமன்வெல்த் 96 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் விகாஷ் தாகூர் வெற்றி பெற்றார்.
96 கிலோ எடைப் பிரிவில் மொத்தமாக 191 கிலோ எடையை தூக்கி விகாஷ் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி வென்றார்.
- 4 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், இன்று 5வது சுற்றுக்கான போட்டி நடைபெற்றது.
- செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய மகளிர் அணி சி பிரிவில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு, இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழக அரசு சார்பில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப்போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். ஆண்கள் பிரிவில் 188 அணிகளும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் கலந்து கொண்டுள்ளன.
ஏற்கனவே, 4 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், இன்று 5வது சுற்றுக்கான போட்டி நடைபெற்றது.
இதில், செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய மகளிர் அணி சி பிரிவில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றிப் பெற்றுள்ளார். பிரேசில் வீராங்கனையை எதிர்கொண்டபோது 32வது நகர்த்தலில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றிப் பெற்றார். மேலும், செஸ் ஒலிம்பியாட் தொடரின் 5வது சுற்றில் இந்திய வீரர் அபிமன்யு வெற்றி பெற்றார்.
இந்நிலையில், 5-வது சுற்று ஆட்டடத்தில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா தோல்வியடைந்துள்ளார். ஸ்பெயின் வீரர் சாண்டோஸ் லடாசாவுடன் மோதி பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார்.
- தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமிக்கு தடைக்காலம் 3 ஆண்டுகளாக குறைத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
- தமிழக தடகள வீரர் மகிமைராஜ் 4 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
காமன்வெல்த் விளையாட்டு போட்டி கடந்த ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டிக்கான இந்திய அணியில் தமிழ்நாடு தடகள வீராங்கனை தனலெட்சுமி (100 மீட்டர் மற்றும் தொடர் ஓட்டம் )இடம் பெற்றிருந்தார். கஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் தமிழ்நாடு வீராங்கனை தனலட்சுமி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமிக்கு தடைக்காலம் 3 ஆண்டுகளாக குறைத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட தனலட்சுமி தவறை ஒப்புக்கொண்டதால் தண்டனை 4 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தமிழக தடகள வீரர் மகிமைராஜ் 4 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- எங்கள் நாட்டில் தற்போது மோசமான நிலை இருந்தாலும் செஸ் மீதுள்ள ஈடுபாட்டால் விளையாட வந்துள்ளேன்.
- தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை செஸ்சின் மெக்கா என அழைக்கப்படுகிறது.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடும் இலங்கை வீராங்கனை சச்சினி கூறியதாவது:-
எங்கள் நாட்டில் தற்போது மோசமான நிலை இருந்தாலும் செஸ் மீதுள்ள ஈடுபாட்டால் விளையாட வந்துள்ளேன். நிதி வசதி இல்லாமல் நாங்களே நிதி திரட்டி செஸ் ஒலிம்பியாட்டுக்காக சென்னை வந்தோம். இங்கு அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை செஸ்சின் மெக்கா என அழைக்கப்படுகிறது. இங்கு செஸ் ஒலிம்பியாட் நடப்பது பொருத்தமானது. நாங்கள் முடிந்தவரை வெற்றி பெற போராடுவோம் என்றார்.
- 24 வயதான அவருக்கு இடது கண் பார்வை இல்லை.
- நான் விளையாடுவது எங்கள் நாட்டில் பலருக்கு உத்வேகமாக உள்ளது.
போர்ட்டோரிகோ நாட்டை சேர்ந்த நடஷா மோர்லஸ் சாண்டோஸ் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறார். 24 வயதான அவருக்கு இடது கண் பார்வை இல்லை. வலது கண்ணிலும் மிகக்குறைந்த பார்வை திறனே இருக்கிறது. ஆனாலும் நடாஷா செஸ்சில் சாதித்து வருகிறார். பிரெய்லி போர்டில் அவர் ஆடி வருகிறார். முதல் ரவுண்டில் அமெரிக்காவிடம் தோற்றார். 2-வது சுற்றில் வெற்றிபெற்றார். இது தொடர்பாக நடாஷா கூறியதாவது:-
12 வயதில் செஸ் விளையாட தொடங்கினேன். நான் பிரெய்லி டிஜிட்டல் போர்டில் ஆடினால் அதை அடிப்படையாக வைத்து உதவியாளர் வழக்கமான முறையில் ஆடுவார். நான் விளையாடுவது எங்கள் நாட்டில் பலருக்கு உத்வேகமாக உள்ளது. எப்போதும் நேர்மறையான சிந்தனைகளை பின்பற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
- எல்லா நாட்களும் நமக்கு சாதகமான நாட்களாகவே அமைந்திடாது.
- பந்துவீச்சாளர்கள் தங்களது திட்டங்களை சரியாக வெளிப்படுத்தினர் என்று நினைக்கிறேன்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் 139 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததன் மூலம் தொடரை (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இந்நிலையில் தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில்:-
முதலில் நாங்கள் போதுமான அளவு ரன்களை குவிக்கவில்லை என்பதே உண்மை. இந்த மைதானத்தில் நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. மைதானத்தின் மீது எந்த ஒரு குறையும் கிடையாது. நாங்கள் பேட்டிங் செய்யும் விதத்தில்தான் எங்களது திட்டங்களை செயல்படுத்த தவறி விட்டோம். ஆனால் இதுபோன்று சிலமுறை நடக்கத்தான் செய்யும். ஒரு பேட்டிங் குரூப்பாக நாங்கள் சரியாக செயல்படவில்லை.
எல்லா நாட்களும் நமக்கு சாதகமான நாட்களாகவே அமைந்திடாது. அதேபோன்று எல்லா நாளும் வெற்றியாகவும் இருக்காது. இதுபோன்ற தோல்விகளிலிருந்தும் சில பாடங்களை நாம் கற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். பந்துவீச்சாளர்கள் தங்களது திட்டங்களை சரியாக வெளிப்படுத்தினர் என்று நினைக்கிறேன்.
நாங்கள் பேட்டிங்கில் இன்னும் முன்னேற்றத்தை காண வேண்டும். இருப்பினும் ஒரு விசயத்தை மட்டும் நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன். பேட்டிங்கில் எங்களுடைய அதிரடி நிச்சயம் தொடரும். எங்களுடைய அப்ரோச்சில் எந்தவித மாற்றமும் இருக்காது. இந்த ஒரு தோல்விக்காக நாங்கள் பயப்பட போவதும் கிடையாது. இனியும் தொடர்ந்து பேட்டிங்கில் அதிரடியாகவே விளையாட முயற்சிப்போம்.
இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.
- இன்று நடந்த நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் 8.05 மீட்டர் தாண்டினார்.
- மற்றொரு இந்திய வீரர் முகம்மது அனீஸ் 7.68 மீட்டர் தாண்டி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
பர்மிங்காம்:
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
தொடக்க விழா முடிவடைந்த நிலையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடந்த நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் 8.05 மீட்டர் தாண்டினார்.
இதனால் அவர் காமன்வெல்த் போட்டியின் நீளம் தாண்டுதல் போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். மற்றொரு இந்திய வீரர் முகம்மது அனீஸ் 7.68 மீட்டர் தாண்டி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
பெண்கள் ஷாட் புட்டில் இந்தியாவின் மன்பிரீத் கவுர் 16.78 மீட்டர் தூரம் எறிந்து இறுதிப் போட்டிக்குத்தகுதி பெற்றார்.
- முதல் போட்டியில் எனது ஆட்டம் சிறப்பாக இருந்தது.
- சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்திய 'பி' அணியில் இடம் பெற்றுள்ள சென்னையை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா இத்தாலிக்கு எதிரான நேற்றைய 4-வது சுற்று ஆட்டத்தில் 'டிரா' செய்தார். போட்டிக்கு பிறகு அவர் கூறியதாவது:-
முதல் போட்டியில் எனது ஆட்டம் சிறப்பாக இருந்தது. 2-வது போட்டியில் வெற்றி பெற்றாலும் நான் ஒழுங்காக விளையாடவில்லை. சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் சரியாக விளையாடினால் பதக்கத்தை வெல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் இந்திய ‘பி’ அணி 3-1 என்ற கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது.
- இன்று 5-வது சுற்று ஆட்டம் நடக்கிறது. ஓபன் பிரிவில் இந்திய ‘பி’ அணி ஸ்பெயினை எதிர் கொள்கிறது.
சென்னை:
சர்வதேச செஸ் கூட்டமைப்பு, இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழக அரசு சார்பில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப்போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். ஆண்கள் பிரிவில் 188 அணிகளும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் கலந்து கொண்டுள்ளன.
11 சுற்றுகளை கொண்ட இந்தப் போட்டி சுவிஸ் முறையில் நடத்தப்படுகிறது. இந்தப்போட்டியில் இந்தியா சார்பில் 6 அணிகள் பங்கேற்று உள்ளன. ஆண்கள் பிரிவில் 3 அணியும், பெண்கள் பிரிவில் 3 அணியும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய 'பி' அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் இந்திய 'பி' அணி 3-1 என்ற கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது.
இந்திய 'ஏ' அணி பிரான்சுடன் மோதிய ஆட்டம் 2-2 என்ற கணக்கில் 'டிரா' ஆனது. இந்திய 'சி' அணி 1.5-2.5 என்ற கணக்கில் ஸ்பெயினிடம் தோற்றது.
4 சுற்றுகள் முடிவில் ஓபன் பிரிவில் இந்திய 'பி' அணி, அர்மெனியா, இஸ்ரேல், இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய 5 நாடுகள் தலா 8 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளன.
ஆனால் இதில் இந்திய 'பி' அணிதான் போர்டு பாயிண்டில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
குகேஷ், சரின் நிகில், பிரக்ஞானந்தா, அதிபன், சத்வானி ஆகியோரை கொண்ட இந்திய 'பி' அணி 15 போர்டு பாயிண்டுகளை பெற்று உள்ளது.
இந்திய 'ஏ' அணி 7 புள்ளியுடன் 7-வது இடத்திலும், இந்திய 'பி' அணி 6 புள்ளியுடன் 20-வது இடத்திலும் உள்ளன.
பெண்கள் பிரிவில் இந்திய அணி 4-வது சுற்றில் அங்கேரியை எதிர் கொண்டது. இதில் இந்திய 'ஏ' அணி 2.5-1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய 'பி' அணி 2.5-1.5 என்ற கணக்கில் எஸ்டோனியாவை தோற்கடித்தது. இந்திய 'சி' அணி 1-3 என்ற கணக்கில் ஜார்ஜியாவிடம் தோற்றது.
பெண்கள் பிரிவில் 4-வது சுற்றில் முடிவில் அசர்பெய்ஜான், போலந்து, உக்ரைன், இந்திய 'ஏ', பிரான்ஸ், இந்தியா 'பி', ருமேனியா ஆகியவை தலா 7 புள்ளிகளுடன் உள்ளன.
இன்று 5-வது சுற்று ஆட்டம் நடக்கிறது. ஓபன் பிரிவில் இந்திய 'பி' அணி ஸ்பெயினை எதிர் கொள்கிறது. இந்திய 'ஏ' அணி ருமேனியாவுடனும், இந்திய 'சி' அணி சிலியுடனும் மோதுகின்றன.
பெண்கள் பிரிவில் இந்திய 'ஏ' அணி பிரான்சுடனும், இந்திய 'பி' அணி ஜார்ஜியாவுடனும் இந்திய 'சி' அணி பிரேசிலுடனும் மோதுகின்றன.






