என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் வயதான வீராங்கனை என்ற பெருமையை ஜூலியா லேபல் அரியாஸ் பெற்றுள்ளார்.
    • நேற்றைய 4-வது சுற்றில் அவர் 13 வயது சிறுமி மரியமை (துனிசியா) எதிர்கொண்டார்.

    செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் வயதான வீராங்கனை என்ற பெருமையை ஜூலியா லேபல் அரியாஸ் பெற்றுள்ளார். மொனக்கா நாட்டை சேர்ந்த அவருக்கு 78 வயதாகிறது. அர்ஜென்டினாவில் பிறந்து அந்நாட்டு அணிக்கு விளையாடி பின்னர் பிரான்ஸ் நாட்டுக்காக ஆடினார். தற்போது மொனாக்காவுக்காக ஆடுகிறார்.

    நேற்றைய 4-வது சுற்றில் அவர் 13 வயது சிறுமி மரியமை (துனிசியா) எதிர்கொண்டார். 70-வது காய் நகர்த்தலுக்கு பிறகு ஜூலியா வெற்றிபெற்று இந்த வயதிலும் சாதித்தார். பின்னர் அவர் கூறும்போது, 'நான் மிகவும் சோர்ந்து விட்டேன். ஆனால் வெற்றிபெற்று விட்டேன். எனது உடல்நலம் காரணமாக சில செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கவில்லை. சென்னை போட்டியில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.

    78 வயதான ஜூலியா பங்கேற்கும் 18-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இதுவாகும்.

    • இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டியில் இந்திய அணி சிங்கப்பூரை சந்திக்கிறது.
    • பெண்கள் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி இன்று மாலை இங்கிலாந்துடன் மோதுகிறது.

    காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பேட்மின்டன், டேபிள் டென்னிசில் இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இதன் மூலம் வெள்ளிப் பதக்கம் உறுதியானது.

    பேட்மின்டன் கலப்பு அணிகள் பிரிவு அரை இறுதியில் இந்திய அணி சிங்கப்பூரை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

    சாத்விக் சாய்ராஜ் ரெட்டி சிராக் ஷெட்டி ஜோடி 21-11, 21-12, என்ற கணக்கிலும், பி.வி.சிந்து 21-11, 21-12 என்ற கணக்கிலும், லக்சியா சென் 21-18, 21-15 என்ற கணக்கிலும் சிங்கப்பூர் வீரர், வீராங்கனைகளை தோற்கடித்தார். இந்திய அணி இன்று இரவு 10 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் மலேசியாவை எதிர்கொள்கிறது.

    டேபிள் டென்னிஸ் ஆண்கள் அணிகள் பிரிவில் இந்தியா அரை இறுதியில் நைஜீரியாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி சிங்கப்பூரை சந்திக்கிறது.

    இந்திய ஹாக்கி அணி தொடக்க ஆட்டத்தில் கனடாவை 11-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இருந்தது. 2-வது போட்டியில் இங்கிலாந்தை நேற்று எதிர் கொண்டது. இந்த ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. இந்திய அணி 3-வது போட்டியில் கனடாவை நாளை சந்திக்கிறது.

    பெண்கள் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி இன்று மாலை இங்கிலாந்துடன் மோதுகிறது. முதல் 2 ஆட்டத்திலும் இந்தியா வெற்றிபெற்று இருந்தது. இதனால் ஹாட்ரிக் வெற்றி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மெக்காய் 4 ஓவரில் 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • முதல் பந்தில் விக்கெட்டை இழந்தது பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுத்தது.

    மெக்காய்

    வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19.2 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் மெக்காய் 4 ஓவரில் 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். விருதை தனது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தாய்க்கு அர்பணிப்பதாக அவர் கூறினார்.

    இது குறித்து மெக்காய் கூறியதாவது:-

    தன்னை ஒரு சிறந்த வீரராக ஆவதற்கு எப்போதும் உந்துதலாக இருக்கும் தனது உடல்நலம் பாதிக்கப்பட்ட தாய்க்கு இந்த சிறப்பு தருணத்தை அர்ப்பணிக்க விரும்புகிறேன். முதல் பந்தில் விக்கெட் இழந்தது பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுத்தது. நான் எப்போதும் பவர்பிளேயில் விக்கெட்டுகளைத் தேடுவேன். மேலும் முந்தைய ஆட்டத்தில், நான் கொஞ்சம் அதிகமாக யோசித்தேன். சமீப காலமாக டி20-யில் விளையாடிய அனுபவம் மற்றும் சவால்கள் எனக்கு உதவியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மெக்காய் 2019-ல் தனது டி20 அறிமுக போட்டியை தொடங்கினார். இதுவரை அவர் 18 ஆட்டங்களில் விளையாடி 15.48 சராசரியில் 29 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 

    • கடந்த வருடம் அக்டோபர் மாதம் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
    • சக ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டார்க், ஹசில்வுட், டிராவிஸ் ஹெட், நாதன் லயன் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

    பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    29 வயதான அவர் பிரிட்டிஷ் நாட்டில் பிறந்த 31 வயதான பெக்கி பாஸ்டன் என்பவரை காதலித்து வந்தார். இவர்களுக்கு கடந்த 2020-ல் நிச்சயதார்த்தம் நடந்தது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், தற்போது அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

    நியூ சவுத் வேல்ஸில் உள்ள பைரான் பே எனும் பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் திருமண விழா நடைபெற்றுள்ளது. இதில் கம்மின்ஸ் உடன் கிரிக்கெட் விளையாடி வரும் சக ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டார்க், ஹசில்வுட், டிராவிஸ் ஹெட், நாதன் லயன் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

    கம்மின்ஸ், தனது திருமணம் குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நிலையில் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
    • கலப்பு பேட்மிண்டன் அரை இறுதியில் சிங்கப்பூரை வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டியில் மலேசியாவை எதிர்கொள்கிறது.

    பர்மிங்ஹாம்:

    72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் நீடிக்கிறது.

    இந்நிலையில் 4-வது நாள் நடந்த கலப்பு பேட்மிண்டன் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி சிங்கப்பூரை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இறுதிப்போட்டியில் இந்திய அணி மலேசியாவை எதிர் கொள்கிறது. இந்திய அணி இறுதிப்போட்டிகு முன்னேறியதால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

    • காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 9 பதக்கங்களை வென்றுள்ளது.
    • டேபிள் டென்னிசில் நைஜீரியாவை வீழ்த்தி இந்தியா இறுதிக்கு முன்னேறியது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் நீடிக்கிறது.

    முதல் போட்டியில் இந்தியாவின் ஹர்மித் தேசாய் - சத்யன் ஞானசேகரன் ஜோடி 11 - 6, 11 - 7, 11 - 7 என்ற கணக்கில் நைஜீரியா ஜோடியை

    இரண்டாவது போட்டியில் இந்தியாவின் சரத் கமல் 3-1 என்ற கணக்கில் நைஜீரிய வீரரை வீழ்த்தினார்.

    மூன்றாவது போட்டியில் இந்தியாவின் சத்யன் ஞானசேகரன் 11 - 9, 4 - 11, 11 - 6, 11 - 8 என்ற கணக்கில் நைஜீரிய வீரரை வீழ்த்தினார்.

    இதன்மூலம் ஆண்கள் குழு டேபிள் டென்னிஸ் போட்டியில் நைஜீரியாவை 3 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

    இறுதிப்போட்டியில் இந்திய அணி சிங்கப்பூர் அணியை எதிர்கொள்கிறது. இதன்மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

    • முதலில் பேட் செய்த இந்தியா 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 141 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    செயிண்ட் கிட்ஸ்:

    வெஸ்ட் இண்டீஸ், இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி செயிண்ட் கிட்சில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் நிகோலஸ் பூரன் பந்துவீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 19.4 ஓவரில் 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹர்திக் பாண்ட்யா 31 ரன்னும், ஜடேஜா 27 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி 12 பந்தில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 24 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஒபெட் மெகாய் 6 விக்கெட்டு, ஹோல்டர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 139 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 52 பந்தில் 68 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    கைல் மேயர்ஸ் 8 ரன்னும், நிகோலஸ் பூரன் 12 ரன்னும், ஹெட்மயர் 6 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    கடைசி கட்டத்தில் டேவன் தாமஸ் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிபெறச் செய்தார்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. டேவன் தாமஸ் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது.

    • பளு தூக்குதலில் இந்தியா 3 தங்கப் பதக்கம் வென்றது.
    • பளு தூக்குதலில் இந்தியா 2 வெண்கலம் வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதலில் இந்தியாவுக்கு 2வது வெண்கலம் கிடைத்துள்ளது.

    காமன்வெல்த் போட்டியின் பளு தூக்குதலில் இந்தியாவின் ஹர்ஜிந்தர் கவுர் வெண்கலம் வென்றார். பெண்களுக்கான 71 கிலோ எடைப்பிரிவில் 212 கிலோ எடையை தூக்கி இந்தியாவின் ஹர்ஜிந்தர் கவுர் மூன்றாம் இடம்பிடித்து வெண்கலம் வென்றார். பளு தூக்குதலில் இதுவரை 7 பதக்கங்கள் கிடைத்துள்ளது.

    இதன்மூலம் இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்றுள்ளது.

    • முதலில் ஆடிய இந்தியா 138 ரன்களை எடுத்துள்ளது.
    • வெஸ்ட் இண்டீசின் ஒபெட் மெகாய் 6 விக்கெட் வீழ்த்தினார்.

    செயிண்ட் கிட்ஸ்:

    வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1- 0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி செயிண்ட் கிட்சின் பாசட்டரேவில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் நிகோலஸ் பூரன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

    அதன்படி இந்திய அணி முதலாவதாக பேட்டிங் தொடங்கியது. முதல் பந்திலேயே தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான ரோகித் சர்மா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    அவரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 11 ரன்னிலும், ஷ்ரேயஸ் அய்யர் 10 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 7 ரன்னிலும், அஸ்வின் 10 ரன்னிலும் அவுட்டாகினர்.

    ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி 12 பந்தில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 24 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்ட்யா 31 ரன்னும், ஜடேஜா 27 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், இந்தியா 19.4 ஓவரில் 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஒபெட் மெகாய் 6 விக்கெட்டு, ஹோல்டர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் 139 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது.

    • காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.
    • இந்தியா இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் உள்ளது.

    புதுடெல்லி:

    இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் ஜூடோவில் இந்தியாவின் சுஷிலா தேவி வெள்ளியும், விஜய்குமார் யாதவ் வெண்கலமும் வென்றனர்.

    இந்நிலையில், காமன்வெல்த் போட்டியின் ஜூடோவில் வெள்ளி வென்ற சுஷிலா தேவி, வெண்கலம் வென்ற விஜய்குமாருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக, ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் சுஷிலா தேவி, உங்களையும் உங்கள் பதக்கங்களையும் நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சுஷிலா தேவி லிக்மாபாமின் சிறப்பான பங்களிப்பு உற்சாகத்தை ஏற்படுத்தியது. அவர் வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு வாழ்த்துகள். அவர் குறிப்பிடத்தக்க திறமை மற்றும் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய எதிர்கால முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

    இதேபொல், ஜூடோவில் வெண்கலம் வென்ற விஜயகுமாருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய்குமார் யாதவ் காமன்வெல்த் போட்டியின் ஜூடோவில் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவரது வெற்றி இந்தியாவின் எதிர்கால விளையாட்டுக்கு நல்ல முன்னோடியாக உள்ளது. வரும் காலங்களில் அவர் வெற்றியின் புதிய உயரங்களைத் தொட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    இதன் மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது. இந்தியா இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் நீடிக்கிறது.

    • இந்திய அணி பளு தூக்குதலில் ஒரு வெண்கலம் வென்றுள்ளது.
    • இந்நிலையில் இன்று ஜூடோவில் வெண்கலம் வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. இந்தியா இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளது.

    நான்காவது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆண்கள் ஜூடோ 60 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் விஜய்குமார் யாதவ் வெற்றி பெற்று பதக்கத்தை உறுதி செய்தார். சைப்ரசின் பெட்ரோசை 10-0 என்ற கணக்கில் வீழ்த்தி அவர் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் இன்றைய தினத்தில் இந்திய அணி ஜூடோவில் 2வது பதக்கத்தை வென்றுள்ளது.

    காமன்வெல்த் போட்டியில் இதுவரை இந்திய அணி 3 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்களை வென்றுள்ளது.

    • இந்திய அணி பளு தூக்குதலில் 2 வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.
    • இந்நிலையில் ஜூடோவில் இன்று வெள்ளி வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. இந்தியா இதுவரை 3 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது.

    நான்காவது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இதுவரை இன்றைய நாளின் சிறப்பம்சமாக லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதிசெய்து வரலாறு படைத்தது.

    இதற்கிடையே, இன்று நடைபெற்ற மகளிர் ஜூடோ 48 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சுஷிலா தேவி வெற்றி பெற்று பதக்கத்தை உறுதி செய்தார். மொரீஷியஸின் பிரிசில்லாவை 10-0 என்ற கணக்கில் வீழ்த்தி அவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

    இந்நிலையில், இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் மைக்கேலா வைட்பூவிடம் வீழ்ந்து சுஷிலா தேவி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    காமன்வெல்த் போட்டியில் இதுவரை இந்திய அணி 3 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 7 பதக்கங்களை வென்றுள்ளது.

    ×