search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இந்திய கேப்டன்களில் சாதனை படைத்த ரோகித் சர்மா
    X

    இந்திய கேப்டன்களில் சாதனை படைத்த ரோகித் சர்மா

    • ரோகித் சர்மா எதிர்கொண்ட 2-வது பந்திலேயே சிக்சரை விளாசினார்.
    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியின் போது ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது.

    வெஸ்ட் இண்டீஸ்-இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.

    165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா அணி 19 ஓவரிலேயே 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக சூர்யாகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டார். இந்த போட்டியில் 1 சிக்சர் அடித்ததன் மூலம் இந்திய கேப்டன் ரோகித் சர்மா சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

    ஆக்கோரஷமாக விளையாடிய ரோகித் சர்மா தாம் எதிர்கொண்ட 2-வது பந்திலேயே சிக்சரை விளாசினார். இதனைத் தொடர்ந்த அதே ஓவரில் பவுண்டரியும் விளாசினார். 5 பந்துகளை எதிர்கொண்ட அவர் 11 ரன்கள் எடுத்திருந்த போது திடீரென்று காயம் காரணமாக வெளியேறினார்.

    1 சிக்சர் அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய இந்திய கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். அவர் டி20 போட்டிகளில் 60 சிக்சர்களை விளாசியுள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக முன்னாள் கேப்டன் விராட் கோலி உள்ளார்.

    Next Story
    ×