search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    3வது டி20 போட்டி - இந்தியா வெற்றி பெற 165 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்
    X

    அரை சதமடித்த கைல் மேயர்ஸ்

    3வது டி20 போட்டி - இந்தியா வெற்றி பெற 165 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 164 ரன்களை எடுத்துள்ளது.
    • வெஸ்ட் இண்டீசின் கைல் மேயர்ஸ் 73 ரன்கள் எடுத்தார்.

    செயிண்ட் கிட்ஸ்:

    வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் டி20 தொடர் 1- 1 என சமனிலை வகிக்கிறது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி செயிண்ட் கிட்சின் பாசட்டரேவில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

    அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலாவதாக பேட்டிங் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ் களமிறங்கினர்.

    முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்த நிலையில் கிங் 20 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய நிகோலஸ் பூரன் 22 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    மறுபுறம் அதிரடியாக ஆடிய கைல் மேயர்ஸ் அரை சதமடித்தார். அவர் 50 பந்தில் 73 ரன்கள் எடுத்து வெளியேறினார். பாவெல் 23 ரன்னும், ஹெட்மயர் 20 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்துள்ளது.

    இந்தியா சார்பில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    Next Story
    ×