search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CommonWealthGames"

    • 92 கிலோ குத்துச் சண்டை போட்டி இறுதிபோட்டிக்கு இந்திய வீரர் சாகர் தகுதி,
    • மல்யுத்த பிரிவில் இந்திய வீரர் தீபக் நெஹ்ரா வெண்கலம் வென்றார்.

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 67 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ரோகித் டோகாஸ் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.

    இதேபோல் ஆண்களுக்கான 92 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டி அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சாகர், நைஜீரியாவின் இஃபியானிவை எதிர் கொண்டார். இப்போட்டியில் சாகர் 5-0 என்ற கணக்கில் வெற்றி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.  


    ஆண்களுக்கான 97 கிலோ மல்யுத்த பிரிவில் இந்திய வீரர் தீபக் நெஹ்ரா பாகிஸ்தானின் தயாப் ரசாவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் 10-2 என்ற கணக்கில் பாகிஸ்தான் வீரரை வீழ்த்திய தீபக் நெஹ்ரா வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.

    • இறுதிச் சுற்றில் நைஜீரிய வீராங்கனை தோல்வி.
    • காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 13 தங்கம் வென்றுள்ளது.

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 72 நாடுகள் பங்கேற்றுள்ளன.

    இதில் பாரா டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பவினா படேல், நைஜீரிய வீராங்கனை இஃபேச்சுக்வுடே இக்பியோ வை எதிர் கொண்டார். இப்போட்டியில் 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்ற பவினா படேல் தங்கப்பதக்கம் வென்றார். 


    இதே பிரிவில் இந்திய வீராங்கனை சோனல்பென் படேல், இங்கிலாந்தின் சூ பெய்லியை 3-5 என்ற கணக்கில் தோற்கடித்து இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தார்.

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் இது எனது முதல் பதக்கம் என்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் இந்தப் பதக்கத்தை எனது கணவர், குடும்பத்தினர், பயிற்சியாளர் மற்றும் அனைத்து நாட்டு மக்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என்றும் சோனல்பென் படேல் தெரிவித்துள்ளார். இந்தியா காமன்வெல்த் போட்டிகளில் இதுவரை 13 தங்கம் வென்றுள்ளது.

    • இந்திய அணி பளு தூக்குதலில் 2 வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.
    • இந்நிலையில் ஜூடோவில் இன்று வெள்ளி வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. இந்தியா இதுவரை 3 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது.

    நான்காவது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இதுவரை இன்றைய நாளின் சிறப்பம்சமாக லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதிசெய்து வரலாறு படைத்தது.

    இதற்கிடையே, இன்று நடைபெற்ற மகளிர் ஜூடோ 48 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சுஷிலா தேவி வெற்றி பெற்று பதக்கத்தை உறுதி செய்தார். மொரீஷியஸின் பிரிசில்லாவை 10-0 என்ற கணக்கில் வீழ்த்தி அவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

    இந்நிலையில், இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் மைக்கேலா வைட்பூவிடம் வீழ்ந்து சுஷிலா தேவி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    காமன்வெல்த் போட்டியில் இதுவரை இந்திய அணி 3 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 7 பதக்கங்களை வென்றுள்ளது.

    ×