search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    உலகக் கோப்பை 2023.. ஒன்றல்ல இரண்டு முறை.. விராட் கோலியின் அபார சாதனை
    X

    உலகக் கோப்பை 2023.. ஒன்றல்ல இரண்டு முறை.. விராட் கோலியின் அபார சாதனை

    • உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங்.
    • 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீசிய நிலையில், இந்திய அணி ஒருபக்கம் விக்கெட்டுகளை இழந்தாலும், மறுபுறம் ரன்களை பொறுமையாக சேர்த்து வந்தது. இன்றைய போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 31 பந்துகளில் 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து ஆடிய சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். பிறகு களமிறங்கிய விராட் கோலி நிதானமாக விளையாடி 54 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இன்றைய போட்டியில் அரைசதம் அடித்த விராட் கோலி உலகக் கோப்பை தொடர்களில் தொடர்ச்சியாக ஐந்து முறை அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை ஸ்டீவன் ஸ்மித் உடன் பகிர்ந்து கொள்கிறார்.

    2015 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஸ்டீவன் ஸ்மித் ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியாக அரைசதம் அடித்து அசத்தினார். இதன்பிறகு விராட் கோலி 2019 மற்றும் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் என இரண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் அரைசதம் அடித்துள்ளார்.

    இதன் மூலம் இரண்டு உலகக் கோப்பை தொடர்களில் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்று இருக்கிறார். நடப்பு உலகக் கோப்பை தொடரின் 11 போட்டிகளில் விராட் கோலி 765 ரன்களை குவித்துள்ளார். இவரது சராசரி 95.62 ஆகும். இதில் 3 சதங்களும், 6 அரைசதங்களும் அடங்கும்.

    Next Story
    ×