என் மலர்
நீங்கள் தேடியது "VijayKumar Yadav"
- இந்திய அணி பளு தூக்குதலில் ஒரு வெண்கலம் வென்றுள்ளது.
- இந்நிலையில் இன்று ஜூடோவில் வெண்கலம் வென்றுள்ளது.
பர்மிங்காம்:
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. இந்தியா இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளது.
நான்காவது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆண்கள் ஜூடோ 60 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் விஜய்குமார் யாதவ் வெற்றி பெற்று பதக்கத்தை உறுதி செய்தார். சைப்ரசின் பெட்ரோசை 10-0 என்ற கணக்கில் வீழ்த்தி அவர் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் இன்றைய தினத்தில் இந்திய அணி ஜூடோவில் 2வது பதக்கத்தை வென்றுள்ளது.
காமன்வெல்த் போட்டியில் இதுவரை இந்திய அணி 3 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்களை வென்றுள்ளது.






