என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஆஸ்திரேலியா சார்பில் டிராவிஸ் ஹெட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
    • இந்தியா சார்பில் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா அணி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று அசத்தல். இன்று (நவம்பர் 19) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 240 ரன்களை மட்டுமே சேர்த்தது.

    இந்தியா சார்பில் கேப்டன் ரோகித் சர்மா 47 ரன்களையும், விராட் கோலி 54 ரன்களையும், கே.எல். ராகுல் 66 ரன்களையும் சேர்த்தனர். சூர்யகுமார் யாதவ் 18 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஹேசில்வுட், பேட் கம்மின்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், மேக்ஸ்வெல் மற்றும் ஆடம் ஜாம்பா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 241 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. அந்த அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் 7 ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினார்.

    இவரைத் தொடர்ந்து கலமிறங்கிய மிட்செல் மார்ஷ் 15 ரன்களிலும், ஸ்டீவன் ஸ்மித் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் லபுஷேன் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலியா ஸ்கோர் சீராக அதிகரித்தது. 

    அப்படியாக 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா அணி வெற்றி இலக்கை எட்டி, ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. ஆஸ்திரேலியா அணிக்கு டிராவில் ஹெட் அதிரடியாக ஆடி சதம் அடித்தார். இவர் 137 ரன்களையும், லபுஷேன் 58 ரன்களையும் குவித்தனர்.

    இந்தியா சார்பில் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும், முகமது ஷமி ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணி தோல்வியடைந்ததை ஒட்டி, ரசிகர்கள் சோகத்துடன் மைதானத்தில் இருந்து வெளியேறினர்.

    • உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா 240 ரன்களை சேர்த்தது.
    • டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீசியது.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியை காண பிரதமர் நரேந்திர மோடி மைதானம் வந்தடைந்தார். இவருடன் மத்திய மந்திரி அமித் ஷாவும் மைதானத்திற்கு வந்துள்ளார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியை காண பல முன்னணி வீரர்கள் மற்றும் பிரபலங்கள் மைதானத்திற்கு வந்துள்ளனர்.

    இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 240 ரன்களை சேர்த்தது. 241 ரன்களை துரத்தும் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தியா சார்பில் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும், முகமது ஷமி ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 240 ரன்களை குவித்தது.
    • கோலி, கே.எல். ராகுல் பொறுமையாக ஆடி அரைசதம் அடித்தனர்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி 240 ரன்களை சேர்த்தது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸ்-ஐ தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. போட்டி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆஸ்திரேலிய அணி. அப்படியாக ஜஸ்பிரித் பும்ரா வீசிய பந்தை எதிர்கொண்ட ஸ்டீவன் ஸ்மித், கணிப்பில் செய்த பிழை காரணமாக எல்.பி.டபிள்யூ. முறையில் தனது விக்கெட்டை இழந்தார்.

    களத்தில் இருந்த அம்பயர் விக்கெட் கொடுக்க, அதிர்ச்சியில் இருந்த ஸ்டீவன் ஸ்மித் மறுமுனையில் விளையாடி வந்த டிராவிஸ் ஹெட்-இடம் ரிவ்யூ எடுக்கட்டுமா என கேட்டார். சந்தேகத்தில் இருந்த ஹெட் வேண்டாம் என்ற வகையில் பதில் அளிக்க, சற்றும் யோசிக்காமல் ஸ்டீவன் ஸ்மித் களத்தை விட்டு வெளியேறினார்.

    பிறகு வெளியான ரி-பிளே-வில் ஸ்டீவன் ஸ்மித் அவுட் ஆன பந்து ஸ்டம்ப்களை அடிக்க தவறியது தெரியவந்தது. அந்த வகையில், அவர் ரிவ்யூ எடுத்திருந்தால் விக்கெட்டை தக்கவைத்துக் கொண்டிருக்க முடியும். தனது விக்கெட்டில் ரிவ்யூ எடுத்திருந்தால், தப்பித்து இருக்கலாம் என்பதை அறிந்த பின் ஸ்டீவன் ஸ்மித் கடுப்பாகி இருப்பார். 

    • உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 240 ரன்களை சேர்த்தது.
    • ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.

    உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 240 ரன்களை சேர்த்துள்ளது. ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் மூன்று விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஹேசில்வுட், மேக்ஸ்வெல், ஆடம் ஜாம்பா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    241 ரன்கள் எனும் இலக்கை துரத்தும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில், இந்திய அணி வெற்றி பெற என்னவெல்லாம் நடக்க வேண்டும் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    - 70 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும்.

    - லீக் போட்டியை போன்றே குல்தீப் யாதவ் பந்துவீச்சில் மேக்ஸ்வெல் விக்கெட்டை துவக்கத்திலேயே வீழ்த்த வேண்டும்.

    - முகமது ஷமி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.

    - மிடில் ஓவர்களில் ஜடேஜா 30 ரன்களுக்கு மேல் கொடுக்காமல் பந்துவீச வேண்டும்.

    - ஸ்மித், லபுஷேன் நீண்ட நேரம் களத்தில் இருப்பதை அனுமதிக்காமல், விக்கெட் வீழ்த்த வேண்டும்.

    • டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
    • இந்தியா சார்பில் கே.எல். ராகுல் 66 ரன்களை குவித்தார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஜோடி துவக்க வீரர்களாக களமிறங்கியது. இருவரும் முறையே 47 மற்றும் 4 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த விராட் கோலி 54 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

    பிறகு களமிறங்கிய ஸ்ரேயஸ் அய்யர் 4 ரன்களில் ஆட்டமிழக்க, கே.எல். ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 107 பந்துகளில் 66 ரன்களை குவித்தார். இதில் ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே விளாசினார். இவருடன் ஆடிய ரவீந்திர ஜடேஜா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் 18 ரன்களை குவித்தார்.

    முகமது ஷமி 6 ரன்களிலும், ஜஸ்பிரித் பும்ரா 1 ரன்னிலும், குல்தீப் யாதவ் 10 ரன்களை குவித்தார். போட்டி முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களை குவித்துள்ளது. ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் மூன்று விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மேக்ஸ்வெல், ஆடம் ஜாம்பா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • இறுதி போட்டி என்பதால் இரு அணியினரும் கவனம் செலுத்தி விளையாடி வந்தனர்
    • அத்துமீறி நுழைந்த நபர், கோலியை நெருங்கி அவர் தோளில் கை போட முயன்றார்

    4 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஆண்கள் ஒரு நாள் சர்வதேச உலக கோப்பை 2023 போட்டித்தொடர் அக்டோபர் 5 அன்று இந்தியாவில் தொடங்கியது. பல சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்து இறுதி போட்டி ஆஸ்திரேலிய அணிக்கும், இந்தியாவிற்கும் இடையே குஜராத் மாநில அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நவம்பர் 19 அன்று நடைபெற்றது.

    மதியம் தொடங்கிய இப்போட்டியில் "டாஸ்" வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியினர் பேட்டிங்கில் கவனம் செலுத்தி விளையாடி வந்தனர்.

    விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த போட்டியில், 13-வது ஓவர் நிறைவடையும் நேரத்தில் இந்தியா 3 விக்கெட்களை இழந்திருந்தது. இறுதி போட்டி என்பதால் இரு அணியினரும் தீவிர கவனம் செலுத்தி விளையாடி வந்தனர்.

    அப்போது திடீரென பார்வையாளர்கள் அரங்கத்திலிருந்து ஒரு நபர், மைதானத்திற்குள் அத்துமீறி புகுந்தார். இவரை கண்ட பாதுகாவலர்கள் விரைந்து வந்து அவரை தடுக்க முயன்றனர்.

    முகத்தை துணியால் மூடி, பாலஸ்தீன ஆதரவு வாசகங்களை கொண்ட டி-ஷர்ட் அணிந்திருந்த அந்த நபர் வேகமாக ஓடி, இந்திய ஆட்டக்காரர் விராட் கோலிக்கு அருகே சென்றார். அவரை நெருங்கிய அந்த நபர், ஒரு சில வினாடிகள் விராட் கோலியின் தோளில் கை போட முயன்றார். ஆனால், பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மடக்கி வெளியேற்றினர்.

    இச்சம்பவத்தால் சில வினாடிகள் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த பாதுகாவலர்கள் அந்த நபரை அழைத்து சென்றனர். அத்துமீறிய நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதையடுத்து ஆட்டம் இயல்பாக தொடர்ந்து நடைபெற்றது.

    • உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங்.
    • 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீசிய நிலையில், இந்திய அணி ஒருபக்கம் விக்கெட்டுகளை இழந்தாலும், மறுபுறம் ரன்களை பொறுமையாக சேர்த்து வந்தது. இன்றைய போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 31 பந்துகளில் 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து ஆடிய சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். பிறகு களமிறங்கிய விராட் கோலி நிதானமாக விளையாடி 54 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இன்றைய போட்டியில் அரைசதம் அடித்த விராட் கோலி உலகக் கோப்பை தொடர்களில் தொடர்ச்சியாக ஐந்து முறை அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை ஸ்டீவன் ஸ்மித் உடன் பகிர்ந்து கொள்கிறார்.

    2015 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஸ்டீவன் ஸ்மித் ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியாக அரைசதம் அடித்து அசத்தினார். இதன்பிறகு விராட் கோலி 2019 மற்றும் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் என இரண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் அரைசதம் அடித்துள்ளார்.

    இதன் மூலம் இரண்டு உலகக் கோப்பை தொடர்களில் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்று இருக்கிறார். நடப்பு உலகக் கோப்பை தொடரின் 11 போட்டிகளில் விராட் கோலி 765 ரன்களை குவித்துள்ளார். இவரது சராசரி 95.62 ஆகும். இதில் 3 சதங்களும், 6 அரைசதங்களும் அடங்கும்.

    • உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா புது சாதனை.
    • முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிதானமாக ஆடியது.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங் ஆடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் துவக்க வீரர்களாக களமிறங்கினர். துவக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 31 பந்துகளில் 47 ரன்களை குவித்து அசத்தினார். இதில் நான்கு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்சர்கள் அடங்கும்.

    இன்றைய இறுதிப் போட்டியில் 151.61 எனும் அதிரடி ரன்ரேட்டில் விளையாடி வந்த ரோகித் சர்மா மேக்ஸ்வெல் பந்துவீச்சில் டிராவிஸ் ஹெட் இடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிக்கொடுத்தார். நடப்பு உலகக் கோப்பை 2023 தொடரின் மற்ற போட்டிகளை போன்றே, இன்றைய போட்டியிலும் ரோகித் சர்மா அபார துவக்கத்தை கொடுத்து விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

    இதன் மூலம் ரோகித் சர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்து இருக்கிறார். இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ரோகித் மூன்று சிக்சர்களை விளாசினார். இதன் மூலம், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டுமே 87 சிக்சர்களை அடித்துள்ளார்.

    முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிராக கிரிஸ் கெயில் 85 சிக்சர்களை அடித்ததே, ஒரு அணிக்கு எதிராக ஒரு வீரர் அடித்த அதிக சிக்சர்கள் என்ற சாதனையாக இருந்து வந்தது. இன்றைய போட்டியின் மூலம் ரோகித் சர்மா இந்த சாதனையை முறியடித்து, ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இந்த சாதனை மட்டுமின்றி ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர், கேப்டனாக உலகக் கோப்பையில் அதிக ரன்களை குவித்த வீரர், உலகக் கோப்பை தொடரில் அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்த வீரர் போன்ற சாதனைகளையும் ரோகித் சர்மா படைத்துள்ளார்.

    நடப்பு உலகக் கோப்பை தொடரின் 11 போட்டிகளில் ரோகித் சர்மா மொத்தமாக 597 ரன்களை குவித்துள்ளார். இவரது சராசரி ரன்கள் 54.27 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 125.94 ஆகவும் இருந்துள்ளது. இதில் ஒரு சதம், 3 அரைசதங்கள் அடங்கும். இதில் ரோகித் சர்மா 31 சிக்சர்களை விளாசி இருக்கிறார்.

    • உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது.
    • 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டிலும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. லீக் போட்டிகள், அரையிறுதி என விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இன்று (நவம்பர் 19) நடைபெறும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டுள்ளது.

    முன்னதாக 2003-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியிலும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே நாடுகள் இணைந்து நடத்திய இந்த தொடரில் ஆஸ்திரேலியா அணி சாம்பயன் பட்டத்தை வென்று அசத்தியது.

    2003 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முன்னேறின. அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இறுதிப் போட்டி நடைபெற்ற தினம், மைதானத்தை சுற்றி மேகமூட்டமாக காணப்பட்டதால், முதலில் பந்துவீசி எதிரணியை குறைந்த ரன்களில் சுருட்டி, போட்டியில் வெற்றி பெறலாம் என்று அப்போதைய இந்திய அணி கேப்டன் சவுரவ் கங்குலி திட்டமிட்டிருந்தார்.

    எனினும், மைதானத்தின் சூழல் யாரும் எதிர்பாராத வகையில் மாறிப் போக முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 350-க்கும் அதிக ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 250-க்கும் குறைந்த ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து கோப்பையை வெல்லும் கனவை பறிக்கொடுத்தது.

    கடந்தமுறை போன்றே, இன்று நடைபெறும் இறுதிப் போட்டியிலும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இந்த போட்டி நடைபெறும் அகமதாபாத்தில் மாலை பொழுதில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால், ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீசினால் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றிடலாம் என கணித்திருக்கிறார்.

    20 ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோன்ற சூழலில் சவுரவ் கங்குலியின் கணிப்பு தவறியதை போன்றே, பேட் கம்மின்ஸ்-இன் இன்றைய கணிப்பும் தவறி, இந்திய அணி கோப்பை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    • உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங்.
    • டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியை ஒட்டி சச்சின் டெண்டுல்கர் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஜெர்சியை விராட் கோலிக்கு பரிசாக வழங்கி உள்ளார்.

    இரண்டாவது உலகக் கோப்பை தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையுடன் விராட் கோலி விளையாடி வருகிறார். 2023 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் விராட் கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 50-வது சதத்தை அடித்து அசத்தினார். மேலும் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் என்ற சாதனையை விராட் கோலி முறியடித்தார்.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பை வெல்லும் முனைப்பில் களமிறங்கி உள்ள நிலையில், இறுதிப் போட்டியை காண சச்சின் டெண்டுல்கர் உள்பட பல்வேறு முன்னணி வீரர்கள், பிரபலங்கள் என பலரும் மைதானத்திற்கு வந்துள்ளனர். 

    • உலக கோப்பையை வெல்வதற்கான பலப்பரீட்சையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
    • 20 ஆண்டுகளுக்கு பிறகு பதிலடி கொடுக்கும் வேட்கையில் இந்தியா.

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. உலக கோப்பையை வெல்வதற்கான பலப்பரீட்சையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-வது முறையாக உலக கோப்பையை வெல்லுமா? என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

    இந்திய அணி 2003-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. அதற்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு பதிலடி கொடுக்கும் வேட்கையில் இருக்கிறது.

    கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

    இந்நிலையில், பிற்பகல் 1.30 மணிக்கு இறுதிப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

    இதனால், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

    • இந்தியா 50 ஓவரில் 240 ரன்கள் எடுத்து ஆல்-அவுட்
    • ஆஸ்திரேலியா 43 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டம் வென்றது.

    விராட் கோலி 63 பந்தில் 54 ரன் எடுத்து ஆல்-அவுட்.

    கே.எல். ராகுல் 107 பந்தில் 66 ரன்கள் எடுத்து ஆல்அவுட்.

    மிட்செல் ஸ்டார்க் 10 ஓவரில் 55 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்.

    ஹேசில்வுட் 10 ஓவரில் 60 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்.

    பேட் கம்மின்ஸ் 10 ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்.

    ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் இங்லிஸ் 5 கேட்ச்கள் பிடித்து அசத்தினார்.

    ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். அவர் 137 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    லபுஷேன் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    பும்ரா 2 விக்கெட்டும், சமி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ×