என் மலர்
விளையாட்டு
- 3 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
- 20 ஓவர் கிரிக்கெட்டில் தவறுகள் மிக குறைவாக இருக்க வேண்டும் என ரோகித் சர்மா கருத்து
ஐதராபாத்:
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேற்று ஐதராபாத்தில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன் எடுத்தது. கேமரூன் க்ரீன் 52 ரன்னும், டிம் டேவிட் 54 ரன்னும் எடுத்தனர். இந்திய தரப்பில் அக்சர் பட்டேல் 3 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார், சாகல், ஹர்ஷல் பட்டேல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் வீராட் கோலி (63 ரன்), சூர்யகுமார் யாதவ் (69 ரன்) சிறப்பாக விளையாடினர். இந்தியா 19.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 187 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 3 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-
ஐதராபாத் ஒரு சிறப்பான இடம். இந்தியா அணி மற்றும் ஐ.பி.எல். போட்டி என எங்களுக்கு நிறைய நினைவுகள் உண்டு. இது ஒரு சிறந்த தருணம். நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பினோம். அதை சிறப்பாக செய்தோம். வீரர்கள் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் முன்னேற்றம் அடைந்து வருவது மிகப்பெரிய பலமாகும்.
சில நேரங்களில் நிறைய விஷயங்களை செய்யும்போது தவறு செய்யலாம். இது 20 ஓவர் கிரிக்கெட். தவறுகள் மிக குறைவாக இருக்க வேண்டும். நாங்கள் எங்களுக்கான வாய்ப்புகளை எடுத்து கொண்டு தைரியமாக செயல்பட்டோம் என்று நினைக்கிறேன். அது சில நேரங்களில் வராமல் போகலாம். ஆனால் அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் நிறைய பகுதிகளில் முன்னேற்றம் அடைய வேண்டும். குறிப்பாக கடைசி கட்ட பந்து வீச்சில் முன்னேற்றம் அடைவது அவசியம்.
பும்ரா, ஹர்ஷல் பட்டேல் இருவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு அணிக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு சிறிது நேரம் கொடுக்க வேண்டும். அவர்கள் மீண்டும் சிறப்பான பாதைக்கு திரும்புவார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறும்போது, இது ஒரு நல்ல தொடராக இருந்தது. இது போதுமான ஸ்கோர் என்று நினைத்தோம். கொஞ்சம் பனி தாக்கம் இருந்தது. இதனால் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்.
சில சமயங்களில் எங்களது திட்டத்தை செயல்படுத்த தவறிவிட்டோம். உலகத்தரம் வாய்ந்த அணிக்கு எதிராக மூன்று ஆட்டங்களில் விளையாடியது சிறப்பானதாக இருந்தது, என்றார்.
இந்திய அணி அடுத்து தென் ஆப்பிரிக்காவுடன் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஆட்டம் வருகிற 28-ந்தேதி திருவனந்தபுரத்தில் நடக்கிறது.
- ஏராளமான பதக்கங்களை வென்றுள்ளார் கபடி வீரர் செந்தில்
- கபடி விளையாடி முடித்த உடனே களத்தில் மயங்கி விழுந்தார்
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோயில் பகுதியில் கபடிப் போடி நடைபெற்றது. இதில், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான கபடி அணிகள் பங்கேற்றன. போட்டி முடிந்த சற்று நேரத்தில் நன்னிலத்தை சேர்ந்த கபடி வீரர் செந்திலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த சக வீரர்கள அதிர்ச்சி அடைந்தனர்.உடனடியாக செந்திலுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கபடி போட்டிகளில் ஏராளமான பதக்கங்களை வென்றுள்ள கபடி வீரர் செந்திலின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஒரு ஆண்டில் அதிக வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.
- பாகிஸ்தான் அணி 2021-ம் ஆண்டில் 20 வெற்றி பெற்று முதலிடத்தில் இருந்தது.
ஐதராபாத்தில் நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி சாதனை படைத்தது. இந்த ஆண்டில் 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா பெற்ற 21-வது வெற்றி இதுவாகும். இதனால் ஒரு ஆண்டில் அதிக வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.
இதற்கு முன்பு பாகிஸ்தான் அணி 2021-ம் ஆண்டில் 20 ஓவர் கிரிக்கெட்டில் 20 வெற்றி பெற்று முதலிடத்தில் இருந்தது. அதை இந்தியா முறியடித்தது. இந்தியா இந்த ஆண்டில் இதுவரை 20 ஓவர் கிரிக்கெட்டில் 29 ஆட்டத்தில் விளையாடி 21-ல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
- மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா ஏ அணி கைப்பற்றியது.
- குல்தீப் யாதவ் ஹாட்ரிக் சாதனை உள்பட 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து ஏ அணி, இந்திய ஏ அணியுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் இந்திய ஏ அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், நேற்று 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற நியூசிலாந்து ஏ அணி முதலில் பேட் செய்தது. 47 ஓவர்களில் 219 ரன்களுக்கு அந்த அணி ஆல்-அவுட் ஆனது. இந்திய வீரர் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் சாதனை உள்பட 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் 220 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய ஏ அணி 34 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 222 ரன்கள் அடித்ததுடன், 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் பிரித்வி ஷா 77 ரன்கள் குவித்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 'ஏ' அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
- பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் 67 பந்துகளில் 88 ரன் குவித்தார்.
- டி20 தொடரில் இரு அணிகளும் தலா 2 போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.
கராச்சி:
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, அந்நாட்டு அணியுடன் 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை முடிந்த 3 போட்டிகளின் முடிவில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது.
இந்நிலையில் 4வது டி20 ஆட்டம் கராச்சி நகரில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஒவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிஸ்வான் 67 பந்துகளில் 88 ரன்களும், பாபர் அசாம் 28 பந்துகளில் 36 ரன்னும் எடுத்தனர். ஷான் மசூத் 21 ரன் அடித்தார்.
இதனைத்தொடர்ந்து 167 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களம் இறங்கியது. அந்த அணி வீரர் பென் டுக்கெட் 33 ரன்னும், ஹாரி புரூக் 34 ரன்னும் அடித்தனர். கேப்டன் மொயின் அலி 29 ரன்களில் ஆட்டமிழந்தார். டேவ்சன் 34 ரன் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிந்தனர்.
19.2 ஒவர் முடிவில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன் எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக முகமது நவாஸ் மற்றும் ஹரிஸ் ரூப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஹஸ் நைன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த தொடரில் தற்போது 2-2 என்ற வெற்றிக் கணக்கில் பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் சமநிலையில் உள்ளன.
- முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 186 ரன் எடுத்தது.
- இந்திய தரப்பில் சூரியகுமார் யாதவ் 36 பந்துகளில் 69 ரன் குவித்தார்.
ஐதராபாத்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால் டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியிருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. அந்த அணி தொடக்க வீரர் கேமரூன் கிரீன் 52 ரன்னில் அவுட்டானார். கேப்டன் ஆரோன் பின்ச் 7 ரன்னிலும், ஸ்டீவ் ஸ்மித் 9 ரன்னிலும், மேக்ஸ்வெல் 6 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். டிம் டேவிட் 54 ரன் அடித்தார்.
இதையடுத்து 187 ரன் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் கே.எல். ராகுல் ஒரு ரன்னுடன் வெளியேற, கேப்டன் ரோகித் சர்மா 17 ரன் எடுத்தார். பின்னர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடிய விராட் கோலி 48 பந்துகளில் 63 ரன்னும், சூரியகுமார் யாதவ் 36 பந்துகளில் 69 ரன்னும் எடுத்தனர்.

ஹர்திக் பாண்ட்யா 25 ரன் அடித்த நிலையில் களத்தில் இருந்தார். இந்திய அணி 19.5 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
- 3வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது.
- ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக டிம் டேவிட் 54, கேமரூன் கிரீன் 52, டேனியல் சாம்ஸ் 28 ரன்கள் எடுத்தனர்.
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் மொகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாக்பூரில் நடந்த மழை பாதிப்புக்குள்ளான 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்நிலையில், அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஆரோன் பின்ச் மற்றும் கேமரூன் கிரீன் களமிறங்கினர்.ஒருபுறம் பின்ச் நிதானத்தை கடைபிடிக்க, மறுபுறமோ கிரீன் பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டார்.
19 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், 52 ரன்னில் அவுட்டானார். பின்ச் 7 ரன்னிலும், ஸ்டீவ் ஸ்மித் 9 ரன்னிலும், மேக்ஸ்வெல் 6 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அணியை டிம் டேவிட் சரிவில் இருந்து மீட்டார். அவரின் அரைசதத்தின் (54) உதவியுடன் ஆஸ்திரேலிய அணி நல்ல ஸ்கோரை எட்டியது.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
- கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
- இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் மொகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாக்பூரில் நடந்த மழை பாதிப்புக்குள்ளான 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது.
இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் முழுவீச்சில் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலியா அணி 12.2 ஓவர் முடிவில் 112 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்துள்ளனர்.
- டோனி ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலக போவதாக சிலர் பதிவிட்டனர்.
- இதுதான் உற்சாகமான செய்தியா..? என ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி, திடீரென தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் இன்று மதியம் 2 மணிக்கு உங்கள் அனைவருடனும் சில உற்சாகமான தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறி இருந்தார். பேஸ்புக்கில் நேரலையில் ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். இதனால் ஏதோ புதிய அறிவிப்பை வெளியிடப்போகிறார் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.
டோனி வெளியிடும் முக்கிய தகவல் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்கத் தொடங்கினர். டோனி ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலக போவதாக சிலர் பதிவிட்டனர். டோனி புதிய தொழில் தொடங்குவது அல்லது சினிமா படம் தயாரிப்பது பற்றி தகவல் தெரிவிப்பார் என்றும் தகவல் வெளியானது. மேலும் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு டோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் அதை பற்றி தெரிவிப்பார் என்றும் சில ரசிகர்கள் கணித்தனர்.
ஆனால் இந்த யூகங்களுக்கு எல்லாம் மாறாக, பேஸ்புக் நேரலையில் அவர் அறிவித்த விஷயம், இதெல்லாம் ஒரு விஷயமா? என்று ரசிகர்களை பேச வைத்தது. சொன்னபடி பகல் 2 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட டோனி, ஓரியோ பிஸ்கட் ஒன்றை அறிமுகம் செய்துவிட்டு எழுந்து சென்றார். இதனால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்தியாவில் டோனி மீண்டும் ஓரியோவை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த பிராண்ட் முன்னதாக 2011 இல் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்றது. இன்றைய பிராண்ட் விளம்பரத்தில், முந்தைய வெளியீடு மற்றும் உலகக் கோப்பை வெற்றியை தற்போதைய சூழ்நிலையுடன் ஒப்பிட்டார். இந்தியா மீண்டும் உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்றும் தெரிவித்தார்.
இதுதான் உற்சாகமான செய்தியா..? என ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். தனது பிராண்ட் விளம்பரத்திற்காக, தன்னை பின்தொடரும் கோடிக்கணக்கான ரசிகர்களை பயன்படுத்தியிருப்பதாகவே நினைக்கத் தோன்றுகிறது. இதற்காக ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.
- எம்.எஸ்.டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக உள்ளார்.
- டோனி ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலக போவதாக சிலர் பதிவிட்டனர்.
ராஞ்சி:
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட அவர் ஐ.பி.எல் போட்டியில் விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக உள்ளார்.
இந்த நிலையில் டோனி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் இன்று (25-ந்தேதி) மதியம் 2 மணிக்கு உங்கள் அனைவருடனும் சில உற்சாகமான தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறி இருந்தார்.
பேஸ்புக்கில் நேரலையில் ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். இதனால் ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டோனி வெளியிடும் முக்கிய தகவல் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்தனர். டோனி ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலக போவதாக சிலர் பதிவிட்டனர்.
டோனி புதிய தொழில் தொடங்குவது அல்லது சினிமா படம் தயாரிப்பது பற்றி தகவல் தெரிவிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு டோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் அதை பற்றி தெரிவிப்பார் என்றும் ரசிகர்கள் கணித்து இருக்கிறார்கள்.
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் டோனி விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்து இருந்தது. உள்ளூர் ரசிகர்கள் முன்பு விடைபெற விரும்புகிறேன் என்று டோனியும் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அர்ஜூன் எரிகைசி அரை இறுதியில் வியட்நாம் நாட்டை சேர்ந்த லயம் குவாங் லியை தோற்கடித்தார்
- இறுதி போட்டியின் தொடக்க சுற்றில் முதல் 2 ஆட்டங்களில் கார்ல்சென் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
ஜூலியஸ் பேர் ஜெனரேசன் கோப்பை ரேபிட் செஸ் போட்டி ஆன் லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசி அரை இறுதியில் வியட்நாம் நாட்டை சேர்ந்த லயம் குவாங் லியை தோற்கடித்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு அரை இறுதியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல் செனை (நார்வே) ஜெர்மனியின் வின்சென்ட் நெய்மரை வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் இன்று கார்ல்சென்-அர்ஜூன் எரிகைசி மோதினர்.
இறுதி போட்டியின் தொடக்க சுற்றில் முதல் 2 ஆட்டங்களில் கார்ல்சென் வெற்றி பெற்றார். 3-வது ஆட்டம் டிரா ஆனது. இதன் மூலம் கார்ல்சென் 2.5-0.5 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் உள்ளார்.
இறுதி போட்டியை டை பிரேக்கருக்கு கொண்டு செல்ல இந்திய வீரர் அர்ஜூன் இறுதி போட்டியின் 2-வது சுற்றில் ( 4 ஆட்டம்) வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
- ஐதராபாத்தில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தகவல்.
- இந்திய அணி புதிய உலக சாதனை படைக்க வாய்ப்பு.
ஐதராபாத்:
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. மொகாலியில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், நாக்பூரில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்ற இரண்டு சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஐதராபாத்தில் இன்று வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் ஆட்டத்தின் போது மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
இந்த நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற பாகிஸ்தானின் உலக சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்தினால், கோப்பையை வெல்வதுடன் டி20 ஒரு காலண்டர் வருடத்தில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற உலக சாதனை படைக்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.






