என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • 8 ஓவர்கள் மட்டுமே கொண்டு இந்த போட்டியானது நடைபெற்றதனால் இந்த ஆட்டத்தில் கூடுதல் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார்.
    • பாண்டியாவிற்கு பின்னர் களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் இரண்டே பந்துகளில் போட்டியை அருமையாக பினிஷிங் செய்து கொடுத்தார்.

    இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. பலத்த மழை காரணமாக தாமதமாக துவங்கியது. அதன் காரணமாக 8 ஓவர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 8 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அக்சர் பட்டேல் 2 ஓவர்கள் வீசி 13 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

    பின்னர் 91 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 7.2 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் 8 ஓவர்கள் மட்டுமே கொண்டு இந்த போட்டியானது நடைபெற்றதனால் இந்த ஆட்டத்தில் கூடுதல் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார்.

    அதன்படி இந்திய அணி சேசிங் செய்த போது அதிரடி ஆட்டக்காரரான ரிஷப் பண்ட் முன்கூட்டியே களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இறுதிவரை அவர் களமிறங்காமலே போய்விட்டார். அதேவேளையில் பாண்டியாவிற்கு பின்னர் களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் இரண்டே பந்துகளில் போட்டியை அருமையாக பினிஷிங் செய்து கொடுத்தார்.

    ரிஷப் பண்ட்டிற்கு முன்னதாக தினேஷ் கார்த்திக் களமிறங்க என்ன காரணம் என்பது குறித்து ரோஹித் சர்மா கூறியதாவது:-

    ரிஷப் பண்ட்டை களம் இருக்கலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் இறுதி நேரத்தில் டேனியல் சாம்ஸ் ஆப் கட்டர்களை வீசுவார் என்பதனால் தினேஷ் கார்த்திக்கை களம் இறக்க நினைத்தேன்.

    அதேபோன்று அவரும் தனது ரோலை மிகச் சிறப்பாக செய்து கொடுத்து போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார் என தினேஷ் கார்த்திகை ரோகித் சர்மா பாராட்டினார்.

    • நாங்கள் போட்டி ஐந்து ஓவர் வரை தான் நடைபெறும் என்று நினைத்தோம்.
    • இந்த போட்டிக்கான திட்டங்கள் எங்களிடம் சரியாக இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

    இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

    முதலாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2 டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

    நேற்று போட்டிக்கு முன்பாக பெய்த பலத்த மழை காரணமாக போட்டி தாமதமாக துவங்கியது. அதனால் போட்டியானது 8 ஓவர்கள் வரை மட்டுமே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பந்து வீசிய இந்திய அணியானது மிகச் சிறப்பாக பந்துவீசி 8 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 90 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தது.

    இதனையடுத்து 91 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 7.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 92 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இந்த தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

    தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பிஞ்ச் கூறுகையில் :

    நாங்கள் போட்டி ஐந்து ஓவர் வரை தான் நடைபெறும் என்று நினைத்தோம். ஆனால் கூடுதலாக மூன்று ஓவர் அதிகமாக வழங்கப்பட்டது. இந்த போட்டிக்கான திட்டங்கள் எங்களிடம் சரியாக இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ரோகித் சர்மா மிகச்சிறப்பாக பேட்டிங் செய்தார்.

    அதேபோன்று இந்திய அணியின் பவுலரான அக்சர் பட்டேல் வீசிய இரண்டு ஓவர்கள் இந்த போட்டியில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தின. அவருடைய பந்துவீச்சு எங்களது தோல்விக்கு காரணமாக அமைந்தது. எங்களது அணி சார்பாக மேத்யூ வேட் மிகச் சிறப்பாக விளையாடினார். அதேபோன்று ஆடம் ஜாம்பா எங்கள் அணியில் மிகச் சிறப்பாக பந்து வீசினார்.

    இவ்வாறு ஆரோன் பிஞ்ச் கூறினார்.

    • ஆக்கி இந்தியா அமைப்பின் பொருளாளராக தமிழகத்தை சேர்ந்த சேகர் ஜே.மனோகரன் தேர்வு பெற்றுள்ளார்.
    • ஆக்கி இந்திய அமைப்பின் தலைவராக முன்னாள் வீரர் திலீப் திர்கே தேர்வாகி உள்ளார்.

    புதுடெல்லி:

    ஆக்கி இந்தியா அமைப்பின் பொருளாளராக தமிழகத்தை சேர்ந்த சேகர் ஜே.மனோகரன் தேர்வு பெற்றுள்ளார். அவர் ஏற்கனவே தமிழ்நாடு ஆக்கி யூனிட் தலைவராக இருக்கிறார்.

    ஆக்கி இந்திய அமைப்பின் தலைவராக முன்னாள் வீரர் திலீப் திர்கே தேர்வாகி உள்ளார். பொதுச் செயலாளராக போலநாத்தும், துணைத் தலைவர்களாக அசிமா அலி (ஜம்மு காஷ்மீர்), எஸ்.வி.எஸ். சுப்பிரமணிய குப்தா (கர்நாடகா) ஆகியோரும் ஒரு மனதாக தேர்வு பெற்றனர்.

    • ரோகித் சர்மாவின் ஆட்டம் மிகவும் அற்புதமாக இருந்தது.
    • வேகப்பந்து வீச்சுக்கு எதிராக விளையாடும் திறமை அவரை போல வேறு யாருக்கும் இல்லை.

    நாக்பூர்:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. மழையால் ஆட்டம் 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஆஸ்திரேலியா அணி 8 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 90 ரன் எடுத்தது.

    பின்னர் விளையாடிய இந்திய அணி 7.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை 25-ந்தேதி நடக்கிறது.

    கடைசி ஓவரில் முதல் பந்தில் சிக்சரும், 2-வது பந்தில் பவுண்டரியும் அடித்து வெற்றிக்கு தனது பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்திய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரோகித் சர்மாவின் ஆட்டம் மிகவும் அற்புதமாக இருந்தது. வேகப்பந்து வீச்சை அவர் எதிர் கொண்ட விதம் சிறப்பாக இருந்தது. மிகப்பெரிய வீரர் என்பதை அவரது ஆட்டம் வெளிப்படுத்தியது.

    வேகப்பந்து வீச்சுக்கு எதிராக விளையாடும் திறமை அவரை போல வேறு யாருக்கும் இல்லை. எனக்கு 2 பந்துகள் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அந்த பந்துகளில் நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன்.

    இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

    • ரோகித் சர்மா 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 20 பந்துகளில் 46 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • இந்த போட்டிக்கு முன்னதாக 172 சிக்சர்களுடன் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்டில் உடன் முதல் இடத்தில் இருந்தார் ரோகித் சர்மா.

    நாக்பூர்:

    ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. மொகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இன்று 2-வது டி20 போட்டி நடைபெற்றது. ஆடுகளத்தில் ஈரப்பதம் காரணமாக போட்டி 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு 91 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் அதிரடியால் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 20 பந்துகளில் 46 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்த போட்டியில் முதல் சிக்சர் அடித்ததன் மூலம் கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த போட்டிக்கு முன்னதாக 172 சிக்சர்களுடன் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்டில் உடன் முதல் இடத்தில் இருந்தார் ரோகித் சர்மா.

    இந்த நிலையில் இன்று அவரின் சாதனையை முறியடித்து சர்வதேச டி20களில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ரோகித் (176) பெற்றுள்ளார்.

    • அர்ஜூன் எரிகைசி அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.
    • முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவிய பிரக்ஞானந்தா அடுத்த இரு ஆட்டங்களையும் டிரா செய்தார்.

    நியூயார்க்:

    ரூ.1.21 கோடி பரிசு தொகைக்கான ஜூலியஸ் பேர் ஜெனரேசன் கோப்பை ரேபிட் செஸ் போட்டி ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது.

    இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசி கால்இறுதியில் அமெரிக்காவை சேர்ந்த 15 வயதான கிறிஸ்டோபர் யோவுடன் மோதினார்.

    4 விரைவு ஆட்டங்களில் இருவரும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றனர். இதனால் வெற்றியை தீர்மானிக்க டை பிரேக்கர் கடை பிடிக்கப்பட்டது. இதில் முதல் ஆட்டத்தில் அர்ஜூன் எரிகைசி வெற்றி பெற்றார். அடுத்த ஆட்டத்தில் டிரா செய்தார். இதன் மூலம் அர்ஜூன் எரிகைசி 3.5-2.5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

    அர்ஜூன் எரிகைசி அரை இறுதியில் வியட் நாம் நாட்டை சேர்ந்த லயம் குவாங்லியுடன் மோதுகிறார்.

    குவாங்லியம் கால் இறுதியில் 2.5-1.5 என்ற பள்ளிக்கணக்கில் அமெரிக்காவின் ஹன்ஸ் நீமனை தோற்கடித்தார்.

    சென்னை கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா கால்இறுதியில் ஜெர்மனியின் வின்சென்ட் ஜெய்மரை எதிர் கொண்டார். இதில் பிரக்ஞானந்தா 1-3 என்ற கணக்கில் தோற்றார்.

    முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவிய பிரக்ஞானந்தா அடுத்த இரு ஆட்டங்களையும் டிரா செய்தார். கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றால் டை பிரேக்கருக்கு செல்ல முடியும் என்ற சூழ்நிலை நிலவியது. ஆனால் கடைசி ஆட்டத்தில் அவர் 42-வது நககர்த்தலின் போது தோற்றார்.

    வின்சென்ட் கெய்மர் அரை இறுதியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல் செனை (நார்வே) சந்திக்கிறார். கார்ல்சென் கால் இறுதியில் அமெரிக்காவின் அரோனியனை 3-1 என்ற கணக்கில் தோற்கடித்தார்.

    • பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது.
    • ஆட்டத்தின் எந்த நிலையிலும் தன்னால் சிறப்பாக வீச இயலும் என்பதை அக்‌ஷர் படேல் நிரூபித்து இருக்கிறார்.

    நாக்பூர்:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

    நாக்பூரில் நடந்த இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா முதலில் ஆடியது. மழையால் ஆட்டம் 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அந்த அணி 8 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 90 ரன் எடுத்தது. மேத்யூ வேட் 20 பந்தில் 43 ரன்னும் ( 4 பவுண்டரி , 3 சிக்சர் ), கேப்டன் ஆரோன் பிஞ்ச் 15 பந்தில் 31 ரன்னும் ( 4 பவுண்டரி, 1 சிக்சர் ) எடுத்தனர். அக்ஷர் படேல் 2 விக்கெட்டும் , பும்ரா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய இந்தியா 4 பந்து எஞ்சி இருந்த நிலையில் இலக்கை எடுத்தது. அந்த அணி 7.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கேப்டன் ரோகித் சர்மா 20 பந்தில் 46 ரன்னும் ( 4 பவுண்டரி , 4 சிக்சர் ) , தினேஷ் கார்த்திக் 2 பந்தில் 10 ரன்னும் ( 1 பவுண்டரி, 1 சிக்சர் ) எடுத்தனர். ஆடம் ஜம்பா 3 விக்கெட்டும் , கம்மின்ஸ் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    இந்த வெற்றி மூலம் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இந்த வெற்றி குறித்து கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    நான் அதிரடியாக ஆடியது எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு நன்றாக அமையும் என்று நான் எதிர் பார்க்கவில்லை. விளையாடும் போது நம்மால் அதிகமாக திட்டமிட இயலாது. நிலைமையை சாதகமாக பயன்படுத்துவதே ஆட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

    பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது. பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பி இருக் கிறார். மெதுவாகவும், சீராகவும் அவர் தனது பந்து வீச்சு நிலைக்கு வந்துள்ளார்.நாங்கள் ஒரு குழுவாக இருப்பதால் அதை பெரி தாக அலச போவதில்லை.

    அக்‌ஷர் படேல் தனது பங்களிப்பை சரியான முறையில் பொருத்தி இருக்கிறார். ஆட்டத்தின் எந்த நிலையிலும் தன்னால் சிறப்பாக வீச இயலும் என்பதை நிரூபித்து இருக்கிறார்.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரே லியா 4 விக்கெட் வித்தியா சத்தில் வெற்றி பெற்று இருந்தது.

    இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை 25-ந்தேதி நடக்கிறது.

    • இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் 35 பந்துகளில் 81 ரன் குவித்தார்.
    • பாகிஸ்தான் வீரர் ஷான் மசூத் 65 ரன் அடித்தார்.

    கராச்சி:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இருந்தன.

    3வது டி20 போட்டி கராச்சியில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களை குவித்தது. 


    அந்த அணி தொடக்க வீரர் வில் ஜாக்ஸ் 40 ரன் அடித்தார். ஹாரி ப்ரூக் 35 பந்துகளில் 81 ரன்களும், பென் டக்கெட் 42 பந்துகளில் 70 ரன்களும் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதையடுத்து 222 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கம் முதலே தடுமாறியது. கேப்டன் பாபர் மற்றும் ரிஸ்வான் தலா 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். குஷ்தில் ஷா 29 ரன்கள் எடுத்து ஆட்டழிந்தார். முகமது நவாஸ் 19 ரன்னுடன் வெளியேறினார்.

    அதிகபட்சமாக பாகிஸ்தான் வீரர் ஷான் மசூத் 65 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    • முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 90 ரன் அடித்தது.
    • ஆடுகளம் ஈரப்பதம் காரணமாக போட்டி நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது.

    நாக்பூர்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. மொகாலியில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

    இரு அணிகளுக்கும் இடையே 2-வது டி20 போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற்றது. நேற்று பெய்த கனமழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் போட்டி நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. இறுதியாக 8 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது. இதை தொடர்ந்து டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 8 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 90 ரன் அடித்தது. 


    கேப்டன் ஆரன் பிஞ்ச் 31 ரன் அடித்தார். அதிகபட்சமாக மேத்யூ வாட் 43 ரன் குவித்து களத்தில் இருந்தார். இந்தியா தரப்பில் அக்சர் படேல் 2 விக்கெட்களையும், பும்ரா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். பின்னர் 91 ரன் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் 10 ரன்னுக்கு வெளியேறினார். சிறப்பாக விளைடியாக கேப்டன் ரோகித் சர்மா 46 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.

    விராத் கோலி 11 ரன்னும், பாண்ட்யா 9 ரன்னும் எடுத்தனர். தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 10 ரன் அடித்தார். 7.2 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 92 ரன் குவித்த இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 1-1 என்ற சமன் நிலையில் உள்ளது.

    • நேற்று பெய்த பலத்த மழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
    • 8 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளதால் இரு அணிகளும் முதல் பந்து முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.

    மொகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்தநிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் தோல்வி அடைந்தால் சொந்த மண்ணில் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இந்திய அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

    இந்த போட்டியில் ஆடுகளம் ஈரப்பதமாக இருப்பதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. வழக்கமாக 6.30 மணிக்கு டாஸ் போடப்படும். மைதானத்தில் பெரிய அளவில் மழை இல்லை என்றாலும் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

    இதனால் போட்டி நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இறுதியாக போட்டி 8 ஓவர்களாக (ஒரு அணிக்கு ) குறைக்கப்பட்டு தற்போது டாஸ் போடப்பட்டது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. போட்டி 8 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளதால் இரு அணிகளும் முதல் பந்து முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடக்கிறது.
    • ஆடுகளத்தை சரிசெய்யும் பணியில் மைதான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.

    மொகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடக்கிறது.

    இன்றைய போட்டியில் தோல்வி அடைந்தால் சொந்த மண்ணில் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இந்திய அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

    இந்த நிலையில் ஆடுகளம் ஈரப்பதமாக இருப்பதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக 6.30 மணிக்கு டாஸ் போடப்படும். மைதானத்தில் தற்போது பெரிய அளவில் மழை இல்லை என்றாலும் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக உள்ளது.

    இதை சரிசெய்யும் பணியில் மைதான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணி முடிந்த பிறகு டாஸ் போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வானிலை மையத்தின் அறிவிப்பின்படி, நாக்பூரில் இன்று 64 சதவீதம் மேக மூட்டம் கானப்படும் என்றும், வெப்பநிலையானது 29 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும் என்றும் மழையால், ஆட்டம் பெரிதும் பாதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் ஒரே அணியில் விளையாடினால் சுவாரஸ்யமாக இருக்கும்.
    • தினேஷ் கார்த்திக்கின் பன்முகத்தன்மை, அவரால் மிடில் ஆர்டரில் விளையாடி போட்டியை பினிஷ் செய்ய முடியும்

    இந்திய அணியில் நிலவி வரும் ஒரே விவாதம் எதைப் பற்றி இருக்கிறது என்றால்,ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் இருவரும் ஆடும் லெவனில் தேர்வு செய்ய வேண்டுமா அல்லது யாராவது ஒருவரை தேர்வு செய்ய வேண்டுமா என்ற விவாதம். கடந்த ஆசிய கோப்பை போட்டியில் ரிஷப் பண்ட் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தவில்லை.இதனால் வரும் டி20 உலகக்கோப்பையில் தினேஷ் கார்த்திக்கிற்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

    இருப்பினும் அணியில் இடது கை பேட்ஸ்மேன் என்ற வகையில் பண்ட் க்கு அணியில் வாய்ப்பு வழங்கப்டுகிறது. சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பெற்றிருந்தார்,ரிஷப் பண்ட் க்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.இருவரில் யாரை தேர்வு செய்வது என்று கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அணி நிர்வாகம் குழப்பத்தில் உள்ளது என்றே சொல்லலாம்.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட் இது குறித்து கூறியதாவது ;

    ரிஷப் பண்ட் மிகவும் தைரியமான வீரர். அவர் பந்துவீச்சை எதிர்கொள்ளும் விதம்,அவர் கண்டிப்பாக இந்திய அணியில் ஆடும் லெவனில் இடம் பெற வேண்டும் என நினைக்கிறன்.அவர்களால் ஒன்றாக விளையாட முடியும், ஆனால் ரிஷப் பண்ட் கண்டிப்பாக அணியில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

    இருவரும் ஒரே அணியில் விளையாடினால் சுவாரஸ்யமாக இருக்கும். அவர்களால் முடியும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் ஒரு அணிக்கு என்ன கொண்டு வருகிறார்கள், தினேஷ் கார்த்திக்கின் பன்முகத்தன்மை, அவரால் மிடில் ஆர்டரில் விளையாடி போட்டியை பினிஷ் செய்ய முடியும். அவர் மிகவும் அருமையான டச் கேமைக் கொண்டுள்ளார்.என தெரிவித்துள்ளார்.

    ×