என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Games Competition"

    • எண்ணெயின் பயன்பாட்டை 10 சதவீதம் குறைத்தாலே நோய்களிலிருந்து விடுபடலாம்.
    • தினமும் உடற்பயிற்சி மற்றும் சத்தான உணவில் கவனம் செலுத்த வேண்டும்

    புதுடெல்லி:

    புதுடெல்லியில் நடைபெற்ற 38-வது தேசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவை பிரதமர் தொடங்கி வைத்தார். விளையாட்டு வீரர்கள் குழுமியிருந்த அக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    மாறிவரும் வாழ்க்கை சூழல், உடற்பயிற்சி இன்மை, துரித உணவு பழக்கங்களால் நம் நாட்டில் உடன் பருமன் உள்ள நபர்கள் அதிகரித்து வருகின்றனர். சமையல் எண்ணெயை அதிகமாக உட்கொள்வது, உடல் பருமன் அதிகரிப்பதற்கு முக்கிய காரணியாக உள்ளது. முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் கூட இதனால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அன்றாட உணவில் சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைத்துக் கொண்டாலே உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய்களிலிருந்து விடுபடலாம்.

    ரேஷனில் கிடைக்கும் 2 லிட்டர் எண்ணெயின் பயன்பாட்டை 10 சதவீதம் குறைத்தாலே போதும் நாம் பலவிதமான நோய்களிலிருந்து விடுபடலாம்.

    தினமும் உடற்பயிற்சி செய்வதோடு மட்டுமல்லாமல் சமச்சீரான மற்றும் சத்தான உணவில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

    கடுகு எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய்யை உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என இந்திய தேசிய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் கூறியுள்ளது.

    கடுகு எண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய் என்று ஒவ்வொரு முறையும் சுழற்சி முறையில் சமையலில் பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியம் மேம்படும் எனவும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் அறிவுறுத்தி உள்ளன.

    • 70 பதக்கத்துடன் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது.
    • நாளை தேசிய விளையாட்டு போட்டிகள் முடிகிறது.

    அகமதாபாத்:

    36-வது தேசிய விளையாட்டுப்போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    நேற்றைய போட்டியில் தமிழக அணிக்கு மேலும் 3 பதக்கம் கிடைத்தது.

    சாப்ட் டென்னிஸ் போட்டியில் தமிழகத்துக்கு தங்கம் கிடைத்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் வேலூர் வீராங்கனை ராகஸ்ரீ மனோகர் பாபு முதல் இடத்தை பிடித்தார். மல்லர்கம்பம் பந்தயத்தில் தமிழக வீரர் ஹேம் சந்திரன் தங்கம் வென்றார். பெண்களுக்கான கால்பந்தில் வெண்கல பதக்கம் கிடைத்தது.

    நேற்றைய போட்டி முடிவில் தமிழ்நாடு 24 தங்கம், 21 வெள்ளி, 25 வெண்கலம் ஆக மொத்தம் 70 பதக்கம் பெற்று 5-வது இடத்தில் இருக்கிறது.

    சர்வீசஸ் 53 தங்கம் உள்பட 115 பதக்கத்துடன் முதல் இடத்தில் உள்ளது. மராட்டியம், அரியானா, கர்நாடகா முறையே அதற்கு அடுத்த நிலையில் உள்ளன. நாளை தேசிய விளையாட்டு போட்டிகள் முடிகிறது.

    ×