என் மலர்

  கிரிக்கெட்

  எனது ஆட்டம் ஆச்சரியமாக இருந்தது- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி குறித்து ரோகித்சர்மா கருத்து
  X

  எனது ஆட்டம் ஆச்சரியமாக இருந்தது- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி குறித்து ரோகித்சர்மா கருத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது.
  • ஆட்டத்தின் எந்த நிலையிலும் தன்னால் சிறப்பாக வீச இயலும் என்பதை அக்‌ஷர் படேல் நிரூபித்து இருக்கிறார்.

  நாக்பூர்:

  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

  நாக்பூரில் நடந்த இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா முதலில் ஆடியது. மழையால் ஆட்டம் 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அந்த அணி 8 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 90 ரன் எடுத்தது. மேத்யூ வேட் 20 பந்தில் 43 ரன்னும் ( 4 பவுண்டரி , 3 சிக்சர் ), கேப்டன் ஆரோன் பிஞ்ச் 15 பந்தில் 31 ரன்னும் ( 4 பவுண்டரி, 1 சிக்சர் ) எடுத்தனர். அக்ஷர் படேல் 2 விக்கெட்டும் , பும்ரா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

  பின்னர் விளையாடிய இந்தியா 4 பந்து எஞ்சி இருந்த நிலையில் இலக்கை எடுத்தது. அந்த அணி 7.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  கேப்டன் ரோகித் சர்மா 20 பந்தில் 46 ரன்னும் ( 4 பவுண்டரி , 4 சிக்சர் ) , தினேஷ் கார்த்திக் 2 பந்தில் 10 ரன்னும் ( 1 பவுண்டரி, 1 சிக்சர் ) எடுத்தனர். ஆடம் ஜம்பா 3 விக்கெட்டும் , கம்மின்ஸ் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

  இந்த வெற்றி மூலம் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இந்த வெற்றி குறித்து கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

  நான் அதிரடியாக ஆடியது எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு நன்றாக அமையும் என்று நான் எதிர் பார்க்கவில்லை. விளையாடும் போது நம்மால் அதிகமாக திட்டமிட இயலாது. நிலைமையை சாதகமாக பயன்படுத்துவதே ஆட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

  பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது. பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பி இருக் கிறார். மெதுவாகவும், சீராகவும் அவர் தனது பந்து வீச்சு நிலைக்கு வந்துள்ளார்.நாங்கள் ஒரு குழுவாக இருப்பதால் அதை பெரி தாக அலச போவதில்லை.

  அக்‌ஷர் படேல் தனது பங்களிப்பை சரியான முறையில் பொருத்தி இருக்கிறார். ஆட்டத்தின் எந்த நிலையிலும் தன்னால் சிறப்பாக வீச இயலும் என்பதை நிரூபித்து இருக்கிறார்.

  இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்.

  இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரே லியா 4 விக்கெட் வித்தியா சத்தில் வெற்றி பெற்று இருந்தது.

  இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை 25-ந்தேதி நடக்கிறது.

  Next Story
  ×