என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • மூன்றாவது நடுவர் மற்றும் நான்காவது நடுவர் ஆகியோருடன் ஆன்-பீல்ட் நடுவர்கள் இருவரும் சேர்ந்து குற்றச்சாட்டை சுமத்தியதாக ஐசிசி அறிக்கை கூறுகிறது.
    • ஆபாசமாக பேசியும் ஆரோன் பிஞ்ச் அபராதத்தில் இருந்து தப்பித்தார்.

    டி20 உலகக்கோப்பை தொடங்குவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஸ்டம்ப் மைக்ரோஃபோன் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து இன்னிங்சின் ஒன்பதாவது ஓவரில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

    அந்த ஓவரின் போது இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லருக்கு பேட்டில் பந்து ஊரசியது போல இருந்தது. அதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் அவுட் கேட்டனர். அதற்கு நடுவர் அவுட் கொடுக்கவில்லை. இது தொடர்பாக நடுவரிடம் ஆரோன் பிஞ்ச் முறையிட்டார். அப்போது ஆபாச வார்த்தையில் பேசினார். இது ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகி இருந்தது.

    ஐசிசி நடத்தை விதி 2.3-ஐ பிஞ்ச் மீறியதாகக் கண்டறியப்பட்டது. இருப்பினும் அவர் அபராதத்தில் இருந்து தப்பித்தார். ஏனெனில் கடந்த 24 மாதங்களில் அவர் செய்த முதல் குற்றமாகும். ஆனால் ஐசிசி பிஞ்சின் ஒழுங்குமுறை மீறியதாக ஒரு குறைபாடு புள்ளியை சேர்த்துள்ளது.

    மூன்றாவது நடுவர் மற்றும் நான்காவது நடுவர் ஆகியோருடன் ஆன்-பீல்ட் நடுவர்கள் இருவரும் சேர்ந்து குற்றச்சாட்டை சுமத்தியதாக ஐசிசி அறிக்கை கூறுகிறது.

    • இந்திய அணி இன்றைய தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது.
    • 17 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக்கோப்பையை வட கொரியா அதிக பட்சமாக 2 முறை கைப்பற்றி இருக்கிறது.

    புவனேஷ்வர்:

    17 வயதுக்குட்பட்டவருக்கான (ஜூனியர்) உலகக்கோப்பை மகளிர் கால்பந்து போட்டி இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்படுகிறது.

    இதுவரை 6 போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடந்துள்ளன. 7-வது போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது.

    17 வயதுக்குட்பட்ட வருக்கான மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டி இன்று (செவ்வாய்கிழமை) தொடங்குகிறது. 30-ந் தேதி வரை புவனேஷ்வர், கோவா, நவி மும்பை ஆகிய 3 இடங்களில் நடக்கிறது.

    இதில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும். 'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெறும்.

    போட்டியை நடத்தும் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. பிரேசில், மொராக்கோ, அமெரிக்கா ஆகியவையும் அந்த பிரிவில் உள்ளன.

    இந்திய அணி இன்றைய தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. புவனேஷ்வர் கலிங்கா மைதானத்தில் இரவு 8 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.

    ஆஸ்டம் ஒரியன் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். பலம் வாய்ந்த அமெரிக்காவை வீழ்த்துவது சவாலானதாகும்.

    இந்திய பெண்கள் கால்பந்து அணி ஜூனியர் உலகக்கோப்பையில் ஆடுவது இதுவே முதல் முறையாகும். போட்டியை நடத்தும் நாடு என்பதால் இந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.

    இன்றைய தொடக்க நாளில் நடைபெறும் மற்ற ஆட்டங்களில் பிரேசில்-மொராக்கோ (மாலை 4.30 மணி), 'பி' பிரிவில் உள்ள சிலிட் நியூசிலாந்து (மாலை 4.30), ஜெர்மனி-நைஜீரியா (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன. 'பி' பிரிவு போட்டிகள் கோவாவில் நடக்கிறது.

    17 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக்கோப்பையை வட கொரியா அதிக பட்சமாக 2 முறை கைப்பற்றி இருக்கிறது. தென் கொரியா, பிரான்ஸ், ஜப்பான், ஸ்பெயின் ஆகியவை தலா 1 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன.

    • தென் ஆப்பிரிக்கா அணியில் கேசவ் மகராஜ் இடம் பெறவில்லை.
    • இந்திய அணி எந்த மாற்றம் இல்லாமல் களம் இறங்குகிறது.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியும் 2-வது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றது. இந்த தொடரை வெல்ல போவது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி இதுவாகும். இந்திய அணி எந்த மாற்றம் இல்லாமல் களம் இறங்குகிறது.

    தென் ஆப்பிரிக்காவில் கேசவ் மகராஜ் இடம் பெறவில்லை. அணியின் கேப்டனாக டேவிட் மில்லர் செயல்படுகிறார்.

    இந்திய அணி:-

    ஷிகர் தவான், ஷுப்மான் கில், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அவேஷ் கான்

    தென் ஆப்பிரிக்கா அணி:-

    குயின்டன் டி காக், ஜான்மேன் மலான், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், அண்டில் பெஹ்லுக்வாயோ, ஜார்ன் ஃபோர்டுயின், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே

    • 1 மணிக்கு டாஸ் போட இருந்த நிலையில் ஈரப்பதம் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது.
    • 1.30 மணிக்கு மைதானத்தை நடுவர்கள் ஆய்வு செய்து விட்டு போட்டி தொடங்கும் நேரத்தை அறிவிப்பார்கள்.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. 1 மணிக்கு டாஸ் போட இருந்த நிலையில் மைதானம் ஈரப்பதத்துடன் இருப்பதால் தாமதம் ஏற்பட்டுள்ளது. 1.30 மணிக்கு மைதானத்தை நடுவர்கள் ஆய்வு செய்து விட்டு போட்டி தொடங்கும் நேரத்தை அறிவிப்பார்கள்.

    • பாகிஸ்தானுடன் நாங்கள் அதிகமாக கிரிக்கெட் விளையாடவில்லை.
    • இந்தப் போட்டி இரு நாட்டு மக்களுக்கும் முக்கியமானதாகும்.

    பெர்த்:

    20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 16-ந் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. 16 நாடுகள் பங்கேற்கும் இந்தப் போட்டி நவம்பர் 13 வரை நடைபெறுகிறது.

    ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி 'சூப்பர் 12' சுற்றில் நேரடியாக விளையாடுகிறது. தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் அக்டோபர் 23-ந் தேதி மோதுகிறது.

    தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் மற்றும் முதல் சுற்றில் இருந்து நுழையும் 2 அணிகள் ஆகியவற்றுடன் இந்தியா விளையாடுகிறது.

    20 ஓவர் உலகக்கோப்பைக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலியா (17-ந் தேதி), நியூசிலாந்துடன் (19- ந் தேதி) பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

    இந்தநிலையில் ஆஸ்திரேலியா லெவனுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு தமிழக வீரர் ஆர்.அஸ்வின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது பாகிஸ்தானுடனான போட்டி குறித்து கருத்து தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பாகிஸ்தானுடன் நாங்கள் அதிகமாக கிரிக்கெட் விளையாடவில்லை. இந்தப் போட்டி இரு நாட்டு மக்களுக்கும் முக்கியமானதாகும். ஆட்டத்தின் வெற்றி, தோல்வி என்பது ஒரு பகுதியாகும்.

    20 ஓவர் போட்டியை பொறுத்தவரை ஆட்டத்தின் முடிவு மிகவும் நெருக்கமானதாக இருக்கும்.

    நாங்கள் பாகிஸ்தான் அணிக்கு மதிப்பு அளிக்கிறோம். அது போலத்தான் அவர்களும் மரியாதை கொடுக்கிறார்கள்.

    ரமீஸ்ராஜா இது தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் எனக்கு தெரியாது.

    இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.

    பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரமீஸ்ராஜா பாகிஸ்தானை இந்தியா மதிக்க தொடங்கி விட்டது என்ற கருத்துக்கு அஸ்வின் இந்த பதிலை அளித்துள்ளார்.

    • 70 பதக்கத்துடன் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது.
    • நாளை தேசிய விளையாட்டு போட்டிகள் முடிகிறது.

    அகமதாபாத்:

    36-வது தேசிய விளையாட்டுப்போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    நேற்றைய போட்டியில் தமிழக அணிக்கு மேலும் 3 பதக்கம் கிடைத்தது.

    சாப்ட் டென்னிஸ் போட்டியில் தமிழகத்துக்கு தங்கம் கிடைத்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் வேலூர் வீராங்கனை ராகஸ்ரீ மனோகர் பாபு முதல் இடத்தை பிடித்தார். மல்லர்கம்பம் பந்தயத்தில் தமிழக வீரர் ஹேம் சந்திரன் தங்கம் வென்றார். பெண்களுக்கான கால்பந்தில் வெண்கல பதக்கம் கிடைத்தது.

    நேற்றைய போட்டி முடிவில் தமிழ்நாடு 24 தங்கம், 21 வெள்ளி, 25 வெண்கலம் ஆக மொத்தம் 70 பதக்கம் பெற்று 5-வது இடத்தில் இருக்கிறது.

    சர்வீசஸ் 53 தங்கம் உள்பட 115 பதக்கத்துடன் முதல் இடத்தில் உள்ளது. மராட்டியம், அரியானா, கர்நாடகா முறையே அதற்கு அடுத்த நிலையில் உள்ளன. நாளை தேசிய விளையாட்டு போட்டிகள் முடிகிறது.

    • தமிழ் தலைவாஸ் தொடக்க ஆட்டத்தில் குஜராத்துடன் 31-31 என்ற கணக்கில் ‘டை’ செய்தது.
    • அரியானா தொடக்க ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தி இருந்தது.

    புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி அரியானாவுடன் இன்று மோதல்பெங்களூர்:

    9-வது புரோ கபடி 'லீக்' போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 12-வது 'லீக்' ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    தமிழ் தலைவாஸ் தொடக்க ஆட்டத்தில் குஜராத்துடன் 31-31 என்ற கணக்கில் 'டை' செய்தது. அரியானாவை வீழ்த்தி முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் தமிழ் தலைவாஸ் உள்ளது.

    அரியானா தொடக்க ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தி இருந்தது. இதனால் 2-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    • தொடரை வெல்ல இரு அணிகளும் தீவிரம் காட்டும் என எதிர்பார்ப்பு.
    • இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த மைதானத்தில் இந்தியா இதுவரை 20 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளது. அதில் 12-ல் வெற்றியும், 7-ல் தோல்வியும் கண்டுள்ளது. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை.

    தென்ஆப்பிரிக்கா இங்கு ஆடியுள்ள ஒரே ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றிருக்கிறது. இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மழை பெய்வதற்கு 40 சதவீதம் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • சென்னை, சேலத்தில் கிரிக்கெட் அகாடமிகள் செயல்பட்டு வருகின்றன.
    • ஒசூர் அகாடமி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது.

    ஓசூர்:

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சார்பில் சென்னை துரைப்பாக்கம், சேலம் வாழப்பாடியில் கடந்த ஏப்ரல் மாதம் கிரிக்கெட் பயிற்சி அகாடமிகள் தொடங்கப்பட்டன. இளம் வீரர்கள் இதில் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் எம்.எஸ்.தோனி குளோபல் பள்ளியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமி அமைக்கப்படுகிறது. 


    இதற்கான தொடக்க விழா நேற்று நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இங்குள்ள மைதானத்தில் மொத்தம் 8 ஆடுகளங்கள் உருவாக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த பயிற்சி முகாம் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அக்சர் பட்டேல், முகமது ரிஸ்வான், கேமரூன் க்ரீன் ஆகியோர் சிறந்த வீரருக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர்.
    • செப்டம்பர் மாதத்தின் சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து ஐசிசி விருதை அறிவித்து வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்காக 3 வீரர்களின் பெயரை ஐசிசி சமீபத்தில் பரிந்துரைத்து இருந்தது.

    அந்த வகையில் இந்திய வீரர் அக்சர் பட்டேல், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் கேமரூன் க்ரீன் ஆகியோர் சிறந்த வீரருக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் ஊடக பிரதிநிதிகள், முன்னாள் சர்வதேச வீரர்கள் மட்டும் ரசிகர்கள் வாக்களிப்பதன் அடிப்படையில் இதன் வெற்றியாளர்களை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.

    பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். டி20 தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ரிஸ்வான் கடந்த மாதம் ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

    பெண்களுக்கான சிறந்த வீராங்கனைகள் பட்டியலில் இந்தியாவின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் வங்காளதேச அணியின் கேப்டன் நிகார் சுல்தானா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர். இதில் சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • ஆட்ட நாயகனாக இங்கிலாந்து அணியை சேர்ந்த அலெக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

    இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 208 ரன்களை குவித்தது. இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக இங்கிலாந்து அணியை சேர்ந்த அலெக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் இந்த போட்டியில் நடந்த ஒரு சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்த போது ஆட்டத்தின் 17-வது ஓவரை மார்க் வுட் வீசினார். அந்த ஓவரில் அவர் வீசிய 3-வது பந்தை மேத்யூ வேட் தூக்கி அடிக்க முயன்ற போது பேட்டில் டாப் எட்ஜாகி பவுலருக்கே கேட்ச்சாக சென்றது.


    ஒரு புறம் மார்க் வுட் தன்னிடம் வந்த கேட்ச்-ஐ பிடிப்பதற்காக முற்பட்டார். மற்றொருபுறம் மேத்யூ வேட் பாதி களத்திற்கு ரன் ஓட முயன்றுவிட்டு ரன் அவுட் ஆகிவிடுவோமோ என்ற அச்சத்தில் மீண்டும் தன் இடத்திற்கு திரும்பினார். அப்போது மார்க் வுட்டை கேட்ச் பிடிக்கவே விடாமல் இழுத்துப்பிடித்து தடுத்தார். இதனால் அந்த கேட்ச் மிஸ்ஸானது. இங்கிலாந்து வீரர்கள் இதற்கு அவுட் கேட்டனர். ஆனால் நடுவர் அவுட் கொடுக்கவில்லை.

    பவுலர் கேட்ச் பிடிக்க சென்ற போது எப்படி ஒருவர் தடுத்து நிறுத்து முடியும். இது கிரிக்கெட் விதிகளுக்கு புறம்பானது என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மேத்யூ வேட் கேட்சை பிடிக்க விடாமல் தடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ஷபாலி வர்மா 8 ரன்னில் அவுட் ஆனார்.
    • வேகப்பந்து வீச்சாளர் பூஜா 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - தாய்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய தாய்லாந்து அணி 37 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

    இந்திய தரப்பில் சினே ராணா 3 விக்கெட்டுகளையும் தீப்தி சர்மா ராஜேஸ்வரி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

    38 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா- மேக்னா களமிறங்கினர். ஷபாலி வர்மா 8 ரன்னில் அவுட் ஆனார். அதனையடுத்து வேகப்பந்து வீச்சாளர் பூஜா களமிறங்கினார்.

    மேக்னா- பூஜா ஜோடி சிறப்பாக விளையாடி 6 ஓவரில் அணியை வெற்றி பெற வைத்தனர். மேக்னா 20 ரன்னிலும் பூஜா 12 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    ×