என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஆப்கானிஸ்தான் அணியில் இப்ராகிம் ஜத்ரன் சற்று தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினார்.
    • கடைசி தருணத்தில் அதிரடி காட்டிய ரஷித் கான் 18 ரன்கள் விளாசினார்.

    சார்ஜா:

    ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. சார்ஜாவில் இன்று நடைபெறும் சூப்பர்-4 ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்ங்கை தேர்வு செய்தது.

    முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க ஜோடி 36 ரன்களில் பிரிந்தது. அதன்பின்னர் நிதானமாக விளையாடினர். எனினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன.இப்ராகிம் ஜத்ரன் சற்று தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் என்ற கவுரவமான ஸ்கோரை எட்டியது.

    அதிகபட்சமாக இப்ராகிம் ஜத்ரன் 35 ரன்கள் சேர்த்தார். ஹஸ்ரத்துல்லா 21 ரன்கள், ரஹ்மானுல்லா 17 ரன்கள், கரிம் ஜனத் 15 ரன்கள் எடுத்தனர். கடைசி தருணத்தில் அதிரடி காட்டிய ரஷித் கான் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 18 ரன்கள் விளாசினார். பாகிஸ்தான் தரப்பில் ஹரிஸ் ராப் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது.

    • ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார்.
    • சூப்பர் 4 சுற்றின் 2 போட்டியிலும் தினேஷ் கார்த்திக்குக்கு 11 பேர் கொண்ட அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார். ஆனால் முதல 2 போட்டியில் மட்டுமே அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தது.

    'சூப்பர் 4' சுற்றின் 2 போட்டியிலும் தினேஷ் கார்த்திக்குக்கு 11 பேர் கொண்ட அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடைசி கட்டத்தில் அவர் சிறப்பாக ஆடக்கூடியவர். அவர் இல்லாதது பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இந்த நிலையில் தினேஷ் கார்த்திக்கை ஆடும் லெவனில் சேர்க்காதது தவறான முடிவு என்று முன்னாள் வீரர்கள் விமர்சித்து கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    முன்னாள் விக்கெட் கீப்பரும், தேர்வு குழு முன்னாள் தலைவருமான கிரண் மோரே கூறியதாவது:-

    தினேஷ் கார்த்திக் தன்னை ஒரு சிறந்த பினிஷர் என்பதை நிரூபித்துள்ளார். அவருக்கு வாய்ப்பு வழங்காதது நியாயம் இல்லை. அவரை ஆடும் லெவனில் தேர்வு செய்து இருக்க வேண்டும். அவருக்கு வாய்ப்பு கொடுக்காதது தவறான முடிவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறும்போது, 'தினேஷ் கார்த்திக்கை ஆடும் லெவனில் தேர்வு செய்து இருக்க வேண்டும் அவரை அவரது பங்களிப்பில் இடம்பெற செய்ய வேண்டும் என்றார்.

    இதேபோல பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் தினேஷ் கார்த்திக்குக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தி உள்ளார்.

    • தமிழக அணிகளை தமிழ்நாடு தடகள சங்ச செயலாளர் சி.லதா அறிவித்துள்ளார்.
    • 14, 16, 18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது.

    சென்னை:

    33-வது தென்மண்டல ஜூனியர் தடகள போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் வருகிற 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது.

    14, 16, 18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான தமிழக அணிகளை தமிழ்நாடு தடகள சங்ச செயலாளர் சி.லதா அறிவித்துள்ளார். 98 சிறுமிகளும், 100 சிறுவர்களும் ஆக மொத்தம் தமிழக அணிக்கு 198 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    • கார்சியா அரையிறுதி ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனையான ஒன்ஸ் ஜபேரை (துனிசியா) சந்திக்கிறார்.
    • கேஸ்பர்ரூட் முதல் முறையாக அமெரிக்க ஓபனில் அரையறுதிக்கு நுழைந்துள்ளார்.

    நியூயார்க்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் 12-ம் நிலை வீராங்கனையான கோகோ கவூப் (அமெரிக்கா)-கரோலின் கார்சியா ( பிரான்ஸ் ) மோதினார்கள்.

    இதில் 17-வது வரிசையில் உள்ள கார்சியா 6-3 , 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்றார். 28 வயதான அவர் முதல் முறையாக கிராண்ட் சிலாம் அரைஇறுதிக்கு முன்னேறி உள்ளார்.

    கார்சியா அரையிறுதி ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனையான ஒன்ஸ் ஜபேரை (துனிசியா) சந்திக்கிறார். ஜபேர் காலிறுதி ஆட்டத்தில் 6-4 , 7-6 ( 7-4 ) என்ற நேர் செட் கணக்கில் அஜ்லா டாம்லிஜோனோ விச்சை (ஆஸ்திரேலியா) வீழ்த்தினார்.

    28 வயதான அவர் அமெரிக்க ஓபன் போட்டியில் முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் 5-ம் நிலை வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே)-மேட்டோ பெரிடினி (இத்தாலி) மோதினார்கள்.

    இதில் ரூட் 6-1, 6-4, 7-6(7-4) என்ற நேர் செட் கணக்கில் 13-வது வரிசையில் உள்ள பெரிடினியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    23 வயதான கேஸ்பர்ரூட் முதல் முறையாக அமெரிக்க ஓபனில் அரையறுதிக்கு நுழைந்துள்ளார்.

    • அர்ஷ்தீப் சிங், சாஹல் மற்றும் புவனேஷ்வர்குமார் சிறப்பாக செயல்பட்டனர்.
    • தோல்விகள், அணி குழுவாக இணைந்து பணியாற்றுவதை புரிய வைக்கும்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் துபாயில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியாவை இலங்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த தோல்வி மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு குறைந்துள்ளது. இனி பாகிஸ்தான் உள்பட பிற அணிகள் தோல்வி அடைந்தால் மட்டுமே இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. போட்டி நிறைவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளதாவது:

    நேற்றைய போட்டியில் இந்திய அணி 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்தது. இரண்டாவது பாதியில் நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. பெரிய ஸ்கோரை எடுத்து பின்னர் சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி வெற்றி பெறலாம் என நினைத்திருந்தோம். ஆனால் எங்களது திட்டம் பலிக்கவில்லை. இலங்கை வீரர்கள் நீண்டநேரம் நின்று சிறப்பாக பேட்டிங் செய்தனர். அர்ஷ்தீப் சிங் அற்புதமாக பந்து வீசினார்.சாஹல் மற்றும் புவி ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டனர்.

    மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆக்ரோஷமாக பந்துவீசி விக்கெட்டுகளைப் பெற்றனர். நாங்கள் பதிலளிக்க வேண்டிய கேள்விகள் நிறைய உள்ளன, கடந்த தொடர்களில் விளையாடும் போது சிலவற்றிற்கான பதில்களைக் கண்டுபிடித்துள்ளோம். உண்மையாகச் சொல்வதென்றால், இந்த நாட்களில் எங்களது சக வீரர்கள் சமூக ஊடகங்களை அதிகம் பார்ப்பதில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேட்சை விட்டதால் அர்ஷ்தீப் ஏமாற்றமடைந்தார். இது போன்ற தோல்விகள் அணி எப்படி ஒரு குழுவாக இணைந்து பணியாற்றுவது என்பதைப் புரிய வைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நேற்று தொடங்கிய இந்த கிரிக்கெட் தொடர் ஒரு மாத காலம் நடைபெறுகிறது.
    • ராணுவ அணிகள், கப்பல்படை, இந்திய விமானப்படை அணிகள் பங்கேற்கின்றன.

    விசாகப்பட்டினம்:

    முப்படை வீரர்களுக்கான 70-ஆவது கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க விழா ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ரயில்வே மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

    கிழக்கு கப்பல்படை தலைமையின் கீழ் முதன் முறையாக நடைபெறும் இந்த போட்டியை கப்பல் படையின் தலைமை மருத்துவ அதிகாரி ஆர் ரவி தொடங்கி வைத்தார்.

    ஒருமாத காலம் நடைபெறும் இந்த தொடரில் இந்திய ராணுவம் சிவப்பு, இந்திய ராணுவம் பச்சை, இந்திய கப்பல்படை மற்றும் இந்திய விமானப்படை உள்ளிட்ட அணிகள் கலந்து கொள்கின்றன.

    இந்த போட்டிகள் அக்டோபர் மாதம் 2ந் தேதிவரை 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட், ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி-20 போட்டிகளாக நடைபெறுகிறது.

    • முதலில் ஆடிய இந்திய அணியில் ரோகித் சர்மா 72 ரன்கள் குவித்தார்.
    • இலங்கை அணி வீரர் மெண்டிஸ் 57 ரன் அடித்தார்.

    ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. துபாயில் இன்று நடைபெற்ற சூப்பர் 4 பிரிவு ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ராகுல் 6 ரன்னில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் சூர்யகுமார் யாதவ், ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார்.

    அதிரடியில் இறங்கிய ரோகித் சர்மா, 72 ரன்னில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் 34 ரன்னில் அவுட்டானார். பாண்ட்யா மற்றும் ரிஷப் பண்ட் 17 ரன்னிலும் ஹூடா 3 ரன்னிலும் வெளியேறினர். இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை எடுத்தது.

    பின்னர் விளையாடிய இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் நிசாங்கா 52 ரன்னும், மெண்டிஸ் 57 ரன்னும் குவித்தனர். பானுகா ராஜபக்சே 25 ரன்னும், கேப்டன் தசன் சனாகா 33 ரன்னும் அடித்து களத்தில் இருந்தனர். இலங்கை அணி 19.5 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்தது. இதையடுத்து அந்த அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இந்தியா ரோகித் சர்மா அரை சதத்தால் 173 ரன்களை எடுத்தது.

    துபாய்:

    ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் இறங்கினர். ராகுல் 6 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய விராட் கோலி டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனால் இந்தியா 13 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்தது.

    அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ், ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார். முதலில் நிதானமாக ஆடிய ரோகித் சர்மா, அதிரடியில் இறங்கினார்.

    சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரை சதம் கடந்தார்.

    3-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா, சூர்யகுமார் ஜோடி 97 ரன்களை சேர்த்த நிலையில், ரோகித் சர்மா 72 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சூர்யகுமார் 34 ரன்னில் அவுட்டானார். பாண்ட்யா மற்றும் ரிஷப் பண்ட் 17 ரன்னிலும் ஹூடா 3 ரன்னிலும் வெளியேறினர்.

    இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை எடுத்தது. அஷ்வின் 13 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இலங்கை சார்பில் மதுஷன்கா 3 விக்கெட்டும், டாசன் ஷனகா, கருணரத்னே ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.

    • டி20 கிரிக்கெட்டில் இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ளன.
    • இதில் இந்தியா 17 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    துபாய்:

    ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடையே தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

    இந்நிலையில், துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் பிஷ்னோய்க்கு பதில் அஸ்வின் இடம்பிடித்துள்ளார். அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 232 ரன்கள் எடுத்துள்ளது.
    • அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 233 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    கெய்ர்ன்ஸ்:

    நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது.

    முதலாவது ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியாவின் கெய்ர்ன்ஸில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 232 ரன்கள் எடுத்தனர். கான்வே 46 ரன்னும், வில்லியம்சன் 45 ரன்னும், லாதம் 43 ரன்னும் எடுத்தனர்.

    ஆஸ்திரேலியா சார்பில் மேக்ஸ்வெல் 4 விக்கெட்டும், ஹேசில்வுட் 3 விக்கெட்டும், ஸ்டார்க், ஆடம் ஜாம்பா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    இதையடுத்து, 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் தொடக்கத்தில் அசத்தலாக பந்து வீசினர். இதனால் 44 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    அடுத்து இறங்கிய அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன் ஆகியோர் நிதானமாக ஆடி அரை சதமடித்தனர். இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்தது. அலெக்ஸ் கேரி 85 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் இழப்புக்கு 233 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. கிரீன் 89 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    நியூசிலாந்து சார்பில் போல்ட் 4 விக்கெட்டும், மேட் ஹென்றி, பெர்குசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • காயம் காரணமாக முன்னணி வீரர் ரஸ்ஸி வான் டெர் டுசென் சேர்க்கப்படவில்லை.

    ஜோகன்னஸ்பர்க்:

    7-வது டி20 உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன.

    நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.

    முதல் சுற்றில் விளையாடும் 8 அணிகளில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். இந்தப் போட்டிக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே உள்ளிட்ட 8 நாடுகள் முதல் சுற்றில் விளையாடுகிறது.

    இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்கா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்த ரஸ்ஸி வான் டெர் டுசென் இடம் பெறவில்லை.

    தென் ஆப்பிரிக்கா அணி விவரம் வருமாறு:

    டெம்பா பவுமா (கேப்டன்), குயிண்டன் டி காக், ஹென்ரிச் கிளாசன், ஹெண்ட்ரிக்ஸ், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, ஆன்ரிச் நோர்ஜே, வெய்ன் பார்னெல், டுவைன் பிரிடோரியஸ், ககிசோ ரபடா, ரீல்லி ரோசவ், தப்ரைஸ் ஷம்சி, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ். மாற்று வீரர்கள்: பிஜோர்ன் பார்டுயின், மார்கோ ஜேன்சன், பெலுக்வாயோ.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நவோமி ஒசாகா முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.
    • மூன்றாவது சுற்றில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் தோல்வி அடைந்தார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த அரினா சபலென்கா, அமெரிக்காவின் டேனியல் கொலின்சுடன் மோதினார். இதில் சபலென்கா 3-6, 6-3, 6-2 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    இதேபோல், செக் குடியரசைச் சேர்ந்த பிளிஸ்கோவா, பெலாரசைச் சேர்ந்த விக்டோரியா அசரென்காவுடன் மோதினார். இதில் பிளிஸ்கோவா அபாரமாக விளையாடி 7-5, 6-7, 6-2 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேற்றம் கண்டார்.

    ×